சனி, 9 ஜனவரி, 2010

வீரத் தந்தைக்கு வீரவணக்கங்கள்

பதிந்தவர்_கனி on January 7, 2010
பிரிவு: கவிதை, செய்திகள்

தமிழீழம் காத்த வீரனின் தந்தையே

தானைத் தலைவனின் வீரத்தந்தையே!

தமிழீழம் போற்றும் தேசியத்தின் தந்தையே!

தான் போற்றும் மண்ணில்

தாயக வேந்தனுடன் காலம் போக்க

தமிழகமிருந்து தமிழீழம் வந்த

தாரக வேந்தனின் தந்தையே!

உயிர் பிரியும் போதும்

உத்தம தலைவனின் தந்தையென

உயிலெழுதிச் சென்ற

உன்னத தந்தையே!

வீரத்தின் தந்தையென – எதிரியின்

வீரத்தினுள்ளும் நிரூபித்து

வீர நெஞ்சோடு வீழ்ந்த

வீரத் தந்தையே! – எம்

வீரவணக்கங்கள்.

தலைவரின் அன்பிற்கும்

தமிழீழத்தின் மதிப்பிற்குமுரிய

தன்மானத் தலைவனின் தந்தையே!

தமிழர்கள் நாம்

தலைநிமிர உங்களிடமிருந்து

தத்தெடுத்தோம் எம் தலைவரை

தலைவணங்கா உங்கள் மகனை

தமிழர் நாம் தலைநிமிர

தந்தையே நீங்கள் எதிரியின் பிடியினுள்ளே

தலைசாய்ந்தது தான் ஏனோ! – தமிழீழம்

தலைநிமிர தானைத் தலைவனை எமக்களித்து

தந்தையே நீர் விலகி நின்றீரே,

தமிழீழ மைந்தனின் தந்தையே

தமிழீழ மக்களின் தந்தையே – எம்

தலைவனின் தந்தையே

தமிழீழத்தின் தமிழினத்தின்

மீனகம் வலைத்தளத்தின்

வீரவணக்கங்கள்.

வீறு கொண்டு எழுவோம்

வீரத்தமிழ் மகன் உங்கள் மகனின் வழியினிலே

(Visited 34 times, 15 visits today)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக