தீருவில் வெளியில் அமரர் வேலுப்பிள்ளையின் இறுதிக்கிரிகைகள்
சிவாஜிலிங்கம் எம்.பி யால் அமரர் வேலுப்பிள்ளை அவர்களின் பூத உடல் கையேற்கப்பட்டு, தற்போது வவுனியாநோக்கி சென்றுகொண்டு இருப்பதாக அறியப்படுகிறது. நாளை (09.01.2010) காலை வவுனியா சென்று, அங்கிருந்து ஏ9 பாதையூடாக யாழ் வல்வெட்டித்துறைக்கு கொண்டுசெல்லப்படும் பூதவுடலை, குமரப்பா புலேந்திரன் ஆகியோர் தகனம் செய்யப்பட்ட தீருவில் வெளியில் தகனசெய்ய ஏற்பாடாகியுள்ளதாக அறியப்படுகிறது. இப் பூத உடல் செல்லும் வாகனத் தொடரணியில் தேசிய தலைவரின் தாயாரும் உடன் செல்வதாக அதிர்வு இணையம் அறிகிறது.
தீருவில் வெளியில் அமரர் திருவெங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் உடல் தகுந்த மரியாதையுடன் தகனமாகும் என திரு சிவாஜிலிங்கம் எம்.பி தெரிவித்தார். தான் அரசியலுக்காக இதைச் செய்வதாக சில இணையத் தளங்கள் செய்திவெளியிட்டிருப்பதை மறுத்த சிவாஜிலிங்கம், அப்படி என்றால் அமரர் வேலுப்பிள்ளை அவர்களை சிங்கள அரசு அனாதைப் பிணத்தைப் போல எரிப்பதையா இந்த இணையத்தளங்கள் விரும்புகின்றன எனக் காரசாரமாகத் தெரிவித்தார்.
எதைச் செய்தாலும் அதனை தமக்கு ஏற்றவாறு விமர்சிக்கும் சில இணையத்தளங்கள் பல தமிழர்கள் மத்தியில் குழப்பதை உண்டுபண்ணும் நோகில் இயங்கிவருகிறது. ஜரோப்பாவில் இருந்து விமர்சிக்கும் இந்த இணையத்தளங்களும், சில தனி மனிதர்களும், இலங்கை சென்று அமரர் வேலுப்பிள்ளையின் பூத உடலை பொறுப்பேற்க்கத் தயாரா என அவர் கேள்வியைத் தொடுத்துள்ளார். எனவே விமர்சிப்பதை முதலில் நிறுத்தி, தமிழர்கள் ஒன்றுபடவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 35952
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக