சனி, 9 ஜனவரி, 2010

பேரவைக்கு வந்தார் ஜெயலலிதா



சட்டப் பேரவைக்கு வெள்ளிக்கிழமை வந்து விவாதத்தில் பேசிய பின்,​புறப்பட்டுச் செல்லும் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா.
சட்டப் பேரவைக்கு வெள்ளிக்கிழமை வந்தார், எதிர்க் கட்சித் தலைவர் ஜெயலலிதா. 10 நிமிடங்கள் வரை பேரவையில் இருந்த அவர் அமைச்சர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேரவைக்கு வந்தார். எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக கொறடா கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் அவரை வரவேற்றனர்.
முக்கியப் பிரமுகர்களின் நுழைவு வாயில் வழியே வந்த அவர், நேராக உறுப்பினர்களின் வருகைப் பதிவேடு வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு வந்தார். பதிவேட்டில் கையெழுத்திட்டார். அப்போது, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அவரின் அருகே நின்றிருந்தனர்.
பின்னர், நேராக பேரவைக்குள் சென்றார். அப்போது, அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் அவருக்கு வணக்கம் தெரிவித்தனர்.
விவாதத்தில் பங்கேற்பு: பேரவையில் அமர்ந்து, தனது கட்சி உறுப்பினர் நத்தம் விஸ்வநானின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது, இடைத் தேர்தல் தொடர்பாக சில கருத்துகளை நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார். இதை, அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு உள்ளிட்டோர் மறுத்தனர். அப்போது எழுந்த ஜெயலலிதா, ""அமைச்சர்கள் அபாண்டமான குற்றச்சாட்டை கூறுவதாகவும், மக்களுக்கு எல்லாம் தெரியும்'' என்றும் பேசினார்.
அமைச்சர்களுடன் இரண்டு முறை வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன்பின், புறப்பட்டுச் சென்றார். காலை 11.49 மணிக்கு வந்த அவர், 11.59}க்கு புறப்பட்டார்.
கருத்துக்கள்

சட்டமன்ற உறுப்பினர் சட்ட மன்றத்திற்கு அதுவும் கடமைஆற்ற அல்ல வந்து கையொப்பம் இடாவிட்டால் படி பெற முடியாததுடன் பதவியும் போகும் என்ற எணண்ததில் வருவதுகூட நம்நாட்டில் விந்தைமிகு செய்தி!

வாழ்க மக்கள்நாயகம்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/9/2010 5:56:00 AM

kodanaatil irundhu vandhaal seidhi...sattasabhaikku vandhaal seidhi...ippadi vere edhavadhu arasiyal thalaivargal irkugangala...ethhanai aayiram vaakalargal indha ammavukku vaakalithaarpagal...atthanai peryaum mutallakiya amma...indha amma kaalil innum vizha aatkal irukirargal...onnum puriyalai...thamilzhnaatu thalai ezhuthu...

By LoyalMGRFan
1/9/2010 4:58:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக