சனி, 24 அக்டோபர், 2009

இலங்கையில் போர் குற்றத்தை விசாரிக்க சர்வதேச அமைப்புகளுக்கு அனுமதி: அமெரிக்கா வலியுறுத்தல்



வாஷிங்டன், அக். 23: இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போர் குற்றங்களை விசாரிக்க சர்வதேச அமைப்புகளை இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இலங்கையின் வட பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போதும் போருக்குப் பின்னரும் அப்பாவித் தமிழ் மக்கள் மீது இலங்கை ராணுவம் கொடூரமாக நடந்து கொண்டதாக குற்றச் சாட்டுகள் எழுந்தன. இது குறித்து இதுவரை எவ்வித கருத்தையும் அமெரிக்கா தெரிவிக்கவில்லை.

ஆனால் தற்போது முதல் முறையாக அங்கு நடைபெற்ற அத்துமீறல்களை விசாரிக்க சர்வதேச அமைப்புகளை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் இயான் கெல்லி செய்தியாளர்களிடம் கூறியது:
முதலில் அகதி முகாம்களில் உள்ள மக்களை சர்வதேச அமைப்புகள் சந்தித்துப் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும். இலங்கையில் போரின்போதும் போருக்குப் பின்னரும் என்ன நடக்கிறது என்பதை வெளியுலகிற்குத் தெரியப்படுத்த இலங்கை அரசு முயல வேண்டும். போர் குற்றங்களைப் புரிந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் அக்டோபர் 21-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
இந்த 73 பக்க அறிக்கை தயாரிப்பதற்கு என்னென்ன அடிப்படை காரணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன என்பதையும் அதற்குரிய தீர்வுகளையும் இதில் குறிப்பிட்டு அவற்றை இலங்கையிடம் தெரிவித்துள்ளதாக கெல்லி கூறினார்.
இந்த அறிக்கையில் இலங்கை அரசு மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள், அதாவது போரின்போது மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் உள்ளிட்டவை சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
மறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. ஆனால் ஒபாமா நிர்வாகமோ, மறு சீரமைப்பு நடவடிக்கைகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரையான காலத்தில் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க வேண்டும் என சுட்டிக் காட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கையில் உள்நாட்டு போர் 25 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற போதிலும் அது தீவிரமடைந்தது 2009 ஜனவரி மாதத்திலிருந்து மே மாதம் வரைதான். இந்த காலகட்டத்திற்குள் விடுதலைப் புலிகள் முற்றிலுமாக ஒடுக்கப்பட்டனர்.
ஜனவரி முதல் மே மாதம் வரையான காலத்தில் விடுதலைப் புலிகள் தங்கள் ராணுவத்தில் 12 வயதுக்கும் குறைவான சிறுவர், சிறுமியர்களை ஈடுபடுத்தினரா?. மேலும் விடுதலைப் புலிகளை ஒழிப்பதாகக் கூறி அப்பாவி மக்கள் மீது ராணுவம் நடத்திய அத்துமீறல் நடவடிக்கைகளை விசாரிக்க வேண்டும் என அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை ராணுவம் பல விதிமீறல், கொலைகளைப் புரிந்ததாக குற்றச்சாட்டுகள் பலதரப்பிலிருந்தும் தெரிவிக்கப்பட்டிருப்பதாக கெல்லி கூறினார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின்போது, பலர் சரணடைய முன்வந்தபோதிலும் அவர்களை ராணுவம் கொன்றுள்ளது. சரணடைந்த சில விடுதலைப் புலிகளை ராணுவத்தினர் கொன்றதோடு, அப்பாவித் தமிழர்களையும் கொன்றுள்ளனர். அதிலும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களைக் கொன்றதாக புகார்கள் வந்துள்ளன.
சில தமிழ் இளைஞர்களை அவர்களது உறவினர்களுக்குத் தெரிவிக்காமல் அடையாளம் தெரியாத இடத்துக்கு ராணுவத்தினர் கொண்டு சென்றுள்ளதாகவும் புகார்கள் வந்துள்ளன.
சோதனைச் சாவடி மற்றும் முகாம்களில் உள்ளவர்கள் மிகவும் கொடுமைப்படுத்தப்படுவதாகவும் புகார்கள் வந்துள்ளன. அகதி முகாம்களில் ராணுவத்தினர் காவல் புரிவதால், சர்வதேச அமைப்புகள் அங்குள்ளவர்களைச் சென்றடைய முடியவில்லை.
ஜனவரி முதல் மே மாதம் வரையான காலத்தில் உயிரிழப்பு குறித்த விவரம் அறிக்கையில் இடம்பெறவில்லை என்று குறிப்பிட்ட கெல்லி, விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் 6,170-பேர் உயிரிழந்ததாகவும் 15,102 பேர் காயமடைந்ததாகவும் ஒரு தனியார் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
ஆனால் உயிரிழப்பு இதைவிட அதிகமாக இருக்கும் என கருதுவதாக கெல்லி கூறினார்.
இதனிடையே மனித உரிமைகள் அமைப்பு, இலங்கையில் கூறப்படும் குற்றச்சாட்டுகளை சர்வதேச தனியார் அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இலங்கையின் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க தனியார் விசாரணை அமைப்பை அனுமதிப்பது ஒன்றுதான் தற்போது உள்ள வழி என்று மனித உரிமைகள் அமைப்பின் ஆசிய பிரிவு இயக்குநர் பிராட் ஆடம்ஸ் தெரிவித்தார்.

கருத்துக்கள்

ஏன் அமெரிக்கா கெஞ்சிக் கேட்கின்றது? பன்னாட்டு அமைப்பைச் சேர்நதவர்களே , (குறிப்பாக அதன் செயலர், ) குற்றவாளிகளாக இருக்கும் பொழுது தானே நேரடியாக நடவடிக்கையில் இறங்க வேண்டியதுதானே! போர்க்குற்றவாளிகளான சிங்களர்களும் உடந்தையாய் இருந்த

ஆரியர்கள், மலையாளிகளும்

பிற நாட்டுத் தலைவர்களும் உடனே தண்டிக்கப்பட

நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீதி வேண்டும் இலக்குவனார் திருவள்ளுவன்.

By Ilakkuvanar Thiruvalluvan
10/24/2009 3:31:00 AM

it is a very good news.tamils victims need action not in words. ram

By dd
10/24/2009 2:49:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக