சனி, 24 அக்டோபர், 2009

2.45 லட்சம் தமிழர்களையும் சொந்த இடங்களுக்கு அனுப்பவேண்டும்: இலங்கைக்கு மனித உரிமைகள் அமைப்பு கோரிக்கை



வாஷிங்டன், அக். 20: விடுதலைப் புலிகளுடனான சண்டையின்போது அந்த இடங்களை விட்டு வெளியேற்றி முகாம்களில் அடைத்து வைத்துள்ள 2.45 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்களை உடனடியாக சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைகள் குழு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த விஷயத்தில் தான் கொடுத்த வாக்குறுதியை மீறி ராஜபட்ச அரசு செயல்படுவதாகவும் அது புகார் கூறியுள்ளது.
இது தொடர்பாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் ஆசியா பகுதி இயக்குநர் பிராட் ஆடம்ஸ் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
போரின் போது இடம்பெயர்ந்த சுமார் 3 லட்சம் தமிழர்கள் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 80 சதவீதம் பேரை இந்த ஆண்டு இறுதிக்குள் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னதாக இலங்கை அரசு உறுதி கூறியிருந்தது. இப்போது தான் சொன்னதற்கு மாறாக சுமார் 1 லட்சம் பேரையே முகாம்களிலிருந்து சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப் போவதாக இலங்கை கூறியுள்ளது.
மே மாதத்தில் விடுதலைப் புலிகளை ஒடுக்கிய இலங்கை அதனுடனான சண்டையை நிறுத்திக்கொண்டது. அதற்கு பிறகு முகாம்களிலிருந்து சுமார் 27 ஆயிரம் பேரையே இலங்கை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைத்தது. இன்னும் 2 லட்சத்து 45 ஆயிரம் பேர் முகாம்களிலேயே அடைபட்டு கிடக்கின்றனர். அவர்கள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டிய நேரம் வந்துவிட்டது. இனியும் இதுபோல் இலங்கை தான் சொன்னதையே மறந்து முரணாக செயல்படுவதை ஏற்கமுடியாது என அதன் சர்வதேச நண்பர்கள் காட்டமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
போரின்போது இடம்பெயர்ந்து முகாம்களில் அடைபட்டுள்ள தமிழர்களின் உயிருடன் இலங்கை விளையாடுகிறது. இலங்கை வாழ் தமிழர்களின் நியாயமான குறைகளை களைய இலங்கை தவறுவதன் மூலம் தானாகவே அது பிரச்னையை தேடிக்கொள்கிறது என்று ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள்

3 இலட்சம் தமிழர்கள் என்பது 2 1/2 இலட்சம் ஆகியுள்ளது. இது போன்ற வெற்று உரைகளால் இந்த எண்ணிக்கை சில ஆயிரம் எனக் குறையும். எனவே உடனடியாக முனைப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும். பன்னாட்டுப் போர்ப்படை சிங்களத்தைக் கைப்பற்ற வேண்டும். அதன்பின் உரிய விசாரணை மேற்கொண்டு போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும். போர்க்குற்றவாளிகளுக்கு உடந்தையாய் இருந்த அயல்நாட்டவரும் போர்க்குற்றவாளிகளே என்பதை உணர்ந்து அனைவரையும் தண்டிக்க வேண்டும்.

நீதி வேண்டும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/24/2009 3:39:00 AM

**இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் -3 (தமிழருக்காக குரல் கொடுப்பதற்கு இங்கு யாருமே இல்லையென்று தான்...) **ஈழமக்களின் மெளனத்தின் பின்னணி! **யார் தவறு? - பாகம் 17: ஈழமக்கள் பெற்ற வீரத்தலைவன்! **அருச்சுனன் பக்கம் 14: பட்டணத்து வியாபாரி சீமானின் "நாம் தமிழர்" கசாப்புக்கடை! **யார் தவறு? - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! **யார் தவறு? பாகம் - 5: இராவணன் தமிழன் இல்லை! U N A R V U K A L . C O M

By ELLALAN
10/21/2009 9:24:00 PM

Tamizhan இவனா இனவாத, பயங்கரவாத ஸ்ரீலங்கா அரசின் கைக்கூலிநாய் உங்களுக்கு தேரியாதா

By usanthan
10/21/2009 6:54:00 PM

அன்பான இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களே உங்கள் கருத்துக்கு நான் நன்றி சொல்லுகிறேன் "எத்தனை முறை இறந்தாலும் எம் தேசியத் தலைவர் இதுவரை உயிர்த்து எழுந்து வந்துள்ளார். இந்த முறையும் அதுவே நடக்கும்". "இலட்சியம் ஈடேறும் வரை நாங்கள் சாவதில்லை,சந்ததிக்குள்ளே உயிர்த்தெழுவோம் சத்தியம் தமிழீழம் காண்பது உறுதி " இப்படிக்கு.உன்.நன்பன் உசாந்தன்.சத்தியம் தமிழீழம் காண்பது உறுதி

By usanthan
10/21/2009 6:38:00 PM

அன்பான நவீன் அவர்கலே உங்கள் கருத்தை நான் விரும்பி படிப்பேன் நீங்கள் உண்மையில் நம்முடைய விடுதலைப்போரளிகளை பற்றி நீங்கள் உண்மைனய எழுதுவதக்கு நான் நன்றி சொல்லுகிறேன் உண்மையிலேயே விடுதலைப்புலிகள் நிணைந்து இருத்தால் இன்று சிங்களவன் ஓருவன் இருந்திருக்மாட்டான் இது உண்மை இனத பற்றி இனவாத, பயங்கரவாத ஸ்ரீ லங்கா அரசின் கைக்கூலியான அல்லது கருணா சூனியக்காரிசோனியாவின் நாய்களுக்கு எப்படி தேரியும்.எத்தனை முறை இறந்தாலும் எம் தேசியத் தலைவர் இதுவரை உயிர்த்து எழுந்து வந்துள்ளார். இந்த முறையும் அதுவே நடக்கும்"."இலட்சியம் ஈடேறும் வரை நாங்கள் சாவதில்லை,சந்ததிக்குள்ளே உயிர்த்தெழுவோம் சத்தியம் தமிழீழம் காண்பது உறுதி " நன்றி நவீன் இப்படிக்கு.உன்.நன்பன் உசாந்தன்.சத்தியம் தமிழீழம் காண்பது உறுதி

By usanthan
10/21/2009 6:23:00 PM

வன்னி இராணுவ முற்றுகையின் இறுதி கட்டத்தில் நிற்கதியான நிலையில் சிக்குண்டிருந்த தமிழ்மக்கள் தப்பியோட முடியாதவாறு வன்னிப்புலிகள் தடுத்திருந்தனர். அவர்களிடமிருந்து அடையாள அட்டைகளையும் வன்னிப்புலிகள் பலாத்காரமாக பிடுங்கி எடுத்திருந்தனர். நிலமை மோசமடைந்த கட்டத்தில் இராணுவத்தினதும். புலிகளினதும் கோர தாக்குதல்களில் இருந்து தமது உயிரை காக்கும் பொருட்டு புலிகளின் தடையை மீறி வெளியேறிய மக்கள் மீது புலிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் செய்ததில் 177 அப்பாவி பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என ஒரே தடவையாக சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தற்போது அறியவருகின்றது

By Tamizhan
10/21/2009 12:07:00 PM

திரு.Ilakkuvanar Thiruvalluvan u r words become TRUE with his GRACE

By Subash
10/21/2009 8:56:00 AM

Dear Fred Adams, Congratulations!! Better late than never. Ielam nation retrivalis the only solution for Tamil peoples there. God Bless, Human

By Human
10/21/2009 7:21:00 AM

இந்த அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரே வழி, தமிழர்களின் தாயகமான தமிழ் ஈழத்தை உலக நாடுகள் ஏற்று வாழ்த்தி உதவுவதுதான். இதனை விரைந்து செய்க! இன்றே செய்க!தமிழ்த் தேசியத் தலைவர மேதகு பிரபாகரன் தலைமையில் ஈழ மக்கள் அரசு அமையட்டும்! வாழ்க தமிழ் ஈழம்! வெல்க தமிழ் ஈழம்! தமிழர் தாயகம் தரணியில் தலைசிறந்து தழைக்கட்டும்! ஈழ - உலக நாடுகளின் நல்லுறவு வளரட்டும்!வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/21/2009 3:03:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக