வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான உலக நினைவு நாள் -ஆகத்து 30
இனப்படுகொலைப்போர் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும், காணாமல்போன தமது உறவுகளுக்கு என்ன நடந்ததென்ற நிலையறியாது அவர்களதுஉறவினர்கள் தவிக்கின்றனர்.
தமிழீழத் தாயகத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்துகாணாமலாக்கப்பட்டவர்களுக்காக 38 அன்னையர்களை போராடும் காலத்தில் இழந்தும் 1000 நாட்களாக இரவு பகலாகப் போராடும் உறவுகள் மாபெரும் எழுச்சிப் பேரணி ஒன்றைத் தமிழர் தாயகப் பகுதியில் 8 மாவட்ட மக்களாகநடத்தவுள்ள நிலையில் இம் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணிக்குஅனைத்துப் புலம் பெயர்ந்த தமிழர்களும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று பிரித்தானியத் தமிழர் பேரவை வேண்டுகின்றது.
இந்நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோரின் தினமான ஆகத்து 30ஆம் நாளன்று உலகநாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளநிலையில் இப்போராட்டம் உலக நாடுகள் மிகப்பாரதூரமான சிக்கலாகக் கவனத்திற்கொண்டுவந்து தீர்வை பெற்றுத்தரவேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த காலங்களைப் போன்று பிரித்தானியத் தமிழர் பேரவை தொடர்ச்சியாகப் போராடும்.
பிரித்தானியாவில் வரும் ஆகத்து 30, 2019 வெள்ளிக்கிழமை அன்று நண்பகல்12:30 மணிக்குத் தமிழ் அமைப்புகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் எமது தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம் இலண்டன் வடக்குத் தெராசு திராபல்கர் சதுக்கத்தில்(North terrace, Trafalgar Square , London WC2N 5DXஇல்)இடம்பெறவிருக்கின்றது!
பிரித்தானிய வாழ் அனைத்துத் தமிழ் உறவுகளும் இப் போராட்டத்தில் கலந்துகொண்டு தாயகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு வலுச் சேர்க்க ஒற்றுமையாக அணி திரளுமாறு வேண்டுகின்றோம்!
(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)
மணற்கேணியில் தோண்டும் அளவிற்கேற்ப நீர் ஊறுவதுபோல் கற்கும் அளவிற்கேற்ப அறிவு சுரக்கும் என்கிறார் திருவள்ளுவர்.
நீர்நிலை வகைகள் எண்ணற்று உள்ளன. அவற்றுள் நீர் சுரந்து அமையும் நீர்நிலைகளில் முதன்மையாகக் கிணறும் மணற்கேணியும் அமைகின்றன. மணற்கேணியில் நீர் சுரக்கும் அறிவியல் உண்மை அடிப்படையில் திருவள்ளுவர் இக்குறளை அளிக்கிறார்.
தொட்டனைத்து ஊறும் = தோண்டும் அளவு ஊறும். இதுபோல் கற்க கற்க அறிவு பெருகும் என்பதால் தொடர்ந்து இடையீடு இன்றிக் கற்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.
நாமக்கல் கவிஞர்வெ.இராமலிங்கம்(பிள்ளை), கற்றவனாவதற்கு எவ்வளவு படித்தால் போதும் என்ற கணக்கில்லை. எவ்வளவுக் கெவ்வளவு தோண்டுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு மணற்கேணியில் நீர் ஊறுவதைப்போல் எவ்வளவுக் கெவ்வளவு கல்வி கற்கிறோமோ அவ்வளவுக் கவ்வளவு அறிவு பெருகும். எனறு விளக்குகிறார்.
கல்வி என்ற சொல்லின் மூலச்சொல் ‘கல்’. ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் நிலத்தைத் தோண்டப் பயன்பட்டதால் அதற்குக் கல் என்று பெயர் வந்தது. எனவே,இதற்குத் தோண்டுதல் என்றும் பொருள். மனத்திலுள்ள அறியாமை இருளைத் தோண்டி வெளியே எடுப்பதால் கல்வி என்றனர். காலிங்கர் ‘ஒருவன் கல்லுதற்கு முயலும் முயற்சியானது (எவ்வளவைத்து) மற்று அவ்வளவைத்தாகி வந்து ஊறாநிற்கும் மணற்கேணியின் நீரானது” என்று கிணற்றில் தோண்டுவதைக் கல்லுதல்’ என்று கூறுகிறார். இதன் மூலம்காலிங்கர் கல்லுதல் முயற்சிக்கும் கல்வி என்ற முயற்சிக்கும் ஒற்றுமை காண்கிறார்.
“கல்வி கரையில; கற்பவர் நாள் சில” எனத் தொடங்கும் நாலடியார்(135) பாடல் மூலம் சில நாளிலும் பிணிநாள் பல உள்ளமையால் நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும் எனக் கூறுகிறது. நாம் காலத்தை வீணாக்காமல் வேண்டப்படும் நல்ல நூல்களைப் படிக்க வேண்டும்.
மக்கள் அனைவருமே கற்று அறிவைப் பெருக்க வேண்டும். அரசதிகாரத்தில் உள்ளவர்களும், அதிகாரம் இருக்கும் பொழுது கல்வி எதற்கு? என்று எண்ணக்கூடாது சரியாகத் திட்டமிட்டு முறையாகச் செயலாற்ற எப்பொழுதும் படிக்க வேண்டும்.
பொருள் உடையவர் முன் இல்லாதவர் பணிந்து நின்று பெறுவதுபோல் கல்வியறிவு உடையவர் முன் பணிந்து கற்க வேண்டும். அவ்வாறு கற்காதவர் இழிந்தவர் என்கிறார் திருவள்ளுவர்.
கல்வியியல் அரசியலையும் அரசியல் கல்வியியலையும் பாதிக்கின்றன. கற்றவரே முன்னிலையில் இருப்பர் என அரசறிவியலாளர் கூறுகின்றனர். அதுபோல் கல்லாதவரைக் கடையராகத் திருவள்ளுவர் கூறுகிறார்.
ஏக்கற்று என்றால் ஏக்கமுற்று எனச் சிலர் பொருள் கொள்கின்றனர். ஏக்கறுதல் – பெருமையை இழத்தல். தொல்காப்பியர் “ஏ பெற்று ஆகும்”(தொல்காப்பியம், உரியியல், நூற்பா 7) என்கிறார். பெற்று = பெருமை, பெருக்கமுமாம். எனவே, ஏக்கறுதல் என்றால் பெருமையை இழத்தல். தனக்குரிய பெருமையை இழந்து பணிந்து நிற்றல் என்பதை இச்சொல் குறிக்கிறது.
இரங்கத்தக்க நிலை வந்துவிட்டதே எனக் குறுகி, பொருள் கிடைக்க வேண்டுமே என்ற ஏக்கத்தில் தன்நிலை கருதாது பொருளையே கருதிப் பணிந்து நிற்கின்றனர். அதுபோல், தனக்குள்ள செல்வ நிலை முதலியவற்றைக் கருதாது, தான் கல்விச்செல்வம் இல்லாத வறுமையாளன் என்பதை உணர்ந்து பணிந்து கற்க வேண்டும்.
பாண்டிய வேந்தன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்,
பிற்றைநிலைமுனியாதுகற்றல்நன்றே (புறநானூறு 183)
என்கிறார். வழிபட்டு அல்லது பணிந்து நிற்கவேண்டியது குறித்துச் சினமோ வெறுப்போ கொள்ளாமல் கல்வியறிவு உடையாரிடம் கற்க வேண்டும் என்கிறார். இதையேதான் திருவள்ளுவரும் இங்கே வலியுறுத்துகிறார்.
பேரா.முனைவர் சி.இலக்குவனார், கற்பதற்கு முன்பு, ஒன்றும் இல்லாதவர் பொருள்களைப்பெற விரும்பி நிற்பதுபோல் விரும்பிக் கற்றால் பின்னர் எல்லாம் பெற்று உயர்வர். கல்லாதவர் எல்லாம் இயல்பாகப் பெற்றிருந்தாலும் தாழ்ந்தவராகக் கருதப் பெறுவார் என்கிறார்.
பொருள் இல்லாவிட்டாலும் வறுமையில் செம்மை உடையவர்கள் யாரிடமும் சென்று இரக்க மாட்டார்கள். உடையவர் முன் இல்லாதவர் பணிதலும் உலகில் உள்ளதெனினும் திருவள்ளுவர் பொருளாதார வேறுபாட்டை உவமையாகக் கூறியிருப்பார் என்று எண்ணுவது சரியல்ல. முன்னோர்கள் அவ்வாறு கூறி, அதன் வழி இக்கால அறிஞர் பெருமக்களும் அவ்வாறுதான் கூறியுள்ளனர். எனினும் நாம், பின்வருமாறு கருதலாம்
கல்விச் செல்வம் உடையவர் முன், தனக்கு வேறு செல்வம் இருப்பினும் ஒன்றும் இல்லாதவர்போலும் தனக்குக் கல்வியறிவு இருப்பினும் சிற்றறிவும் இல்லாதவர்போலும் தன் பெருமை நிலையை மறந்து கற்பவரே உயர்ந்தவர் ஆவார். பிற செல்வம் உடைமையால் கற்காமல் போனால் அவர் கடைமகனாவார்.
இவ்வாறு திருவள்ளுவர் கூறியுள்ளார் என்பதே திருவள்ளுவரின் உள்ளக்கிடக்கையை உணர்த்தும் எனலாம்.
அனைத்து நிலைகளிலும் கட்டணமில்லாத் தாய்மொழிவழிக் கல்வி அளித்து, அனைவரையும் கற்றவராக்குவதை அரசுகள் தத்தம் கடமையாக்கட்டும்!
மகிழுமாறு கூடி நினைக்குமாறு பிரிதலே கல்வியாளர் தொழில் என்கிறார் திருவள்ளுவர்.
அரசறிவியலில் கல்வி வலியுறுத்தப்படுவதால், கல்வியாளர் இயல்பைத் திருவள்ளுவர் இங்கே கூறுகிறார்.
உவப்ப என்றால் மகிழும்படி, தலைக்கூடி என்றால் ஒன்று சேர்ந்து அல்லது கலந்து பழகி என்று பொருள். புலவர் என்பதற்குக் கற்றறிந்தவர், கற்பிப்பவர், நூற்கல்வி மிக்க புலவர், புலமையாளர், கற்றவர், கல்வியிற் சிறந்த புலவர், சிறந்த கல்வியுடையார், கல்வி அறிவு உடையவர் என வெவ்வேறு பொருள் கொண்டு விளக்குகின்றனர். தொழில் என்னும் சொல், செயல், இயல்பு, பண்பு, வேலை எனப் பல பொருள் தரும்.
சேர்ந்து பழகும் பொழுது மகிழ்ச்சி அடைந்து பிரியும் பொழுது இந்த மகிழ்ச்சியை அடையும் வண்ணம் மீண்டும் சந்திப்பது எப்பொழுது என்று எண்ணுவதே கற்றறிந்தார் இயல்பு ஆகும்.
மகிழுமாறு கூடுவோர் யாவர்? மணக்குடவர் யாராவது இருவர் என்ற பொருளில் ‘மக்களிருவர்’ என்கிறார் பரிதி ‘நல்லோரும் நல்லோரும்’ என்று விளக்குகிறார். காலிங்கரும் பரிமேலழகரும் ‘கற்றவருடன் மற்றவர்’ என்று உரைக்கின்றனர். எவ்வகை விளக்கமாக இருந்தாலும் அனைத்துக்கும் பொருந்துமாறு திருக்குறள் உள்ளது.
பரிப்பெருமாள், இன்பம் நுகரினும் வினை செய்யினும் தமக்கும் பிறர்க்கும் இன்பம் பயக்கச் செய்தல் கல்வியால்தான் என்று விளக்குகிறார்.
தண்டபாணி தேசிகர், “நல்லோரைப் போலக் கல்வியைப் பயிலும் விருப்புடன் பயிலவேண்டும்; பயிற்சியை முடித்துக் கொண்டாலும் மறவாமல் நினைத்துக் கொண்டேயிருக்க வேண்டும் எனத் தலைக்கூடுதலையும் பிரிதலையும் கல்விப் பயிற்சிக்கும், பயிற்சியின் முடிவுக்கும் ஆக்குவர்” என்றுஆசிரியர்-மாணாக்கர் இடையே உள்ள தொடர்புபற்றிக் கூறுகிறார்.
பேரா.முனைவர் சி.இலக்குவனார், நம் நாட்டில் கல்வியறிவு பெற்றவர்களில் பலர் தனித்து வாழ்கின்றனர், பகைத்து வாழ்கின்றனர்; எனவே, கூடி மகிழும் இன்பம் அறியாதவராக உள்ளனர்; பண்பாட்டை அடிப்படையாக இல்லாத குறிப்பிட்ட சிலவற்றில் மட்டும் கூர்மைப்படுத்தும் கல்வியே அவர்கள் பெற்றுள்ளனர்; எனவே, தமிழ் மரபிற்கேற்ற கல்வித்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்கிறார்.
கல்வியின்பத்தைக் கலவி இன்பத்துடன் ஒப்பிடுவதாகக் கொள்ளலாமா? தலைவனும் தலைவியும் மகிழ்வாகக் கூடுகின்றனர். பிரியும் பொழுது மீண்டும் கூடுவது எப்போது என ஏங்குகின்றனர். கற்றவர்களும் சந்திக்கும் பொழுது மகிழ்கின்றனர். பிரிய நேரும் பொழுது மீண்டும் எப்பொழுது சந்திப்போம் எனக் கவலைப்படுகின்றனர்.
புலவர்கள் சந்திப்பின் பொழுது வரும் கருத்து மோதல்களைப் பகையாக எண்ணாமல் அறிவு இன்பமாகக் கருத வேண்டும்; ஆராய்ச்சித் திறனை மேம்படுத்தும் கேள்வி இன்பமாகக் கருத வேண்டுமே தவிர எதிர்த்துச் சொல்லாடுவதாகக் கருதக்கூடாது. அப்பொழுதுதான் கூடிப்பேசுதல் என்பது மகிழ்ச்சியாக இருக்கும். மாநாடுகளிலும் கருத்தரங்கங்களிலும் பங்கேற்போரிடையே இத்தகைய மகி்ழ்ச்சியையும் மறு சந்திப்பு குறித்த எண்ணததையும் காணலாம்.
நமக்குக் கேள்வி இன்பமும் உலகிற்குப் பயன் இன்பமும் விளையும் வகையில் சந்திப்போம்!
(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)
கற்றவரே கண்ணுடையவர் ஆவர். கல்லாதவர் முகத்தில் இரு புண்களே உள்ளன என்கிறார் திருவள்ளுவர்.
கடந்த நூற்றாண்டில் இரெய்மண்டு கார்பீல்டு கெட்டெல்(Raymond Garfield Gettell) என்னும் அரசறிவியலாளர், அரசியல் அறிவியல் என்பது கடந்த காலத்தை வரலாற்று முறையிலும், நிகழ் காலத்தினைப் பகுப்பாய்வு முறையிலும் எதிர்காலத்தினை நன்னெறி முறையிலும் படிக்க உதவும் ஒரு பாடம் எனக் கூறிக் கல்வியை வலியுறுத்துகிறார். திருவள்ளுவரும் கல்வியைக் கண்ணுடன் ஒப்பிட்டுக் கல்வியை வலியுறுத்துகிறார்.
கல்வி அனைவருக்குமான அடிப்படை உரிமை என்று சொல்லப்பட்டாலும் கல்வி கற்பிக்கப்படாதவர்கள் பலர் உள்ளனர். அவ்வாறில்லாமல் கட்டாயமாக அனைவருக்கும் கல்வி தேவை என்பதை வலியுறுத்தவே திருவள்ளுவர் கல்வியைக் கண்களுடன் ஒப்பிடுகிறார் என்கிறார் பேரா.முனைவர் சி.இலக்குவனார்.
கண்கள் இலலாதவர்களும் கல்வி கற்று அக்கல்வியால் உலகத்தைக் காண்கின்றனர். கல்லாதவர்களோ கண்ணிருந்தும் குருடர்களாக இருக்கின்றனர். படிக்காதவன் எண்ணையோ எழுத்தையோ பார்த்தால் என்ன புரிந்து கொள்ள முடியும்? நூற்செய்திகளை எவ்வாறு அறிந்து கொள்ள இயலும்? அப்படியானால் உலகத்தை உண்மையில் பார்க்க உதவும் கல்வியில்லாதவர்களின் கண்கள் புண்கள் என்று சொல்வது சரிதானே!
அரசை நடத்துவதற்கும் கட்சி முதலான அமைப்புகளை நடத்துவதற்கும் குடும்பத்தை நடத்துவதற்கும், தன்னையே வளர்த்துக் கொள்ளவும் கல்வி இன்றியமையாததாகிறது. ஓர் இடத்திற்குச் செல்லவும் விரும்பிய பொருளை வாங்கவும் பொருள்களின் பயன்பாடுகளை அறியவும் என எல்லா நேர்வுகளிலும் கல்வியறிவில்லாதவர்களால் தனித்து இயங்க முடியாது. எனவே, பிற நாட்டார் கல்வியைக் காற்றுக்கும் உணவுக்கும் ஒப்பிட்டதைவிடக் கண்களுக்கு ஒப்பிட்ட திருவள்ளுவரின் ஒப்புமை சிறந்ததாக உள்ளது.
கண் என்றால் பார்வை தெளிவாக இருக்க வேண்டுமல்லவா? எனவே, ஆழ்ந்த கல்வியைப் பெற்றுத் தெளிவான உலகப்பார்வையைக் கொள்வோம்!