வெள்ளி, 23 ஜூலை, 2010

தி.மு.க. ஆட்சிக்கு முடிவு வரும்: ஜெயலலிதா


சென்னை, ஜூலை 22: தி.மு.க. ஆட்சி குறித்தும், முதல்வர் கருணாநிதி குறித்தும் தமிழக மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர். எனவே, தி.மு.க. ஆட்சிக்கு முடிவு வந்து விடும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.  இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:  இலங்கையில் ஓராண்டுக்கு முன்பே போர் முடிந்துவிட்டது. எனினும் அங்குள்ள தமிழ் மக்கள் தொடர்ந்து கொடுமைக்கு உள்ளாகின்றனர். தமிழ்ப் பெண்கள் மீதான ராணுவ வீரர்களின் பாலியல் வன்முறை உள்பட பல கொடுமைகள் அங்கு நடக்கின்றன.  ராஜபட்ச தலைமையிலான இலங்கை அரசை, குற்றவாளி நாடு என பிரகடனப்படுத்த வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் கருதுகின்றனர்.  ஆனால் தமிழக முதல்வர் கருணாநிதி  இதுபற்றி கவலைப்படவில்லை. இலங்கையில் நடைபெற்ற சோக நிகழ்வுகள் காரணமாக தமிழ் மாநாடு நடத்துவது சரியில்லை என்ற கருத்து பற்றி கவலைப்படாமல், கோவையில் தமிழ் மாநாட்டை நடத்தினார்.  இந்நிலையில் 3.7.2010 அன்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கருணாநிதி ஒரு கடிதம் எழுதினார். இலங்கையில் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் ஏதாவது செய்ய வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கூறியிருந்தார்.  இதற்கு பதிலளித்து 9.7.2010 அன்று கருணாநிதிக்கு பிரதமர் எழுதிய கடிதத்தில், இலங்கை இனப் பிரச்னையை தீர்ப்பதற்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது. இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தார்.  மீண்டும் 16.7.2010 அன்று பிரதமருக்கு கருணாநிதி கடிதம் எழுதினார். அதில், இலங்கை நாட்டுக்குள் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது மிகவும் அவசரம். மேலும் அங்குள்ள உண்மை நிலைமையை கண்டறிவதற்காக ஒரு குழுவை இந்தியா அனுப்ப வேண்டும் என்று எழுதியிருந்தார்.  இதிலிருந்து ஏற்கெனவே தன்னால் அனுப்பப்பட்ட தமிழக எம்.பி.க்கள் குழு போலியானது என்பதையும், இலங்கைத் தமிழர்களின் நிலைமை குறித்த அந்தக் குழுவின் மதிப்பீடு உண்மைக்கு மாறானது என்பதையும் கருணாநிதி ஒப்புக்கொண்டிருக்கிறார்.  தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. எனவே, தன்னுடைய கபட நாடகத்தில் பல புதிய திருப்பங்களையும், மாற்றங்களையும் அவர் செய்வார் என்பது உறுதி.  எனினும் கருணாநிதியை தமிழக மக்கள் நன்றாக புரிந்து கொண்டு விட்டனர். எனவே, தி.மு.க. ஆட்சிக்கு முடிவு வரும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

காங்கிரசுடன் கூட்டணி ஏற்பட்டாலும் தன் குரலில் மாற்றம் இருக்காது என்று சொல்லி அதன்படி நடக்கத் தயாரா? எதிர்க்கட்சி தன் கடமையைச் சரியாகச் செய்தாலே ஆளுங்கட்சி சிறப்பாகச் செயல்படும். ஆரியக் கூட்டணி வைத்துக் கொண்டு கூடா நட்பினரின் அறிவுரைப்படி நடப்பவராலும் தமிழின் நிலையான பகையான காங். உடன் சேரத் துடிப்பவராலும் உண்மைத் தமிழ்ப் பற்றோடு எவ்வாறு செயல்பட ,யலும்? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/23/2010 4:48:00 AM
கண்டிப்பா வரணும். ஆனா அது வரைக்கும் நீ போயி ஓய்வெடுக்கனும் இல்லேனா உன் அடிவருடிங்க தாங்க மாட்டாங்க. பென்னாகரம் தேர்தல்ல தோத்ததுக்கு ஒருத்தன் தீ குளிச்சாப்ல, இருக்க எல்லோரும் போய் சேர்ந்துட போறானுங்க!
By நாய் சேகர்
7/23/2010 4:28:00 AM
திமுகவை ஒழித்து கட்டி குழி தோண்டி புதைக்கப்போவது வேறு யாருமில்லை. அதை செய்யப்போவது கருணாநிதியின் வாரிசுகள் ஸ்டாலின், அழ்கிரி, கனிமொழி, கலாநிதி மாறன் பிரதர்ஸ்தான்.
By Sekar
7/23/2010 2:19:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வியாழன், 22 ஜூலை, 2010

மெட்ரிக் பள்ளிகளில் கட்டாய தமிழ் பாடம்: ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்


காஞ்சிபுரம், ஜூலை 21:  தமிழகத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளிகளில், தமிழை ஒரு பாடமாக கட்டாயம் படிக்க வேண்டும் என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வலியுறுத்திள்ளார்.ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் அவர் தலைமை தாங்கி பேசியது:கல்லூரிகளில் தமிழை ஒரு பாடமாக கட்டாயம் படிக்க வேண்டும் என்று துணைவேந்தர் கூறியுள்ளார். பல மெட்ரிக் பள்ளிகளில் தமிழே படிக்காமல் மாணவர்கள் படித்து விட்டு வருகின்றனர்.இவர்கள் கல்லூரிக்கு வந்து எப்படி தமிழ் படிப்பது? மெட்ரிக் பள்ளிகளில் தமிழை ஒரு பாடமாக படிக்க உத்தரவிட வேண்டும். அப்போதுதான் அவர்கள் கல்லூரிக்கு வரும்போது தமிழை படிக்கும்போது எளிதாக இருக்கும்.இதுபோல் மற்ற மாநிலங்களில் அவரவர்களின் தாய்மொழியை ஒரு பாடமாக படிக்கின்றனர். தமிழகத்திலும் அதுபோல் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.தாய்மொழியை படிக்காத மாணவர்கள் கல்லூரிக்கு வரும்போது அவர்கள் கல்லூரி மாணவர்களாக இருக்க மாட்டார்கள். கல்லெறி மாணவர்களாகத்தான் இருப்பார்கள். மாணவர்களை நல்ல மாணவர்களாக உருவாக்க அதிகாரிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் அனைவரும் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
கருத்துக்கள்

உண்மையாகவே கூறி இருப்பார் என எண்ணிப் பாராட்டி வரவேற்போம். அதுபோல் அவர் செல்லும் பொழுது சமற்கிருத முழக்கங்கள் எழுப்புவதை நிறுத்தி விட்டுத் தமிழ்ப் பாக்கள் முழங்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். தேவாரம், திருவாசகம், திருமொழி, திருமந்திரம், திருவருட்பா என எண்ணற்ற தமிழ் இறைப்பாடல்கள் இருக்கும் பொழுது தம்மைத் தமிழில் பாடுமாறு அறிவுறுத்திய கடவுள் மொழியாகிய தமிழை விட்டு விட்டு அயல்மொழியாகிய சமற்கிருதம் முழங்கச் செல்வதுதான் உயர்வு என்னும் மூட நம்பிக்கையைக் கைவிடவேண்டும். அவர் சார்ந்த அனைத்துக் கோயில்களிலும் தமிழ் வழிபாட்டை மட்டும் முன்மாதிரியாக நடைமுறைப்படுத்தட்டும்! 
வாழ்க உலக முதல் மொழியாகிய அன்னைத் தமிழ் மொழி! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/22/2010 2:47:00 PM
அய்யா திரு ஜயேந்திர சிகாமணியே, போய் உங்க அடி பொடிக்கிட்ட சொல்லி கோவிலில் பூஜையை தமிழில் நடத்த சொல், பிறகு மற்றத்தை கவனிப்போம்.
By Paris EJILAN
7/22/2010 2:27:00 PM
The views expressed by the respected swamiji is very correct.I agree with his stand and I request the authorities of technical universities in tamilnadu also to consider the implementation of one language paper tamil as compulsory and also to medical courses. Because they are the persons to practice their profession in Tamilnadu. By Prof.Dr.Syed shabudeen.P.S.
By Syed Shabudeen
7/22/2010 12:00:00 PM
JAYA JAYA SHANKARA! HARA HARA SHANKARA! ACAARIYAR VALHA! AMMAYAR OLIHA!
By SANGU IYER
7/22/2010 11:25:00 AM
What HIS Holiness has said is absolutely correct. HE has mentioned that they should have it as subject so that everyone knows to read/write and speak their mother tongue. Read properly the news before commenting like politicians.
By Ramanan, Dubai
7/22/2010 10:57:00 AM
சமஸ்கிருதச் சாத்தானே, கோயில்களில் பூணூல்களை தமிழில் ஓதச் சொல் முதலில்.
By ravivararo
7/22/2010 10:22:00 AM

திமுக எம்எல்ஏ வின் மகனே செம்மொழி யை விட தேவநகரி மொழியே சிறப்பானது என்றும் அதனா லேயே அந்த மொழியில் இந்திய ரூபாயின் வடிவத்தை அமைத்ததாக நக்கீரன் பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளார். பிஎச்டி பட்டம் பெற மட்டுமே செம்மொழி உதவும் என்பது அவரது கணிப்பு. சாமானிய மக்களின் பிழைப்புக்கு ஆகாத மொழிபாடம் படித்து என்ன பயன்? அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் அது பிழை ப்புக்கு வழி செய்யலாம்! எத்தனை நூறு கோடிகள் செம் மொழி மாநாட்டில்? முன்னேறியது யாருடைய நிலை? மக்களுக்கு தெரியும் எது பிழைப்புக்கு உதவும் என்று.
By Unmai
7/22/2010 9:50:00 AM
sathan vetham othutu
By raja
7/22/2010 7:18:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
டாக்டர்கள் உதவியின்றி அறுவைச் சிகிச்சை செய்யும் ரோபோ


வாஷிங்டன், ஜூலை 21: டாக்டர்களின் வழிகாட்டுதலுடன் நோயாளிக்கு அறுவைச் சிகிச்சை செய்யும் ரோபோ என்பது புதிதல்ல. இதுபோன்ற ரோபோக்களை பல ஆண்டுகளுக்கு முன்பே விஞ்ஞானிகள் வடிவமைத்துவிட்டனர். ஆனால் டாக்டர்களின் உதவியே இல்லாமல் நோயாளியிடம் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளும் ரோபோவை தற்போது அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை நிகழ்த்தியுள்ளனர்.  அமெரிக்க டியூக் பல்கலைக்கழகத்தின் உயிரி பொறியியல் துறை விஞ்ஞானிகளின் இத்தகைய கண்டுபிடிப்பு மருத்துவப் புரட்சி என்றே கருதப்படுகிறது. சமீபத்தில் பல நோயாளிகளுக்கு அறுவைச் சிகிச்சையை செய்ய வைத்து இந்த ரோபோவை விஞ்ஞானிகள் சோதித்தனர். இந்தச் சோதனை வெற்றி பெற்றது. எனினும், இந்த ரோபோவால் தற்போதைய நிலையில் சிறிய சிறிய அறுவைச் சிகிச்சையை மட்டுமே செய்ய இயலும். இதன் தொழில்நுட்பத்தை மேம்படுத்தினால் எத்தகைய சிக்கல் மிகுந்த அறுவைச் சிகிச்சையையும் இந்த ரோபோவால் செய்துவிட முடியும் என்று அதை வடிவமைத்த விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன
நடப்பு கல்வியாண்டு முதல் பட்டப்படிப்பில் செம்மொழிப் பாடம்: க. பொன்முடி


சென்னை, ஜூலை 21: கலை மற்றும் அறிவியல் பட்டப் படிப்புகளில் நடப்பு கல்வியாண்டு முதல் செம்மொழிப் பாடம் அறிமுகம் செய்யப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி கூறினார்.அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் செம்மொழிப் பாடம் அறிமுகம் செய்யப்படும் என கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழக அரசு அறிவித்தது. இதை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் உயர் கல்வித் துறை செயலர் கணேசன், உயர் கல்வி மன்ற துணைத் தலைவர் ராமசாமி மற்றும் அனைத்து கலை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் பொன்முடி கூறியது:அனைத்து கலை மற்றும் அறிவியல் பட்டப் படிப்புகளிலும், இரண்டாம் பருவத்தில் உரைநடைப் பாடத்தில் ஒரு பாடமாக தமிழ்ச் செம்மொழி பாடம் நடப்பு கல்வியாண்டு முதல் சேர்க்கப்படும்.நான்கு பருவங்களில் தமிழ் கற்பிக்கப்படும் பி.ஏ. வரலாறு, பி.ஏ. பொருளாதாரம் உள்ளிட்ட பட்டப் படிப்புகளில், முதல் ஆண்டில் முதல் பருவத்தில் செய்யுள், உரைநடை, இலக்கணம் ஆகியவற்றின் முதல் பகுதியும், இரண்டாம் பருவத்தில் இவற்றின் இரண்டாம் பகுதியும் பயிற்றுவிக்கப்படும். மூன்றாம் பருவத்தில் தமிழ் இலக்கிய வரலாறு, செம்மொழித் தமிழ் வரலாறு ஆகியவற்றின் முதல் பகுதியும், நான்காம் பருவத்தில் 2-ம் பகுதியும் பயிற்றுவிக்கப்படும்.வணிகவியல் (பி.காம்), கம்ப்யூட்டர் சயின்ஸ் (பி.சி.ஏ.) பட்டப் படிப்பு மாணவர்கள் முதல் இரண்டு பருவங்களில் மட்டுமே தமிழ் படித்துத் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காக முதல் பருவத்தில் தமிழ்ச் செய்யுள், உரைநடை, இலக்கணம் ஆகிய பகுதிகளும், இரண்டாம் பருவத்தில் தமிழ் இலக்கிய வரலாறு, தமிழ்ச் செம்மொழி வரலாறு ஆகிய இரண்டு பகுதிகள் கொண்ட இரண்டு பாடங்கள் அறிமுகம் செய்யப்படும்.இதற்கான பாடத் திட்டங்களை பேராசிரியர்கள் குழுவின் உதவியுடன் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வகுக்கும். இதற்கு தஞ்சை பல்கலைக்கழக துணை வேந்தர் ராஜேந்திரன் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்.தமிழை பட்டப் படிப்பு பாடமாகவே கொண்டு படிக்கும் பி.ஏ., மற்றும் எம்.ஏ. தமிழ் மாணவர்களுக்கு, செம்மொழி வரலாறும் அதன் பண்புகளும், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டோடு அதன் ஒப்பீடும் ஆகியவற்றை உள்ளடக்கிய தனிப் பாடம் ஒன்றை அடுத்த கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த பாடத்தையும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகமே வகுக்கும்.தமிழில் உரைநடைப் பாடத்தில் உலக நாடுகளின் தாய் மொழி வழிக் கற்றல் என்ற ஒரு பாடமும் அடுத்த கல்வியாண்டு முதல் கொண்டுவரப்படும். இத்திட்டம் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே விதமான பாடத் திட்டமாக அமையும் என்றார்.
கருத்துக்கள்

பிற மொழிப் பாடங்களிலும் தமிழ்ச்செம்மொழி குறித்த பாடங்கள் இடம் பெற ஆவன செய்ய வேண்டும். 
அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar thiruvalluvan
7/22/2010 3:40:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
கொழும்பில் 10 ஆயிரம் தமிழர்களின் வாக்குரிமை ரத்து


கொழும்பு, ஜூலை 21- கொழும்பில் சுமார் 10 ஆயிரம் தமிழர்களின் வாக்குரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சி குற்றம்சாட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிகருணாநாயக்க தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.தமிழர்கள் அதிகமாக வாழும் வடக்கு கொழும்பு பகுதியில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு மக்களிடையே ஆதரவு உள்ளதாகவும், இதனால் திட்டமிட்டு அரசு இவ்வாறு தமிழர்களின் வாக்குரிமையை ரத்து செய்திருக்கலாம் என்றும் ரவிகருணாநாயக்க கூறியுள்ளதாக அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

1948 இல் ஆங்கிலேயரிடமிருந்து இலங்கை விடுதலை பெற்றதி்ல் இருந்து நடைபெறும் தொடர் அவலம்தான் இது. வாக்குரிமை பறிப்பு! குடியுரிமை மறுப்பு! வாழ்வாதாரம் பறிப்பு! உடைமைகளும் உயிர்களும் பறிப்பு! பாவம் ஈழத் தமிழர்கள்!எந்த நாட்டிலும் உரிமையில்லாத அடிமை இனத்தைச் சேர்ந்தவர்களாகி விட்டாரகள். இந்திய அடிமைகளை எண்ணி ஏமாறுகிறார்கள்! சிங்களர்களிலேயே உண்மையாகப் புத்தர் வழியில் வாழ எண்ணும் மனித நேயம் மிக்கவர்கள் தோன்றினால்தான் உரிமை வாழ்வு பெறுவர்.அந்நாள் விரைவில் வருவதாக! 
வருத்தத்துடன இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar thiruvalluvan
7/22/2010 3:28:00 AM
Uunited States of America says United Nations have no power for the juridiction about the war crime. They Just help Ban Ki moon to understaand about the war crimes or not war crime. Good luck UNs.
By Murugan
7/22/2010 12:38:00 AM
thedipaar.com
By ki
7/22/2010 12:35:00 AM
Reconciliation key to peace -US The visiting US Assistant Secretary of State for South Asia and Central Asia, Robert O Blake says that he is pleased that the LTTE has been defeated. Speaking to journalists in Colombo he said that Sri Lanka has a great opportunity to gain long lasting peace and stressed the importance of resettling all internally displaced persons as soon as possible. Blake who is on a day’s visit to Sri Lanka said that "key part of reconciliation will be to assure accountability to redress past wrongs" While expressing confidence in the government's reconciliation efforts he said that the expert panel appointed by UN Secretary General Ban Ki-Moon could provide valuable inputs into it. Blake pointed out that the UN expert panel has no investigative or judiciary powers and it only has an advisory role. Blake said, "A last pillar of reconciliation will be to advance democracy and human rights" Blake who was the former US ambassador to Colo
By Murugan
7/22/2010 12:34:00 AM
1st of all 10,000 Tamils votes cancelled by the Srilankan Governemt. resemble, in ten years time, whole srilankan Tamils votes will be cancelled.Only sinhala people will have votes in Srilanka in whoile Island. India is resposible for this unscrupolous task in Srilanka. India broke the Tamil nations back bone. There no more Tamil will be alive in Srilanka as well as India. Sorry for Tamil Hindu people.
By Samlim
7/22/2010 12:23:00 AM
பல்லாயிரக்கணக்கான தமிழர்களை ஒருசிலதினங்களிலே கொன்று குவித்த சிங்கள பாசிச அரசின் கவுரவ விருந்தினராகவே அசின் அந்த பகுதிகளுக்கு வியயம் செய்தார் என்பதை நாம் எண்ணிபார்க்கவேண்டும். உண்மையில் இலங்கை தமிழர்களாகிய நாம் வெறும் மருத்துவ வசதிகளுக்கும், உணவுக்கும் ஏங்கிக்கொண்டிருக்கவில்லை. அரசு சுதந்திரமாக வர அனுமதித்தால், புலம்பெயர் நாடுகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஈழ தமிழ் மருத்துவர்கள் பறந்துவர தயார் நிலையிலேதான் இருக்கிறார்கள். வன்னியின் இறுதி பொழுதுகளில் உணவில்லாமல், மருந்தில்லாமல் எம்மவர்கள் சாவுடன் தத்தளித்த வேளையில் எவராவது அரசின் தடைகளை மீறி வன்னிக்குள் சென்றிருந்தால் நிச்சயமாக வரவேற்றிருப்போம். தற்போது உலகின் கண்டன கணைகளுக்கும் விசாரணை கமிஷன் களுக்கும் பயந்து தமிழர்களின் மேல் பாசம் உள்ளது போல் காட்டிக்கொள்ளும் அரசுக்கு வக்காலத்து வாங்கவே இப்படியான இனத்தை விற்கின்ற நடிகைகள் வருகைதருகிறார்கள். நிச்சயமாக யாழில் அசினின் வருகையால் மக்கள் கொதித்துப்போய் உள்ளதே உண்மை. அரசு வற்புறுத்தி அழைத்து வந்திருந்த மக்களே அசினுடன் பேசுவதற்கு நிர்பந்திக்கபட்டார்கள் எங்களுக்கு தேவையானவை எல்லாம் நிம்மதியான உர
By niththilan
7/21/2010 11:33:00 PM
ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் மன்னார் பொலிஸாரால் மீட்பு! இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 1 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப்பொருளை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட மேற்படி ஹெரோயின் போதை பொருளை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8:15 மணியளவில் மன்னார் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மன்னார் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி துஸார தலுவத்த தலைமையிலான பொலிஸ் குழுவினரே போதை பொருளை கைப்பற்றியதோடு அதனை வைத்திருந்த நபரையும் கைது செய்துள்ளனர். ஒரு கிலோ கிராம் எடையை கொண்ட மேற்படி போதைப்பொருள் ஒரு கோடி ரூபா பெறுமதியானவை என்றும் மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நேற்றையதினம் (20.07.2010) மன்னார் பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 27ம் திகதிவரை பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்யுமாறும் நீதிபதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
By Musthafa
7/21/2010 5:18:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
அரசியல் கைதிகளைப் போல் நடத்தியது மகாராஷ்டிர அரசு: சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு


ஹைதராபாத், ஜூலை.21: மகாராஷ்டிர அரசு தர்மாபாதில் தங்களை கைது செய்து அரசியல் கைதிகளைப் போல் நடத்தியதாக தெலுங்குதேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார்.தங்களை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்புறுத்த முயற்சித்ததாகத் தெரிவித்த சந்திரபாபு நாயுடு, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைப் போல் தங்களை நடத்தவில்லை எனக் குற்றம்சாட்டினார்.தன்னுடைய 32 வருட அரசியல் வாழ்க்கையில் இதுபோன்ற கொடூரமான நிலையை இதுவரை சந்தித்ததில்லை என சந்திரபாபு நாயுடு கூறினார்.முதல்வர் ரோசய்யா, இதுவரை ஆந்திரா பெற்றிராத திறமையில்லாத முதல்வர் என்ற சந்திரபாபு நாயுடு, தனது மாநிலத்தின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அண்டை மாநிலத்தவரால் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படும்போது ரோசய்யா பார்வையாளராக மட்டுமே செயல்பட்டார் எனத் தெரிவித்தார்.கடவுளின் கருணையாலும், மகாத்மா காந்தியின் ஆசிர்வாதம் இருந்த காரணத்தாலும்தான் மகாராஷ்டிராவிலிருந்து தெலுங்குதேச எம்எல்ஏக்கள் உயிருடன் திரும்பியதாக சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டார்.
கருத்துக்கள்

அரசியல் போராட்டங்களில் கைது செய்யப்படுபவர்கள் அரசியல் கைதிகள்போல்தான் நடத்தப்பட வேண்டும். கொடுங்குற்றவாளிகள் போல் நடத்தினால்தான் தவறு. (உண்மையில் அவர்களையும் மனித நேயத்துடன்தான் நடத்த வேண்டும்.)ஆந்திரச் சட்ட மன்றத்தில் எதிர்க் கட்சிச் சட்ட மன்ற உறுப்பினர்களைக் குண்டு கட்டாகத் தூக்கி எறிவதை விட நன்றாகவே நடத்தியுள்ளார்கள். தம்மை முதலமைச்சராக நடத்த வேண்டும் என எதிர்பார்த்தாரா? நாட்டு நலனுக்குப் போ்ராடுபவர் விருந்தாளிபோல் நடத்த வேண்டும் எனக் கருதக் கூடாது.எனினும் தேவையற்று வன்முறைத் தாக்குதலுக்கு உள்ளாக்கப் பட்டார்கள் எனில் தவறு. தன் நாட்டு உரிமை காக்கும் போராட்டத்தில் தமிழ்நாட்டு அரசியல் வாதிகளுக்குச் செயல்முறைப் பாடம் நடத்தியமைக்கு நன்றி.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar thiruvalluvan
7/22/2010 3:17:00 AM
நிச்சயமாக யாழில் அசினின் வருகையால் மக்கள் கொதித்துப்போய் உள்ளதே உண்மை. அரசு வற்புறுத்தி அழைத்து வந்திருந்த மக்களே அசினுடன் பேசுவதற்கு நிர்பந்திக்கபட்டார்கள் எங்களுக்கு தேவையானவை எல்லாம் நிம்மதியான உரிமையுடன் கூடிய வாழ்வு மட்டும்தான். எமது சொந்தங்களின் மரண வியாபாரிகள் உலக அரங்கின் முன் குற்றவாளிகளாக அறிவிக்கப்படும் பொழுதுதான் எமது இறந்துபோன சொந்தங்களின் ஆன்மா சாந்தியடையும். அதுவரை தயவுசெய்து இப்படியான ஏமாற்றுகாரர்களின் வருகைகள் எமக்கு மகிழ்சியை தரமாட்டாது. .உலக அரங்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்படவேண்டியவர்களின் விளம்பரதூதராக அசின் தோற்றமளிப்பதை இங்கே விமர்சனம் செய்தவர்கள் மிகவும் அவதானமாக தவிர்த்துவிட்டனர். வருத்தத்துடன் கூடிய மற்றொரு செய்தியை கடந்தவாரம் படிக்க நேர்ந்தது. சரத்குமார் நடிகர் சங்கம் இலங்கைக்கு சென்று தமிழர்களை பார்வையிடும் என்ற செய்தியே அது. பச்சன்களையும், கான்களையும் செல்லவேண்ட்டாம் என்று சொன்ன அதே திரையுலகில் இருந்து இப்படியான வார்த்தைகளை நாம் எதிர்பார்க்கவில்லை.
By niththilan
7/21/2010 11:38:00 PM
பல்லாயிரக்கணக்கான தமிழர்களை ஒருசிலதினங்களிலே கொன்று குவித்த சிங்கள பாசிச அரசின் கவுரவ விருந்தினராகவே அசின் அந்த பகுதிகளுக்கு வியயம் செய்தார் என்பதை நாம் எண்ணிபார்க்கவேண்டும். உண்மையில் இலங்கை தமிழர்களாகிய நாம் வெறும் மருத்துவ வசதிகளுக்கும், உணவுக்கும் ஏங்கிக்கொண்டிருக்கவில்லை. அரசு சுதந்திரமாக வர அனுமதித்தால், புலம்பெயர் நாடுகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஈழ தமிழ் மருத்துவர்கள் பறந்துவர தயார் நிலையிலேதான் இருக்கிறார்கள். வன்னியின் இறுதி பொழுதுகளில் உணவில்லாமல், மருந்தில்லாமல் எம்மவர்கள் சாவுடன் தத்தளித்த வேளையில் எவராவது அரசின் தடைகளை மீறி வன்னிக்குள் சென்றிருந்தால் நிச்சயமாக வரவேற்றிருப்போம். தற்போது உலகின் கண்டன கணைகளுக்கும் விசாரணை கமிஷன் களுக்கும் பயந்து தமிழர்களின் மேல் பாசம் உள்ளது போல் காட்டிக்கொள்ளும் அரசுக்கு வக்காலத்து வாங்கவே இப்படியான இனத்தை விற்கின்ற நடிகைகள் வருகைதருகிறார்கள். நிச்சயமாக யாழில் அசினின் வருகையால் மக்கள் கொதித்துப்போய் உள்ளதே உண்மை. அரசு வற்புறுத்தி அழைத்து வந்திருந்த மக்களே அசினுடன் பேசுவதற்கு நிர்பந்திக்கபட்டார்கள் எங்களுக்கு தேவையானவை எல்லாம் நிம்மதியான உர
By niththilan
7/21/2010 11:37:00 PM
இந்தியா ஒளிர்கிறது!
By Sivaraman
7/21/2010 7:32:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *