காஞ்சிபுரம், ஜூலை 21: தமிழகத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளிகளில், தமிழை ஒரு பாடமாக கட்டாயம் படிக்க வேண்டும் என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வலியுறுத்திள்ளார்.ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் அவர் தலைமை தாங்கி பேசியது:கல்லூரிகளில் தமிழை ஒரு பாடமாக கட்டாயம் படிக்க வேண்டும் என்று துணைவேந்தர் கூறியுள்ளார். பல மெட்ரிக் பள்ளிகளில் தமிழே படிக்காமல் மாணவர்கள் படித்து விட்டு வருகின்றனர்.இவர்கள் கல்லூரிக்கு வந்து எப்படி தமிழ் படிப்பது? மெட்ரிக் பள்ளிகளில் தமிழை ஒரு பாடமாக படிக்க உத்தரவிட வேண்டும். அப்போதுதான் அவர்கள் கல்லூரிக்கு வரும்போது தமிழை படிக்கும்போது எளிதாக இருக்கும்.இதுபோல் மற்ற மாநிலங்களில் அவரவர்களின் தாய்மொழியை ஒரு பாடமாக படிக்கின்றனர். தமிழகத்திலும் அதுபோல் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.தாய்மொழியை படிக்காத மாணவர்கள் கல்லூரிக்கு வரும்போது அவர்கள் கல்லூரி மாணவர்களாக இருக்க மாட்டார்கள். கல்லெறி மாணவர்களாகத்தான் இருப்பார்கள். மாணவர்களை நல்ல மாணவர்களாக உருவாக்க அதிகாரிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் அனைவரும் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
உண்மையாகவே கூறி இருப்பார் என எண்ணிப் பாராட்டி வரவேற்போம். அதுபோல் அவர் செல்லும் பொழுது சமற்கிருத முழக்கங்கள் எழுப்புவதை நிறுத்தி விட்டுத் தமிழ்ப் பாக்கள் முழங்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். தேவாரம், திருவாசகம், திருமொழி, திருமந்திரம், திருவருட்பா என எண்ணற்ற தமிழ் இறைப்பாடல்கள் இருக்கும் பொழுது தம்மைத் தமிழில் பாடுமாறு அறிவுறுத்திய கடவுள் மொழியாகிய தமிழை விட்டு விட்டு அயல்மொழியாகிய சமற்கிருதம் முழங்கச் செல்வதுதான் உயர்வு என்னும் மூட நம்பிக்கையைக் கைவிடவேண்டும். அவர் சார்ந்த அனைத்துக் கோயில்களிலும் தமிழ் வழிபாட்டை மட்டும் முன்மாதிரியாக நடைமுறைப்படுத்தட்டும்! வாழ்க உலக முதல் மொழியாகிய அன்னைத் தமிழ் மொழி! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan 7/22/2010 2:47:00 PM
அய்யா திரு ஜயேந்திர சிகாமணியே, போய் உங்க அடி பொடிக்கிட்ட சொல்லி கோவிலில் பூஜையை தமிழில் நடத்த சொல், பிறகு மற்றத்தை கவனிப்போம்.
By Paris EJILAN
7/22/2010 2:27:00 PM
The views expressed by the respected swamiji is very correct.I agree with his stand and I request the authorities of technical universities in tamilnadu also to consider the implementation of one language paper tamil as compulsory and also to medical courses. Because they are the persons to practice their profession in Tamilnadu. By Prof.Dr.Syed shabudeen.P.S.
What HIS Holiness has said is absolutely correct. HE has mentioned that they should have it as subject so that everyone knows to read/write and speak their mother tongue. Read properly the news before commenting like politicians.
By Ramanan, Dubai
7/22/2010 10:57:00 AM
சமஸ்கிருதச் சாத்தானே, கோயில்களில் பூணூல்களை தமிழில் ஓதச் சொல் முதலில்.
By ravivararo
7/22/2010 10:22:00 AM
திமுக எம்எல்ஏ வின் மகனே செம்மொழி யை விட தேவநகரி மொழியே சிறப்பானது என்றும் அதனா லேயே அந்த மொழியில் இந்திய ரூபாயின் வடிவத்தை அமைத்ததாக நக்கீரன் பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளார். பிஎச்டி பட்டம் பெற மட்டுமே செம்மொழி உதவும் என்பது அவரது கணிப்பு. சாமானிய மக்களின் பிழைப்புக்கு ஆகாத மொழிபாடம் படித்து என்ன பயன்? அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் அது பிழை ப்புக்கு வழி செய்யலாம்! எத்தனை நூறு கோடிகள் செம் மொழி மாநாட்டில்? முன்னேறியது யாருடைய நிலை? மக்களுக்கு தெரியும் எது பிழைப்புக்கு உதவும் என்று.
சென்னை, ஜூலை 17: மெட்ரிக் பள்ளிகள் தமிழுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என தமிழக நிதியமைச்சர் க. அன்பழகன் கேட்டுக் கொண்டார். தமிழ்நாடு மெட்ரிக் மழலையர் மற்றும் ஆரம்பப் பள்ளிகள் சங்க மாநாடு சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அமைச்சர் க. அன்பழகன் பேசியது: மெட்ரிக் பள்ளிகளில் ஆங்கிலம் முக்கியம் என்றபோதும், தமிழுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். அப்போதுதான் தமிழகத்தின் கலாசாரமும், பண்பாடும் மாணவர்களைச் சென்றடையும். இதுபோல் ஒரு குழந்தை எதிர்காலத்தில் தமிழனாக வாழ, அக் குழந்தைக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்றார். மாநாட்டில் சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் மெட்ரிக் பள்ளிகளுக்கும், நர்சரி பள்ளிகளுக்கும் இலவசமாக வழங்க வேண்டும். மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் இலவச சைக்கிள் வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் அமையவுள்ள மேல் சபையில் மெட்ரிக் பள்ளி நிர்வாகிகளுக்கு ஓர் இடமும், நர்சரி பள்ளி நிர்வாகிகளுக்கு ஓர் இடமும் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துக்கள்
இனமானப் பேராசிரியர் சரியாகவே சொல்லியுள்ளார். ஆனால், அவர்களாகத் திருந்த மாட்டார்கள். எனவே, பதின்நிலைப் பள்ளிகளில் தமிழுக்கு முதன்மை அளிக்கும் வகையிலும் மொழிப்பாடங்களில் தமிழ்ச்சிறப்பை உணர்த்தும் கட்டுரைகள் பாடங்களாக வைக்கும் வகையிலும் கல்வித்திட்டத்தை அரசே மாற்றியமைக்க வேண்டும். தமிழியக்கத்தின் மூத்த தலைவர் இனமானப் பேராசிரியர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
சென்னை, நவ. 30: மெட்ரிக் பள்ளிகளில் 11}ம் வகுப்பில் மே 16}க்கு முன்னர் நடைபெறும் மாணவர் சேர்க்கை செல்லாது என்று மெட்ரிக் கல்வி இயக்குநர் மணி உத்தரவிட்டுள்ளார். ÷பல்வேறு இடங்களில் உள்ள மெட்ரிக் பள்ளிகளில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் இருந்தே மாணவர் சேர்க்கை நடைமுறை தொடங்கப்பட்டு, மாணவர்களிடம் அதிக அளவில் பணம் வசூலிக்கப்படுவதாக புகார் வந்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மெட்ரிக் பள்ளி இயக்குநர் தனது உத்தரவில் கூறியிருப்பது: ÷பி ளஸ் 1 மாணவர் சேர்க்கை மே மற்றும் ஜூனுக்கு இடையே நடைபெறுவதுதான் வழக்கம். ஆனால் பல பள்ளிகளில் மாணவர்களின் 10}ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்ணை வைத்து, மார்ச் மாதத்துக்கு முன்னதாகவே மாணவர் சேர்க்கையை முடித்துவிடுகின்றனர். ÷இன் னும் சில பள்ளிகள் வரும் ஜனவரிக்குள் மாணவர் சேர்க்கையை முடிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் இயக்குநர் அலுவலகத்துக்கு புகார்கள் வந்துள்ளன. ÷எனவே, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள மெட்ரிக் பள்ளிகளின் மாணவர் சேர்க்கையை முழுமையாகக் கண்காணிக்க வேண்டும். ÷த விர, பிளஸ் 1 மாணவர் சேர்க்கையை 10}ம் வகுப்புத் தேர்வு முடிவு வெளியாகி 15 நாள்களுக்குள் (மே 16 முதல் மே 30}க்குள்) முடிக்க வேண்டும். மே 16}ம் தேதிக்கு முன்னர் நடைபெறும் மாணவர் சேர்க்கை செல்லாது. ÷மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்பட வேண்டும். தவிர, மாணவர் சேர்க்கை தொடர்பாக மாணவர், பெற்றோரிடம் நேர்காணல் எதையும் நடத்தக் கூடாது. ÷10}ம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவர்களையும் 11}ம் வகுப்பில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ÷அ னைத்து வகையான மாணவர் சேர்க்கைகளும் முடிந்தவுடன் அது குறித்த விவரங்களை இயக்குநர் அலுவலகங்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளிகள் அனுப்பி வைக்க வேண்டும். மாணவர் சேர்க்கை தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகள் விரைவில் எல்லா பள்ளிகளுக்கும் வழங்கப்படவுள்ளன.
கருத்துக்கள்
நல்ல நடவடிக்கை. சரியாகப் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பெற்றோர்கள் முட்டி மோதிக் கொண்டும் பணத்தைக் கொட்டிக் கொடுத்துக் கொண்டும் மறைவாகச் சேர்க்கை பெற முயலக் கூடாது. விழித்துக் கொண்டுள்ள பள்ளிக் கல்வித் துறைக்கும் பதின்நிலைப்பள்ளி இயக்குநருக்கும் பாராட்டுகள்.