திங்கள், 17 மார்ச், 2025

இலக்குவனார் திருவள்ளுவன் முதலானவர்க்கு நூற்பரிசு வழங்கு விழா, புதுச்சேரி

 

இலக்குவனார் திருவள்ளுவன் முதலானவர்க்கு நூற்பரிசு வழங்கு விழா







செவ்வாய், 11 மார்ச், 2025

ஞாலத்தலைவர் மேதகு பிரபாகரன் புகழ் வணக்க நாள்

 

ஞாலத்தலைவர் மேதகு பிரபாகரன் புகழ் வணக்க நாள்



“தமிழினத்தின் தேசிய அடையாளத்தை நிலை நிறுத்தி முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் வரையும் உறுதி குலையாது, படைநடத்தி, தான் வரித்துக் கொண்ட உயரிய லட்சியத்தையும் தனது வழிநடத்தலையும் உளமார ஏற்று உயிர்களை விதையாக்கிய மாவீரர்களின் தியாகங்களையும் இலட்சியக் கனவுகளையும் நெஞ்சிருத்தி, எதிரிப்படையோ இறுதிக் கணம் வரை துணிவோடு களமாடி பிரபாகரன், 2009-ம் ஆண்டு மே மாதம் 18-ஆம் நாள், வீரச்சாவைத் தழுவிக் கொண்டார் என்பதை தமிழீழ மாவீரர் பணிமனை அறியத் தருகிறது. பிரபாகரன், வீரச்சாவினை உறுதிப்படுத்தி நெஞ்சைப் பிளக்கும் இப்பெரும் துயரமிகு அறிவிப்பை, அவரது வழிநடத்தலை உளமார ஏற்றுப் போராடிய போராளிகளுக்கும் ஒப்பற்ற தேசியத் தலைமையாக தமது நெஞ்சங்களில் சுமந்திருக்கும் எம்முயிரினும் மேலான தமிழ் மக்களுக்கும் பெருந்துயரத்தோடு வெளிப்படுத்திக் கொள்ளும் அதேவேளை எமது வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.”

என ‘விடுதலைப் புலிகள் மாவீரர் பணிமனை என்ற பெயரில் அறிக்கை ஒன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

“வரலாற்றில் எமக்குக் கிடைத்த அரும் பொருட் குவையான, பிரபாகரனுக்கு அவரது வழியில் களமாடிய போராளிகள், சமூகக் கட்டமைப்பினர், புலம் பெயர் தாயக-தமிழக உறவுகள் என அனைவரும் ஒன்றிணைந்து அவரது வீரவணக்க நிகழ்வை தாயகம், தமிழகம் உட்பட தமிழ் மக்கள் பரந்துவாழும் உலகப்பரப்பு எங்கும், நடத்துகிற அதேவேளையில் அனைவரும் ஒன்றிணையக் கூடிய ஐரோப்பிய நாடு ஒன்றில் 2025-ம் ஆண்டு நடுப்பகுதியில், உலகம் போற்றும் பேரெழுச்சியாக முன்னெடுக்க இருக்கிறோம்.

என்றும் இப்பணிமனை அறிவித்திருக்கிறது.

இவ்வறிக்கையின் பொய்மை மெய்மை குறித்து ஆராயாமல் மேதகு பிரபாகரன் புகழ் போற்ற வேண்டியது நம் கடமை என்பதை உணர வேண்டும். அவர் மறைவில் இருந்தாலும் புகழ் போற்றவேண்டும்! மறைந்திருந்தாலும் புகழ் போற்ற வேண்டும்!  எனவே, வரும் வைகாசி 05 / மே 18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவு நாள் கொண்டாடுவதுடன் நாம்

மேதகு பிரபாகரன் புகழ் வணக்க நாளையும் உலகெங்கும் கொண்டாட வேண்டும்

எனத் தமிழ்க்காப்புக் கழகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கின்றோம்.




வெள்ளி, 7 மார்ச், 2025

 

தமிழ்க் காப்புக் கழகம்: ஆளுமையர் உரை 122 & 123; எம் நூலரங்கம்



நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்

யாநலத்து உள்ளதூஉம் அன்று.   (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௧ – 641)

தமிழே விழி!                                                    தமிழா விழி!

கூட்ட இணைப்பு 

தலைமை:  இலக்குவனார் திருவள்ளுவன் 

வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன்

“தமிழும் நானும்”  – ஆளுமையர்கள்

தமிழ் நெறியாளர் நீலகண்டத் தமிழன், தலைவர், உலகத்தமிழர் ஒன்றியம்

பாவாணர் சீர் பரவுவார் இல.நிலவழகன்

தலைவர், உலகத்தமிழ்க்கழகம், ஆசிலாபுரம்(விருதுநகர்)

எம் நூலரங்கம்

செந்தமிழ்க் காவலர் சி.இலக்குவனார் 

ஆசிரியர்கள்: முனைவர் மறைமலை இலக்குவனார் 

இலக்குவனார் திருவள்ளுவன் 

ஆய்வுரைஞர் : தமிழ்த்திரு சரவணன்

நிறைவுரைஞர் : பொதுமை அறிஞர் தோழர் தியாகு

நன்றி: முனைவர் ஆனந்தி வாசுதேவன், புது தில்லி

வியாழன், 20 பிப்ரவரி, 2025

தமிழ்க்காப்புக்கழகம்: சிறப்புக் கூட்டம்: தொல்காப்பியமும் அகத்தியமும்

 

தமிழ்க்காப்புக்கழகம்: சிறப்புக் கூட்டம்: தொல்காப்பியமும் அகத்தியமும்



எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.   (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௨௰௩ – 423)

தமிழே விழி!                                                                                                  தமிழா விழி!             

இணைய வழி நிகழ்வு நாள் :

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345

சிறப்புரைஞர்கள்

மாநிலத் தலைவர் , பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்

மேனாள் பதிவாளர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

மேனாள் உறுப்பினர், மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையம்

புதன், 5 பிப்ரவரி, 2025

தமிழ்க்காப்புக் கழகம் /ஆளுமையர் உரை 120 & 121; என்னூலரங்கம்/ஞாயிறு 09.02.2025

 

தமிழ்க்காப்புக் கழகம் /ஆளுமையர் உரை 120 & 121; என்னூலரங்கம்/ஞாயிறு 09.02.2025

















திங்கள், 3 பிப்ரவரி, 2025

தமிழ்நாடு என்றால் திராவிடமே!- பேரறிஞர் அண்ணா

 

தமிழ்நாடு என்றால் திராவிடமே!- பேரறிஞர் அண்ணா



தமிழ்நாடு என்று இதுகாறும் பேசியும் எழுதியும் வருவதெல்லாம் தமிழ்நாடு என்பதற்குத் திராவிட நாடு என்ற பொருளோடே யல்லாமல், தமிழ்மொழிப் பிரிவினையையே உடைய கருத்தில் அல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறோம். ஏனெனில், தமிழ்நாடு என்றால் திராவிட நாடு என்றும், திராவிட நாடு என்றால் தமிழ்நாடு. என்றும் நாம் எடுத்துக் காட்டவேண்டிய அவசியம் சிறிதுமில்லாமல் எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன. அன்றியும், “திராவிடமே தமிழ் என்று மாறிற்று” என்றும், “தமிழே . திராவிடம் என்று மாறிற்று” என்றும் சரித்திராசிரியர்கள் முடிவு கண்டதாகக் குறிக்கப்பட்ட ஆதாரங்கள் ஏராளமாக இருக்கின்றன. பழங்காலத்து அகராதிகளும் அப்படியே சொல்லுகின்றன.

எடுத்துக்காட்டாக 1926-இல் டி.எ. சுவாமிநாதய்யரால் வெளியிடப் பட்ட செம்(gem) அகராதியில் 440ஆம் பக்க 5ஆவது வரியில் (dravida) “திராவிட”– என்பதற்குத் “தமிழ்நாடு” என்று ஆராய்ச்சி நூல்களும், தமிழ்நாடு என்றாலும், தமிழர்கள் என்றாலும் முறையே திராவிடம் – திராவிடர்கள் என்றுதான் கருதப்பட்டு வந்திருக்கிறதே ஒழிய வேறில்லை. இதில் தமிழ்நாடு என்பதும் தமிழர் என்பதும் காங்கிரசுகாரர்கள் புரிந்திருப்பதுபோல் ஒரு தனி இடத்தையும் ஒரு தனிமொழியையும்தான் குறிக்கின்றது என்று யாராவது கருதுவார்களேயானால், அல்லது அந்தப்படிதான் கருத நேரிடும் என்று சொல்லப் படுமேயானாலும் தமிழ்நாடு தமிழருக்கே என்பதற்கு மாற்றாகத் திராவிட நாடு திராவிடர்களுக்கே என்று இலட்சியக் குறிக்கோள் வைத்துக் கொள்வதில் எதிர்க்கருத்து இல்லை என்பதையும் தெரிவித்துக் -கொள்ளுவதோடு, இனி. அப்படியே வைத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சேம்பர்சு 20ஆவது நூற்றாண்டு அகராதியில் 282ஆவது  பக்கம் 2-ஆவது பத்தி 5ஆவது சொல், “திராவிடன்  என்கின்ற பதத்திற்கு ஆரியர்கள் அல்லாதாராகிய தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் தென் இந்திய மக்கள்? என்றும், “திராவிடம் என்பதற்குத் தென்னிந்தியாவிலுள்ள ஒரு பழமையான மாகாணம்” என்றும் பொருள் சொல்லப்பட்டிருக்கிரது.

1904இல் இலண்டனில் பெயர்போன . ஓர் ஆசிரியரால் வெளியிடப்பட்ட அகராதியாகிய Dictionary of English Language” என்ற பெரிய அகராதி, அஃதவாது இப்போது உலகிலுள்ள எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் வழங்கும்படியான பெரிய புத்தகத்தின் 257ஆவது பக்கம முதல் பத்தி  ஆவது சொல்லாக  இருக்கும் திராவிடன் என்கின்ற சொல்லுக்குப் பொருள் எழுதும்போது, “திராவிடம் – ஆரியரல்லாத மக்களைக் கொண்ட ஓரு பழமையான மாகாணம். என்றும் தமிழன் – (தமிழகம்) -. ஆரியருக்கு முன்பிருந்த மக்கள், ஆரிய மொழி அல்லாததைப் பேசுபவர்கள்” என்றும் எழுதியிருப்ப தோடல்லாமல், இலங்கையும் திராவிடம் என்று எழுதி இருக்கிறது.

விலகட்டும்! இன்றேல் வாதம் புரியட்டும்!

ஆந்திர நாட்டில் சில சமீன்தாரர்கள் தங்களைத் திராவிடர் என்று ஒப்புக்கொள்ள, சம்மதிக்கவில்லை என்றும், ஆனால் தன்னைப் பொறுத்தவரை திராவிடனே என்றும் ஓர் ஆந்திரப் பெரியார் தெரிவித்திருக்கிறார். இதில் நமக்கு அதிசயம் தோன்றவில்லை. ஏனெனில், இங்குத் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களில் சிலரே சதா சருவகாலம் தமிழன் ஆரியன் என்ற விவகாரம் பேசித் தமிழ் மக்களுக்குள் விளம்பரம் பெற்றுக் கொண்டவர்களே ஆரிய புராணங்களை ஆரியக் கடவுள்களின் புராணக்கதைகளை, அதிலும் இழிவும், அவமானமும், ஆன ஆபாசக் கதையைப் பற்றி, ஏதாவது கூறினால் கடவுளுக்குப் பெண்டுபிள்ளை, தாசி, வேசி ஏதய்யா என்றுகேட்டால் கோபித்துக் கொண்டு ஆரியக் கதைகளுக்கும் கூத்துகளுக்கும் தத்துவார்த்தம் பேசவரும் போது இவற்றை அறியாத ஒரு மனிதன் தன்னைத் திராவிடன் அல்ல என்று சொல்லுவதில் அதிசயமிருக்கக் காரணம் இல்லை.