திங்கள், 14 அக்டோபர், 2013

திருக்குறள் விளக்கம் - பாடப்புத்தகத்தில் மாணவனுக்குச்சிறப்பு

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_826086.jpg

திருக்குறள் விளக்க உண்மை நிகழ்வு மேற்கோள்!அரசு பாடப்புத்தகத்தில் மாணவனுக்கு "கவுரவம்'

கோவை :தமிழக அரசு, சமச்சீர் பாடத்திட்டத்தில், மூன்றாம் வகுப்பு, தமிழ் இரண்டாம் பருவ பாடப்புத்தகத்தில், திருக்குறள் தெளிவுரைக்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவம், போட்டோவுடன் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.இளம் வயதில் நுண்ணறிவை பயன்படுத்திய மாணவனுக்கு, "கவுரவம்' கிடைத்துள்ளது.

அரசு பாடப்புத்தகத்தில், தமிழ்பாடத்தில், திருக்குறளுக்கு, சிறுகதைகளுடன் தெளிவுரை கொடுக்கப்படுகிறது. சமச்சீர் பாடத்திட்டம் கொண்டு வரப்பட்ட பின், தமிழ் பாடங்களுக்கு, "கார்ட்டூன்' படங்களுடன் விளக்கம் கொடுக்கப்படுகிறது.இந்தாண்டு, சமச்சீர் பாடத்திட்டத்தில், மூன்றாம் வகுப்பு, இரண்டாம் பருவ புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதில், தமிழ் பாடப்புத்தகத்தில், திருக்குறள் ஐந்து அதிகாரங்களில் இருந்து, ஐந்து திருக்குறளுக்கு தெளிவுரை கொடுக்கப்பட்டுள்ளது.அன்புடைமை, அறிவுடைமை, மக்கட்பேறு, இனியவை கூறல், இன்னா செய்யாமை என்ற அதிகாரங்களில் இருந்து, தலா, ஒரு திருக்குறள் இடம் பெற்றுள்ளது.

மக்கட்பேறு என்ற அதிகாரத்தில்,"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்' என்ற குறளுக்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த, உண்மை சம்பவம், போட்டோவுடன் மேற்கொள் காட்டப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகே, அரையம்பாக்கம் கிராமத்திலுள்ள, ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது. இதைப் பார்த்த, அக் கிராமத்தைச் சேர்ந்த, சந்தோசு என்ற, 11வயது சிறுவன், உடனடியாக, ஊர் மக்களிடம் அந்த செய்தியை தெரிவித்தான். அந்த வழியாக வந்த, "விழுப்புரம் பயணிகள் ரயிலை' ஊர் மக்கள் நிறுத்தினர். ரயிலில் பயணம் செய்த பலரின் உயிரை காப்பாற்றிய சந்தோஷ், அரைம்பாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். சந்தோஷûக்கு பலரும் பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கினர்'.இதற்கு, "மகனை பெற்றபோது தாய் மகிழ்ச்சி அடைகிறார். அதைவிட, அறிவும் ஒழுக்கமும் நிறைந்தவன், என, தன் மகனைப் பிறர் புகழக் கேட்கும் போது, மேலும் மகிழ்ச்சி அடைகிறார்' என, பொருள் கூறப்பட்டுள்ளது.

இந்த பாடத்தில், சந்தோஷ்க்கு பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில், பொன்னாடை போர்த்தி, பரிசு வழங்கிய போட்டோவும் இடம் பெற்றுள்ளது."வழக்கமாக, குட்டிக்கதை ஒன்றைக் கூறி, திருக்குறளுக்கு விளக்கும் கொடுத்த நிலை மாறி, உண்மை சம்பவத்தை போட்டோவுடன் பொருள்பட விளக்கும் போது, பாடம் படிக்கும் மாணவர்களுக்கு நல்லொழுக்கம் ஏற்படும். திருக்குறள் பொருள் மாணவர்களுக்கு எளிதில் புரியும், மனதில் பதியும். மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், சமச்சீர் பாடத்திட்டத்தில், இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது' என, அரசு பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
ஊருக்கே "கவுரவம்':

பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற மாணவனை தொடர்பு கொள்ள, அரையம்பாக்கத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியை தொடர்பு கொண்டபோது, தொடர் விடுமுறை காரணமாக யாரிடமும் பேச முடியவில்லை. இறுதியில், அரையம்பாக்கம் ஊராட்சி துணைத்தலைவர் வெங்கடேசனை தொடர்பு கொண்ட போது, ""2008ல் அந்த சம்பவம் நடந்தது. சந்தோஷை ஊரே தூக்கி வைத்து கொண்டாடியது. சந்தோஷ் தற்போது, மதுராந்தகம் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறான். அவனது புத்திசாலி தனத்தால், ஊருக்கே கவுரவம் கிடைத்துள்ளது. அவனது அப்பா வேலு, அம்மா சரசு இருவரும் கட்டட தொழிலாளர்கள். அவர்களிடம் மொபைல்போன் வசதியில்லை,'' என்றார்.

நாள்தோறும் 5,000 பேருக்கு உணவளிக்கும் அன்ன ஆலயம்

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_826091.jpg
நாள்தோறும் 5,000 பேருக்கு உணவளிக்கும் அன்ன ஆலயம்
எத்தனையோ தெய்வங்களுக்கு ஆலயங்கள், இந்த நாட்டில் உள்ளன. ஆனால், சென்னையில், உணவுக்கு ஒரு ஆலயம் உள்ளது.சென்னை, பெரம்பூரில், அருள்ஜோதி அன்ன ஆலயம், கடந்த 18 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு, காலை, மதியம், இரவு என, மூன்று வேளையும், பசி என்று வருவோருக்கு, இல்லை என்று சொல்லாமல், உணவளித்து வருகிறார் சதீஷ்ராஜ் 'அடிகளார்', 47.
1995ல் இருந்து...:

கடந்த 1995ல், வீட்டிலேயே, சொந்த செலவில், அன்னதான பணியை சதீஷ்ராஜ் துவங்கினார். பின், நன்கொடையாளர்கள் வழங்கிய அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களின் அளவு அதிகரிக்க, 1999ல், கென்னடி சதுக்க பிரதான சாலையில் தனியே அன்னதானக் கூடம் அமைத்தார்.இங்கு, தற்போது, மூன்று வேளையும் அன்னதானம் நடந்து வருகிறது. இதுதவிர, தினமும், 20க்கும் மேற்பட்ட மாநகராட்சி பள்ளிகளில், உரிய அனுமதி மற்றும் கோரிக்கையின் அடிப்படையில் மாணவ, மாணவியருக்கு, காலை உணவாக, அரிசி கஞ்சி வழங்கி வருகிறார்.ஆலய அன்னதானத்திலும், இந்த உணவு ஆலயம் பங்கேற்கிறது. சென்னை சுற்றுவட்டாரத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட கோவில்களில், சுழற்சி முறையில், மதிய சாப்பாடு, அன்ன ஆலயத்தில் இருந்து அனுப்பப்படுகிறது.இந்த வகையில், தினமும், ஏறத்தாழ 5,000 பேர், அருள்ஜோதி அன்ன ஆலயம் மூலம் பசியாறி வருகின்றனர்.
வேதாத்திரி மகரிஷி:

அன்ன ஆலயம் அமைத்தது குறித்து சதீஷ்ராஜிடம் கேட்ட போது, ''என்னை விளம்பரப்படுத்தும் வகையில் நான் எதுவும் கூறமாட்டேன். இருந்தாலும், நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதிலளிக்கிறேன்,'' என்றபடி, பதிலளிக்க துவங்கினார்.''ஆரம்பத்தில் நானும் சாதாரணமாக வேலை, வீடு என்று சென்று கொண்டுஇருந்தேன். ஒருநாள் மனிதனாய் பிறந்த நாம், ஏதாவது சேவை செய்ய வேண்டும் என எண்ணி, அன்னதானம் செய்ய துவங்கினேன். வேதாத்திரி மகரிஷி மீதிருந்த பற்றால், பின்னாளில் சேவையே வாழ்க்கையாகி விட்டது. ஆரம்பத்தில் சொந்த செலவில் நடந்த அன்ன ஆலயப் பணிகள், இப்போது பொதுமக்களின் நன்கொடை மூலம் குறைவில்லாமல் நடைபெறுகின்றன,'' என்றார் அவர்.அன்னதானம் தான், அறங்களில் தலை யானது என்ற அவர், ''முன்பின் அறியாத, தொடர்பே இல்லாத ஒருவர் தரும் அன்னதானம், எங்கோ ஒருவரின் வயிற்றுப் பசியை போக்குகிறது. அவரது வாய் வாழ்த்தா விட்டாலும், அவரது பசியாறிய உணர்வு, தானமளித்தவர்களை மனதார வாழ்த்தும்,'' என்றார்.
'மக்களால் நடக்கிறது':

''பொதுமக்கள் தரும் நன்கொடையை நாங்கள் பணியாட்களை அனுப்பி வாங்கு வோம். தற்போது, பலரது நன்கொடையை நேரில் சென்று பெற முடியாத அளவுக்கு, நன்கொடைகள் குவிகின்றன. இந்த அன்னதானப் பணியில் நான் வெறும் கருவி மட்டுமே. மக்கள் தான் இதை நடத்துகின்றனர்,'' என, நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.அருள்ஜோதி அன்ன ஆலயத்தில் தொடர்ந்து ஆறு மாதத்திற்கு மேல் ஒருவரை காண முடியாது. அதன் பின், அவர் ஏதாவது ஒரு வேலையில் ஈடுபட்டிருப்பார் என, உறுதியுடன் தெரிவிக்கிறார் சதீஷ்ராஜ்.
இப்படியுமா?

உரையாடல் முடிந்ததும் தம்பதியராய் புகைப்படம் எடுக்க வேண்டும் என்றபோது, சதீஷ்ராஜும், அவரது மனைவியும் மறுத்து விட்டனர்.இன்று 100 பேருக்கு சாப்பாடு போட்டு விட்டு, 'போஸ்' தரும் சிலருக்கு மத்தியில், தினமும் 5,000 பேருக்கு உணவளிக்கும் தம்பதியர், செய்தியாக கூட தங்களுக்கு விளம்பரம் வேண்டாம் என, மறுத்தது, உண்மையிலேயே அதிசயமாகத் தான் இருந்தது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தலைப்பில் 5000 பேருக்கு எனக் குறிக்கப்பெற்றுள்ளது. இறுதிப்பத்தியில் 500 எனத் தவறாக உள்ளது.திருத்த வேண்டுகிறேன்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

வெளிநாடு வாழ் தமிழர் நல அமைச்சகம் வேண்டும்

http://img.dinamalar.com/data/gallery/gallerye_012153397_826137.jpg




கோவை: கேரள மாநிலத்தில் இருப்பது போல், "வெளிநாடு வாழ் தமிழர் நல அமைச்சகம்' தமிழகத்தில் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துவருகிறது.

அமெரிக்கா,இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தமிழர்கள் பல தலைமுறையாக வசிக்கின்றனர். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பங்கள் மற்றும் குறைந்த கல்வித்தகுதி கொண்ட இளைஞர்கள் "பிட்டர்', "டர்னர்' உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வளைகுடா நாடுகளுக்கு அதிக எண்ணிக்கையில் செல்கின்றனர். சர்வதேச நாடுகளில் வாழும் இந்தியர்கள், இனவெறி தாக்குதல், விபத்து, பணியிடத்தில் ஏற்படும்
பிரச்னைகள், குடும்ப தகராறு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்படும்போது, இந்திய தூதரக அலுவலகங்கள் மூலம், இந்தியாவிலுள்ள வெளிநாடு வாழ் இந்தியர் நல அமைச்சகத்தினர் தேவையான உதவிகளை செய்து தருவர். எனினும் பெரிய அளவிலான பிரச்னைகளின்போது மட்டுமே அரசு சார்பில் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. நமது நாட்டிலிருந்து அங்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படும் வார, மாத, நாளிதழ்களில் வெளிவரும் செய்திகள் குறித்து அந்நாட்டு அரசு அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது.

வெளிநாட்டில் வாழும் மலையாள மக்களின் நலனை காக்க உதவும் வகையில், அம்மாநில அரசு சார்பில், வெளிநாடு வாழ் கேரள மக்கள் நலப்பிரிவு"நோர்கா' கடந்த 1996 முதல் செயல்பட்டு வருகிறது. தவிர, வெளிநாடு வாழ் மலையாள மக்கள் தெரிவிக்கும் புகார்கள் குறித்து, நேரடி களப்பணி மூலம்நடவடிக்கை மேற்கொள்ள "நோர்கா ரூட்ஸ்' என்ற பிரத்யேக அமைப்பு கடந்த 2002ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.இவ்வமைப்புகளின் தலைவராக அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் செயல்படுகின்றனர். திருவனந்தபுரத்தில், எட்டு தளங்களுடன் அமைக்கப்படும் பிரத்யேக கட்டடத்தில், விரைவில் "நோர்கா' மண்டல மையம் செயல்பட உள்ளது.
இதேபேல், "வெளிநாடு வாழ் தமிழர் நல

அமைச்சகம்' ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வெளிநாடு வாழ் தமிழர்களின் எதிர்பார்ப்பாகும்.

கோவை, போத்தனூரை சேர்ந்த சவுதிஅரேபியா வாழ் தமிழர் அப்துல் சத்தார் கூறியதாவது: வளைகுடா நாடுகளில் கடுமையாக கெடுபிடிகள் காரணமாக,அமைப்புகள் துவக்கவோ, செயல்படவோ அனுமதிக்கப்படுவதில்லை. அங்குள்ள தமிழர்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். பெரிய அளவிலான பிரச்னைகளுக்கு மட்டுமே இந்திய அரசு வேகமாகநடவடிக்கை மேற்கொள்கிறது. சிறிய அளவிலான பிரச்னைகள் குறித்த தகவல்கள் சரிவர அவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படுவதில்லை. நான் உள்ளிட்ட சவுதியில் வசிக்கும் சுரேஷ், பாரதி, வெங்கடேஷ் உள்ளிட்டோர், சவுதிஅரேபியாவில் வாழும் தமிழர்களின் பிரச்னைகள் குறித்து இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தும் நடவடிக்கைகளில் தன்னார்வ உள்ளத்துடன் ஈடுபட்டு வருகிறோம். எனவே, தமிழர்களின் நலன் காக்க, வெளிநாடு வாழ் தமிழர் நல அமைச்சகம் துவக்க வேண்டும். இதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அப்துல் சத்தார் தெரிவித்தார்.



ஞாயிறு, 13 அக்டோபர், 2013

குடியரசுத் தலைவர் மாளிகையில் தமிழ் ஒலிக்க வைத்த 'தமிழக அரசியல்'


யானைகளுடன் பேசும் 'வனமங்கைச்' சிறுமி


http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_825395.jpg

யானைகளுடன் பேசும் 'டார்சான்' பெண்


ஜார்க்கண்ட் மாநில, மலைப்பிரதேசமான சிங்கர்ஜோர் கர்வாடோலி என்ற மலை கிராமத்தில் வசிப்பவர் நிர்மலா, 16. இவர் காட்டு யானைகளுடன், மலைவாழ் பழங்குடியினரின் மொழியான முண்டாரி மொழியில், பேசுவதைக் கேட்கும் யானைகள் பதிலுக்கு பிளிறுகின்றன. இவரது கட்டளையைக் கேட்கும், காட்டு யானைகள், திரும்பி காட்டுக்குள் சென்று விடுகின்றன. இதனால், நிர்மலாவை, 'டார்ஜான் கேர்ள்' என, உள்ளூர்வாசிகள் அழைக்கின்றனர். காட்டு யானைகளுடன் பேசி, அவற்றைத் திருப்பி அனுப்பும், நிர்மலா குறித்த தகவல் அறிந்த வனத்துறையினர், குடியிருப்புகளில் புகும் காட்டு யானைகளை விரட்டும் பணியை, அவரிடம் ஒப்படைத்துள்ளனர். 'சிறுவயதில், எங்கள் குடும்பம் வசித்த பகுதியில், காட்டு யானைகள் தாக்கின. அதனால், ஏற்பட்ட பெரும் சேதத்தையும், ஒருவர் உயிரிழந்ததையும் நேரில் கண்ட நிர்மலா, யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். பொருளாதார வசதியில்லாததால், அவரை படிக்கவைக்க முடியவில்லை' என, நிர்மலாவின் தாயார் சலோனி டோப்போ கூறியுள்ளார்.

கடந்த மாதம், ரூர்கேலாவில் உள்ள பிர்சா மைதானத்திற்கு அருகே, காட்டு யானைக் கூட்டம் முற்றுகையிட்ட தகவலை, இரவு 11:00 மணிக்கு, வனத்துறையினர் நிர்மலாவுக்குத் தெரிவித்தனர். உடனே, நிர்மலா தைரியத்துடன் சென்று, காட்டு யானைகளுடன் பேசி, அங்கிருந்து காட்டுக்குள் வெற்றிகரமாக விரட்டினார். ஆனால், சில யானைகள் விரட்டியதில், நிர்மலாவின் காலில் காயம் ஏற்பட்டது. ரூர்கேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிர்மலா, கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்றுவருகிறார். இவரது மருத்துவச் செலவு முழுவதையும், வனத்துறை ஏற்றுக்கொண்டுள்ளது.

சரக்கு மிதியூர்தி ஓட்டி வெற்றிக்கொடி நாட்டும் இளம்பெண்

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_825534.jpg

சரக்கு  மிதியூர்தி ஓட்டி சாதிக்கும் இளம்பெண்


திருவள்ளூர் மாவட்டம், தண்ணீர்க்குளத்தை சேர்ந்தவர், செசிந்தா, 28; சரக்கு ஆட்டோ ஓட்டுநர். திருவள்ளூரில் இருந்து, கட்டட கருவிகள், மருந்து, மாத்திரைகள் போன்றவற்றை, தன் ஆட்டோவில் ஏற்றி, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம், துறைமுகம் என, போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னை நகரில், சர்வ சாதாரணமாக, சென்று வருகிறார்.ஆட்டோ ஓட்டுனர் என்பதோடு, 'குங்பூ' தற்காப்பு கலையை கற்றவர் என்ற மற்றொரு பரிமாணமும் ஜெசிந்தாவுக்கு இருக்கிறது.

அவரிடம் பேசியதில் இருந்து...

எவ்வளவோ தொழில்கள் இருக்க, ஆட்டோ ஓட்டுவதை தேர்ந்தெடுத்தது ஏன்?
எனக்கு சிறு வயதில் இருந்தே, வாகனங்கள் ஓட்ட ஆசை. என் தந்தை எனக்கு, 'பைக்' ஓட்டக் கற்றுக் கொடுத்தார். என் சித்தப்பா ஆட்டோ வைத்திருந்தார். அவருடன் ஆட்டோவில் செல்லும் போது, எனக்கும் ஆட்டோ ஓட்ட ஆவல் ஏற்பட்டது. ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து, ஓட்டுனர் பயிற்சி பெற்றேன்.

ஆட்டோ ஓட்ட வேண்டிய கட்டாயம்?
என் தந்தை, ரயில்வே துறையில் வேலை பார்த்தார். அவருக்கு மூன்று மனைவிகள். இரண்டாவது மனைவிக்கு நானும், என் அக்காவும்.நான் பிறந்த, ஆறு மாதத்திலேயே, என் அம்மா இறந்தார். தாய் முகத்தை பார்க்க முடியாத எனக்கு, என் தந்தை தான், தாயுமானவராக இருந்தார். அவருக்கு, 1998ம் ஆண்டு சிறுநீரகம் செயலிழந்தது. குடும்ப உறவுகள், சிறுநீரக தானம் கொடுக்க முன்வராத நிலையில், என், 17 வயதில், நான் தான் கொடுத்தேன்.எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து, யாரும் உதவி செய்ததில்லை. எட்டாவது மட்டுமே படித்த நான், கூலி வேலைக்குச் சென்றேன். அதில் வரும் வருமானத்தை, அக்கா, பெரியம்மா வீட்டிற்கு செலவழித்தேன். 2010ல் என் தந்தை காலமானார்.ஆதரவளிக்க யாரும் முன்வராததால், கடந்த ஓராண்டாக தனியாக வசிக்கிறேன்.என் பெரியம்மா மகள் தேன்மொழி உதவியுடன், வங்கியில் கடன் பெற்று, ஆட்டோ வாங்கினேன்.

'குங்பூ' வித்தையை பயன்படுத்த வேண்டிய வாய்ப்பு கிடைத்ததா?
இதுவரை இல்லை. இனிமேலும் வராது என்று நம்புகிறேன். அந்தளவிற்கு எனக்கு யாரும் இடையூறு செய்யவில்லை. மாறாக, வாழ்த்தி, ஆதரவு கொடுக்கின்றனர்.

வாழ்க்கையில் உங்களது லட்சியம் என்ன?
சொந்த, பந்தம் இருந்தும் எனக்கு (அவர்கள்) தூரம் தான். உறவுகள் உதறியதால் தனி மரமான நான், நன்றாக சம்பாதித்து, சொந்த வீடு கட்ட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். என்னைப் போல், பெண் ஓட்டுனர்களை அதிகளவில் உருவாக்க வேண்டும் என்ற ஆவலும் உள்ளது. அதற்கான முயற்சியில் ஈடுபட்டு உள்ளேன். ஆட்டோ ஓட்டிச் செல்லும்போது, ஆச்சரியமாக பார்க்கும், பெண்கள், எனக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர். அவர்களிடம் என் கருத்தை கூறி வருகிறேன்.


பெண்கள் எப்போதும், ஆண்களை சார்ந்திருக்கும் நிலை மாற வேண்டும். அதற்கு உதாரணமாக திகழ நான் விரும்புகிறேன். குடும்பத்தில் கஷ்டம், வாழ்க்கையில் விரக்தி, உறவுகளில் விரிசல் என சோர்ந்து போகாமல், துணிந்து இறங்கினால் வெற்றி சாத்தியமே...! 

செசிந்தா,  மிதியூர்தி ஓட்டுநர்

Northern state girls not protected | பாதுகாப்பற்ற நிலையில் வட மாநிலச்சிறுமிகள்: விற்பனைக்காக வீதியில் திரிவதால் ஆபத்து? Dinamalar

Northern state girls not protected | பாதுகாப்பற்ற நிலையில் வட மாநில ச் சிறுமிகள்: விற்பனைக்காக வீதியில் திரிவதால் ஆபத்து? Dinamalar

அ. காற்றடித்தாலும் இனி வாழை சாயாது! ஆ. எடை குறைந்தால் பயப்படாதீர்கள்!

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_825400.jpg

காற்றடித்தாலும் இனி வாழை சாயாது! 
காற்றின் தாக்கத்திலிருந்து வாழைத்தோப்புகளை ப் பாதுகாக்கும், புது ரக சவுக்கு மரத்தை உருவாக்கியுள்ள ஆராய்ச்சியாளர், புவனேசுவரன்: நான், கோவையில் உள்ள, வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில், ஆராய்ச்சியாளராக பணியாற்றுகிறேன். வாழை சாகுபடியில் உள்ள பெரும் சவாலே, அவற்றை காற்றின் தாக்கத்தில் இருந்து, பாதுகாப்பது தான். நீர் தட்டுப்பாடு, நோய் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்பைவிட, பலத்த காற்றால் ஏற்படும் பாதிப்பில் தான், விவசாயிகளுக்கு அதிக நட்டம் ஏற்படும். பருவக்காற்று வீசும் காலங்களில், கம்புகளால் முட்டு கொடுப்பது, 'பிளாஸ்டிக் பெல்ட்'டால் கட்டுவது, மண் அணைப்பது, இலைகளை கவாத்து செய்வது வழக்கம். இருந்தும், 70 கி.மீ., வேகத்தில் காற்று வீசினால், வாழை மரங்கள் அடியோடு சாய்ந்துவிடும். கடலோர பகுதிகளில் வீசும் காற்றை தடுக்கவும், கல் அரவை தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் புழுதியை தடுக்கவும், பொதுவாக சவுக்கு மரங்களை வளர்ப்பர். எனவே, காற்றின் தாக்கத்திலிருந்து வாழை தோப்புகளை பாதுகாக்க, அடர்த்தியான வீரிய ரக சவுக்கு மரத்தை உருவாக்க முயற்சித்தோம்.
இவ்வாறு, 10க்கும் மேற்பட்ட, உயர் ரக சவுக்கு மரத்திலிருந்து, மாதிரிகள் எடுக்கப்பட்டு, 'குளோனிங்' என்ற தாவர இனப்பெருக்கம் முறையில், 'காசுரினா ஜூங்குனியானா' என்ற புதிய ரக சவுக்கை கண்டுபிடித்தோம். இதை, வாழைத்தோப்பின், நான்கு திசைகளின் ஓரத்தை சுற்றிலும், மூன்று வரிசையாக, வரிசைக்கு வரிசை, 1 மீ., இடைவெளியில், குறுக்கு-மறுக்காக நட வேண்டும். இச்சவுக்கை வளர்ப்பதால், காற்றின் வேகத்தை, 46 சதவீதமும், மண்ணரிப்பை, 76 சதவீதமும் கட்டுப்படுத்தலாம். மேலும், தோட்டத்தின் தட்பவெப்ப நிலை சமன் ஆவதுடன், காற்றில் உள்ள தழைச்சத்தையும் மண்ணில் நிலைநிறுத்துகிறது. ஒரு முறை நடப்படும் இச்சவுக்கு மரம், மூன்று ஆண்டுகள் வரை பயன்படும். பின், சவுக்கு மரங்களை அறுவடை செய்வதன் மூலம், உபரி வருமானமும் பெற முடியும். தொடர்புக்கு: 0422-2484100

எடை குறைந்தால் பயப்படாதீர்கள்!
குழந்தை நல மருத்துவர், சுப்ரமணியன்: குழந்தையின் உடல் எடை, ஆரோக்கியத்தை தீர்மானிக்கிற விஷயங்களில் ஒன்று, என்பதால், எடையை வைத்து மட்டுமே, குழந்தையின் ஆரோக்கியத்தை தீர்மானிக்க முடியாது. பிறந்த குழந்தையின் எடை, 2.5 முதல் 3.5 கிலோ வரை இருக்கலாம். தாயின் ஆரோக்கியம் மற்றும் பெற்றோரின் பரம்பரையை பொறுத்தே, குழந்தை யின் எடை அமையும். எனவே, 'நான் நல்லா தான் சாப்பிட்டேன்; குழந்தை ஏன் அதிக எடையுடன் பிறக்கவில்லை...' என, தாய் கேள்வி கேட்க முடியாது. குழந்தை பிறந்த சில நாட்களில், எடை குறையும். உடம்பில் உள்ள, தேவையில்லாத நீர் இறங்குவதே, இதற்கு காரணம். ஒரு வாரத்திற்கு பின், மீண்டும் சரியாகி விடும். குழந்தை பிறந்த மூன்று மாதங்களுக்கு, தினமும், 20 முதல் 30 கிராம் வரை, உடல் எடை கூடும். மூன்றி லிருந்து, ஆறாம் மாதம் வரை, தினமும், 15 கிராம் வரையே, எடை கூடும். ஆறாம் மாதத்திலிருந்து, குழந்தையின் வளர்ச்சி அளவு குறைய ஆரம்பிக்கும். எனவே, 'பிறந்த ஆறு மாதம் வரை, குழந்தை நன்றாக வளர்ந்தது. யாரு கண்ணு பட்டது என, தெரியவில்லையே...' என, பெற்றோர் கவலைப்பட தேவையில்லை. ஒரு வயது குழந்தைக்கு, 8 முதல் 12 கிலோ வரை, எடை இருக்கும். எட்டு கிலோவை விட சற்று குறைந்தாலும், பிரச்னை இல்லை. குழந்தை நன்றாக ஓடி ஆடி விளையாடுகிறதா என்பதே முக்கியம். எனவே, குழந்தையின் எடைக்கும், ஆரோக்கியத்திற்கும் சம்பந்தம் இல்லை. இருந்தாலும், குழந்தையின் எடை தான், அதன் வளர்ச்சியை சரியாக காட்டும் கருவியாக செயல்படுகிறது. மேலும், 200 குழந்தைகள் இருக்கும் இடத்தில், சில குழந்தைகளை மட்டும், பிரச்னை உடையவர்கள் என, எளிதில் காட்ட, இந்த எடை வளர்ச்சி விகிதம் உதவும். பெரும்பாலான குழந்தைக்கு நீர்சத்து தான், அதிகம் இருக்கும். சிலருக்கு திசு, எலும்பு, கொழுப்பு போன்றவை அதிக எடையுடன் இருப்ப தால், குண்டாகவும் இருப்பர்.

| நூற்றாண்டு கண்ட திரையரசியின் கதை...தினமலர்

| நூற்றாண்டு கண்ட சினிமா ராணியின் கதை... Dinamalar

கதறும் கல்லூரி முதல்வரின் குடும்பம்

பால் காய்ச்ச வேண்டியவனுக்கு...பால் ஊத்திட்டோமே! - கதறும் கல்லூரி முதல்வரின் குடும்பம்

Comment (5)   ·   print   ·   T+  
2
நெல்லையில் இருந்து சேர்ந்தமரம் செல்லும் வழியெல்லாம் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள்.. பேருந்துப் பயணத்தில் கூட "பார்த்தியாலே...நம்ம சுரேஷ் தங்கமான மனுசமுல்ல... ஊருக்கு நல்லது சொன்னவமுல்ல .. சின்ன பசங்க சேர்ந்து இப்புடி பண்ணிப்புட்டானுங்களே.. நல்ல நேர்மையா இருந்தவம்முல்லா.." என்று நெல்லை சீமையின் வெள்ளந்தி மனிதர்கள் அவர்களுக்குள் பரபரப்பு மாறாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
சேர்ந்தமரம் பழைய காவல் நிலையத்தில் இறங்கினால் பொடிநடை போடும் தூரம்தான் சுரேசின் வீடு. கடந்த 10-ம் தேதி காலையில் பிச்சைக்கண்ணு, பிரபாகரன், டேனிஸ் என்ற மூன்று மாணவர்களின் வெறியாட்டத்தில் பலியான, இன்பென்ட் ஜீசஸ் கல்லூரி முதல்வர் சுரேஷின் வீடு அது. வீட்டு முன்னால் உறவினர்கள் கூடி நின்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இன்னமும் விலகாத அதிர்ச்சியுடன் நம்மிடம் பேசினார் சுரேஷின் சித்தி கலைச்செல்வி.
“சுரேஷ் எனக்கு மகன் முறை வரும். எப்பையும் ரொம்ப நேர்மையா இருப்பான். அதுக்கு அவனுக்கு கிடைச்ச பரிசுதான், இந்த மரணம்ன்னு தோணுது. குடும்பத்துல யாருகிட்டயும் ஒரு வார்த்தை சத்தமா பேசிக்கூட பார்த்ததில்லை... அவன் கோபப்பட்டும் எங்களுக்கு தெரியாது. சேர்ந்தமரம் அரசு உயர்நிலைப் பள்ளியில்தான், பத்தாம் வகுப்பு வரை படிச்சான். இப்போ அது மேல்நிலைப்பள்ளி ஆகிடுச்சு. பத்தாம் வகுப்பு படிச்சப்போ சுரேஷ்தான் பத்தாம் வகுப்புல ஸ்கூல் பர்ஸ்ட் வாங்குனான். இப்பவும் பள்ளிக்கூட போர்டுல சுரேஷ் பேரு இருக்கும். ஒவ்வொரு வருசமும் அவன் படிச்ச ஸ்கூலுல பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பில் முதலிடம் வாங்கும் பசங்களுக்கு 1000 ரூபாய் மேனிக்கு ஊக்கத்தொகை கொடுத்து உற்சாகப்படுத்துவான். வருசத்துக்கு 50 ஏழை பிள்ளைகளுக்கு சீருடை, பாடநூல்களை கொடுப்பான். வருசாவருசம் தீபாவளிக்கு 50-க்கும் மேற்பட்ட ஆசிரமங்களில் இருந்து நன்கொடை கேட்டு கடிதம் வரும். எல்லாருக்கும் தாராளமா கொடுப்பான். இதைப்பத்திக் கேட்டா ஏழை மக்களுக்கு சேவை செய்ற வாய்ப்பு எல்லாருக்கும் கிடைச்சுடாது சித்தின்னு சொல்லுவான்... அவனை போய்..." கண்ணீர் விட்டு கதறுகிறார் கலைச்செல்வி.
அவர் விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறார் சுரேஷின் அத்தை விஜயராணி, ’’அவுங்க அப்பா கூட பிறந்தவ நான். ஆனாலும் என்னை சுரேஷ் அத்தைன்னு கூப்புட்டு தெரியாது. அன்பா அம்மான்னுதான் கூப்புடும். தென்காசி பக்கத்தில் உள்ள ஆய்க்குடியில் செயல்பட்டுவரும் அமர் சேவா சங்கத்துக்கும் நிதி கொடுப்பாரு. எங்க குடும்பத்துக்குன்னே பாரம்பரியமா ஊருக்குள்ள ஒரு மரியாதை உண்டு. சுரேஷின் தாத்தா ராமையா, சேர்ந்தமரம் பஞ்சாயத்து தலைவரா இருந்தாங்க. காமராஜரே இந்த வீட்டுக்கு வந்திருக்காரு. ராமையா தாத்தா காங்கிரஸ் கட்சியிலும் ஜில்லா போர்டு தலைவரா இருந்தாங்க. சேர்ந்தமரம் கூட்டுறவு வங்கியிலும் தலைவரா இருந்தாங்க. சுரேஷின் தாத்தா காலத்துலதான் இங்க துவக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளியெல்லாம் வந்துச்சு.
எப்போதுமே என்கிட்ட படிக்குற மாணவர்கள் எல்லாரையும் முன்னுக்கு கொண்டு வருவேன்னு சொல்லிகிட்டே இருப்பாங்க. ஒரு விசேச வீட்டுக்கு வந்தாகூட பிள்ளைகள் படிப்பை பத்திதான் பேசிட்டே இருப்பாங்க. அதுக்காகவே திருநெல்வேலி பாளையங்கோட்டை, ரகுமத் நகரில் வீடு எடுத்து தங்கி இருந்தாங்க. குழந்தை பிறந்து 3 மாசத்திலேயே கருத்து வேறுபாட்டால சுரேஷின் மனைவி பிரிஞ்சு போயிட்டாங்க. அப்போ இருந்தே அவரு பொண்ணு அக்‌ஷயாதான் உலகம்ன்னு வாழ்ந்த மனுசன். பலதடவை இரண்டாவது திருமணம் பண்ண சொல்லியும் அக்‌ஷயாவுக்காக வேண்டாம்ன்னு சொல்லி மறுத்துட்டாங்க.
சுரேஷுக்கு கடவுள் பக்தி அதிகம். போன புரட்டாசி சனிக்கிழமைக்கு கூட அக்‌ஷயாவையும் கூட்டிட்டு வீட்டுக்கு வந்திருந்தாங்க. சனிக்கிழமை நாள் பூரா கோவிலில் ஓடுச்சு. ஞாயிற்றுக் கிழமை காலையில் நிறைய படிக்கனும்ன்னு கிளம்பி போயிட்டாங்க. ஆனால் இந்த சனிக்கிழமைக்கு…? செமஸ்டர் லீவு அப்பவும் பிள்ளைங்க, படிப்புன்னு அதை சுற்றியே அவரு மனசு சுத்திட்டு இருக்கும். எப்பவும் ஸ்டூடண்ட்ஸ் பத்தியே சிந்திச்சுட்டு இருப்பான். இப்போதான் திருநெல்வேலியில் சொந்தமா ஒரு வீடு கட்டுனான். 25-ம் தேதி புதுமனை புகுவிழாவுக்கு நாள் குறிச்சவனுக்கு..பால் ஊத்த வைச்சுட்டாங்க பாவிப்பசங்க.." என்று தேம்பி,தேம்பி அழுதார்.
கனத்த இதயத்தோடு கிளம்ப எத்தனிக்கையில் நம் கைபற்றிக் கொண்ட சுரேஷின் மகள் அக்‌ஷயா, "அங்கிள்… அப்பா படின்னு சொன்னதால கொன்னுட்டாங்களாமே.. ஏன் அங்கிள் இப்படி பண்ணுனாங்க? எனக்கு அம்மா, அப்பா இரண்டுமே என் அப்பாதான். இப்போ எனக்கு யாரு இருக்கா?" என்று கேட்ட அந்த சின்னஞ்சிறு குழந்தையின் முகம் ஏனோ இன்னும் நெஞ்சை வீட்டு நீங்க மறுக்கிறது.
தமிழகம் முழுவதும் 21-ம் தேதி வேலைநிறுத்தம்.....
குமரி மாவட்ட சுயநிதி பொறியியல் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் சேர்ந்து சுரேஷ் படுகொலையை கண்டித்தும், கல்லூரி பாடத்திட்டத்தில் பண்பாட்டு கல்வியை சேர்க்க வலியுறுத்தி பேரணி நடத்தினர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இவர்கள் கொடுத்த மனுவில் சுரேஷின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் இந்த பேரணியில் தமிழகம் முழுவதும் உள்ள சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கு சுரேஷின் படுகொலையை கண்டித்து வரும் 21-ம் தேதி வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வீட்டு கடன் முடியல....
சுரேஷ் வீடு கட்டுவதற்காக வாங்கி இருந்த வங்கி கடன் லட்சங்களில் இருக்கிறது. அக்‌ஷயாவின் எதிர்காலமும் கேள்விக்குறியாய் இருக்கிறது. அரசும், கல்லூரி நிர்வாகமும் வழங்கும் நிவாரணமே, அவரது குடும்பத்தின் மன ரணத்தை ஓரளவாவது ஆற்றும்.