தமிழக அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழக அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 28 நவம்பர், 2013
ஞாயிறு, 13 அக்டோபர், 2013
ஞாயிறு, 1 செப்டம்பர், 2013
இணைய மாநாடு குறித்து இலக்குவனார் திருவள்ளுவன் செவ்வி - இணையத் தமிழ் மன்றம் வேண்டும் : ஆரா
இணைய மாநாடு குறித்து இலக்குவனார்
திருவள்ளுவன் செவ்வி
இணையத் தமிழ் மன்றம் வேண்டும் -
முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்
முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்
- ஆரா
தமிழக அரசியல்
நாள் 04.09.2013 வியாழன்
பக்.22-23
உலக
மொழிகளில் இன்னும் இளமையாய் இருக்கும் தமிழுக்குப் புதிய மகுடம் சூட்டும் வகையில், மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் அண்மையில் 12ஆம்
உலகத்தமிழ் இணைய மாநாடு நடைபெற்றது. உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப
மன்றமும்(உத்தமம்) மலாயா பல்கலைக்கழகமும்
இணைந்து நடத்திய இம்மாநாட்டில் தமிழ்நாட்டில் இருந்து கட்டுரையாளராகப் பங்கேற்ற தமிழ் அறிஞரான, இலக்குவனார்
திருவள்ளுவனிடம் பேசினோம்.
இந்த இணை
யத் தமிழ் மாநாடு எதற்காக?
'கையடக்கக்
கருவிகளில் தமிழ்க் கணிமை' எனும்
மையப் பொருளை அடிப்படையாகக்கொண்டு இணைய மாநாடு நடந்தது. இத்தலைப்பு குறித்த
முதன்மைப் பொழிவுரையைத் திரு முத்து நெடுமாறன் சிறப்பாக வழங்கினார். கணிணி
மொழியியல், இயற்கை
மொழி ஆய்வு, மொழிக்கருவிகள், இணையமும் கணியமும், கைப்பேசிகளும் கைக்கருவிகளும், கல்வி ஆகிய வகைப்பாட்டில் கட்டுரைகள்
அளிக்கப்பெற்றன. 101 கட்டுரைகள் இடம் பெற்றன. சில கட்டுரைகளை ஒன்றுக்கு
மேற்பட்டோர் இணைந்து அளித்திருந்தனர்.
மலேசிய மக்களிடம் தமிழ்
ஆர்வம் எப்படி?
பொதுவாகத்
தமிழ் மாநாடு என்றால் மூத்தோர் அவை போன்று இருக்கும். இளந்தலைமுறையினரைப்
பார்ப்பது அரிதாக இருக்கும். ஆனால், உத்தமம்
அமைப்பினரும் மலேசிய மாநாட்டுக் குழுவினரும் இளைஞர்களிடையே முன்கூட்டியே
விழிப்புணர்வை ஏற்படுத்திப் பெருமளவிலான இளைஞர்களைப் பங்கேற்கச் செய்தனர்.
இவ்வாறுபங்கு கொண்ட 680 இளைஞர்களில்
பெரும்பாலோர் பயிற்சி ஆசிரியைகள். எனவே, அவர்கள்
மூலம் வளரும் தலைமுறையினரான மாணாக்கர்களுக்கும் இணையத் தமிழ்பரவும் வாய்ப்பை
இம்மாநாடு ஏற்படுத்தித் தந்துள்ளது.
மலேசியாவில்
இருந்தும் சிங்கப்பூரில் இருந்தும் பலர்
ஆர்வமுடன் மாநாட்டில் பங்கேற்றனர். மாநாட்டை முன்னிட்டுத்
தமிழ்க்கணிணி தொடர்பான விற்பனைக்
கண்காட்சியும் சிறப்பாக நடைபெற்றது. 10,000
பேர்
கண்காட்சியைப் பார்வையிட்டுள்ளனர் என்னும் பொழுது மலேசிய மக்களின் ஆர்வத்தைப்
புரிந்து கொள்ளலாம். பொதுவாகத் தமிழ்நாட்டில்தான், அரசே
உலகத்தமிழ்மாநாட்டை நடத்தும் பொழுது, மக்களிடையே
ஆர்வம் பொங்கி எழுவதைப் பார்கக் இயலும். அந்த நிலை மலேசியாவில் இருந்தது. தமிழ்
வளர்ச்சி மீதான ஆர்வத்தையும் தமிழை இணையம் மூலம் பரப்ப வேண்டும் என்ற உணர்வையும்
அனைவரிடமும் பார்க்க முடிந்தது.
நீங்கள் என்ன தலைப்பில் கட்டுரை அளித்தீர்கள்?
‘நெட்வொர்க்கு’
என்பது
தொடர்பாக ‘வலைமச் சொற்கள்’
என்னும்
தலைப்பில் கட்டுரை அளித்தேன். அறிவியல் துறைகள் வளரக் கலைச்சொற்கள் பெருகவும்
வேண்டும். ஆனால், என்னைத்
தவிர, கலைச்சொற்கள் தொடர்பில் முனைவர் சானகிராமன்
கைப்பேசியில் தமிழ்க்கலைச்சொல்லாக்கம் தரப்படுத்தல் குறித்துப் பேசினார். தங்கராசா
தவரூபன்,
‘தகவல் தொழில் நுட்பத்தில் தமிழ் - ஒரு பார்வை’
என்னும்
தலைப்பில் கலைச்சொல் தேவை குறித்து வலியுறுத்தினார். எனி்னும் கலைச்
சொல்லாக்கங்களுக்கு மேலும் முதன்மை அளித்துக் கட்டுரைகள் பெருக வேண்டும்.
அப்பொழுதுதான் இணையத்திலும் பிற அறிவியல்
துறைகளிலும் தமிழ் சிறப்பான வளர்ச்சியைப் பெறும்.
மாநாடு பற்றிய உங்கள் விமரிசனம் என்ன?
முனைவர்
பட்ட ஆய்வாளரிடம் அணில்,
ஆடு. இலை
எனக் கற்பிப்பதுபோல், சில
கட்டுரைகள் மிகவும் தொடக்கநிலையில் பன்னாட்டுக் கருத்தரங்கத்திற்குரிய சிறப்பு
இன்றி இருந்தன. சில கட்டுரைகள் 10
ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை எதிரொலிப்பதாக அமைந்தன. இன்றைய நிலைக்கேற்ப
அமையவில்லை. இத்தகைய கட்டுரைகளைத் தவிர்த்திருக்கவேண்டும். அல்லது கட்டுரையாளர்களை
ஊக்கப்படுத்துவதாக எண்ணினால், அவர்களிடமே
உண்மை நிலையைத் தெரிவித்து இன்னும் ஆழமாகச் சிந்தித்து எழுதித்தரச் சொல்லி இருக்க
வேண்டும்.
60% கட்டுரைகள் ஆங்கிலத்திலேயே
இருந்தன. இவர்களில் பலர் ஆங்கிலக் கட்டுரையை அளித்துவிட்டுத் தமிழில்
உரையாற்றினர். இனிமேல் தமிழ்மாநாடு எனில் கட்டுரைகள் தமிழிலேயே இருக்க வேண்டும்
என்பதைக் கட்டாயமாக்க வேண்டும்.
விரும்புவோர் ஆங்கிலத்திலும் அதன் மொழி பெயர்ப்பை அளிக்கச் செய்யலாம்.
தமிழ்நாட்டில் இதுபோல மாநாடு
நடக்க வாய்ப்புள்ளதா?
மலேசியாவில் நடந்த இம்மாநாட்டுக்கு
அந்நாட்டு அரசு 50,000 வெள்ளி நன்கொடை தந்து
உதவியது. அதனால், தமிழ்
மக்களிடையே சிறப்பான எழுச்சியை
ஏற்படுத்தித் திரளான பங்கேற்பிற்கு வழி வகுத்தது. அதுபோல் தமிழக அரசும்
மீண்டும் இங்கே நடத்தலாம்.
அதற்குமுன்,
தமிழ்நாடு
அரசே இணையத் தமிழ் வளர்ச்சிக்கெனத் ‘தமிழக இணையத் தமிழ் மன்றம்’ அல்லது ‘தமிழகக் கணித்தமிழ் மன்றம்’ என்ற ஓர் அமைப்பைத் தொடங்க வேண்டும். கணிப்
பயன்பாடு அறிந்த தமிழ்ப் புலமையுடையவர்களையே தலைமைப் பொறுப்பிலும் பிற முதன்மைப்
பொறுப்பிலும் அமர்த்த வேண்டும். மாண்புமிகு தமிழக முதல்வரைத் தலைமை நெறியாளரகாவும்
தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சரையும் தகவல்
தொழில்நுட்பத்துறை அமைச்சரையும் நெறியாளர்களாகவும் கொண்டு செயல்பட வேண்டும். இதன்
பொறுப்புக்குழுக்களில் உத்தமம் சார்பாகவும் கணித்தமிழ்ச்சங்கம் சார்பாகவும்
உறுப்பினர்களை அமர்த்த வேண்டும். தொடக்கப் பள்ளி மாணாக்கர்களுக்கு இணையம்
வழியாகத் தமிழ்கற்பிக்கும் சிங்கப்பூர் கல்விமுறையைத் தமிழ்நாட்டிலும்
பின்பற்றலாம்.
+++000+++
செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013
புதிய தொடரி நிலையத்திற்குத் திருவள்ளுவர் பெயர் சூட்டுக!
மயிலாப்பூரில் தொடங்க இருக்கும் புதிய தொடரி நிலையத்திற்குத் திருவள்ளுவர் பெயர் சூட்டுக!
தமிழன்பர்கள் கட்சித் தலை வர்களையும் இயக்கத் தலைவர்களையும் மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்களையும்அணுகி ஆவன செ ய்ய வலியுறுத்தி வாகை சூடுக!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
தமிழக அரசியல் நாள் 28.08.2013 செய்தி
தமிழக அரசியல் நாள் 28.08.2013 செய்தி
மயிலாப்பூர் மக்களுக்கு வசதியாகப் பறக்கும் இரயில் பாதையில் புதிய நி்லையம் ஒன்று தொடங்கப்பட உள்ளது. திரு மயிலைக்கும் கலங்கரை விளக்கத்திற்கும் நடுவில் அமையும் இந்த நிலையத்திற்கு முண்டகக் கண்ணி அம்மன் கோயில் எனப் பெயர் சூட்டியது இரயில்வே நிருவாகம். இப்பகுதியில் முண்டகக்கண்ணியம்மன் கோயில்போல் நிறைய கோயில்கள் உள்ளன. மேலும் இந்தப் பெயர் வைப்பதற்குச் சில எதிர்ப்புகளும் கிளம்பிய நிலையில் பெ யர்ப் பலகை மூடப்பட்டது. இந்நிலையில் . . .
" இவை எல்லாவற்றையும் விட, அமைய இருக்கும் நிலையத்தின் மிக அருகில் திருவள்ளுவர் கோயில் உள்ளது. நிலையத்தின் இன்னொரு பக்கம் திருவள்ளுவரின் உருவச்சிலையும் உள்ளது. எனவே, இந்த இரயில் நிலையத்துக்குத் திருவள்ளுவர் கோயில் நிலையம் எனப் பெயர் வைக்க வேண்டும். தமிழ் நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரிய அதிகாரிகளிடமும் துறை அமைச்சரிடமும் பேசி, இந்நிலையத்திற்குப் திருவள்ளுவர் கோயில் பெயரைச் சூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று நியாயமான கோரிக்கை வைக்கிறார் தமிழ்க்காப்புக்கழகத் தலைவர் திருவள்ளுவன் இலக்குவனார்.
தமிழுக்கான நியாயமான கோரிக்கை!
- சூர்யா
படம் : த.சங்கரன்
ஞாயிறு, 30 ஜூன், 2013
தமிழ்நாடு என்பது தமிழர் நாடா அல்லது அயலவர் நாடா - இலக்குவனார் திருவள்ளுவன் வினா : தமிழக அரசியல்
குமரியில்
திருப்பதியின் கிளை!
கிளம்பும் எதிர்ப்பு
ஆரா & இக்னேசியசு
[நன்றி : தமிழக அரசியல் : நாள்: 03.07.2013 ;பக்கம் : 10-11]
[இதன்
ஒரு பகுதி :]
இந்த சர்ச்சை பற்றித் தமிழ்க்காப்புக்கழகத்தின் தலைவர் திருவள்ளுன்
இலக்குவனார் வேறு கோணத்தில் கருத்து தெரிவிக்கின்றார்.
"எந்தக் கோயிலுக்கும் சென்று எக்கடவுளையும் வழிபடும்
உரிமை எவருக்கும் உண்டு. அவரவர்கள் வாய்ப்பையும் வசதியையும் பொறுத்து
விரும்பும் கோயிலுக்குச் செல்லலாம். ஆனால், அதற்காக வணிக
நிறுவனங்களின் கிளைபோல் பிற மாநிலக் கோயில்களுக்குக் கிளை அமைப்பது முற்றிலும்
வணிகமேயன்றி வேறில்லை.
திருப்பதியில் வேண்டுமென்றே செயற்கையான நெரிசலை உருவாக்கி வருவோர்
எண்ணிக்கையையும் தவறாகக் காட்டி, இறையன்பர்களை
ஏமாற்றி வருகின்றனர். திருப்பதிக்கு வருவோர்களை ஆங்காங்கே கூண்டிற்குள் தேவையின்றி
அடைத்து வைப்பதற்கு மாறாகச் சீரான ஒழுங்கில் வரிசையாக அனுப்பி வைத்தால்
விரைவாகவும் அமைதியாகவும் அனைவரும் வழிபட இயலும்.
அவ்வாறில்லாமல், தமிழ்நாட்டிலுள்ள மக்கள் வழிபட வசதியாக இங்கே
குமரியில் திருப்பதி கோயிலைக் கட்டுவது என்பது வணிகத்திற்காகத் தொடங்கப்படும்
கிளைக்கடைதான் என்பதில் ஐயமில்லை.
முதலில் தமிழர்க்கு உரிமையான திருப்பதியை ஆந்திரர்கள் மத்திய அரசின்
உதவியால் பறித்தனர். இப்பொழுது
தமிழர்களின் செல்வத்தைப் பறிக்கப் பார்க்கின்றனர். திருப்பதி கோயில்
தமிழர்க்கு உரியதே என்பதை வரலாறு அறிந்தவர்கள் நன்கு அறிவர்.
ஏற்கெனவே நாம் தமிழ்நாட்டின் எல்லையாகிய திருப்பதியை ஆந்திரத்திடம்
பறிகொடுத்துள்ளோம். இதனால் தமிழரால் கட்டடப்பெற்றுத் தமிழ் மக்களால் நிறைந்த
கருவூலமும் ஆந்திராவிற்குச் சென்று விட்டது. இப்பொழுது தமிழ்நாட்டில் திருப்பதி
கோயிலைக் கட்டுவது என்பது தமிழ் மக்களின் பணத்தைத் தமிழ்நாட்டிலேயே சுரண்டலாம்
என்ற எண்ணம்தான். இதற்கு இறையன்பர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அரசும்இதை
உடனே தடை செய்ய வேண்டும்.
கோயில் கட்டுவதற்கு விவேகானந்தர் நிலையம் நன்கொடையாக நிலம் தருகின்றது.
இந்த நிலம் எந்த நோக்கத்திற்காக அவர்களுக்கு வழங்கப்பட்டதோ அதை மீறி நன்கொடையாக
வேறு நோக்கத்திற்குக் கொடுப்பதும் தவறாகும்.
தமிழ்நாட்டிலுள்ள அயல் மாநிலத்தவர் அமைப்புகளின் வருவாயில் முக்கால் பங்கைத் தமிழக அரசிற்குத் தமிழ்
மக்களின் நலத்திட்டத்திற்காகப் பெறும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும்.
கன்னியாகுமரியிலுள்ள குமரி அம்மன் கோயிலைப் பகவதி அம்மன் என விளம்பரப்படுத்தி
மலையாளக் கோயில் போல் காட்டி வரும் போக்கு இப்போது நிலவுகிறது. இதோடு
ஆந்திரமக்களின் கட்டுப்பாட்டிலுள்ள கோயிலுக்கான கிளையை இங்கே தொடங்குவது என்பது
தமிழ்நாடு என்பது தமிழர் நாடா அல்லது அயலவர் நாடா என்ற ஐயப்பாட்டை
எழுப்புகின்றது" என்கிறார் திருவள்ளுவன் இலக்குவனார்.
விரிவிற்குக் காண்க :
விரிவிற்குக் காண்க :
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)








