திங்கள், 25 அக்டோபர், 2010

தலையங்கம்: நாகரிகத்தின் கோரமுகம்!

இரண்டாவது உலகப்போரில் அடால்ப் ஹிட்லரின் நாஜிப்படைகள் நடத்திய ஈவுஇரக்கமே இல்லாத படுகொலைகளும், சித்திரவதைகளும் மீண்டும் ஒருமுறை மனித இனத்துக்கு ஏற்பட்டுவிடக்கூடாது. சுதந்திரம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் மனித நாகரிகம் இனி நடைபோட வேண்டும் என்பதற்காக அமைக்கப்படுவதுதான் ஐக்கிய நாடுகள் சபை!'சோவியத் யூனியன் அதிபர் ஜோசப் ஸ்டாலின், பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில்,  அமெரிக்க அதிபர் ஹேரி ட்ரூமென் ஆகியோரின் முத்தரப்பு சந்திப்புக்குப் பிறகு நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் இப்படிக் கூறியவர் அன்றைய அமெரிக்க அதிபர் ட்ரூமென். தங்களது சரும நிறம் வெள்ளை என்பதால் உலகத்துக்கு நாகரிகம் கற்றுக் கொடுப்பவர்கள் தாங்கள்தான் என்கிற இறுமாப்பில் மிதக்கும் மேற்கு நாடுகளின் உயர்வு மனப்பான்மை, உலக அமைதிக்கு உத்தரவாதம் அளிக்க வல்லவர்கள் தாங்கள்தான் என்று கருத வைத்ததில்  வியப்பென்ன இருக்கிறது?நாகரிகம் கற்றுக்கொடுத்து உலக சமாதானத்தைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொள்ளும் அமெரிக்கர்களும், பிரிட்டிஷாரும் இராக்கில் அரங்கேற்றியிருக்கும் படுகொலைகளும் போர்க்குற்றங்களும் அடால்ப் ஹிட்லரையும், பெனிட்டோ முசோலினியையும் உத்தமர்களாக்கிவிடும் போலிருக்கிறது. ஹிட்லராவது ஒரு குறிப்பிட்ட இனத்தை அழிப்பதில்தான் கவனம் செலுத்தினார். ஆனால், இவர்களோ தங்களது சுயலாபத்துக்காகவும் எண்ணெய் வளங்களை அபகரிக்கும் வியாபார எண்ணத்துடனும் கொன்று குவித்திருக்கும் அப்பாவிகளின் எண்ணிக்கை ஒன்றோ, இரண்டோ அல்ல. 1 லட்சத்து 9 ஆயிரத்து 32 உயிர்கள்.கடந்த ஜூலை மாதம் "ஆப்கன் போர் டைரி' என்ற பெயரில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா அல்-கொய்தாவுக்கு எதிராக நடத்திய தாக்குதல் தொடர்பான ரகசியக் குறிப்புகளை வெளியிட்ட அதே "விக்கிலீக்ஸ்' இணையதளம் இப்போது இராக்கில் ஆக்கிரமிப்புப் படைகள் தொடர்பான பல ரகசியக் குறிப்புகளை அம்பலப்படுத்தியிருக்கிறது. முன்பு இந்த இணையதளத்துக்கு ஆப்கானிஸ்தான் தொடர்பான கோப்புகளைத் தந்து உதவிய அதே "பென்டகன்' நபர்தான் இப்போது இராக் தொடர்பான தகவல்களையும் அம்பலப்படுத்த உதவியிருக்கிறார்.  அமெரிக்க ராணுவத் தலைமையகமான "பென்டகனி'ல் பாதுகாக்கப்பட்டு வரும் ஏறத்தாழ 4 லட்சம் ரகசிய ஆவணங்கள் "விக்கிலீக்ஸ்' இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த ஆவணங்களின் அடிப்படையில் வெளியாகியிருக்கும் திடுக்கிடும் தகவல்கள் நம் ரத்தத்தை உறையச் செய்கின்றன. நாகரிக சமுதாயம் அரங்கேற்றியிருக்கும் காட்டுமிராண்டித்தனம் மனித இனத்தையே தலைகுனிய வைத்திருக்கிறது.இராக் நாட்டில் அமெரிக்க பிரிட்டிஷ் படைகள் நடத்திய ஆக்கிரமிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 9 ஆயிரத்து 32. இதில் 66 ஆயிரத்து 81 பேர் அப்பாவிப் பொதுமக்கள். 23 ஆயிரத்து 984 பேர் "எதிரிகள்' என்று அமெரிக்கப் படைகளால் முத்திரை குத்தப்பட்டவர்கள். 15,196 பேர் சதாம் ஹுசைனின் ராணுவத்தினர். அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளின் மொத்த உயிரிழப்பு வெறும் 3,771 மட்டுமே.ஜனவரி 1, 2004 முதல் டிசம்பர் 31, 2009 வரை நடந்த ஆக்கிரமிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் ஏறத்தாழ 60 சதவிகிதம் பேர் அப்பாவிப் பொதுமக்கள். அதாவது, 6 ஆண்டுகள் தினந்தோறும் சராசரியாக 31 அப்பாவி பொதுஜனம் கொல்லப்பட்ட கொடூரம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.அதுமட்டுமா? பல கைதிகள் இரும்புச்சங்கிலிகளால் பிணைக்கப்பட்டனர் என்றும், கண்கள் கட்டப்பட்டு சவுக்கால் அடிக்கப்பட்டனர் என்றும், கைகள் அல்லது கால்கள் கட்டப்பட்டு தொங்கவிடப்பட்டனர் என்றும், பலர் மின்சாரம் பாய்ச்சப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர் என்றும் பல செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. 2003-ம் ஆண்டு அமெரிக்கப் படைகள் இராக்கைத் தங்கள் வசப்படுத்திக்கொண்ட பிறகு பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பேரைத் தயவுதாட்சண்யமே இல்லாமல் அந்த ராணுவத்தினர் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.சரணடைய வந்தவர்களைக்கூட சுட்டுக்கொன்று தங்களது ரத்தவெறியைத் தீர்த்துக் கொண்டிருக்கிறது ஆக்கிரமிப்பு ராணுவம். ரசாயன ஆயுதங்களை வைத்திருந்தார் என்றும் அணுகுண்டு தயாரித்து வைத்திருக்கிறார் என்றும் அபாண்டமாகப் பழி சுமத்தி சதாம் ஹுசைனை ஒரு கொடுமைக்கார சர்வாதிகாரியாகச் சித்திரித்து, அதையே காரணம் காட்டி ஒரு சுதந்திர நாட்டின் மீது அடாவடி ஆக்கிரமிப்பு நடத்தியவர்கள் அரங்கேற்றியிருக்கும் மனித உரிமை மீறல்கள் மன்னிக்கப்படும். காரணம், இந்த அராஜகத்துக்குத் தலைமை தாங்கி நடத்தியிருப்பது உலக வல்லரசான அமெரிக்கா அல்லவா! உலகுக்கு நாகரிகம் கற்றுத்தர முயலும் வெள்ளை சருமத்தின் கருப்பு முகம் "விக்கிலீக்ஸ்' இணையதளத்தின் மூலம் இப்போது வெளிச்சம்போட்டுக் காட்டப்பட்டிருக்கிறது. தங்களுக்குக் கிடைத்த தவறான தகவல்களின் அடிப்படையில் இராக்கில் ஆக்கிரமிப்பு நடத்தியதாக சுயவாக்குமூலம் அளித்திருக்கும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேரும், அநியாயமாகக் கொல்லப்பட்டிருக்கும் லட்சத்துக்கும் அதிகமான மனித உயிர்களுக்குப் பொறுப்பேற்பதுதானே நியாயம்? உலகம் இவர்களை போர்க்குற்றவாளிகளாக நிறுத்தி விசாரித்துத் தண்டனை கொடுப்பதுதானே தர்மம்? சதாம் ஹுசைனைத் தூக்கிலிட்டுக் கொன்ற  குற்றத்துக்கும் - இவர்கள் தண்டிக்கப்பட வேண்டாமா?இனிமேல் நாகரிகம் பற்றிப் பேசும் அருகதை அமெரிக்கர்களுக்கும் பிரிட்டிஷாருக்கும் கிடையாதுதான். ஆனால், நியாயத்துக்குக் குரல் கொடுக்க யாருமே இல்லையே, என் செய்ய?
கருத்துக்கள்

துணிவான தலையங்கம். இத்தகைய நாட்டின் தலைவரை வரவேற்றுத்தான் இதே தினமணியில் கட்டுரை எழுதியுள்ளார். இத்தகைய கொடுங்கோலர்களைத் தங்கள் மீட்பர்களாக தமிழர்கள் எவ்வாறு நம்பினார்கள் என்று தெரியவில்லை? வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/25/2010 4:17:00 AM
I can say .. Dinamani ... is the number one megazine in the world !!!! I LOVE U DINAMANI !!!!
By Mani
10/25/2010 3:44:00 AM
Dinamani is modernday Kuraaan,, bible,,,, bahavat gita !!! hey indian people , pls read dinamani.. you will be the no. 1 in the world !!!!
By Mani
10/25/2010 3:40:00 AM
It is one thing to criticize US and UK for the wars in Iraq and Afghanistan but another to say "ஹிட்லராவது ஒரு குறிப்பிட்ட இனத்தை அழிப்பதில்தான் கவனம் செலுத்தினார்." There has been no evidence to say "இவர்களோ தங்களது சுயலாபத்துக்காகவும் எண்ணெய் வளங்களை அபகரிக்கும் வியாபார எண்ணத்துடனும் ..." I would love Dinamani to talk about its own backyard about the despots who control every aspect of Tamilians' life in TN. At the end of the day everything is relative. There are millions of non Americans (that includes Tamilians, Iraqis and Afghans) who will gladly live in the US than in their own countries. If you are going to criticize be precise, and to the point.
By Atlanat Guy
10/25/2010 3:30:00 AM
பெரிய அண்ணனாக நடந்துகொள்ளும் மேற்கத்திய நாடுகளை தட்டிக்கேட்க இயலாமல் இருப்பதற்கு காரணம் எந்த வகையிலேனும் தன்னை அந்த நாடுகளுக்கு அடிமைப்படுத்திக் கொன்டிருக்கும் நாடுகளே அதிகம்.ஈராக்கை தாக்கும்போது இஸலாமிய நாடுகள் அனைத்தும் ஒன்று திறண்டு எதிர்ப்பு குரல் கொடுத்து இருக்க வேண்டும்.சத்தியவான் காந்திஜி வாழ்ந்த நாட்டிலேயே குரல்வளைகள் அராஜகக்கரங்களால் நெறிக்கப்படுகின்றன இன்றைய அரசுகளால்.இதைப்போலவே மூன்றாம் உலக நாடுகளின் குரல்களுக்கு மேற்கத்திய நாடுகள் செவி சாய்ப்பதில்லை.கொளுத்த பூனைகளுக்கு யார் மணி கட்டுவது.
By A.Kumar
10/25/2010 1:35:00 AM
யாரோ சாகிறார்கள், நமக்கென்ன நம்ம வீட்லையா பிரச்சனை, நம்ம சாப்பாடுக்கு என்ன பிரச்சனை,ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை இருக்கு ,வினை விதைத்தவன் தன் வினையை விரைவில் அறுப்பார்கள் ,கடவுளின் நீதி மன்றம் அளஹபாத் அல்ல ,
By ishan
10/25/2010 12:56:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
ஏழுகடல் நீரும் கழுவிடா களங்கம்


1991-ம் ஆண்டு இந்தியாவின் பொருளாதாரம் நசிந்து அன்னியச் செலாவணி இருப்பு அதலபாதாளத்துக்குச் சென்றிருந்தது. இந்தியாவுக்கு எதையும் ஏற்றுமதி செய்ய உலக நாடுகள் தயங்கின. நிலைமையைச் சமாளிக்க, பிரதமர் சந்திரசேகர் அரசு சர்வதேச நிதியத்திடம் உதவிகோரியது. தங்கத்தை அடகு வைத்தால் மட்டுமே கடன்வாங்க முடியும் என்ற நிலை. தாலியை அடகு வைத்து மகனைப் படிக்க வைக்கும் தாய்போல், 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதியிலிருந்து 31-ம் தேதிக்குள் நாட்டின் 67 ஆயிரம் கிலோ தங்கம் இங்கிலாந்து வங்கிக்கும், சுவிட்சர்லாந்து வங்கிக்கும் விமானத்தில் அனுப்பிவைக்கப்பட்டது. இதனால் இந்தியாவின் மானம் விமானம் ஏறிவிட்டதாக அன்று விமர்சனம் எழுந்தது. அவ்வாறு நிமிர்த்தப்பட்ட பொருளாதாரம்தான் அடுத்து வந்த நரசிம்மராவ் அரசில் நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங்கின் பொருளாதாரக் கொள்கைகள் வேரூன்றக் காரணமாக இருந்தது.  18 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் அதே சர்வதேச நிதியத்திடமிருந்து இந்திய ரிசர்வ் வங்கி 2 லட்சம் கிலோ தங்கத்தை விலைக்கு வாங்கியிருக்கிறது. தாராளமயமாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி உயர்ந்தது, தொழில்மயமாதல் முடுக்கிவிடப்பட்டது, அன்னிய முதலீடும் அதிகரித்தது. அவை எல்லாவற்றையும்விட அசுர வேகத்தில் வறுமையும் அதிகரித்தது. இதற்கான காரணம் என்னவென்று ஆட்சியாளர்களும், அதிகாரிகளும், ஆட்டுக்குட்டியைத் தோளில் போட்டுக்கொண்டு அதையே தேடிக்கொண்டிருக்கிற மேய்ப்பனைப் போன்று, பூதக்கண்ணாடி வைத்துத் தேடிக்கொண்டிருக்கின்றனர். அந்தப் பூதக் கண்ணாடி வாங்கியதில் எவ்வளவு ஊழல் என்பதை எதை வைத்துத் தேடுவது என்பதுதான் தெரியவில்லை. குடிமக்களைப் பொறுத்தவரை, கிரிக்கெட் ஸ்கோர் கேட்பதும் ஊழலைப் பற்றிப்  பேசுவதும் ஒரே மனநிலையிலான செயல்பாடாகிவிட்டது. இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லை என்று நினைக்கும் அளவு ஊழல் நம் அன்றாட வாழ்க்கையோடு இரண்டறக் கலந்துவிட்டது. மத்தியிலும் மாநிலங்களிலும் பல கட்சிகள் மாறிமாறி ஆட்சிக்கு வரும்போதெல்லாம், காஷ்மீர்ப் பிரச்னையில் கருத்துவேறுபாடு, அயோத்தி சர்ச்சையில் முரண்பாடு, சேது சமுத்திரத் திட்டத்தில் நேரெதிர் நிலைப்பாடு என்று மோதிக்கொண்டாலும், ஊழல் அரக்கனை வளர்த்துவிடுவதில் அரசியல் கட்சிகள் தேசிய அளவில் கூட்டணி வைத்துச் செயல்படுகிறதோ என்னும் ஐயம் எழுகிறது. சுதந்திரம் பெற்றதிலிருந்து கடந்த 63 ஆண்டுகளில் பணவீக்கம், போர், பஞ்சம், இயற்கைப் பேரிடர் என்று எந்தப் பாதிப்புக்கும் ஆளாகாமல் ஊழலைப் போற்றி வளர்த்திருக்கும் பாங்கு மெய்சிலிர்க்க வைக்கிறது.  சமீபத்தில் ஒரு ஊழல் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நாடே திரும்பிப் பார்க்கும் அளவு ஒரு கருத்தைத் தெரிவித்தது. ஒவ்வொரு வேலைக்கும் இவ்வளவுதான் லஞ்சம் என்று நிர்ணயித்துவிட்டால் பொதுமக்களுக்கும் தாங்கள் தர வேண்டிய தொகை எவ்வளவு என்று தெரிந்துவிடும், அதிகாரிகளுக்கும் வீணாகப் பேரம் பேசித் தங்களுடைய வேலைநேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று அங்கதமாகக் குறிப்பிட்டது. நாட்டில் நிலவும் ஊழலின் பரிமாணம், ஒட்டுமொத்த தேசத்தின் ஊறுபட்டுக்கிடக்கும் உளப்பாங்கைப் பிரதிபலிக்கிற அவலத்தை அகற்ற வேண்டும் என்று துணிகிற ஒரு தலைவன் தொடுவானம்வரை கண்களுக்குத் தெரியவில்லை.  1949-ம் ஆண்டு நேருவின் அமைச்சரவையில் தொழில் அமைச்சராக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் அர்ஜுன் சிங்கின் தந்தையான ராவ் பகதூர் சிங் ஒரு வைர வியாபாரியிடம்   25 ஆயிரம் லஞ்சம் பெற்றதற்காகச் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அங்கு தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கை அரசு மேல்முறையீடு செய்து,  அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வாங்கித்தந்து, அவரைக் கட்சியிலிருந்தும் நீக்கியது. இப்போதெல்லாம் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகின்றவர்களைத் தன்பக்கம் இழுத்து, ஊழலின் பலனை பங்குபோட்டுக்கொள்வதிலே அரசியல் கட்சிகளிடையே கடும்போட்டி நிலவுகிறது.  இந்திரா காந்தியின் மரணத்துக்குப்பின் பிரதமரான ராஜீவ் காந்தி, 1984-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் நேருவே கண்டிராத பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி அமைத்தபோது, கடல் முத்தை உமிழ்வது போன்று ஒன்றைச் சொன்னார். மத்திய அரசு மக்கள்நலத் திட்டங்களுக்குச் செலவிடும் ஒரு ரூபாயில் 15 காசுகள்தான் மக்களைச் சென்றடைகிறது என்றார். சுதந்திரத்துக்குப் பிறகு, அவருடைய அன்னை இந்திரா காந்தியும், தாத்தா நேருவும்தான் நாட்டை நீண்டகாலம் ஆண்டவர்கள் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ராஜீவ் காந்தி தெரிவித்த கருத்து மக்களைப் பெரிதும் கவர்ந்தது. அவர் திருவாளர் பரிசுத்தம் என்ற அடைமொழியோடு ஆட்சியைத் தொடங்கினார். ஆனால், சூழ்நிலை காரணத்தால் போபர்ஸ் என்னும் ஊழல் சூறாவளி அவருடைய அரசியல் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிட்டது. இன்றளவும், ஒரு ரூபாயில் 15 காசுகள்தான் மக்களைச் சென்றடைகிறது என்னும் அவருடைய சத்தியவாக்கு ஊழல்களின் ஊற்றுக்கண்ணை அடையாளம் காட்டுவதாகவே இருக்கிறது.  தங்கத்தை அடகு வைத்துச் செய்யப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தத்தின் பலன் வறுமையை ஒழிக்க உதவவில்லையே என்னும் ஏக்கத்துக்கான விடை மெகா ஊழல்களின் பட்டியலில் பொதிந்துகிடக்கிறது. 1991-ம் ஆண்டு பொருளாதாரச் சீர்திருத்தம் தொடங்கப்பட்டது. 1992-ம் ஆண்டு முதல் மெகா ஊழல்களும் வெளிச்சத்துக்குவர ஆரம்பித்தன.  அதிகார வர்க்கத்தினரின் உதவியுடன்  5,000 கோடியை பங்குச்சந்தை மூலம் சுருட்டிய ஹர்ஷத் மேத்தாவின் ஊழல் 1992-ம் ஆண்டு ஊடகங்களை ஆக்கிரமித்திருந்தது. அதைத் தொடர்ந்து 1993-ம் ஆண்டில் ஹவாலா ஊழல், 1994-ல் சர்க்கரை இறக்குமதி ஊழல், 1996-ல் உர இறக்குமதி ஊழல், பிகார் மாட்டுத்தீவன ஊழல், 1997-ல் காங்கிரஸ் அமைச்சர் சுக்ராம் ஊழல், 2001-ல் யுடிஐ ஊழல், 2003-ல் போலி முத்திரைத்தாள் மோசடி, 2005-ல் பங்கு வர்த்தக ஐபிஓ ஊழல், 2006-ல் பஞ்சாப் சிட்டி சென்டர் ஊழல், 2008-ல் பூனாவைச் சேர்ந்த ஹசன் அலி கான்  1,17,065 வருமான வரி ஏய்ப்பு ஊழல், 2009-ல்   8,000 கோடி சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன ஊழல், இப்போது பேசப்படுகிற ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று இந்தப் பட்டியல் கலைமாமணி விருதுப் பட்டியலைப்போல நீள்கிறது.   தில்லியில் நடந்தேறிய காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான ஊழல் மீதான நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியிருக்கிறது.  70,608 கோடி அளவிலான மக்களின் வரிப்பணம் செலவிடப்பட்டிருக்கும் இந்தப் போட்டியில்,  8,000 கோடி அளவு ஊழல் நடந்திருப்பதாக நம்பப்படுகிறது. இவ்வாறு சூறையாடுவதற்காகவா ஆதரவற்ற முதியவர்களுக்கான  171 கோடியும், தாழ்த்தப்பட்டவர்கள் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட  744 கோடியும் காமன்வெல்த் போட்டிகளுக்காகத் திருப்பிவிடப்பட்டது என்று எண்ணும்போது நெஞ்சு பதைக்கிறது.  ஐந்தாண்டுத் திட்டங்களின் நிதி ஒதுக்கீடுகள் இப்படி மெகா ஊழல்களாக உருமாறிக்கொண்டிருக்கின்றன. ஆண்டுதோறும் மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிற மத்திய பட்ஜெட் வறுமை ஒழிப்புக்குச் செய்வதைவிட செல்வந்தர்களின் செழிப்புக்கு செய்வதுதான் அதிகமாக இருக்கிறது. இந்த ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு  1 லட்சத்து 47 ஆயிரத்து 209 கோடியாக இருந்த முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டவுடன்  1 லட்சத்து 49 ஆயிரத்து 633 கோடியாக உயர்ந்தது. அதாவது, சில மணி நேரத்தில் அவருடைய சொத்து மதிப்பு  2 ஆயிரத்து 424 கோடி அதிகரித்தது. எல்லா மெகா கோடீஸ்வரர்களின் சொத்துமதிப்பும் இவ்வாறுதான் பெருகிவருகிறது. ஆனால், பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு பாசனத்துக்காக 10 லிட்டர் டீசல் வாங்கப் பணம் எடுத்துச் சென்ற விவசாயி, விலை உயர்வு காரணமாக 8 லிட்டர் டீசலை வாங்கிக்கொண்டு சோகம் கப்பிய முகத்தோடு வீடு திரும்புகிறார். அதனாலென்ன, பிரணாப் முகர்ஜி இந்த ஆண்டுக்கான ஆசியாவின் சிறந்த நிதி அமைச்சர் என்ற விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தியே இந்தியர்களின் மகிழ்ச்சிக்குப் போதுமல்லவா!      ஸ்காட்லாந்தைச் சேர்ந்த அலெக்ஸôண்டர் கேம்பெல் என்னும் அறிஞர், 1958-ம் ஆண்டு எழுதிய "இந்தியாவின் இதயம்' என்னும் புத்தகத்தில் ஊழலைப் பற்றிக் குறிப்பிடுகிறபோது, குறைந்தபட்ச வருமானத்துக்கும் அதிகபட்ச வருமானத்துக்குமான இடைவெளி இன்னும் அதிகரித்தால் இந்தியாவில் ஊழல் தலைவிரித்தாடும் என்று எழுதிவைத்தார். அரை நூற்றாண்டுக்குப் பிறகும் ஆட்சியாளர்கள் ஊழலுக்கான காரணத்தையும் அதைக் கட்டுப்படுத்தும் மந்திரக்கோலையும் தேடிக்கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். தேசத்தின் அடையாளத்தையே மாற்றிப்போடுகிற ஊழல் என்னும் களங்கம், ஏழு கடல் நீராலும் கழுவிட இயலுமோ என்று அதிர்ச்சியில் உறையவைப்பதாக இருக்கிறது.  ஊழல் செய்தேனும் தம் சந்ததியினருக்கு பெரும் செல்வம் சேர்த்து வைக்க எண்ணுபவர்கள், வறுமைக் கடற்பரப்பில் வளம்கொழிக்கும் மணல் திட்டுகள் புரட்சி அலைக்கரங்களின் புனித வேட்டையில் தப்புவதில்லை என்பதை நினைவில் கொள்ளுவதில்லை.
கருத்துக்கள்

நன்றாக எழுதியு்ள்ளார். ஆனால், இந்த உண்மைகள் அரசியல்வாதிகளைச் சுடுவதில்லையே! ஏன்? அதே நேரம் நேருவின் ஊழலை எதிர்த்த அவரது மருமகனே உயிரிழப்பிற்கு ஆளானதால் அர்ச்சுன் சிங் தந்தை இராவ்பகதூர் சிங் தண்டனை வாங்கித் தரப்பட்டதன் காரணம் நேர்மை நோக்கல்ல! அந்தப் போர்வையில் மாற்றணியினரைப் பழிவாங்கிய செயலாகத்தான் இருக்கும். ஆட்சியாளர்கள் தம்மை நேர்மையாளராகக் காட்டிக் கொள்வதற்காக அவ்வப்பொழுது ஏதேனும் நாடகம் அரங்கேற்றுவார்கள். அதனைப் பெரிதாக எண்ணிப் போற்றக் கூடாது. மக்களிடம் மண்டிக் கிடக்கும் ஊழல் எண்ணங்களைத் துடைத்துஎறிந்தால் அவர்களால்
தேர்ந்தெடுக்கப்படும் அவர்களின் சார்பாளரகளும் தூய்மையானவர்களாக இருப்பார்கள் எனலாம். மக்களை மாற்றுங்கள். தலைவர்கள் மாறுவார்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/25/2010 4:06:00 AM
அருமையானக்கட்டுரை. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் அளவுக்கு இந்த ஊழல் பட்டியல போதுமானதா என்பதையும் கட்டுரையாளர் சொல்லி இருந்தால் நம் அரசியல் வாதிகளுக்க சாதிக்க வசதியாக இருந்திருக்கும்.
By A.Kumar
10/25/2010 2:18:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
ருப்பினத் தலைவரே வருக, வருக...


உலகில் கருப்பின மக்கள் சந்தித்த துன்பமும், துயரமும் சொல்லி மாளாது. தோல் கருப்பாய்  பிறந்துவிட்ட ஒரே காரணத்துக்காக அவர்கள் இனவெறி எனும் பேயால் ஆட்டிப்படைக்கப்பட்டனர். அதிலும், அமெரிக்க கருப்பர்கள் வெள்ளையர்களால் மிருகங்களைவிட கேவலமாக நடத்தப்பட்ட பரிதாபத்தை நினைத்தால் நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய் குத்துகிறது. அமெரிக்கக் கருப்பின மக்கள் இனவெறி கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை மனிதநேயம் படைத்த சில வெள்ளையர்களாலேயே தாங்கிக்கொள்ள முடியவில்லை.  அப்படி கருப்பின மக்களின் துயரைக் கண்டு 145 ஆண்டுகளுக்கு முன்பு பொங்கி எழுந்தவர்தான் அமெரிக்க வெள்ளை இனத்துப் பெண்மணியும், எழுத்தாளருமான ஹேரியட் பீச்சர் ஸ்டோ. அமெரிக்காவில் கருப்பர் இன மக்கள் எப்படியெல்லாம் இழிவாக நடத்தப்படுகின்றனர், சித்திரவதை செய்யப்படுகின்றனர் என்பதை "டாம் மாமாவின் குடில்' என்ற கதையில் தத்ரூபமாக படம்பிடித்துக் காட்டினார். அந்தக் கதையில் ஒரு காட்சியைக் காண்போம்: வெள்ளை முதலாளியால் ஏலத்துக்கு எடுக்கப்பட்டு கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கருப்பின இளைஞன் ஜார்ஜ். இவன், நெடுந்தொலைவு ஓடிவந்து, பிரிந்து போன தன் மனைவியை, குழந்தையைப் பார்க்கிறான். அவனது குழந்தை மறுநாள் ஏலச்சந்தையில் விற்கப்படுகிறது என்பதை அறிந்த மனைவியும் ஓடிவருகிறாள். இருவரும் ஓரிடத்தில் சந்திக்கிறார்கள். அப்போது அவள் அவனுடைய உடம்பைப் பார்த்துவிட்டு, "ஏன் இந்த ரத்தக்காயங்கள்' என்று கேட்கிறாள். "எல்லாம் எஜமானன் கொடுத்த பரிசு. இப்புவியில் நாம் பிறந்ததே பாவம். நாம் மனிதர்கள் அல்ல. பண்டங்களைவிடக் கேவலமான பிண்டங்கள். இதோ பார், என் உடம்பெல்லாம் என் எஜமான் சவுக்கால் அடித்த ரத்தக் காயத்தின் தழும்புகள்' என்கிறான்.  உடனே, "ஏன் உன்னை எஜமான் சவுக்கால் அடித்தான்' என்று வினவுகிறாள் மனைவி. "ஏன் தெரியுமா? என் எஜமான் ஒவ்வொரு நாளும் என்னை சவுக்கால் அடிக்கிறான். அரை வயிற்றுப் பசி தணிக்க அவன் வீசி எறியும் ரொட்டித் துண்டுகளை, நான் பிரியமாக வளர்த்த நாய்க்குக் கொடுத்தேன். அதை ஒருநாள் அவன் பார்த்துவிட்டான். அந்த நாய் செல்லமாக என்னிடம் கொஞ்சி விளையாடுவது அவனுக்குப் பொறுக்கவில்லை."நான் உனக்குக் கொடுத்த ரொட்டித்துண்டுகளை நாய்க்கு ஏன் கொடுத்தாய்?' என்று கேட்டான். "எஜமானே! இந்த நாயை நான் ஆசையோடு வளர்க்கிறேன். இந்த நாய் மீது நான் உயிரையே வைத்திருக்கிறேன்' என்றேன். நான் கூறியதைக் கேட்ட அவன், பொங்கிப் போனான்.  "ஆசை, பாசத்துக்கு எல்லாம் இங்கே வேலை கிடையாது. உன் மனைவி, தாயிடம்கூட அன்புகாட்ட உனக்கு அனுமதி இல்லாதபோது, ஒரு நாயிடம் எப்படி அன்பு காட்டுவாய்?' என்று கண்டித்தான். நான் பிள்ளையைப்போல் செல்லமாக வளர்த்த நாயை, நானே அடித்துக்கொல்ல ஆணையிட்டான். மறுத்தேன். என்னை மரத்தில் கட்டிவைத்து உதைத்தான். என் கண் எதிரே நாயையும் சித்திரவதை செய்தான். பின்னர் அதன் கழுத்தில் ஒரு கல்லைக் கட்டிக் குளத்தில் வீசினான். அது கொஞ்சம் கொஞ்சமாகக் குளத்தில் மூழ்கியது. என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கடைசியாக அந்த நாய் என்னைப் பரிதாபமாகப் பார்த்தது. "என் பிரியமானவனே, என்னை நீ காப்பாற்ற வரவில்லையே!' என்று ஏக்கத்தோடு என்னைப் பார்த்துக்கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கிச் செத்துப்போனது. நம்மைப் படைத்தவனிடம் இரக்கம் இல்லை. நீதி இல்லை, இப்படி வாழ்வதைவிட மடிவதே மேல் என்றான் கண்ணீர்மல்க. எதிரில் நிற்கும் மனைவியின் கண்களும் கலங்குகின்றன. இப்படி ஒரு காட்சியை அமைத்திருக்கிறார். அமெரிக்கக் கருப்பின மக்கள் வெள்ளையர்களின் கால்களால் நசுக்கப்பட்டதை இதைவிட எப்படி எடுத்துக்காட்ட முடியும்? முடியவே முடியாது. ஹேரியட் பீச்சர் ஸ்டோவின் இந்தக் கதை உலகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. எனினும் என்ன பயன்? உலகே வெள்ளையர்கள் ஆதிக்கத்தால் அடிமைப்பட்டுக் கிடந்ததால் வேடிக்கைதான் பார்க்க முடிந்தது. ஆனால், ஹேரியட் பீச்சர் ஸ்டோவின் எழுத்து அமெரிக்காவில் மட்டும் கருப்பின உரிமை ஆர்வலர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. 1863-ல் கருப்பின மக்களின் உரிமையை நிலைநாட்ட ஆபிரகாம் லிங்கன் பிரகடனம் செய்தார்.  அமெரிக்காவில் கருப்பர் இனத்தை அடிமைத்தளையிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்ற ஆபிரகாம் லிங்கன் விதைத்த உணர்வு விதைக்கு நீரூற்றி உயிர் கொடுத்தவர் மார்ட்டின் லூதர் கிங். லிங்கன் வழி நின்று கருப்பின மக்களின் அடிமைச் சங்கிலியைத் தகர்த்தெறிந்தார். அமெரிக்காவில் கருப்பின மக்கள் அடிமைத்தளையில் இருந்து விடுபட்டாலும் ஒரு மனிதனுக்கு இயற்கையாகக் கிடைக்க வேண்டிய உரிமைகள் அவர்களுக்குத் தொடர்ந்து மறுக்கப்பட்டே வந்தன. இயற்கை உரிமைகளே மறுக்கப்பட்ட நிலையில் அரசியல் உரிமையை கனவில்கூட அவர்களால் நினைத்துப் பார்க்க முடியாதநிலை. கருப்பர்கள் மனிதர்களாவே கருதப்படாத, நீக்ரோக்கள் மனிதர்கள் அல்ல என்று நீதித்துறையால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட அமெரிக்க நாட்டிலே இன்று கென்ய நீக்ரோ தந்தைக்குப் பிறந்த பராக் ஒபாமா அதிபராகி இருக்கிறார்.  இந்த சரித்திர நிகழ்வை உலகம் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஒபாமா அதிபர் ஆனதன் மூலம் ஆபிரகாம் லிங்கன், மார்ட்டின் லூதர் கிங், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் கனவுகள் நனவாகியுள்ளன. 1966-லேயே "மனிதன்' நாவல் மூலம் "டக்ளஸ் டில்மன்' என்ற நீக்ரோவை அமெரிக்க அதிபராக்கி அழகுபார்த்தவரல்லவா அண்ணா! எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, தான் சார்ந்த ஜனநாயகக் கட்சி மாநாட்டு வாசலுக்கு உள்ளேகூட நுழைய முடியாத ஒபாமாவால், எப்படி அதிபர் சிம்மாசனத்தில் அமர முடிந்தது. தன் சாதனைக்குக் காரணமாக அவர் சொல்வதெல்லாம், "ஆம், நம்மால் முடியும்' என்ற மூன்றே சொற்களைத்தான்.  தன் நம்பிக்கையாலும், விடாமுயற்சியாலும் அமெரிக்க அதிபராகிச் சரித்திரம் படைத்த வரலாற்று நாயகன், கருப்பின மக்கள் விடுதலைக்காகப் போராடிய மகாத்மா காந்தி பிறந்த இந்திய மண்ணுக்கு முதல் தடவையாக வருகை தர உள்ளார். ஒபாமாவின் இந்த வருகை அமெரிக்காவைவிட இந்தியாவுக்குத்தான் முக்கியத்துவம் வாய்ந்தது. உறவு ரீதியாக அல்ல, கருப்பினத் தலைவர் என்ற உணர்வுரீதியாக. இதனால் "உலகக் கருப்பின ஒப்பற்ற தலைவர் ஒபாமாவே வருக..வருக' என்று ஒவ்வொரு இந்தியரும் வாழ்த்தி வரவேற்போம். உரிய வகையில் கெüரவித்து வழியனுப்புவோம்!
கருத்துக்கள்

தன் இன மக்களின் விடுதலைக்காகப் போராடி வெற்றி கண்டவர் அடுத்த இன மக்களின் உரிமைகளுக்காகவும் விடுதலைக்காகவும் குரல் கொடுப்பவராக இருக்க வேண்டும். அதுதான் ஒடுக்கப்பட்டவர்களுக்காக உண்மையான குரல்கொடுப்பவரின் இலக்கணம். அவ்வாறில்லாமல் ஈழத்தில் நடந்த நடக்கும் படுகொலைகளுக்கு ஒரு வகையில் உதவி பெயரளவிற்குச் சிங்களத்தைக கண்டித்துக் கண்மூடி வாய்மூடி இருப்பவரை ஒப்பற்ற தலைவராகச் சொல்வது சரியல்ல. பக்சேவிற்கே வரவேற்பு கொடுத்த நாட்டில் மனிதநேயஉணர்வும் மக்களாட்சி மாண்பும் கொண்ட மக்கள் நிறைந்த நாட்டின் தலைவருக்கு வரவேற்பு அளிப்பதில் தவறில்லை என்று வேண்டுமென்றால் சொல்லலாம். 
இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/25/2010 3:52:00 AM
ஒப்பற்ற தலைவர் ஒபாமாவை வாழ்த்தி வரவேற்போம். அதேநேரம் முந்தைய அதிபர்கள் செய்த தவறுகளை திருத்தி சிறந்த தலைவராக திகழ வேண்டுமென இறைவனை பிரார்த்திப்போம்.
By A.Kumar
10/25/2010 2:45:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
ஒச்சாயி தமிழ்ப் பெயர் இல்லையா?

First Published : 24 Oct 2010 01:26:52 AM IST

Last Updated : 24 Oct 2010 01:17:39 PM IST

ஒச்சாயி படத்தில் ஒரு காட்சி.
சென்னை,அக்:23: தமிழகத்தில் சமீபத்தில் திரையிடப்பட்டுள்ள ஒச்சாயி திரைப்படத்தின் பெயர் தமிழ்ப்பெயர் இல்லை எனவும், அப்படி தமிழ்ப் பெயராக இருந்தால் அதற்கான ஆதாரத்தை அளிக்க வேண்டும் எனவும் அரசுத் தரப்பில் கோரப்பட்டிருப்பதற்கு மதுரைப் பகுதியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.  புதுமுகங்கள் நடிப்பில் தற்போது வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் "ஒச்சாயி' படத்துக்கு வரி விலக்கு மறுக்கப்பட்டுள்ளது. தமிழ் அகராதியில் "ஒச்சாயி' என்ற பெயருக்கு எந்தவிதமான பொருளும் இல்லை என்று வரி விலக்கு ஆணையம் விளக்கம் அளித்து வரிவிலக்கை மறுத்துள்ளது.   புதுமுக இயக்குநர் ஆசைத்தம்பி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஆச்சிக் கிழவி திரைக்கூடம் நிறுவனம் சார்பில் திரவியபாண்டியன் தயாரித்துள்ளார். புதுமுகங்கள் தயா, தாமரை நடித்துள்ளனர். மதுரை மாவட்ட கிராமத்து இளம் பெண்களின் வாழ்க்கையை மையமாக வைத்து "ஒச்சாயி' உருவாக்கப்பட்டுள்ளது.    கடந்த 15-ம் தேதி வெளியான இந்தப் படம் தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. உசிலம்பட்டி பகுதியை பூர்வீகமாகக் கொண்ட இயக்குநர் ஒ.ஆசைத்தம்பி தனது முதல் இயக்கத்தில் உருவான படத்துக்கு குலதெய்வத்தின் பெயரில் ஒச்சாயி எனப் பெயர்சூட்டியுள்ளதாகத் தெரிவிக்கிறார்.  ஆனால், முதலமைச்சர் அலுவலக அதிகாரிகள் மட்டும் ஒச்சாயி தமிழ்ப் பெயர் என்பதை தமிழ் அகராதி மூலம் நிரூபிக்கவேண்டும் என கூறுவதாகத் தெரிகிறது.  சில ஆண்டுகளுக்கு முன் ரஜினிகாந்த் நடித்து இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் வெளி வந்த படத்துக்கு "சிவாஜி' என்று பெயரிடப்பட்டிருந்தது. "சிவாஜி' தமிழ்ப் பெயரே கிடையாது. ஆனால் "சிவாஜி' படத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.  எந்திரன், "வ' குவார்ட்டர் கட்டிங் போன்ற திரைப்படங்கள் வரி விலக்குக்காக பரிசீலக்கப்படும்போது ஒச்சாயி போன்ற தமிழ் கிராம தேவதைகளின் பெயரால் எடுக்கப்படும் திரைப்படங்களைப் புறக்கணிப்பதை எதிர்த்து கண்டனம் எழுந்துள்ளது.  "அரசியல் பின்னணியைக் கொண்டவர்கள் உருவாக்கும் படங்கள்; பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் படங்கள் என அனைத்துக்கும் கேள்வி கேட்காமல் வரி விலக்கு தரப்படுகிறது. ஆனால், சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களின் தலைப்பு தமிழில் இருந்தாலும் அவற்றிக்கு வரி விலக்கு அளிப்பதில் பல கேள்விகள் கேட்டு வரி விலக்கு அளிப்பதில் அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர்' என்கிறார்கள் சிறிய  திரைப்படத் தயாரிப்பாளர்கள்.  இதுகுறித்து ஒச்சாயி பட இயக்குநர் ஒ.ஆசைத்தம்பியிடம் கேட்டபோது, உசிலம்பட்டி பகுதியில் கள்ளர் சமுதாய மக்களின் குலதெய்வமான ஒச்சாயி பெயரை உடைய பெண் சம்பந்தப்பட்ட சமுதாயக் கதையைத்தான் ஒச்சாயி படமாக எடுத்துள்ளேன். எனக்கு மட்டுமல்ல; இயக்குநர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, நடிகர் வாகை சந்திரசேகர் ஆகியோருக்கும் ஒச்சாயி அம்மன் குலதெய்வமாகவும் உள்ளது. இந்த நிலையில் ஒச்சாயி தமிழ்ப் பெயரா? எனக் கேட்பது சரியல்ல. ஆகவே படத்துக்கு வரிவிலக்கு அளிக்கக் கோரியுள்ளோம் என்றார்.
கருத்துக்கள்

நிறுவனத்தின் பெயர் மரியாதைக்குரிய பெயர் இல்லை என மாற்றுப் பெயரில் குறிப்பிட்டுள்ள நண்பரே! ஆச்சி என்பது உறவு அடிப்படையிலும் அகவை முதிர்ந்தவரையும் குறிப்பிடும் மரியாதைக்குரிய சொல். கிழவி என்பது உரிமையுடையவர் என்பதைக் குறிக்கும் நல்ல சொல். அதனை மரியாதைக் குறைவாக எண்ணுவது தவறு. திரைக் கூடம் என்றும் தமிழிலேயே பெயரை வைத்துள்ளார். துன்பத்தை விரட்டும் அம்மன் என்னும பொருளில் ஓச்சாயி எனக் குறிக்கப்பெற்று அஃது ஒச்சாயி என மாறியிருக்கலாம். பணத்திற்காக மனைவி களிப்பிற்காக வைப்பாட்டி எனக் கொண்டுள்ள ஒழுக்கங் கெட்டவர்களைப் போல் தமிழி்ல்பெயர் வைத்துக் கொண்டு ஆங்கிலத்தி்ல் விளக்கப் பெயர் வைக்கும் தறிகெட்ட நெறி கெட்ட நிறுவனங்களுக்கு வரிவிலக்கு அளித்திருக்கையில் இதற்கு மறுப்பது சிற்றூர் மக்களுக்கும் சிறு தெய்வ வழிபாட்டிற்கும் எதிரானதாகும். எப்படியும் தினமணியில் வந்த செய்தியைப் பார்த்து முதல்வர் வரி விலக்கு அளிப்பார். எனவே அவருக்கு முன்னதான நன்றி. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/25/2010 3:37:00 AM
ஆச்சிக் கிழவித் தமிழ்க்கூடம் எனத் தமிழில் பெயர் வைத்துள்ளதால் உங்கள் சொல்படி கேட்க வேண்டும் என்று இல்லை. விதி என்றால் விதிதான். ஒன்று கிரந்த எழுத்தைப் பயன்படுத்த வேண்டும். அல்லது ஆங்கிலத்தில் பெயருடன் சேர்த்து விளக்கம் இருக்க வேண்டும். படத்தயாரிப்பாளர் வெளியாளாக இருந்தாலும் வெளியீட்டாளராவது சுற்றமாகவும் வசதி படைத்தவராகவும் இருக்க வேண்டும். எனவே, வெறும் தமிழ்ப் பெயர் வைத்து எங்களை இழிவு படுத்துவதால் உதவ இயலாது. இப்படியே விட்டால் தாய்மொழி என்னும் குறுகிய வட்டத்திற்கள் அனைவரையும் அடைத்து விடுவீர்கள் என்று அஞ்ச வேண்டடியுள்ளது. இவ்வாறு உரியவர்கள் பேசிக் கொண்டிருக்கலாம். எதற்கு வம்பு? ஆங்கிலத்தில் விளக்கம் கொடுத்து விடச் சொல்லுங்கள். உதவி கிடைக்கும்.
இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/25/2010 3:29:00 AM
மதுரையின் கிராமப்புறங்களில் ஒச்சு, ஒச்சாத்தேவர், ஒச்சாயி, ஒச்சம்மாள் போன்ற பெயர்கள் பரவலாக உள்ளன. அண்ணன் அழகிரியின் பாசறையில் இருக்கும் ஒச்சு பாலு முன்னாள் சட்டமன்ற வேட்பாளர். அர்த்தமே இல்லாத 'வ' என்ற எழுத்துள்ள படத்துக்கு வரிவிலக்கு கொடுத்தவர்களுக்கு ஒச்சாயி தமிழ்ப் பெயர் என்பது எப்படித் தெரியும்?. தமிழ் என்பதே தமிழ்ப் பெயர் தான் நிரூபிக்கச் சொன்னாலும் சொல்வார்கள், மொழியை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள். மதுரைக்காரன்.
By மதுரைக்காரன்
10/25/2010 12:18:00 AM
யோவ், டைரக்டரு, லூஸாய்யா நீ? ஒச்சாயி. வாட் ஈஸ் திஸ் பிளடி ஒச்சாயி ? இத யார் மேன் பேர் வச்து ? ஒன்னும் புரியலெ ! இது சன் பிக்சர் தயாரிப்பா ? நோ. இல்ல ஸ்டாலின் மகன், அல்லது தயாநிதி, அருள்நிதி, உதயநிதி, அழகிரி க்ளௌட் நைன் இந்த மாதிரி எந்த வகையிலாவது முதல்வர் குடும்பத்துக்கு நெருங்கிய சம்பந்தம் உண்டா ? ஒரு எழவும் இல்லெ. பின்னெ எப்டி மேன் இத தமிழ் சொல்றே ? ஹீரோ ஒரு மஞ்சள் துண்டாவது போட்டுகிட்டு ஒரு பாட்டு உண்டா இல்லெ ஓட்டுக்காக ரசிகர்களெ காக்கா புடிக்கிறமாதிரி ஒரு ரஜனி, கமல் விஜய் மாதிரி பெரிய தல ராராவது உண்டா? அத்த உடு வாய்க்கி விளங்காத, மறுபடியும் திருப்பி பாடமுடியாத ஒரு இங்கிலீஸு பாட்டாவது அதிலெ உண்டா ? அதுவும் இல்லெ. இதெல்லாம் விட நீ ப்ரிய பருப்பா கேக்கிறேன். நாங்க சாமியெவே நம்புறது இல்லெ. பகுத்தறிவு பாசறைகள். எப்டி இத டமில்னு ஒத்துக்கிறது மேன். பின்னெ சாமி பேரெ வச்சா எப்டி மேன் இதுக்கு டாக்ஸ் கம்மி ப்ன்ன சொல்றெ?
By Niamathullah - Dubai.
10/24/2010 5:45:00 PM
The fitting response to the CMO official asking for dictionary proof for the title word is to publicly withdraw his application seeking tax exemption. Thereby let the CM and his government get the proof of definition and spirit of the phrase SELF-RESPECT. Let us note that when the Tamil film industry accepted the tax exemption for the title being in Tamil, it pledged its artistic character and of course self-respect.
By S. Arunagiri
10/24/2010 12:04:00 PM
இயக்குனர் அவர்களே உங்களது கருத்தும்,விவாதமும், சரிதான், உங்கள் குலதெய்வத்து பெயரை உங்களுடன்,போகட்டும்,கதைகேற்ற பெயரை வைத்தால் சரி. உங்களுக்காக நாமும் வாதாடலாம்,ஆனால்,உங்கள் கம்பெனி பெயரும் மரியாதைக்குரிய பெயர் போல இல்லை,எனவே உங்கள் படத்தை நீங்கள் குறிப்பிட்ட அந்த சில நபர்கள் மட்டுமா பார்க்க எடுத்தீர்கள்?பிற மாவட்டத்துக்காரர்களும்,படம் பார்க்கும்படியாக திரைப்படம் எடுங்க சார்.
By kamalhashan
10/24/2010 11:55:00 AM
தினமணி உங்களுக்கு ரஜினி மேல் ஏன் இப்படி ஒரு காண்டு.......எப்பவும் ரஜினியை போட்டு தாக்குறீங்க..... உங்களுக்கென்று ஒரு தரம் உள்ளது...மரியாதை உள்ளது..நீங்களே ஏன் அதை கெடுத்து கொள்கிறீர்கள் ... ஏன் தசாவதாரம் உங்கள் கண்ணில் படவில்லை....அது வடமொழிக்கலப்பில் இருந்தும் வரி விலக்கு கிடத்ததெப்படி.... என்றும் நடுநிலைமையில் இருப்பதால் தான் உங்களை அனைவரும் மதிக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளவும்
By தமிழன்
10/24/2010 11:48:00 AM
குவார்ட்டர் கட்டிங் என்பது போல தூய தமிழில் பெயர் வைத்திருக்கலாமே?
By உதயநிதி ரசிகர் மன்றம்
10/24/2010 9:36:00 AM
vetkakedu... karunanidhi thannai thamizhina thalaivar endru azhaithukolla vetkappadavendum. avar nalla kudumba thalaivar.. sivaji thamizh , enthiran thamizh, thasavatharam thamizh , quarter cutting thamizh ...aanal ochaayi thamizh allavaam... bal thakkareyvai kadavulaka vanangum thamizh pattralargalai nanbarkalaka konda karunanidhithikkum thamizhukkum ulla thodarbu, udhattukkum vaarthaikkum ulla thodarbu endru theriyamal avarai thamizhina thalaivar endru kondadum ilichavayarkal thayaka thamizharkal enbathai 'ochayi' nirubikkirathu, verenna ?
By vasantha.m.s.
10/24/2010 2:42:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
நாடு கடந்த தமிழ் ஈழ அரசை பலவீனப்படுத்த இலங்கை முயற்சி

கொழும்பு, அக்.24- ருத்திரகுமாரன் தலைமையில் செயல்பட்டுவரும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசை பலவீனப்படுத்த இலங்கை அரசு முயற்சி எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு மற்றும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு ஆகியவற்றை பலவீனப்படுத்த அமெரி்க்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. உதவியை பெற இலங்கை அரசு சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக "லக்பிம" சிங்களப் பத்திரிகை வெளியிட்டுள்ள தகவலை மேற்கொள் காட்டி இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.புலிகளின் சர்வதேச செயல்பாடுகள் குறித்து அமெரி்க்காவுக்கு தெளிவுபடுத்த வேண்டியது தூதரகத்தின் கடமை என்று இலங்கைத் தூதர் ஜாலிய விக்ரமசூரிய கூறியுள்ளதாகவும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர், பிரதமராக ருத்திரகுமாரன் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள்

இந்தியாவின் அறிவுரைப்படி சிங்களம் தன் கொடுங்கோன்மை இனவெறிக்காக இவ்வாறு செய்வது அதற்கு இயற்கையே. அதனை மீறி வெல்லவேண்டியதும் தமிழ் ஈழம் அமைக்க வேண்டியதும் நாடு கடந்த தமிழீழ அரசின் கடமை. தலைமையமைச்சர் தன் பணியில் வெற்றி காண உதவ வேண்டியது உலக மனித நேயர்களின் கடமை. சிங்கள இந்தியச் சதிகளை முறியடித்து மனித நேயம் வளரட்டும்! தமிழ் ஈழம் மலரட்டும்! தாயகத் தமிழர்கள் வெலலட்டும்! உலகம் என்றும் மகிழட்டும்!
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/25/2010 3:22:00 AM
I salute you Vel, Mohan,Kittusamy, Sakthi vellan, and Rajan. what you have commented is absolutely correct. What does the bloody Indian government is thinking of itself? It wants to do with 90 million people? Do they think we can not do anything? The hopeless government can not do anything when the terrorists struck Taj hotel. Why can't it mind its fu..... business? Why does try to interfere in the Tamils rights? It banned LTTE and destroyed it, does it think another group will not come better than the LTTE to protect the Tamils? If one more Prabhakaran comes, it will be a doom for India now? Before one Prabhakaran is born, better it grants all rights to the Srilankan Tamils. All the Tamils are not just going to watch the drama the central and ettappan Karuna are staging. Now the peple are fuming with anger, be aware before it breaks out.
By Aishath Adam
10/24/2010 7:34:00 PM
TGTE is purely democratic, registered, legally conducted elections, elected members, prime minister and others. Sri lanka, India and china have nothing to do to stop it.Whole world has to realise and recognise Tamil Eelam.
By rajan
10/24/2010 6:58:00 PM
i wish to agree seperate eezham for TAMILS in srilanka
By Kittusamy
10/24/2010 6:33:00 PM
India should be down with ten Earthquakes and America should be down with twenty earthquakes then only world community will declare TAMILEELAM. Already whole world down with big unrest, we will pray to GOD to punish America again and again. Down with jews,Hindians and Lankans EMPOWER THROUGH UNITY TO STRENGTHEN AND PRESERVE TAMIL IDENTITY VAZHKA ! VAZHKA ! TAMIL EELAM !!! DOWN WITH PRESENT FACIAST INDIAN GOVERNMENT. O!!! DURGAA !!! MAA!!! PLEASE SAVE INNOCENT TAMIL EELAM PEOPLE !!!
By SAKTHI VELAN
10/24/2010 6:24:00 PM
India should be down with ten Earthquakes and America should be down with twenty earthquakes then only world community will declare TAMILEELAM. Already whole world down with big unrest, we will pray to GOD to punish America again and again. Down with jews,Hindians and Lankans EMPOWER THROUGH UNITY TO STRENGTHEN AND PRESERVE TAMIL IDENTITY VAZHKA ! VAZHKA ! TAMIL EELAM !!! DOWN WITH PRESENT FACIAST INDIAN GOVERNMENT. O!!! DURGAA !!! MAA!!! PLEASE SAVE INNOCENT TAMIL EELAM PEOPLE !!!
By SAKTHI VELAN
10/24/2010 6:21:00 PM
Tamil ellam is rights of tamil people. more than 15 lakh people are run away from Sri lanka because of Sri lanka army. Now they are form their own government.
By mohan
10/24/2010 4:57:00 PM
Not sure they said LTTE as terrorist because they have guns killing unarmed people, as per their and indian claim if LTTE is not there what is there to talk with non terrorist people or give the Tamils the rights to lead a normal life as it is expected for any human being, this Bastards doesn't want to give even an inch to Tamil people they want them to suffer so that every body needs to sit and watch, let me tell this to srilankan bitch you can subdue the voice of few people, you are creating venom in 9 crore tamil around the world you and the clan supporting you have to pay the future with dire consequence, you need to be given it. I hope that consequence doesn't bring bigger problems for my ellam brothers and sisters........ Funker Rahul, sonia, rajapakse........... Death of these people are happy days for Tamil people
By Vel
10/24/2010 4:52:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *