journals லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
journals லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 19 அக்டோபர், 2009

'லங்கா' வாரஇதழ் ஆசிரியர் கைது



கொழும்பு, அக்.18- இலங்கைத் தலைநகர் கொழும்புவிலிருந்து வெளிவரும் 'லங்கா' வாரஇதழின் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தகவலை கொழும்பு காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் நிமால் வெடிவக்க செய்தியாளர்களிடம் தெரிவித்ததாக இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

'லங்கா' பத்திரிகையின் ஆசிரியர் சந்தான சிறிமல்வத்த நேற்று மாலை ஹோமாகம காவல்துறையின் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக அந்த இணையதளங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை அதிபர் ராஜபட்சேவுக்கும் ராணுவத்தின் தலைமைத் தளபதி சரத் பொன்சேகாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக அந்த பத்திரிகை கடந்த வாரம் வெளியிட்ட செய்தி காரணமாகவே அதன் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், அந்த செய்தியை அளித்த நிருபரை கைது செய்வதற்காக அவரை போலீஸôர் தேடி வருவதாகவும் இணையதளத் தகவல்கள் கூறுகின்றன.

கருத்துக்கள்

இம்மென்றால் சிறைவாசம்; ஏனென்றால் வனவாசம்;ஊகும் என்றால் கொலை நாசம் என்னும் சிங்களத்துடன்தான் இந்தியாவின் /தமிழ்நாட்டின் 'சகவாசம்'. என்செய்வது இளித்த வாய்த் தமிழனே!

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/19/2009 3:25:00 AM

ALL WORLD TAMILS ARE NOT HAPPY,BECAUSE OF DIRTY POLITICIANS.KARUNNITHY AND SONIA PLAYED A BIG GAME WITH TAMILS ISSUE.THESE 2 PRESONS TAKE THE FULLY RESPOSIBLE FOR 100000 TAMILS DEATH. RAJAPAKSE IS FEEDED BY THESE DIRTY POLITICIANS.

By cholan
10/18/2009 11:09:00 PM

**இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் -3 (தமிழருக்காக குரல் கொடுப்பதற்கு இங்கு யாருமே இல்லையென்று தான்...) **ஈழமக்களின் மெளனத்தின் பின்னணி! **குஞ்சரின் சாட்டையடி: இலங்கையின் நிறம்? துட்டகைமுனுவின் ஆவி? **யார் தவறு? - பாகம் 17: ஈழமக்கள் பெற்ற வீரத்தலைவன்! **அருச்சுனன் பக்கம் 14: பட்டணத்து வியாபாரி சீமானின் "நாம் தமிழர்" கசாப்புக்கடை! **யார் தவறு? - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! **யார் தவறு? பாகம் - 5: இராவணன் தமிழன் இல்லை! U N A R V U K A L . C O M

By ELLALAN
10/18/2009 10:30:00 PM

Justine=You are only 50% right.Karunanith is an evil person and creating probloms for the entire tamil society.We have only one tool to fight Karunanithi and that is Jayalalitha only.Next to God, only Jayalalitha can defeat Karunanithi.If you are thinking about some actors like Vijayakanth,sharath kumar,vijay,karthich etc you are only cheating yourself.These actors either can easily be purchaseable or karunanithi knows, how to force them to fall at his feet.Hence Jayalalitha is the only force whose confidence levels and bold decision making techniques are unmatchable.Further she is running a political party which is 37 is years old and MGR fans will never switch sides and always see that Jayalalitha wins over Theeya Sakthi

By mgrrasigan
10/18/2009 9:21:00 PM

Well said soundrasolan,on the hindu ram!

By shiva
10/18/2009 9:05:00 PM

Well said soundrasolan,on the hindu ram!

By shiva
10/18/2009 9:02:00 PM

ராஜபக்ஷே உனக்கு ஸ்ஸாஊ நெருக்குது,,,,,,,,,, ஸ்ரீலங்க வில் தமிழனுக்கு எடம் இல்லை என்றால் ஸ்ரீலங்காவா இருகாது usanthan

By usanthan
10/18/2009 7:52:00 PM

KARUNANITHI IS A DISGRACE TO TAMILAN AND TAMILNADU....JAYALALITHA IS ANOTHER ONE.

By Justine
10/18/2009 6:21:00 PM

ராஜபக்ஷே உனக்கு ஸ்ஸாஊ நெருக்குது,,,,,,,,,, ஸ்ரீலங்க வில் தமிழனுக்கு எடம் இல்லை என்றால் ஸ்ரீலங்காவா இருகாது ..........

By VEERA TAMIZAN PRABHAKARAN
10/18/2009 6:01:00 PM

many repoters or news paper make allso puplic and politikal ruppel that why the land and country comeing on rush

By RAMYOGASUN
10/18/2009 5:40:00 PM

we want comments from our respected beloved LANKA RATNA HINDU EDITOR N.RAM. we are anxiously waiting for him to vomit out the vomitus of singalese licked by him. parsites are always to be eradicated for the betterment of the host. RAM is avery good example for human(tamil) parasites

By soundarasolan
10/18/2009 5:35:00 PM

எல்லாவற்றையும் பொறுத்திருக்கிறோம் ஆனால் இப்போது எம்பிக்கள் குழுவை இலங்கைக்கு அனுப்பி வந்தவுடன் வாய் கூசாமல் மீள் குடியேற்றம் நடக்கிறது என்று ராஜ பக்ஷே சொல்லாத பொய்யை எப்படி சொல்ல முடிகிறது ? நான்கு மணிநேர உண்ணாவிரதம் இருந்து போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என சொன்ன பொய்யால் முப்பதாயிரம் மக்களின் உயிரை எடுத்து கொண்டது போதாதா ?

By M G R
10/18/2009 4:29:00 PM

ஒரு புறம் இலவசங்களை கொடுத்து ஏழை மக்களை பிச்சை காரர்காளாக்கி தமிழினத்தின் தன்மானத்தை இழக்க செய்தாய் . நான்கு மணிநேரம்உண்ணாவிரதமிருந்து முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை முள்ளிவாய்க்காலில் கொலை செய்தாய் . தேர்தல் முடியட்டும் பார்க்கலாம் என்று ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தையே குடி கானல் நீர் திட்டமாக்கினாய் நிர்வாக திறமையின்மையால் முல்லை பெரியாறில் தமிழன் உரிமையை அடகு வைத்தாய் மத்திய அரசு அனுமதியளிக்கவில்லை அப்புறம் எதற்கு வழக்கு என்றாய் , மத்திய அமைச்சரே உன் கன்னத்தில் அறைந்தது போல் அனுமதி கொடுத்திருக்கிறோம் என்ற பின்பு உச்சநீதி மன்றம் சென்று வழக்கு நடத்த தெரியாமல் தோல்வி கொண்டாயே . பதவியே வேண்டாம் என்று சமூக சீர்திருத்தங்களை உருவாகிய ஈவேரா பெரியார் வழி வந்தவன் என்று சொல்லியே பாக்கியே இல்லாமல் கட்சி முதல் ஆட்சி வரை குடும்பத்திற்கு பிரித்து கொடுத்திருக்கிறாயே . தானே விருதுகள் அறிவித்து தானே வாங்கி கொள்வது என்ன நியாயமோ ? அது மட்டுமா தமிழக அரசு விருது மாற்ற ஒருவருக்கு போக விடாமல் எடுத்து கொள்ள மனம் தான் எப்படி வருகிறதோ ? எல்லாவற்றையும் பொறுத்திருக்கிறோம் ஆனால் இப

By M G R
10/18/2009 4:28:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

செவ்வாய், 22 செப்டம்பர், 2009

தலையங்கம்: தாயில்லாப் பிள்ளை



இலங்கைப் பத்திரிகையாளர் ஜெயபிரகாஷ் சிற்றம்பலம் திசைநாயகம் என்பவருக்கு இலங்கை உச்ச நீதிமன்றத்தில் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு, ஆசிய மனித உரிமைக் கழகம் கண்டனம் தெரிவித்தது. உலகப் பத்திரிகை தினத்தன்று பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்த இலங்கைத் தமிழரின் பெயரையும் குறிப்பிட்டு, உலகம் முழுவதும் பத்திரிகைகளின் வாய்மூட நடத்தப்படும் அத்துமீறல்கள் குறித்துப் பேசினார். இந்தியாவில் சில பத்திரிகைகள் தலையங்கம் எழுதின. அத்தோடு முடிந்துபோனது. அவர் செய்த குற்றம் என்ன? இலங்கை அரசைக் கண்டித்து "நார்த் ஈஸ்டர்ன் ஹெரால்டு' என்ற ஆங்கில இதழில், அவர் கட்டுரை எழுதியதுதான் மிகப் பெரிய குற்றம். இதற்காக 2008 மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு, தற்போது தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகளுக்குத் தண்டிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவர் மீது இன்னொரு குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டது. இலங்கை அரசு 2006-ம் ஆண்டு கொண்டுவந்த நெருக்கடி கால ஒழுங்காற்றுச் சட்டத்தை மீறி நடந்துகொண்டதுடன் தீவிரவாத அமைப்புகளுக்குத் தனது பத்திரிகை மூலமாக ஆதரித்து நிதியுதவி திரட்டியும் தந்தார் என்பதுதான் இந்தக் குற்றச்சாட்டு. அவர்கள் தீவிரவாத அமைப்பு என்று குறிப்பிடுவது விடுதலைப் புலிகளைத்தான். ஆனால் விடுதலைப் புலிகளுக்கு ஒரு பத்திரிகை மூலம் நிதிதிரட்டும் அவசியம் இருந்ததேயில்லை என்பதை உலகம் அறியும். இலங்கை அரசும் அறிந்ததுதான். இருந்தும் ஏன் இந்த இட்டுக்கட்டுதல்? ஆசிய மனித உரிமைக் கழகம் தெரிவித்துள்ள கருத்தை எண்ணிப் பார்த்தால், அது மிகச் சரியானது என்பதை எவரும் ஒப்புக்கொள்வர். அந்த அமைப்பு தெரிவித்துள்ள கருத்து இதுதான்: ""இந்தத் தீர்ப்பு எங்களுக்கு ஆச்சரியம் தரவில்லை. அவர் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்ட நாள் முதலாகவே நாங்கள் இதனை அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்கு என்று சொல்லி வருகிறோம். திசைநாயகம் எழுதிய கட்டுரையோ அவர் மீது சுமத்தப்பட்ட குற்றமோ இலங்கை அரசுக்கு ஒரு பொருட்டே அல்ல. ஆனால், இலங்கை அரசு இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, இதே கதிதான் உங்களுக்கும் என்று இலங்கையில் விடுதலைப் புலிகளை வெற்றி கொண்டுவிட்டோம் என்று சொல்லும் புதிய சூழ்நிலையில், அங்கு உள்ள அனைத்துப் பத்திரிகையாளர்களுக்கும் சமிக்ஞை தந்துள்ளது. அதுதான் இந்த வழக்கு மற்றும் தண்டனையின் முக்கிய நோக்கம்''. இதுதான் உண்மை. இலங்கையில் உள்ள எல்லா பத்திரிகைகளும் அரசின் அடிவருடிகள் அல்ல. சிங்களர்கள் நடத்துகிற பத்திரிகைகளும், சிங்களப் பத்திரிகையாளர்களும் இலங்கைத் தமிழர்கள் மீதான அத்துமீறல்கள் குறித்து எழுதி வருகின்றனர். அவர்களும்கூட அச்சத்தில் வாய்மூடிக் கிடக்க வேண்டும் என்ற நோக்கத்தைத் தவிர, வேறு எந்த நோக்கமும் இல்லை என்பதுதான் இந்த வழக்கு மற்றும் தீர்ப்பு சொல்லும் சேதி. இலங்கைத் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள முகாம்களுக்குச் செல்வதற்கும் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன அல்லது சாதகமாகச் சொல்லக்கூடியவர்கள் மட்டுமே அனுப்பப்படுகிறார்கள். இலங்கைத் தமிழ்ப் பத்திரிகையாளர்களும் தட்டிக் கேட்கிற தலைவன் இல்லாத வீட்டில் பதறிக்கிடக்கும் பிள்ளைகளாக இருக்கிறார்கள். அங்கே நடக்கும் பிரச்னைகளை வெளியுலகுக்குக் கொண்டுவரக்கூடிய வாய்ப்பு உள்ளவை சிங்கள ஊடகங்கள் மட்டுமே. இனி அவர்களும் இலங்கைத் தமிழர் விஷயத்தில் அடக்கிவாசிக்கவேண்டிய நிர்பந்தத்தை இலங்கை அரசு ஏற்படுத்தியுள்ளது. ஒரு பத்திரிகையாளர் என்பவர் எழுத்துப் போராளி. அவர் ஆயுதமே எழுத்துதான். "ஒரு கருத்தை என் மனம் ஏற்றது என்றால் அதை எடுத்துரைப்பேன்; எதிர்த்து எவர் வரினும் அஞ்சேன்' என்பதுதான் ஒரு பத்திரிகையாளரின் அறம். அதைச் செய்யத் தவறிய பத்திரிகையாளர்தான் சமூகத்தில் தார்மிகக் குற்றவாளி. ஆனால், இலங்கையில் தன் எழுத்துக்கடமையைச் செய்த ஒரு பத்திரிகையாளருக்கு, இவ்வளவு பெரிய தண்டனை அநியாயமானது. ஆனால், தமிழகத்தில் இந்த இலங்கைத் தமிழனுக்காக, அட! ஒரு சக பத்திரிகையாளருக்காக, எந்தவொரு பெருங்குரலும் எழவில்லை. இந்தத் தீர்ப்பைக் கண்டிக்கவில்லை. இலங்கை அதிபர் ராஜபட்ச பொதுமன்னிப்பு வழங்க முடியும், அவரை விடுவிக்க முடியும். இங்குள்ள ஊடகங்கள் அவரை விடுவிக்க வேண்டும் என்று கோரவில்லை. பாவம் அவர், தாயகம் இல்லாப் பிள்ளை தாயில்லாப் பிள்ளைதானே! இது அந்த நாட்டு விவகாரம் என்று சொல்வது கேட்கிறது. ஆனாலும், ஒரு சிறு அச்சம். இலங்கைத் தமிழர் பிரச்னையை ஆதரித்தும், ராஜபட்சவைக் கடுமையாக எதிர்த்தும் எழுதுகிற பத்திரிகையாளர்களை, தங்கள் நாட்டுத் தீவிரவாதிகளுக்கு உடந்தை என்று இலங்கை அரசு வழக்குப் பதிவு செய்து, சர்வதேசக் குற்றவாளியை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய அரசிடம் கேட்கத் துணிந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இந்தக் கற்பனை "ரொம்ப ஓவர்' என்று சொல்லலாம். ஆனாலும், யானை உறங்கினால் பூனைகளும் ஏறிவிளையாடும் கரும்பாறையென்றே!
---------
எழுத்துப் போராளிகள் எங்கிருந்தாலும் ஆளுவோருக்கு எதிரிகள்தாம். எனவே, தினமணியின் கருத்து சரிதான். ஆனால் ஒப்படைக்க வேண்டும் என்று வெளிப்படையாகக் கோரிக்கை வைக்காமல் நசுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து நடைமுறைப்படுத்தப்பட்டு அப்பொழுதும் எழுத்துப் போராளிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் தினமணியின் கருத்து வெறும் கற்பனை அல்ல என்பதை உணரு‌வோம்.
-- இலக்குவனார் திருவள்ளுவன்

திங்கள், 31 ஆகஸ்ட், 2009

ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்திற்கு
20 வருட சிறைத்தண்டனை
பிரசுரித்த திகதி : 31 Aug 2009

கடந்த 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் திகதியிலிருந்து, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் திஸ்ஸநாயகம் மொத்தமாக 425 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கின் தீர்ர்பு இன்று திங்கட்கிழமை கூறப்பட்டுள்ளது.

நாட்டிற்கு அவ கீர்த்தியை ஏற்படுத்தியிருக்கிறார் என்ற போர்வையில் இலங்கை நீதிமன்றமானது 20 வருட சிறைத் தண்டணையை இவருக்கு வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இது ஜனநாயகத்தையும் ஊடக சுதந்திரத்தையும் அப்பட்டமாக குழிதோண்டிப் புதைக்கும் நடவடிக்கையாகும்.

ஒரு ஊடகவியலாளர் என்ற வகையில் அவர் கருத்துச் சுதந்திரம் மிக்கவர். மக்கள் என்ன நடக்கிறது என்பதை அறிய உரிமையுடையவர்கள், திசநாயகம் அவர்கள் ஒன்றும் இராணுவ இரகசியங்களை வெளியிடவில்லை. இருப்பினும் ஒரு கொலைக் குற்றவாளிக்கு வழங்கும் தண்டணை இவருக்கு வழங்கப்பட்டுள்ளதை அதிர்வு இணையம் வன்மையாகக் கண்டிக்கிறது. மேல்முறையீடு செய்து அவரை விடுவிக்க ஆவன செய்யுமாறு மக்களை வேண்டி நிற்கிறது.


Sri Lankan court imprisons Tamil journalist for 20 years

[TamilNet, Monday, 31 August 2009, 06:03 GMT]
J.S. Tissainayagam, a senior journalist and Sunday Times columnist, was sentenced to twenty-year rigorous imprisonment by Colombo High Court judge Deepali Wijesundara on Monday. Mr. Tissanayagam has been indicted under the notorious Prevention of Terrorism Act (PTA) and Emergency Regulations (ER), and was charged on three counts including printing and distributing the publication North Eastern Herald Monthly magazine.

Tissainayagam, Tamil journalist in jail
Tissainayagam, Tamil journalist in jail
According to the indictment, the veteran journalist had committed an 'offence' on two counts under the PTA and has committed 'acts of violence by inciting communal feelings by editing, printing or distributing the North Eastern Monthly magazine'.

Tissainayagam was also charged under the Emergency Regulations for collecting money for the furtherance of terrorism or specified terrorist activities.

Journalist Tissainayagam was detained on March 7, 2008 when he went to the Sri Lanka's Terrorist Investigation Division (TID) to look for his colleagues Jasikaran and Valarmathy. He was detained for almost six months without charges.

On August 25th he was charged with writing to incite 'ethnic dishar