விழிப்புணர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விழிப்புணர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 31 ஜூலை, 2013

நுகர்வோருக்கு விழிப்புணர்வு தேவை!

நுகர்வோருக்கு விழிப்புணர்வு தேவை!

வாடகை வீட்டில் குடியிருப்போருக்கு, விழிப்புணர்வை ஏற்படுத்தும், "கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா' அமைப்பின் அறங்காவலர், நிர்மலா தேசிகன்: சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில், சொந்த வீடு வாங்குவது குதிரை கொம்பாக உள்ளது. விண்ணை முட்டும் விலைவாசி போன்றவற்றால், நடுத்தர மக்கள் சொந்த வீடு கட்ட முடியாமல், வாடகை வீட்டிலேயே குடியேற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. வாடகை வீட்டில் குடியேறினால், வீட்டின் உரிமையாளர் பல காரணம் கூறி, அதிக பணம் வசூலிப்பர். குறிப்பாக, மின்சாரத்திற்காக கட்ட வேண்டிய கட்டணமே, வீட்டின் வாடகையை தாண்டி விடுகிறது. அர” வசூலிக்கும் மின் கட்டணத்திற்கு மேல், யாரும் அதிகமாக வசூலிக்க கூடாது என்ற விதி உள்ளது. ஆனால், மின் மீட்டரின் யூனிட் அளவை விட, கூடுதல் கட்டணம் வசூலிப்பர். கட்டணம் அதிகமாக இருக்கிறதே என, வாடகைதாரர் கேள்வி கேட்டால், "இந்த ஆண்டு மின்சார வாரியத்திற்கு அதிக, "டெபாசிட்' தொகை கட்ட வேண்டும். அதனால், டெபாசிட் தொகையை, சரி பாதியாக அனைவருக்கும் பிரித்து தந்திருக்கிறேன்' என, காரணம் கூறுவார். இது முற்றிலும் தவறு. ஏனெனில், டெபாசிட் தொகையை வீட்டின் உரிமையாளர் தான், முற்றிலும் கட்ட வேண்டும். வாடகைக்கு குடியிருப்போர், வெறும் நுகர்வோர் மட்டுமே. வாடகைதாரர் தான் முற்றிலும் கட்ட வேண்டும் என, கட்டாயப்படுத்த முடியாது. மீறினால், உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க, வாடகைதாரருக்கு முழு உரிமை உள்ளது. இதற்கான புகாரை, "கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா'வின் தொலைபேசி எண்ணான, 044-6633 4346க்கு தொடர்பு கொண்டு, புகாரை பதிவு செய்யலாம். "ஹெல்ப் லைன்' எண்ணான, 044-2451 3191க்கு தொடர்பு கொண்டு, தேவையான வழிகாட்டுதல்களை பெறலாம். இப்படி வீட்டின் உரிமையாளர் மீது, வாடகைதாரர் புகார் செய்யும் பட்சத்தில், புகார் செய்த, 48 மணி நேரத்தில் இருந்து, ஏழு நாட்களுக்குள், புகாரின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சனி, 8 ஜூன், 2013

"இப்படி நடந்தால், என்ன செய்ய வேண்டும்...': மூன்றாம் வகுப்பிலே வந்துவிட்டது பாடம்

"இப்படி நடந்தால், என்ன செய்ய வேண்டும்...': மூன்றாம் வகுப்பிலே வந்துவிட்டது பாடம்



கோவை :எதுவும் அறியாத, எதிர்க்கும் சக்தியில்லாத குழந்தைகள், பாலியல் கொடுமையில் சிக்கினால், என்ன செய்ய வேண்டும்? இதற்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாடம், மூன்றாம் வகுப்பு, தமிழ்ப் பாடத்தில், சேர்க்கப்பட்டு உள்ளது.

விழிப்புணர்வு:குழந்தைகளிடம் பாலியல் வன்முறை செய்வது அதிகரித்து வருகிறது. இதனால், குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மூன்றாம் வகுப்பு, தமிழ்ப் பாடப் புத்தகத்தில், பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.மூன்றாம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில், முதல் பருவ புத்தகத்தில், ஒன்பதாவது பாடமாக, "இப்படி நடந்தால்...' என்ற தலைப்பில், அந்த பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. பாடத்திலுள்ள படத்தில், குழந்தையின் வாயை, ஒருவரின் கை இறுக்கமாக அழுத்தியிருப்பது போன்றும், அந்த கையை, குழந்தை இழுப்பது போன்றும், சமூக அவலத்தை, பறைசாற்றும் விதமாக உள்ளது.

அந்த பாடத்தில் இருப்பதாவது:வகுப்பறையில் சுறுசுறுப்பாக, சிரித்த முகத்துடன் இருக்கும் மீனா, சில நாட்களாக சோர்வாக இருந்தாள். வகுப்பாசிரியர் விசாரித்தார். நாட்கள் செல்லச் செல்ல, அவளிடம் மாற்றம் மிகுதியானது. படிப்பிலும், நாட்டம் குறைந்தது; யாருடனும் பேசுவதில்லை; வீட்டில் ஏதாவது பிரச்னையா என, அறிய ஆசிரியை, மீனாவின் அம்மாவை பள்ளிக்குவரவழைத்தார்.மீனா பற்றி கேட்டதும், "சில நாட்களாக, அவள் இப்படித்தான் இருக்கிறாள். வீட்டில் அவளுக்கு எந்த குறையும் இல்லை; மருத்துவரிடம் காண்பித்தேன். உடல் அளவில் ஏதுமில்லை என, கூறிவிட்டார். நானும் பலமுறை கேட்டு விட்டேன்; வாயே திறக்கவில்லை' எனக் கூறினார் அம்மா.

மீனாவை, தனியே அழைத்து, ஆசிரியை விசாரித்தபோது, மீனா கண் கலங்கினாள். "ஒருநாள் என் அம்மாவும், அப்பாவும், என்னை, பக்கத்து வீட்டில் விட்டு விட்டு, அவசர வேலையாக வெளியே சென்றனர். அந்த வீட்டு மாமா... அவரோட மொபைல் போனில் இருந்த படங்களை காண்பித்து, பார்க்குமாறு வற்புறுத்தினார். தொட்டுத் தொட்டு பேசினார்; இதை யாரிடமும் சொல்லக் கூடாது என, மிரட்டினார். எனக்கு பயமாய் இருந்ததால் யாரிடமும் சொல்லவில்லை; நான் தவறு செய்து விட்டேனா?' என, மீனா அழுதாள்.ஆசிரியையின் ஆறுதலால், மீனா, பழைய நிலைக்கு திரும்பினாள்.இப்படிப்பட்ட கருத்துடன், பாடம் முடிகிறது.
மூன்று கேள்விகள்:

இது குறித்து, அரசு பள்ளி தமிழாசிரியர் ஒருவர் கூறியதாவது: சமூகத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, பாடப் புத்தகங்கள் மட்டுமே சிறந்த வழி. எதுவும் அறியாத, எதிர்க்கும் சக்தியற்ற குழந்தைகளுக்கு விருப்பமில்லாத, கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டால், என்ன செய்ய வேண்டும் என்பதற்கு மூன்று கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதன் மூலம், குழந்தைகளுக்கு நிச்சயம் விழிப்புணர்வு ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.



வெள்ளி, 26 ஏப்ரல், 2013

விழிப்புணர்வு வரிகள்


இவ்வாறு சுவர்களில் மேற்கோள் எழுதுவதும் மிகப்பெரிய கொள்கைப்பரப்புப் பணியாகும். இத்தகைய சிறப்பான பணிகளில் முன்னோடியாக மதுரையில் தமிழக எண்ணெய்ப்பலகார நிறுவனராக இருந்த மறைந்த தேவசகாயத்தைக் குறிப்பிடலாம். பொதுஅறிவு சார்ந்த, பகுத்தறிவு சார்ந்த, மொழி சார்ந்த, இனம் சார்ந்த எனப் பல்வகைத் தகவல்களை அவர் சுவர்களில் எழுதச் செய்வதையே தம் கடமையாகக் கொ்ணடிருந்தார். மதுரையில் நான் அவருக்கு விளம்பரத் தமிழ் ஆர்வலர் என்னும் விருதை  அளித்ததும், இத்தகைய விருதை எதிர்பார்க்காத, இப்படி எல்லாம் விருது தருவார்களா என்று எண்ணியிராத அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டமையும். விருது வழங்கிய அப்போதைய அமைச்சர் அரங்கநாயகம், எதிரணியில் இருந்தாலும் இவரது தொண்டிற்குக்கிடைத்த  அறிந்தேற்பாக மனமுவந்து  பாராட்டியமையும் நினைவிற்கு வருகிறது.  தொடரட்டும் பசுபதியின் பணி. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
 



விழிப்புணர்வு வரிகள்




விழிப்புணர்வூட்டும் வாசகங்களை சுவரில் எழுதுவதை, சேவையாக செய்து வரும், பசுபதி நாதன்: ஆரம்பத்தில், வருமானத்திற்காக சினிமா விளம்பரம் எழுதும் வேலை செய்து, மிக கஷ்டமான சூழ்நிலையில் தான், வாழ்ந்தேன். "நீ எந்த நிலையில் எப்படி இருந்தாலும், உன்னால் முடிஞ்ச ஒரு குண்டூசி நல்லதையாவது, இந்த சமூகத்துக்கு செய்தால் தான், வாழ்க்கை முழுமையடையும்' என, என் அப்பா அடிக்கடி சொல்லுவார். இது என் சிந்தனையில், என் மனதில் ஆழமாக பதிந்திருந்தது. ஒரு நாள் சினிமா தியேட்டர் வாசலில், என் மனதில் பட்ட நாலு நல்ல வரிகளை சுவரில் எழுதி போட்டேன். படம் முடிந்து வெளியே வந்தவர்கள் அதைப் படித்த பின், சந்தோஷமாக சென்றனர். அவர்களின் சிரிப்பு, எனக்கு ஊக்கத்தை தந்தது. இந்நிகழ்வை தொடர்ந்து பேருந்து நிலையம், சாலை சந்திப்புகள், கடை வீதி என, 30க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள சுவர்களில், என் சொந்த செலவிலேயே எழுதுகிறேன். கடந்த, 20 ஆண்டுகளாக, இதை ஒரு சேவையாக செய்கிறேன். ஒவ்வொரு வாரமும், சுவர் வாசகங்களை மாற்றியபடி இருப்பேன். ஒவ்வொரு புதன் கிழமை இரவும், சுவற்றுக்கு வெள்ளையடித்து, புதிது புதிதாக எழுதுவேன். இரவு நேரங்களில் எழுதுவதால், இச்சுவர் வாசகங்களை யார் எழுதுவது என, தெரியாது. ஆனால், நான் எழுதுவதைப் பார்த்த சில இளைஞர்கள், என்னைப் போல் விழிப்புணர்வு சுவர் வாசகங்களை எழுத ஆரம்பித்துள்ளனர். நான் எழுதிய வாசகத்திற்கான பலனை, என்னால் நேரடியாக காண முடிந்தது. ஒரு முறை குழந்தை இல்லாமல் அவமானத்திற்குள்ளான ஒரு தம்பதி, தற்கொலை செய்ய சென்ற போது, தற்செயலாக நான் எழுதிய, "ஒரு நொடி துணிந்து விட்டால் இறந்து விடலாம்; ஒவ்வொரு நொடியும் துணிந்து விட்டால் வாழ்வில் ஜெயித்து விடலாம்' என்ற விழிப்புணர்வு சுவர் வாசகத்தை படித்ததும் மனம் மாறி, மருத்துவ பரிசோதனை செய்து குழந்தை பெற்றபின், என்னை சந்தித்தனர். நான் எழுதிய விழிப்புணர்வு சுவர் வாசகத்தை பாராட்டி, பல அமைப்பினர் விருது வழங்கியுள்ளனர்.