முதுவை இதாயத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முதுவை இதாயத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 15 பிப்ரவரி, 2020

அபுதாபியில் ஓட்டப் போட்டியில் முதல் இடம் பெற்ற தமிழர் செய்யது அலி

 அகரமுதல

அபுதாபி : அபுதாபியில்  ஆக்குடிவேட்டு நிறுவனத்தின் ஓட்டப்போட்டி கடந்த  தை 27, 2020 / 10.02.2020 அன்று நடைபெற்றது. 
இந்த ஓட்டப்போட்டியில் தமிழகத்தின் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த செய்யது அலி என்ற இளைஞர் முதல் இடத்தை பெற்றார். 
இவர் 5 புதுக்கல்(கிலோ) தொலைவுப் போட்டியில் முதல் இடத்தைப் பெற்றார். 
அவருக்கு விளையாட்டுக் குழு அதிகாரி பதக்கம் வழங்கிச் சிறப்பித்தார்.  
இந்த ஓட்டப் போட்டியில் 300-க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர். 
முதல் இடத்தை பெற்ற செய்யது அலிக்கு பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள்  வாழ்த்து தெரிவித்துள்ளனர். 
செய்தி – முதுவை இதாயத்து

ஞாயிறு, 6 அக்டோபர், 2019

ஆர்சாவில் தமிழக இளைஞருக்கு விருது

அகரமுதல

ஆர்சாவில் தமிழக இளைஞர் சே.ஆசிக்கு அகமது விருது பெற்றார்!
ஆர்சா இந்தியச் சங்கத்தில் நடந்த ஓணம் பண்டிகை சிறப்பு நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணத்தைச் சேர்ந்த இளைஞர் சே.ஆசிக்கு அகமது பொது நலச் சேவைக்கான விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.
சே.ஆசிக்கு அகமது திருச்சி சமால் முகம்மது கல்லூரியில் இளநிலை வேதியியல் பட்டம் பயின்றவர். தற்போது சார்சாவில் உள்ள குவைத்து மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது பணியின் ஒரு பகுதியாக எதிர்பாராத நிலையில் மரணமடைபவர்களின் குடும்பத்தினருடன் இணைந்து பணியாற்றி சார்சாவில் நல்லடக்கம் செய்யவோ சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கவோ தேவையான உதவிகளைச் செய்து வருகிறார்.
மேலும் பொருளாதார வசதியில்லாமல் மருத்துவம் பெறுபவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள், அமீரகத்தில் பொது மன்னிப்புக் காலத்தில் சொந்த ஊருக்குச் செல்ல விரும்புவோருக்கு நண்பர்களின் ஒத்துழைப்புடன் உதவிகள் முதலான பல்வேறு பணிகளைத் தன்னார்வத்துடன் செய்து வருகிறார்.

இத்தகைய பணியில் சிறப்பான வகையில் ஈடுபட்டு வருவதன் காரணமாக அவரை உற்சாகப்படுத்தும் வகையில் சார்சா இந்தியச் சங்கம் அவருக்கு இந்தச் சிறப்பு விருதை வழங்கிச்சிறப்பித்துள்ளது. இதனைப் புகழ்மிகு மலையாளப் பாடகர் அப்சல் வழங்கினார்.
மேலும் இவர் துபாயில் செயல்பட்டு வரும் தேவிப்பட்டிணம் நலச்சங்கத்தின் முன்னாள் பொருளாளர்
என்பதும் குறிப்பிடத்தக்கது.

விருது பெற்ற அவருக்கு பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
ஆசிக்கு: தொடர்பு எண் +971 52 947 1333
முதுவை இதாயத்து

வியாழன், 11 அக்டோபர், 2018

துபாய் ஈமான் அமைப்பு : இரத்தத்தான முகாம்



துபாய் ஈமான் அமைப்பு  

இரத்தத்தான முகாம்

புரட்டாசி 26, 2049 வெள்ளிக்கிழமை  அட்டோபர் 12, 2018

காலை  10.00 முதல் 2.00  வரை

திறன் மண்டல(talent zone)நிறுவனம்,

 என்.எம்.சி.  மருத்துவமனை பின்புறம்

துபாய் அல் நக்தா பகுதி

இந்த முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள்

அமீரக அடையாள அட்டையுடன் வரவேண்டும். 

தொடர்பு எண்கள்

050 51 96 433 / 055 84 22 977 / 055 405 88 95

புதன், 3 அக்டோபர், 2018

துபாயில் உணவின்றித் தவித்து வரும் தமிழகத் தொழிலாளர்கள்

அகரமுதல

துபாயில் உணவின்றித் தவித்து வரும்

தமிழகத் தொழிலாளர்கள்

 ஏறத்தாழ நூறாயிரம் உரூபாய் வரை பணத்தை முகவர்களிடம் செலுத்தி துபாயில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வேலைக்குப் பின்வருவோர் வந்தனர்.

மாரிமுத்து த/பெ காத்தமுத்து – பட்டுக்கோட்டை அருகில் உள்ள புதுப்பட்டிணம்

ஆதம் பாவா த/பெ கிருது ஒலி – திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுரண்டை

இருவரும் தாங்கள் பார்த்து வந்த நிறுவனத்தில் சம்பளம் சரிவர வழங்காததால் அந்த நிறுவனத்தை விட்டு வெளியில் வந்து விட்டனர்.
தற்போது தங்க இடமும், உணவும் இல்லாமல்  அல்லல்பட்டு வருகின்றனர்.  இதனால் பேருந்து நிலையம் முதலான இடங்களில் தங்களது பொழுதைப் போக்கி வருகின்றனர்.

இவர்களுக்கு உதவிட விரும்புவோர்

058  990 3314 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உதவிடலாம்.

கே.கே.எசு.ஆர். < aurosun@gmail.com >
தரவு
முதுவை இதாயத்து

ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

ஓமானில் பாரதி விழா

அகரமுதல

ஓமானில் பாரதி விழா

கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்!
என்ற பாரதியின்  கனவை, வள்ளுவர் நிறைவேற்ற பராசக்தி அருள் புரிந்தாள் என்றால், உங்களால் நம்ப முடியுமா?  ஆம்!
கடந்த புரட்டாசி 4, 2049  (20-9-2018) வியாழன் மாலை  ‘பாரதி யார்?’ எனும் மேடை நாடகம்,  மசுகட்டு மாமன்னர் மாட்சிமை தங்கிய சுல்தான் கபூசு பின் செய்யது அவர்களின் அருளோடும், வாழ்த்தோடும், அனைத்து மக்களின் ஆதரவோடும், மசுகட்டு நகரில் கோலாகலமாக அரங்கேறியது!
எசு.பி.படைப்பாளர்(SB Creations) இயக்குநர் இராமன் குழுவினர் இசைக்கவி இரமணனுடன் னமும்,
பாரதியை ஓமான் நாட்டிற்கு அழைத்து வந்திருந்தனர்.
 இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மசுகட்டு தமிழ் மக்களைக்  கட்டிப்போடும் தந்திரம் பாரதிக்கு மட்டுமே உண்டு!  அப்பப்பா! என்ன நடை!  என்ன பாவனை! என்ன தோற்றம்!  பாரதியே மீண்டும் வந்து விட்டானோ என்ற உணர்வை அனைவருக்கும் தந்தது இசைக்கவியின் ஒப்பற்ற தியாகத் தோற்றமான ‘பாரதி’!
அதற்குச் சற்றும் குறைவில்லாத வகையில் ஈடு கொடுத்து, செல்லம்மாவாகவே மாறினார் என் அன்புச் சகோதரி திருமதி தருமா இராமன்!
குவளை கிருட்டிணமாச்சாரியாராக நடித்த விசய் சிவா, தன்னுடைய ஓய்வற்ற நிகழ்வுக்கிடையே, இதற்கெனவே மெனக்கெட்டு வந்து, தன் பங்கைச் சிறப்பாகச் செய்து அனைவரையும் சிந்திக்க வைத்தார்!
அது மட்டுமா, அன்பு மகன் விவேக பாரதி, விட்டல் நாராயணன், பரமேசுவரன், கதிரவன்(சன்) தொலைக்காட்சி புகழ் சிரீ கணேசு, தீபா, கிருத்திகா, ஒப்பனைக் குமார், ஒளிவிளக்கு சார்லசு, மேடை அமைப்பிற்கு யுவராசு என அனைவரும் அவரவர் பணியில் மிளிர்ந்தனர்.
இதற்கு இசை அமைத்த என் அன்பு இளவல் வீணை வித்துவான் பரத்வாசு இராமன் தொடப் போகும் உச்சத்திற்கு அளவே இல்லை எனலாம்!
பாரதியார் பாடல்களுக்கு நடன அமைப்பச் செய்த திருமதி. இரேவதி சுந்தர் உழைப்பு அளவிட முடியாதது!
இவர்களோடு இணைந்து நடித்த உள்ளூர்ப் பங்களிப்பாளர்கள் தூள் கிளப்பினார்கள்!
இந்நிகழ்வை,
மசுகட்டில் வசிக்கும் கவிஞரும், எழுத்தாளருமான சுரேசமீ, நடத்தி வரும் திருக்குறள் பாசறை எனும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது!  கவிஞரோடு துணை நின்ற கவிஞரின் மனைவி இரேவதி, குழ்நதைகள் சனனி (அனுசா), மீரா (அஞ்சனா), மற்றும்  சுரேசு, சேகர், ஆனந்தி  முதலான அத்துனை நண்பர்களும், விளம்பரதாரர்களும் இந்த நிகழ்வை ஒரு வெற்றித் திருவிழாவாகவே மாற்றியிருந்தனர்.
பாரதியின் கனவான அயல்நாடு செல்லவேண்டும் என்பது, ஓம் எனும் நாமத்தோடு தொடங்கும் ஓமானில் நிறைவேறி இருக்கிறது என்றால்,
கனவு மெய்ப்படும் என்ற  மெய் வாக்கின் உண்மை விளங்கும்!
– சுரேசமீ