துபாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
துபாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 13 நவம்பர், 2020

உலகத் தமிழர்கள் பங்கேற்கும் உலக அருவினை(சாதனை) நிகழ்வு, துபாய்

 அகரமுதல

     13 November 2020      No Comment

உலகத் தமிழர்கள் பங்கேற்கும்

உலக அருவினை(சாதனை) நிகழ்வு, துபாய்

அன்பான உலகத் தமிழ் மக்களுக்கு,

கல்லிடைக்குறிச்சி தேசியக் கல்வி அறக்கட்டளையின் அருவினை(சாதனை) நிகழ்வாக, வருகின்ற 2051 ஐப்பசி 28/2020 நவம்பர் 13 ஆம் நாள் துபாய் நேரம் பகல்  2 மணி, (இந்திய நேரம் பகல் 3.30)  முதல் நவம்பர் 14 ஆம் நாள் பகல் 2 மணி  (இந்திய நேரம் பகல் 3.30)  மகுடை(கொரோனா) விழிப்புணர்வுக்காக உலகத் தமிழர்கள் பங்கேற்கும் உலக அருவினை(சாதனை) நிகழ்வு நடைபெறவிருக்கிறது.

தொடர்ச்சியாக 24 மணி நேரம்,24 நாடுகளிலிருந்து 24 தலைமையின் கீழ் மற்றும் பல எண்ணற்ற தமிழ் ஆர்வலர்களும் கலந்து கொண்டு தொடர் நிகழ்வாக நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்வில் பேச்சு, கவிதை,  புதிர்வினா(Quiz),  பாடல்,  சிறப்பு சொற்பொழிவுகள்,  பல்சுவை நிகழ்ச்சிகள், நடைபெறவிருக்கின்றன.

 ஆகையால் இந்த நிகழ்விற்குத் தாங்கள் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

வாய்ப்பைத் தவற விடாதீர்கள்! வாருங்கள்!
உலக அருவினையில் இடம் பிடிப்போம்!

வியாழன், 11 அக்டோபர், 2018

துபாய் ஈமான் அமைப்பு : இரத்தத்தான முகாம்



துபாய் ஈமான் அமைப்பு  

இரத்தத்தான முகாம்

புரட்டாசி 26, 2049 வெள்ளிக்கிழமை  அட்டோபர் 12, 2018

காலை  10.00 முதல் 2.00  வரை

திறன் மண்டல(talent zone)நிறுவனம்,

 என்.எம்.சி.  மருத்துவமனை பின்புறம்

துபாய் அல் நக்தா பகுதி

இந்த முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள்

அமீரக அடையாள அட்டையுடன் வரவேண்டும். 

தொடர்பு எண்கள்

050 51 96 433 / 055 84 22 977 / 055 405 88 95

புதன், 3 அக்டோபர், 2018

துபாயில் உணவின்றித் தவித்து வரும் தமிழகத் தொழிலாளர்கள்

அகரமுதல

துபாயில் உணவின்றித் தவித்து வரும்

தமிழகத் தொழிலாளர்கள்

 ஏறத்தாழ நூறாயிரம் உரூபாய் வரை பணத்தை முகவர்களிடம் செலுத்தி துபாயில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வேலைக்குப் பின்வருவோர் வந்தனர்.

மாரிமுத்து த/பெ காத்தமுத்து – பட்டுக்கோட்டை அருகில் உள்ள புதுப்பட்டிணம்

ஆதம் பாவா த/பெ கிருது ஒலி – திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுரண்டை

இருவரும் தாங்கள் பார்த்து வந்த நிறுவனத்தில் சம்பளம் சரிவர வழங்காததால் அந்த நிறுவனத்தை விட்டு வெளியில் வந்து விட்டனர்.
தற்போது தங்க இடமும், உணவும் இல்லாமல்  அல்லல்பட்டு வருகின்றனர்.  இதனால் பேருந்து நிலையம் முதலான இடங்களில் தங்களது பொழுதைப் போக்கி வருகின்றனர்.

இவர்களுக்கு உதவிட விரும்புவோர்

058  990 3314 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உதவிடலாம்.

கே.கே.எசு.ஆர். < aurosun@gmail.com >
தரவு
முதுவை இதாயத்து

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

துபாய்: வேட்டி அணிந்து சென்றவருக்குப் பெருந்தொடரியில் தடை

துபாய்: வேட்டி அணிந்து சென்றவருக்குப்  பெருந்தொடரியில் தடை
துபாய்: வேட்டி அணிந்து சென்ற இந்தியருக்கு மெட்ரோ ரெயிலில் பயணிக்க அனுமதி மறுப்பு
அபுதாபி, ஆக. 4-

வேட்டி அணிந்து சென்ற இந்தியரை மெட்ரோ ரெயிலில் பயணிக்க விடாமல் துபாய் போலீசார் தடுத்த சம்பவம் அங்கு வாழும் இந்தியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

துபாயில் வசிக்கும் 67 வயது முதியவர் தனது மகளுடன் அங்குள்ள எடிசலட் மெட்ரோ ரெயில் நிலையம் சென்றார்.

பயணச் சீட்டை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்த அவரை காவலுக்கு நின்ற போலீஸ்காரர் தடுத்து நிறுத்தினார்.

இதைப்போன்ற உடைகளுடன் ரெயிலில் பயணிக்க அனுமதிக்க முடியாது என்று கூறிய அவர், அந்த முதியவரின் மகளையும் வெளியே விரட்ட தொடங்கினார்.

வேட்டி எங்களின் பாரம்பரிய உடை. இதே உடையுடன் எனது தந்தை பலமுறை மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளார் என்று அவரது மகள் மதுமிதா விளக்கிக் கூறியும் காதில் வாங்க மறுத்த அந்த போலீஸ்காரர் அவர்களை விரட்டியடிப்பதிலேயே குறியாக இருந்துள்ளார்.

இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதை அடுத்து துபாய் மெட்ரோ ரெயில்வே இயக்குனர் ரமதான் அப்துல்லா இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மெட்ரோ ரெயிலில் பயணிப்பதற்கு எவ்வகை ஆடை கட்டுப்பாடுகளையும் நாங்கள் விதிக்கவில்லை. உடலை மறைக்கும் மரியாதையான ஆடையுடன் யார் வேண்டுமானாலும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்யலாம்.

தற்போது நடந்துள்ள சம்பவம் எனக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்த போலீஸ்காரர் வேட்டியுடன் வந்த நபரை தடுத்து நிறுத்தியது அவரது தனிப்பட்ட மனநிலையைதான் காட்டுகிறது. இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர் எங்களிடம் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.