அகரமுதல
ஆர்சாவில் தமிழக இளைஞர் சே.ஆசிக்கு அகமது விருது பெற்றார்!
ஆர்சா இந்தியச் சங்கத்தில் நடந்த ஓணம் பண்டிகை சிறப்பு நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணத்தைச் சேர்ந்த இளைஞர் சே.ஆசிக்கு அகமது பொது நலச் சேவைக்கான விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.
சே.ஆசிக்கு அகமது திருச்சி சமால் முகம்மது கல்லூரியில் இளநிலை வேதியியல் பட்டம் பயின்றவர். தற்போது சார்சாவில் உள்ள குவைத்து மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது பணியின் ஒரு பகுதியாக எதிர்பாராத நிலையில் மரணமடைபவர்களின் குடும்பத்தினருடன் இணைந்து பணியாற்றி சார்சாவில் நல்லடக்கம் செய்யவோ சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கவோ தேவையான உதவிகளைச் செய்து வருகிறார்.
மேலும் பொருளாதார வசதியில்லாமல் மருத்துவம் பெறுபவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள், அமீரகத்தில் பொது மன்னிப்புக் காலத்தில் சொந்த ஊருக்குச் செல்ல விரும்புவோருக்கு நண்பர்களின் ஒத்துழைப்புடன் உதவிகள் முதலான பல்வேறு பணிகளைத் தன்னார்வத்துடன் செய்து வருகிறார்.
இத்தகைய பணியில் சிறப்பான வகையில் ஈடுபட்டு வருவதன் காரணமாக அவரை உற்சாகப்படுத்தும் வகையில் சார்சா இந்தியச் சங்கம் அவருக்கு இந்தச் சிறப்பு விருதை வழங்கிச்சிறப்பித்துள்ளது. இதனைப் புகழ்மிகு மலையாளப் பாடகர் அப்சல் வழங்கினார்.
மேலும் இவர் துபாயில் செயல்பட்டு வரும் தேவிப்பட்டிணம் நலச்சங்கத்தின் முன்னாள் பொருளாளர்
என்பதும் குறிப்பிடத்தக்கது.
விருது பெற்ற அவருக்கு பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
ஆசிக்கு: தொடர்பு எண் +971 52 947 1333
முதுவை இதாயத்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக