நாகசாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாகசாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 24 மார்ச், 2019

திருக்குறளுக்குக் களங்கம் கற்பித்த நாகசாமிக்குக் கண்டனக் கூட்டம்

அகரமுதல

பங்குனி 10, 2050  ஞாயிற்றுக்கிழமை 24.3.2019  மாலை 5.30 மணி

இடம்: அறிஞர் அண்ணா பொதுநல மன்றம் (ஆர்க்காட்டுச் சாலை சரவணபவன் எதிரில், வடபழனி, சென்னை)

பன்னாட்டுத் தமிழுறவு மன்றம், அனைத்துத் திருக்குறள் பேரவை,

தமிழ் இலக்கிய அமைப்புகள் இணைந்து – நடத்தும் – திருக்குறளுக்குக் களங்கம் கற்பித்த நாகசாமிக்குக் கண்டனக் கூட்டம்

திருக்குறள் வணக்கம்: குறளிசைச் செல்வர் சொ.பத்மநாபன்
 தொடக்கவுரை: கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் (தமிழ் எழுத்தாளர் கழகம்)
 அறிமுகவுரை: கவிச்சிங்கம் கண்மதியன் (பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்)
 தலைமை: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் (உலக அமைப்பாளர், ப.த.உ. மன்றம்)
 கண்டன உரை: தமிழறிஞர்கள்
 இணைப்புரை: கவிஞர் சீனி இரவிபாரதி (பாரதி கலை இலக்கிய மன்றம்)
 நன்றியுரை: கவிஞர் நிலவு முத்துக்கிருட்டிணன் (பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்)

ஞாயிறு, 3 மார்ச், 2019

செம்மொழி விருதுக் குழுவில் நாகசாமி: தமிழுக்குப் பேரிழுக்கு!

அகரமுதல

செம்மொழி விருதுக் குழுவில் நாகசாமி: தமிழுக்குப் பேரிழுக்கு!- மு.க.தாலின் கண்டனம்

செம்மொழி திறனாய்வு நிறுவனத்தின் குடியரசுத் தலைவர் விருதுக்  குழுவிலிருந்து தமிழுக்கு எதிரான நாகசாமியை நீக்க வேண்டுமெனத் திமுக தலைவர் முக.தாலின் வலியுறுத்தியுள்ளார்.
வேதங்களிலிருந்து திருக்குறள் வந்தது எனத் திருவள்ளுவரைச் சிறுமைப்படுத்திய முன்னாள் தொல்லியியல் அதிகாரி நாகசாமியை, செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் குடியரசுத் தலைவர் விருதுகளைத் தேர்வு செய்யும் குழுவில் உறுப்பினராக நியமித்திருப்பதற்குத் திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதாக மு.க.தாலின் கூறியுள்ளார்.
 இதுதொடர்பாக நேற்று (மார்ச்சு 2) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழுக்கு எதிராகத், தமிழ்ப்பண்பாட்டைத் தன் மனம்போன போக்கில் பாசக, மதவாத சக்திகளின் கவனத்தைத் தன்பால் திருப்பும் நோக்கில் திரித்து எழுதிவரும் நாகசாமிக்கு மோடி அரசு பத்மவிபூசண் விருதை வழங்கிச்சிறப்பித்தது. இப்போது செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திலும் ஒரு பொறுப்பை வழங்கி செம்மொழித் தமிழுக்குப் பேரிழுக்கு ஏற்படுத்த முயற்சி செய்து பார்க்கிறது” என்று கூறியுள்ளார்.
 மேலும், “கடந்த ஐந்து ஆண்டுக் காலத்தில் படிப்படியாக நிதி குறைக்கப்பட்டு எந்த ஆய்வுகளுமே மேற்கொள்ள முடியாமல் செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் தத்தளித்து நிற்கிறது. 2016-17 முதல் செம்மொழித் தமிழாய்வு நிறுவன விருதுகளையும் அறிவிக்காமல் தமிழ் அறிஞர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் அங்கீகாரம் வழங்குவதையோ, சிறப்பிப்பதையோ, கலைஞர் பெயரில் அமைந்துள்ள சிறப்பு விருதையோ, பாசக அரசு வஞ்சக எண்ணத்துடன் தடுத்து நிறுத்தியுள்ளது” என்றும் தாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் வருகிற நேரத்தில் அவசர அவசரமாகத் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற வேண்டும் என்ற தீய உள்நோக்கத்தோடு இப்போது விருதுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள தாலின், “அன்னைத் தமிழாம் செம்மொழித் தமிழ் மீது அடர்த்தியான நஞ்சைக் கக்கும் திரு.நாகசாமி செம்மொழித் தமிழாய்வு விருதுகளைத் தேர்வு செய்யும் குழுவில் இடம்பெற்றிருக்கிறார். தமிழர்களின் உணர்வுகளைக் கிள்ளுக்கீரையாக எண்ணிப் பாசக அரசு அவமானப்படுத்துகிறது. சமக்கிருதமும், வேதங்களும்தான் தமிழ் மண்ணுக்குச் சொந்தம் என்ற நச்சுப்பரப்புரையில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கும் ஒருவர் எப்படிச் செம்மொழித் தமிழாய்வு விருதுகளைப் பாகுபாடின்றித் தேர்வு செய்ய முடியும்?” என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழர்களின் பண்பாட்டை வெளிக்கொணராமல் ஆதிச்சநல்லூர், கீழடி அகழ்வாராய்ச்சிகளைப் பாசக அரசு இன்னும் மூடி மறைத்து வருகிறது எனவும், இதில் உள்ள சூழ்ச்சியைப் புரிந்துகொள்ளாமல் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் தலைவராக இருக்கும் தமிழக முதல்வர் கே.பழனிசாமி மாபெரும் துரோகம் செய்வதாகவும் தாலின் தெரிவித்துள்ளார். நாகசாமியை உடனடியாக அக்குழுவிலிருந்து நீக்கிவிட்டு, ஆழமான தமிழ்ப் பின்னணியும் ஆராய்ச்சிப் புலமையும் மிக்க நல்ல தமிழறிஞர்களை அக்குழுவில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாசு சவடேகருக்கு அவர் கோரிக்கை வைத்துள்ளார். தமிழர்களின் உணர்வுடன் விபரீத விளையாட்டு நடத்த வேண்டாம் என்று மத்திய பாசக அரசை எச்சரிப்பதாகவும் அந்த அறிக்கையில்  தாலின் தெரிவித்துள்ளார்.

திங்கள், 12 நவம்பர், 2018

குறளைக் கீழ்மைப்படுத்துவது நாகசாமி என்ற தனி மனிதனா? - கலி.பூங்குன்றன்

அகரமுதல

குறளைக் கீழ்மைப்படுத்துவது நாகசாமி என்ற தனி மனிதனா?

கலி.பூங்குன்றன்
மனுதருமத்தின் சாரம் திருக்குறள் (Tirukkural an Abridgement of Sastras) என்று பார்ப்பன நாகசாமியால் எழுதப்பட்ட ஆங்கில நூலுக்கான மறுப்புக் கூட்டத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவருக்கே உரித்தான முறையில் ‘நச்சு நச்சு’ என்று கொடுத்தார் சாட்டையடி!
வரவேற்புரையாற்றிய திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் குறிப்பிட்ட ஒரு தகவலைத் தெடர்ந்து நாகசாமியை எம்ஞ்சியார் மன்னித்தாலும் நாங்கள் மன்னிக்க மாட்டோம் என்றார்.
திராவிடர் கழகத் துணைத் தலைவர் அப்படி என்ன தான் கூறினார்?
எம்ஞ்சியார் தொடக்கத்தில் பகுத்தறிவுவாதியாகத்தான் நடந்து கொண்டார். அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டபொழுது பலகீனமானார். பார்ப்பன வட்டாரம் அவரைச் சூழ்ந்து கொண்டுவிட்டது. காஞ்சிப் பெரியவாளைச் சந்தித்து விட்டு வரலாம் என்று ‘ஆனந்த விகடன்’ மணியன் சொல்ல, முதல் அமைச்சர் எம்ஞ்சியாரும் கிளம்பி விட்டார்.
அங்குப் போய் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரசுவதியைச் சந்தித்தனர். உடல் நலனை விசாரித்துக் கொண்டனர்.
அப்பொழுது சங்கராச்சாரியார் முதல் அமைச்சரிடம் மூன்று வேண்டுகோள்களை வைத்தார்.
ஒன்று – பல கோயில்களில் ஒருவேளை விளக்குக் கூட ஏற்ற முடியாத நிலை – அதற்கு வழி செய்ய வேண்டும்.
கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு
இரண்டாவது – பழம்பெரும் கோயில்கள் எல்லாம் இடிந்து கிடக்கின்றன. அவற்றையெல்லாம் புதுப்பித்து கும்பாபிசேகம் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு மூன்றாவதைச் சொல்லுவதற்கு கொஞ்ச நேரம் எடுத்துக் கொண்டார். சிறிது நேரங்கழித்து திருவாய்த் திறந்தார், “நாகசாமியை மன்னிச்சிடுங்கோ!” என்றதும், முதல் அமைச்சர் எம்ஞ்சியார் அதிர்ந்து போனார்.
தொல்லியல் துறை இயக்குநரான நாகசாமி தொல்லியல் துறையின் கண்டுப்பிடிப்புகள், பெறும் புதிய தகவல்களை முதலில் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் தானே ஏடுகளுக்குப் பேட்டி கொடுத்து வந்தார். இந்த ஒழுங்கு மீறலுக்குத் தான் பணியிடை விலக்கம் செய்யப்பட்டார். அதைத்தான் மன்னிக்க வேண்டும் என்று சங்கராச்சாரியார் சொன்னார் முதல் அமைச்சரிடம்.
(சங்கரமடம் எப்படியெல்லாம் அவாளுக்காக வேலை செய்கிறது பார்த்தீர்களா?)
சற்றுத் தயங்கிய முதல் அமைச்சர் சரி என்று தலையாட்டினார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் (ஆதாரம்: குமுதம் லைஃப், 27.12.2017 பக். 180, 182) சொன்னதைத் தொடர்ந்துதான் பேராசிரியர் சுப.வீ. அவர்கள் நாகசாமியை எம்ஞ்சியார். மன்னித்தாலும் நாங்கள் மன்னிக்க முடியாது என்றார்.
நாகசாமி என்ற தனி மனிதன் எழுதிய நூலாக இதனைக் கருத முடியாது. இவர் பின்னணியில் ஒரு வலைப் பின்னல் இருக்கிறது. இதே நாகசாமி 2012இல் ‘Mirror of Tamil and Sanskrit’ எனும் நூலினை எழுதினார். அதில் பிராமி என்பது பிராமணர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்று எழுதினார். பிராமி என்பதால் பிராமணர்களால் கண்டுபிடிக் கப்பட்டது என்பது நல்ல நகைச்சுவை.
5000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது சமசுகிருதம். அதிலிருந்து 2000 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் திருகுறளை எழுதினாராம். என்ன ஆதாரம் என்றெல்லாம் கேட்டு விடக் கூடாது அவர்களிடம்.
அடுத்து அதே ஆண்டு இன்னொரு நூலையும் எழுதினார். “Tamil Nadu A Land of Vedas” என்பதாகும் அது. தமிழ்நாடு வேத நாடா? (அப்படி என்றால் வேதங்கள் தமிழில் தானே இருக்க வேண்டும்).
திருக்குறளுக்கு நாகசாமி என்ன விளக்கம் எழுதுகிறார்?
 அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது – என்பது குறள்.
அதற்கு நாகசாமியின் விளக்கம் என்ன தெரியுமா? “பார்ப்பானின் காலைத் தொட்டு வணங்காதவர் சொர்க்கம் போக மாட்டார்கள்” என்று எழுதியுள்ளார்.
அந்தணர் என்றால் பார்ப்பனரா? அந்தணர் என்பவர் யார் என்பதற்குத் திருவள்ளுவர் அழகாக விளக்கம் சொல்லியுள்ளாரே?
அந்தணர் என்போர் அறவோர் மற்றுஎவ்வுயிர்க்கும்
செந்தண்மைப் பூண் டொழுகலான்.
என்பது தான் அந்தணருக்குத் திருவள்ளுவர்சொல்லும்  விளக்கமாகும்.
நாகசாமியின் இந்த நூல் விமர்ச்சிக்கப்படுவதைவிடகொளுத்தப்பட வேண்டும் (பலத்த கர ஒலி).
எல்லாக் குறளுக்கும் விளக்கம் எழுதிய நாகசாமி ஒரே ஒரு குறளுக்கு மட்டும் விளக்கம் எழுதவில்லை.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
என்ற குறளுக்கு அவரால் ஒன்றும் எழுத முடியவில்லை.
ஒரு செய்தி: திருநாவலூரில் இன்று (7.11.2018) காலை சுந்தரர் கோயில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்படும் என்று அறிவிப்பு. அதனை எதிர்த்து நீதிமன்றம் செல்லுகிறார்கள். நீதிபதி மகாதேவன் கேட்டார். சுந்தரர் தேவாரத்தை எந்த மொழியில் பாடினார்? ‘பித்தா பிறை சூடிய பெருமானே’ என்று சுந்தரர் தமிழில் தானே பாடினார் என்று நீதிபதி கேள்விக்குப் பதில் இல்லை.
இன்று காலை தமிழில் அங்கு குடமுழுக்கு நடைபெற்று விட்டது என்று சுப.வீ. சொன்னபோது – ஆரவாரம் மக்களிடையே!
(கரூர் அருகே உள்ள திருமுக்கூடலூர் சிவன் கோயில் குடமுழுக்கு 9.9.2002இல் தமிழில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காஞ்சி சங்கராச்சாரியார் கூறினார். “நாத்திகம் பேசும் கருணாநிதிக்கு இதில் தலையிட உரிமை இல்லை” என்றார். குடமுழுக்கு செய்த பின்னர் கோயில் நடை இழுத்துச் சாத்தப்பட்டு சுத்திகரிப்பு நடந்தது என்பதை நினைவூட்டுகிறோம்.)
இதில் வேதனை என்னவென்றால் தருமபுரம், திருப்பனந்தாள், திருவாவடுதுறை ஆதினகர்த்தாக்கள் தமிழில் குடமுழுக்கு ஆகமத்துக்கு விரோதம் என்பார்கள்.
(“சைவமும் தமிழும் தழைத்தோங்குக” என்ற வாசகங்கள் இந்த ஆதினங்களின் வளாகங்களுக்குள் காணப்படும்).
இந்தியப் பண்பாட்டுக்குரிய நூல் திருக்குறள் என்று எழுதுகிறாரே திருவாளர் நாகசாமி.
இந்தியா முழுவதும் ஒரே பண்பாடா இருக்கிறது? என்ற வினாவை சுப.வீ. தொடுத்தபோது கரஒலி தான்.
கடைசியாக என்ன சொல்லி நூலை முடிக்கிறார் தெரியுமா?
திருகுறள் தானாக எழுதப்பட்டதா? தழுவி எழுதப் பட்டதா? என்பதை எதிர்காலம் முடிவு செய்யும் என்கிறார். அப்படி யென்றால் எதற்கு இப்படியொரு நூல் என்ற சுப.வீ.யின் கேள்வி அர்த்தமுள்ளது.
பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார்
இவர் உரை ஓர் ஆய்வுரையாக அமைந்திருந்தது என்றே சொல்லவேண்டும். “நாகசாமி நூலுக்கு ஒரு மறுப்பு நூல் எழுத வேண்டும் என்று தாய் உள்ளக் கனிவோடு ஆசிரியர் பெருந்தகை எனக்கு அன்புக் கட்டளை இட் டுள்ளார் – அந்தப் பணியை விரைவில் முடிப்பேன்” என்று சொன்னபோது மிகப் பெரிய வரவேற்பு பார்வையாளர்கள் மத்தியில்.
ஆரியப் பண்பாட்டுக்கு எதிர்ப்புத் தொடங்கிய காலந்தொட்டு அவ்வப்பொழுது எதிர்ப்பு முனைகள் இருந்தபோதிலும் தந்தை பெரியார்தான் அதன் குடலை உருவிக் காயப் போட்டார்.
நீதிக்கட்சி ஆட்சி பெரியார் வழிகாட்ட காமராசர் ஆட்சி எல்லாம் பெரியார் கொள்கை வழி ஆட்சிகள்தான். வடக்கே வி.பி.சிங்கு தலைமையமைச்சராக இருந்து பெரியார் கொள்கையைப் போற்றினார்.
“தரும சாத்திரங்களை எழுதியவர்கள் பார்ப்பனர்கள். அற நூல்கள் தமிழருக்குரியவை. சமசுகிருதத்தில் தருக்க நூல்கள் உண்டு. அவை எல்லாம் மறைக்கப்பட்டு – தரும சாத்திரங்கள் என்னும் வருணதர்மத்தை வலியுறுத்தும் நூல்களை தூக்கிக் பிடிக்கக் கூடாது” என்றார் பேராசிரியர் மறைமலை இலக்குவனார்.
எழுத்தாளர் பழ.கருப்பையா
எழுத்தாளர் பழ. கருப்பையா அவர்களின் பேச்சு ஒரே கலகலப்புதான். பல வரலாற்றுத் தகவல்களைக் கூறினார்.
2100 ஆண்டுகளுக்கு முன் சிந்து சமவெளி நாகரிகம் தொடர்ந்து பெரியார் காலம் வரை ஆரிய எதிர்ப்புத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது! பெரியார் காலத் தோடு இந்த இனப் போர் முடியும் என்று எதிர்பார்த்தோம்.  ஆசிரியர் வீரமணி காலத்திலும் தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது.
தமிழனுக்கு மெய்யியல் இல்லையாம். அதைச் சரி செய்ய வள்ளுவர் வேதங்களிலிருந்து கடன் பெற்று எழுதினாராம்.
இன்றைக்கு நாகசாமிகள் எழுதுகிறார்கள் என்றால் இதற்கு மூலம் பரிமேலழகர்தான். பரிமேலழகர் மிகச் சிறந்த உரை ஆசிரியர்தான். ஆனாலும் பார்ப்பனத் தனத்துடன் பல இடங்களில் நடந்து கொண்டுள்ளார்.
‘அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழித்தலுமாம்’ என்று பரிமேலழகர் எழுதுகிறார் என்று பழ.கருப்பையா குறிப்பிட்டார்.
ஆரியம் வேறு, திராவிடம் வேறு – இரண்டும் இரு வேறு பண்பாட்டு நிலைப்பாடுகள்.
உயிர்க்கொலை புரிந்து யாகம் நடத்துவது ஆரியம்.
ஆனால் திருவள்ளுவர் நமது தமிழ்ப் பண்பாட்டைச் சேர்ந்தவர் ஆதலால் என்ன பாடுகிறார்?
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்சொரிந்து உண்ணாமை நன்று.
என்று ஆரியத்துக்கு எதிரான கருத்தை முன் வைக்கிறார் வள்ளுவர்.
பெரும்புலவர் சீனிவாசன் பல குறள்களைச் சுட்டிக்காட்டி, பரிமேலழகர் தவறான உரையை எழுதியுள்ளதாகக் குறிப்பிடுகிறார். வடமொழி நூல்களைத் தழுவி எழுதியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் குறள்களின் எண்ணிக்கையையும் பெரும்புலவர் சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார். 434, 501, 648, 924, 993, காமத்துப் பால், அவதாரிகை 1330 ஆக ஏழு இடங்கள்.
சில இடங்களில் அரசன் புரோகிதர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும் எனப் பரிமேலழகர் எழுதுகிறார். புரோகிதர்கள் தெய்வத்தால் வரும் குற்றங்களைத் தீர்த்து வைப்பார்களாம். 425, 45, 501 ஆகிய குறள்களுக்கு பரிமேலழகர் இவ்வாறு பொருள் கூறுவதாக புலவர் சீனிவாசன் அவர்கள் குறிப்பிட்டுள்ளது இவ்விடத்தில் சுட்டிக் காட்டத் தகுந்தது.
ஆரிய – திராவிட வேறுபாட்டைச் சுட்டிக் காட்டுவதற்கு உழவுத் தொழிலைப்பற்றி மனுதர்மம் கூறியதையும், திருவள்ளுவர் கூறியதையும் ஒப்பிட்டு காட்டினார் எழுத்தாளர் பழ.கருப்பையா.
பயிர்த் தொழிலைப் பற்றி மனுதர்மம் என்ன சொல்லுகிறது?
“சிலர் பயிரிடுதலை நல்ல தொழிலென்று நினைக் கிறார்கள். அந்தப் பிழைப்புப் பெரியோர்களால் நிந்திக்கப் பட்டது – ஏனெனில் இரும்பை முகத்திலே உடைய கலப்பையும், மண் வெட்டியும் பூமியையும், பூமியிலுண்டான பல பல உயிர்களையும்(செந்துக்களையும்) வெட்டுகிறதல்லவா!”  (மனு அத்தியாயம் 10 சுலோகம் 841)
இது ஆரியத் தத்துவம் – கலாச்சாரம்; ஆனால் திருவள்ளுவர் என்ன சொல்லுகிறார்?
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்
இது திராவிடத் தத்துவம்.
இப்படி இருக்கும்போது திருக்குறள் மனுவின் சாரம் என்று நாகசாமி எழுதுவது எப்படி? பார்ப்பனத் தனம்தானே!
நாகசாமியின் இந்த நூலைப் பற்றி – பார்ப்பன ஆதிக்கப் பண்பாட்டைப் பற்றி எல்லாக் கட்சித் தலைவர்களும் பேச வேண்டும். எல்லாக் கட்சிகளிலும் உள்ள இலக்கிய அணிகளும் கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் எழுத்தாளர் பழ.கருப்பையா. அவர் உரை ஒரே கலகலப்பாகவே அமைந்திருந்தது.
 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
நாகசாமிக்கு இவ்வளவுப் பச்சையாக தமிழர்களை எதிர்த்து உண்மைக்குப் புறம்பாக பச்சைப் பார்ப்பனத் தனத்துடன் நூல் எழுதும் துணிவு எப்படி வந்தது?
நாகசாமி என்ற ஒரு தனி மனிதர் இப்படியொரு நூலை எழுதியுள்ளார் என்று தவறாகக் கருதக்கூடாது.
திட்டமிட்டே ஒரு வட்டாரம் (ஒரு இலாபி) இதனைச் செய்கிறது. இந்த வேலையைச் செய்வதற்காகவே கோடிக்கணக்கில் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மனுதருமத்தையே இந்திய அரசமைப்புச் சட்டமாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
இந்தத் திராவிட மண்ணை – பெரியார் மண்ணை வேத மண் என்கிறார்கள். அறிஞர் அண்ணா அவர்கள் இந்த மண்ணுக்கு சட்டரீதியாக ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டியுள்ளார். இதனை மாற்றி வேத நாடாக ஆக்கப் பார்க்கிறார்கள் – நாகசாமிகளின் வேலை என்பது இதில் ஒன்றுதான்.
ஏன் ஆங்கிலத்தில் திருக்குறளைப்பற்றிப் பொய்யும், புனை சுருட்டுமாக எழுதுகிறார்? உலகம் பூராவும் பரப்புவதற்குத்தான். பார்ப்பனர்களின் இந்த சூழ்ச்சிகளை எல்லாம் பெரியாரின் ஈரோட்டுக் கண்ணாடி போட்டுப் பார்த்தால்தான் புரியும்.
குறளில் கடவுள் இல்லை, மதம் இல்லை, சாதி இல்லை, கோயில் என்ற வார்த்தை இல்லை. சங்க இலக்கியங்களிலும் முப்பால், நாற்பால் கிடையாது.
மனுதரும சாத்திரத்தில் கடைசிக் கடைசியாக சாத்திரத்தின் இரகசியம் சொல்லப்பட்டுள்ளது.
“இந்த சாத்திரத்தில் எல்லாத் தருமத்தையும் சொல்லி இராத்தினாலும்,சொல்லப்பட்ட தருமங்களுக்குள் தேச கால பேதத்தால் யாதாவதொரு சந்தேகம் நேரிடுமாதலாலும் அந்த விசயத்தில்  மேற்சொல்லும் குணமுள்ள பிராமணருள் எந்தத் தருமத்தை ஏற்படுத்துவார்களோ அதே நிச்சயமான தருமமாகும். (மனு அத்தியாயம் 12, சுலோகம் 108).
இதைவிட பச்சையான பார்ப்பனத்தனம் வேறு ஒன்று இருக்க முடியுமா?
குறளுக்கு மரியாதை வந்துவிடக் கூடாது. குறள் மூலம் தமிழினத்துக்கு சிறப்பு ஏற்பட்டு விடவும் கூடாது.
அதற்கு ஒரே வழி அந்தக் குறள் என்பது மனுதர்மத்தைப் பார்த்துக் காப்பியடித்தது என்று சொல்லிவிட்டால் தீர்ந்தது கதை – இதுதான் பார்ப்பனர்களின் அணுகுமுறை – சூழ்ச்சி முறை என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
(முழு உரை பின்னர்)
 விடுதலை: நாள் 10.11.201

திங்கள், 25 ஜூன், 2012

what history says about abey - an article by Dr.Nagasamy, dinamalar.

நன்கு எழுதியுள்ளார். கோவில் சமையலறைகள் மடப்பள்ளிகள் என்றே இன்றும்அழைக்கப் பெறும். இசுட்டா பூர்த்தம் என்று தமிழில் இலலை. பின்னர் ஆரியச் செல்வாக்கால் குறிப்பிட்ட  வகுப்பினரிடையே பயன்படுத்தி உள்ளனர். கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டா என்ற பழமொழி வந்ததன் காரணமே கோயில்கள் உணவும் அறிவும் மருத்துவமும் வழங்கும் அறநிலையங்களாகச் செயல்பட்டமைதான். எனவே, கோயிலைச் சார்ந்த மடங்கள் உண்டி கொடுத்ததோர் உயிர் கொடுத்தோர் என்னும் அறநெறியில்  தமிழர்களின் உயரிய பண்பான விருந்தோம்பலைப் பின்பற்றியதில் வியப்பில்லை. ஆனால், இன்றைக்கு மடங்கள் பலவும் பொதுவாழ்வில் இருந்து ஒதுங்கியோ வணிக நோக்கில் தவறாகச் செயல்பட்டோ வருவது வருத்தத்திற்குரியது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
மடம் என்ற சொல், தமிழில், "மடு' என்ற சொல்லில் இருந்து தோன்றியது. "மடு' எனில், "உண்ணுதல், ஊட்டுவித்தல்' என்ற பொருள்களில் காணப்படுகிறது. பண்டைய தமிழ் இலக்கியமாகிய புறநானூற்றில் (56) "ஒண்டொடி மகளிர் மடுப்ப' என்ற வரியால், ஊட்டுதல் என்ற பொருள், இரண்டாயிரம் ஆண்டுகளாக வழக்கில் இருந்து வந்துள்ளது என்பது தெளிவு. சமஸ்கிருத மொழியிலும், "மட்' என்ற சொல்லில் இருந்து, "மடம்' என்ற சொல் வந்ததாக அகராதிகள் கூறுகின்றன. "மட்' எனில், "அத்தி' - உண்ணுதல், எனப் பொருள் கூறுகின்றன. ஆதலின், "மடம்' என்ற சொல், உண்பது, ஊட்டுவதுடன் தொடர்புடையது என்பதில் ஐயமில்லை.

உணவளிக்கும் புண்ணியம்:மிகத் தொன்மையான காலங்களில் ஒற்றையடிப் பாதைகள் அல்லது மாட்டு வண்டிப் பாதைகள் தான் அதிகம். குறிப்பாக, கோவில்களுக்கும், தீர்த்தங்களில் நீராடவும், பயண யாத்ரீகர்கள் வருவது மரபு. அவர்களுக்காகவே, ஆங்காங்கே, தங்குமிடங்களும், உணவு வழங்க ஏற்பாடும் செய்வதை, "இஷ்டா பூர்த்தம்' என்று கூறுவர். அதனால், அரசும், பொருள் படைத்தோறும் இவ்வாறு இலவசமாகவே, தங்கவும், உண்ணவும் ஏற்பாடு செய்வது மரபு. "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்' என்னும் பண்டைய மரபுக்கு ஏற்ப, இவ்வாறு தோன்றியவை தான், பின்னர் மடங்கள் என்று அழைக்கப் பெற்றன.

தேவார கால மடங்கள்:திருஞானசம்பந்தப் பெருமானும், அப்பர் சுவாமிகளும் திருவீழிமிழலை அடைந்தபோது, அங்கு, படிக்காசு பெற்ற வரலாறு அனைவரும் அறிந்ததே. அவர்கள் இருவரும் தங்கி அடியார்களுக்கு அடிசில் அளித்தது, மடத்தில் தான் என்பதையும் அறிவோம். அதுபோல் ஞானசம்பந்தப் பெருமான், மதுரையை அடைந்தபோது, தங்கியதும், "மடம்' என அறிவோம்.

வரலாற்றில்...:வரலாற்று நோக்கிலே காணும்போது, ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பெல்லாம், மடங்கள் கோவிலைச் சார்ந்தவையாகவே குறிக்கப்படுகின்றன. காஞ்சிபுரத்தின் அருகில், எட்டாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் நந்திவர்மன் காலத்தில், பிள்ளைப்பாளையம் என்ற ஊரில், "அரசன் பழம் திருமேற்றளியும் மடமும் நடக்க நிலம் கொடுத்தான்' எனக் கல்வெட்டு கூறுகிறது. கி.பி., 800ம் ஆண்டில் இருந்த மடம், கோவிலைச் சார்ந்திருந்ததை இதனால் அறிகிறோம். திருச்சி அருகில், லால்குடி வட்டத்தில், சென்னி வாய்க்கால் என்ற இடத்தில், "அறிஞ்சிகை ஈச்வரம்' என்ற கோவில் இருந்தது. அதை ஒட்டி ஒரு மடமும் இருந்தது.

சோழர்காலத்தில்: சோழர் காலந்தொட்டு இவ்வாறு கோவிலை ஒட்டிய மடங்கள் அதிகமாக அமைக்கப்பட்டதை, பல கல்வெட்டுகள் குறிக்கின்றன. இவற்றில் சைவ மடங்களாகட்டும், வைணவ மடங்களாகட்டும், கோவிலை அண்டியவையாகவே காணப்படுகின்றன. இவற்றில் வசிப்பவர்கள், தவசியர்கள் என்று அழைக்கப்பட்டனர். உடுமலைப்பேட்டை வட்டம், குமாரலிங்கத்தில் வெங்கடேசப் பெருமாள் கோவிலில் உள்ள கல்வெட்டு வீரராஜேந்திரன் காலத்தது. அதில், திருமுத்திறத்தீசரம் கோவிலில் திருநீறிட்டான் திருமடம் என்னும் ஒரு மடம் இருந்தது. அதில் வசிப்பார் தம்பிரான் தோழன் என்னும் பெயர் பெற்றவர். அவரைக் குறிக்கும்போது, "குப்பிட்டிருக்கும் தவசி' என்று கல்வெட்டு கூறுகிறது. மடத்திலிருந்து உண்பவர்களுக்குத் தனி உரிமை என்றன்றி, கோவிலில் சில பணிகளும் செய்ய வேண்டும் என்றும் முறை இருந்துள்ளது.

பாண்டி நாட்டில்: திருநெல்வேலி, தென்காசி வட்டம், தென்காசியில் பராகிரம பாண்டியன், ஒரு கோவில் கட்டினான். இதை, தென்காசி என்று பெயரிட்டான். இக்கோவிலில் பூஜை, திருவிழாக்கள் எல்லாம் நடக்கத் தொடங்கின. அருகில் பனையூர் என்ற ஊரில் பிராணானந்த சன்யாசி என்பவரை, பல சன்யாசிகளில் இருந்து சிறந்தவராகத் தேர்ந்தெடுத்து, அவரிடத்தில் இக்கோவிலை ஒப்பித்து, இதைக் காத்துத் தரவேண்டும் என்று வேண்டி, இவருக்கு உதவியாக மேலும், சில சன்யாசிகளையும் நியமித்து, பெருந்தெருவில் ஒரு மடம் அமைத்தும் கொடுத்தான். இது, 1486ல் நடந்த நிகழ்ச்சி. இங்கு, ஒரு கோவிலையே பாதுகாக்கும் பணியை, ஒரு சன்யாசியிடம் ஒப்படைத்து, மேலும், பல சன்யாசிகளை நியமித்தான் என கல்வெட்டு கூறுகின்றது. சன்யாசிகளை நியமிக்க, அரசனுக்கு உரிமையிருந்தது, கோவிலுக்கு உள்ளதை காப்பதற்குத்தான் அவர்களுக்கு உரிமையை அளித்தானே ஒழிய, தன்னிச்சைப்படி செய்ய உரிமை கொடுக்கப்படவில்லை. இதுபோல் தூய்மையாலும், அறிவாலும், ஆற்றலாலும், மன்னனுக்கும், மக்களுக்கும் ஒத்த மரியாதைக்குரிய சன்யாசிகளிடம் சில சமயம் பல கோவில்களும் வந்து சேர்ந்தன. இதுபோல் பெருமாள் கோவில்களிலும், சில மடங்கள் இருந்திருக்கின்றன. திருவரங்கம் கோவில் கல்வெட்டுகளில், முதலாம் இராஜாதிராஜ சோழன் கல்வெட்டில், 1048ல், "அழகிய மணவாள மடம்' கொடுத்த செய்தி காணப்படுகிறது. எது எப்படியிருப்பினும், "மடம்' என்பது, பெரும்பாலும் கோவிலை ஒட்டியதாக, கோவிலின் அங்கமாக வரும் யாத்ரீகர்களுக்கோ அல்லது அவ்வச்சமய அடியார்களை உண்பிப்பதற்காகவோ நிறுவபட்டது என்பது தெளிவு.

மடத்தின் நிர்வாகம் கோவிலை ஒட்டியது:கோவிலின் அங்கமாக மடம் விளங்கிய காரணத்தால், மடங்களின் நிர்வாகமும் கோவில் நிர்வாகத்தின் அங்கமாகவே காணப்படுகிறது. ஸ்ரீரங்கம் கோவிலில், பல கல்வெட்டுகள் வாயிலாக இதைக் காண்கிறோம். அக்காலத்தில், கோவில் நிர்வாகம் என்பது, ஒரு பெரும் குடியாட்சியாகவே செயல்பட்டது. அதாவது, கோவிலை ஒட்டிய ஒவ்வொரு பிரிவு பணியையும், செய்யும் பணியாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதி, நிர்வாகக் குழுவில் இடம் பெற்றிருப்பர். அரசின் அதிகாரி, பூஜகர், தோட்ட வேலை செய்வோர், கோவில் நிலங்களை உழுகுடிகள், நந்தவனம் பயிர் செய்வோர், மெய்க்காப்பாளர், பண்டாரத்தார், இசைக் கருவியாளர், பாடுவோர், நடமாடும் பெண்கள் என, எல்லா பணிப் பிரிவுகளின் பிரதிநிதிகளும், இக்குழுவில் இடம் பெறுவர்; அனைவரையும் கலந்தாலோசித்துத் தான் முடிவு எடுப்பர். இப்பிரிவுகளை, "கொத்து' என்றும் கூறுவர். கோவிலைச் சார்ந்த எந்த ஒரு முக்கிய செயல்பாடும், அசையும் சொத்து வாங்குதல், அசையா சொத்து வாங்குதல், விற்றல் செயல்முறைகளில் மாற்றங்கள், ஆக, ஏதாயினும் இந்நிர்வாகக் குழுவின் கூட்டத்தில் முடிவு செய்ய வேண்டும். 13ம் நூற்றாண்டில் சுந்தரபாண்டியன் ஏராளமான தங்க நகைகள், நிலங்கள் முதலியன கொடுத்தபோது, கோவிலின் மிகவும் அதிகமான சொத்துகளைப் பராமரிக்க, எல்லா பிரிவுகளின் பிரதிநிதிகளையும் சேர்த்துக் கொண்டு நடத்த வேண்டும் என ஆணையிட்டான். ஆதலின், மடமும், கோவிலின் அங்கம் ஆதலின், மடத்தைப் பற்றிய முடிவுகளையும் அனைத்துக் கொத்துக்களின் ஆலோசனைப்படியே நடத்த வேண்டும் என்பதில் ஐயமில்லை.
மடங்களின் தலைவர்கள்

சில மடங்களில், தலைவராக சன்யாசிகளையும், தவசிகளையும், பிற்காலத்தில் வேண்டிக் கொண்டனர் என்று கண்டோம். இவர்கள் துறவிகளாக, தமக்கென வாழாத தகைமையராக, தாங்கள் சொத்து சேர்க்காதவராக, அறிவாளிகளாக, தூய்மையாளர்களாக இருந்துள்ளனர் என்பதால், அவர்களைத் தேர்ந்தெடுத்து, நியமித்தான் அரசன். பொதுமக்களிடம் பெருமதிப்பு பெற்று, அவர்களால் வணங்கத்தக்கோராக இருந்தார். ஆதலின், அவர்களிடம் யாத்ரீகர்களுக்கு உணவளிக்கும் புண்ணியப் பணி ஒப்படைக்கப்பட்டது. அந்தந்த சமயத்தைப் பின்பற்றும் அடியார்களுக்கு ஏற்ப இக்கட்டளைகள் நடத்தப்பட வேண்டும் எனக் கட்டுப்பாடு உண்டு. இவ்வாறு சன்யாசம் மேற்கொள்ளும்போது, அவர்கள் இவ்விரதம் எவ்வாறு அனுஷ்டிப்பேன் என சத்தியம் செய்ய வேண்டும். அச்சத்தியத்தை மீறும் சன்யாசிகளுக்கு மிகக் கடும் தண்டனையை தர்ம சாத்திரங்கள் கூறுகின்றன. மடமும் மடத்தைக் காப்போரும், மக்கள் மத்தியில் ஆன்மிகத் தலைவர்களாக, தமது நடவடிக்கையால் வெளிக் காட்டியோரையே தமிழகம் போற்றியுள்ளது.

- டாக்டர் இரா.நாகசாமி.