தொடக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொடக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

பட்டம்மாள் இணையத் தளம் தொடக்கம்

நல்ல முயற்சி. இனிமேல் தமிழில் வரும் எனவும் பாடல்களைக்கேட்கவும் காணவும் இயலும் எனவும் எதிர்பார்க்கின்றேன்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

டி.கே. பட்டம்மாளின் தனி இணையதளம் துவக்கம்

ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்ற வார்த்தைகளின் மூலம், தமிழர்களுக்கு அறிமுகமாக கர்நாடக இசைப் பாடகி டி.கே. பட்டம்மாளுக்கு என தனி இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.
கர்நாடக இசைப் பாடல்களிலும், திரைப்பட பாடல்களிலும் தனக்கென தனி முத்திரை பதித்தவர் டி.கே. பட்டம்மாள். சென்னையில் ஞாயிறன்று நடைபெற்ற விழாவில், டி.கே. பட்டம்மாளின் இணையதளம் துவக்கப்பட்டது.
அவரது மிக அரிய புகைப்படங்கள், கடிதங்கள், செய்திகள், பாடல்கள் என பலவிதமான தகவல்களைக் கொண்டுள்ளது இந்த இணையதளம். டி.கே. பட்டம்மாளின் பேரன், பேத்திகளின் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள dkpattammal.org என்ற இணையதளத்தில், தொடர்ந்து அவரைப்பற்றி தகவல்களை பதிவேற்றம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிற

திங்கள், 24 ஜூன், 2013

ஆசுதிரியாவில் உலக மனித உரிமை மாநாடு தொடக்கம்

ஆசுதிரியாவில் உலக மனித உரிமை மாநாடு தொடக்கம்

ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் இன்று உலக மனித உரிமை மாநாடு துவங்குகிறது.
250க்கும் மேற்பட்ட மனித உரிமை ஆர்வலர்கள் பங்கேற்கும் இந்த மனித உரிமை மாநாட்டில், காவல்நிலைய சித்ரவதை, மனித உரிமை மீறல், வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இந்தியா சார்பில் ஹென்றி டிபேன் உட்பட மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் மாநாட்டில் பங்கேற்கின்றனர். இன்று துவங்கும் மனித உரிமை மாநாடு, 27ம் தேதி வரை நடைபெறுகிறது.

புதன், 10 அக்டோபர், 2012

பள்ளிகளில் காப்பீ ட்டு க்கல்வித் திட்டம்: தமிழக ஆளுநர்

 தலைப்பில் காப்பீட்டுக்கல்வித் திட்டத்தைத் தொடக்கி வைத்ததாக உள்ளது. செய்தியில் விழிப்புணர்வுத் திட்டத்தைத் தொடக்கி வைத்ததாக உள்ளது.  மாணவர்களிடம் கட்டணம் பெறாமல் அவர்களைக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க வேண்டும்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

 

பள்ளிகளில் காப்பீ ட்டு க்கல்வித் திட்டம்: தமிழக ஆளுநர் தொடக்கி வைத்தார்

First Published : 08 October 2012 04:06 PM IST
யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனத்தின் 75-வது ஆண்டு விழாவையொட்டி, பள்ளி மாணவர்களிடையே காப்பீடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் கல்வி திட்டத்தை தமிழக ஆளுநர் கே.ரோசய்யா நேற்று தொடக்கி வைத்தார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட 3 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் காப்பீடு கல்வி குறித்த விழிப்புணர்வு சி.டி. மற்றும் புத்தகங்களை வழங்கி ஆளுநர் பேசியதாவது:
நாட்டில் 24 நிறுவனங்கள் ஆயுள் காப்பீட்டிலும், 27 நிறுவனங்கள் பொது காப்பீட்டிலும் ஈடுபட்டு வருகின்றன. காப்பீட்டு துறையானது குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதிலும் கடந்த 10 ஆண்டுகளில் காப்பீடு மற்றும் அதன் பயன்கள் பரவலாக்கப்பட்டுள்ளன. அண்மைக் காலமாக காப்பீடு நிறுவனங்கள் பொதுமக்கள் சேவையில் மிகவும் வளர்ச்சி அடைந்து வருகின்றன.
நாட்டின் வளர்ச்சிக்கு மக்களிடையே காப்பீடு உள்ளிட்ட நிதி பயன்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம். நாளைய நாட்டின் குடிமக்களான இன்றைய மாணவர்களிடையே காப்பீடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனம் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி பாராட்டத்தக்கது என்றார் ஆளுநர். காப்பீடு கல்வி விழிப்புணர்வு சி.டி. மற்றும் புத்தகங்களைப் பெற்ற பள்ளிகளில் கல்வியில் சிறந்து விளங்கிய 9 மாணவர்களுக்கு பரிசையும் ஆளுநர் வழங்கினார். மேலும், யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனத்தின் நீண்ட நாள் வாடிக்கையாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
கிராமப்புற மக்களிடையே காப்பீடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே பள்ளி மாணவர்களிடையே காப்பீடு குறித்த கல்வியை பரப்ப இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 75 பள்ளிகள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களிடையே காப்பீடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமின்றி அந்தப் பள்ளிகளுக்குத் தேவையான சில உள்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்றார்.

சனி, 6 அக்டோபர், 2012

அக்டோபர் 11: நாட்டத் (கேட்) தேர்வுகள் தொடக்கம்

அக்டோபர் 11:   நாட்டத் (கேட்) தேர்வுகள் தொடக்கம்

First Published : 04 October 2012 03:57 PM IST










இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற கேட் தேர்வுகள் நடத்தப்படுகிறது.
அதன்படி, இந்த ஆண்டு கேட் தேர்வுகள் 27 நாட்கள் நடக்கவுள்ளது. இத்தேர்வுகள் அக்டோபர் 11ம் தேதி தொடங்கி நவம்பர் 6ம் தேதி வரை நடக்கிறது.
இந்தாண்டு சுமார் 2.10 லட்சம் பேர் கேட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிகபடியான விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளன என்று ஐஐஎம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் ஐ.ஐ.எம்., மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனங்களில் சேர்க்கை நடைபெறுகிறது.
மேலும் விரிவான தகவல்களுக்கு ஐஐஎம் கல்வி நிறுவனங்களை அணுகலாம்.