பறவைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பறவைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 30 செப்டம்பர், 2013
ஞாயிறு, 29 செப்டம்பர், 2013
கரைவேட்டி பறவைகள் சரணாலயம்
கரைவேட்டி பறவைகள் சரணாலயம்
பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கரைவேட்டி பறவைகள் சரணாலயம் மிகச் சிறந்த சரணாலயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
321 சதுர அடியில் அமைந்துள்ள இந்த சரணாலயத்தில் சுமார் 90 அரிய வகை
நீர்ப் பறவைகள் உட்பட 188 அரிய வகை பறவைகள் வந்து தங்கியுள்ளன.
வெளிநாடுகளில் இருந்து மட்டும் அல்லாமல், இங்கு எப்போதும் ஏராளமான நீர்
வாழ் பறவைகள் இருப்பதால் இது ஆண்டு முழுவதும் திறந்திருக்கும் சரணாலயமாக
திகழ்கிறது.
பார்ஹெட்டட் கூஸ், கிரே நிற பெலிகான், 16 வகையான வாத்துகள், வெள்ளை
கழுத்து ஸ்டோர்க், ஸ்பூன்பில், இபிஸ், ஷோவெல்லர், குளோஸி இபிஸ், வெள்ளை
இபிஸ், கூட் என இங்கு பல விதமான பறவைகள் நிறைந்திருக்கின்றன. நவம்பர்
மாதத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த ஏரிப் பகுதிக்கு வரும் பறவைகள்,
இனப்பெருக்கம் செய்து மே மாதம் வரை தங்கியிருக்கின்றன. பிறகு தங்களது
சொந்த நாடுகளுக்கு திரும்புகின்றன. எனவே, இங்கு நவம்பர் முதல் மே மாதம்
ஏராளமான பறவைகள் நிறைந்திருக்கும். அதிலும் ஜனவரி மாதத்தில் தான் இங்கு
அதிகமான பறவைகள் இருக்கும். அதுதான் இங்கு பீக் சீசன் என்று கூறப்படுகிறது.
ஜனவரி மாதத்தில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பறவைகள் இந்த சரணாலயத்தில்
நிறைந்திருக்குமாம்.
இந்த சரணாலயம் திருச்சியில் இருந்து 50 கி.மீ. தொலைவிலும், தஞ்சாவூரில்
இருந்து 35 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. அரியலூரில் இருந்து 12 கி.மீ.
தொலைவில் இந்த சரணாலயம் அமைந்துள்ளது.
இதனை காண சிறந்த சீசன் என்றால் அது டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரையிலான காலமாகும். இங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இலவசம்.
தங்கும் வசதி என்றால், அது தஞ்சாவூர் அல்லது திருச்சியில் உள்ள ஹோட்டல்களில் தான் சுற்றுலாப் பயணிகள் தங்க வேண்டியதிருக்கும்.
இந்த சரணாலயத்துக்கு அருகில் தஞ்சாவூர், திருச்சி ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன.
ஞாயிறு, 6 ஜனவரி, 2013
பறவைகள், விலங்குகளைப் பறிகொடுக்கும் வனத்துறை
ஈரோடு: தமிழகத்தில், வனத்துறை
துவக்கப்பட்டு, 150வது ஆண்டில், அடியெடுத்து
வைக்கிறது. ஆனால், மக்களிடையே போதிய
விழிப்புணர்வு, கண்காணிப்பின்மை
இல்லாததால், பறவைகளையும், விலங்குகளையும்
இழந்து வனத்துறை பரிதாப நிலையில்
உள்ளது.
இந்தியாவில், ஆங்கிலேயர் ஆட்சியின் போது, வனத்துறை துவக்கப்பட்டது. எனினும், ஆங்கிலேயர்கள், மன்னர்கள் காலத்தில், வனப்பகுதிக்குள் புகுந்தும், ஊருக்குள் புகும் வன விலங்கினையும் வேட்டையாடுவதும் வழக்கம். வன விலங்கினை வேட்டையாடுபவர்களே, சிறந்த வீரன் எனவும் ஒருகாலத்தில் கருதப்பட்டது.இந்தியா சுதந்திரம் அடைந்த பின், ஒவ்வொரு மாநிலத்துக்கும் வனத்துறை துவக்கப்பட்டது.
1948ல் தமிழகத்தில் வனத்துறை துவக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்து, இன்றைய காலம் வரை, வனத்துறை துவக்கப்பட்டு 150 ஆண்டுக்கும் மேலாவதாக, வனத்துறையினர் தெரிவித்தனர். வனத்துறையினரோடு, பொதுமக்கள்ஒத்துழைக்காததாலும், போதிய கண்காணிப்பின்மை, ஆட்கள் பற்றாக்குறையாலும்,

வனக்குற்றங்கள் அதிகரித்ததால், பல்வேறு
விலங்கினங்கள், பறவை இனங்கள்
அழிவுப்பாதையே நோக்கி வேகமாக முன்னேறி
வருகிறது.இதுகுறித்து வனத்துறை
ஆர்வலர்கள் கூறியதாவது:
சிட்டுக்குருவியை
சாப்பிட்டால்.,
இந்தியாவில் வனத்துறை துவக்கப்பட்டு, 150 ஆண்டாகிறது. பழங்காலத்தில், பெருமைக்காக விலங்கு, பறவைகள் வேட்டையாடப்பட்டது. தற்போது, இறைச்சிக்காகவும், பணத்துக்காகவும், வேட்டையாடப்படுகிறது.மனிதனின் மூடநம்பிக்கையாலும், பொருள் தேடும் ஆசையாலும், மாநிலம் முழுவதும் வனங்கள், பொட்டல் காடாக மாறி வருகிறது. மனித இனத்தின்மூடநம்பிக்கையால் வனத்தில் வாழும் பறவை இனங்களும், விலங்கினங்களும் வேகமாக அழிந்து வருகின்றன.முற்றிலும் அழிந்து போன பறவை இனத்தில், முதல் இடத்தில் இருப்பது சிட்டுக்குருவிகள் தான். சிட்டுக்குருவியை சாப்பிட்டால், ஆண்மை பெருகும் என்ற மூடநம்பிக்கை நிலவியதால், சிட்டுக்குருவி இனமேஅழிந்தது. தமிழகம் முழுவதும், 80சதவீத சிட்டுக்குருவிகள் அழிந்தது. திண்டுக்கல், மதுரை,

கூண்டோடு
அழிவுப்பாதை: மனிதனின் அடாவடி செயல்களாலும்,போதிய
பாதுகாப்பு இல்லாததாலும், நரி, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, காட்டெருமை, கரடி, காட்டு முயல், மலைப்பாம்பு, எறும்பு திண்ணி, கவரைமான் ஆகியவையும் குறைந்து வருவதாக வனத்துறை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வரும் நேரத்தில், மற்ற விலங்கினங்களும், பறவைகளும் கூண்டோடு
அழிவுப்பாதையை நோக்கி பயணித்து வருவது,
அதிர்ச்சியாக உள்ளது. வனத்தினையும், வன விலங்குகளையும்
பாதுகாக்க வேண்டுமெனில், சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும், விலங்குகளை
வேட்டையாடுபவரை பலஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க சட்டம் இயற்றப்பட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
புதன், 26 டிசம்பர், 2012
மேற்குத் தொடர்ச்சி மலையில் அரிய வகைப் பறவைகள்
மேற்குத் தொடர்ச்சி மலையில் அபூர்வ வகைப் பறவைகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் 10 முதல் 12 வகையான அபூர்வ வகை பறவைகள் உள்ளது தெரியவந்ததுள்ளது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சாம்பல் நிற அணில் சரணாலயப் பகுதியில் முதல் முறையாக பறவைகள் குறித்த தகவல்கள் சேகரிக்கும் பணி சனிக்கிழமை முதல் செவ்வாய்கிழமை வரை நடைபெற்றது.
செவ்வாய்கிழமை தகவல்கள் சேகரித்து வந்த பின்னர் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், பெங்களூரில் உள்ள வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வரும் பறவைகள் ஆர்வலர் சந்திரசேகரன் தினமணி செய்தியாளரிடம் கூறியதாவது:
மேற்குத் தொடர்ச்சி மலைக்கு மட்டுமே உரித்தான, காண்பதற்கு அரிதான, அபூர்வ வகையான 10 முதல் 12 வகையான பறவை இனங்கள் இப்பகுயில் இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக கேரளா மாநிலத்தில் மட்டுமே உள்ளது என்று கருதப்படும் ஸ்ரீலங்கன் தவளை வாய் பறவை முதலியார் ஊத்து, சாமியார் தடத்தில் இருந்துள்ளது. இதனை தகவல் சேகரிக்கச் சென்ற குழுவினர் புகைப்படம் எடுத்து வந்துள்ளனர். இதனைப் பார்க்கும்போது இவ்வளவு தொந்தரவுகளுக்கு நடுவேயும் மலைகள் சிறப்பாக உள்ளது என்பதே உண்மை. தற்போது திரட்டப்பட்ட தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்படும். தற்போது மேற்குத் தொடர்ச்சி மலையில் இப் பகுயில் உள்ள பறவைகளை சிறப்பாக பராமரிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய பரிந்துரைகள் வனத்துறைக்கு அளிக்கப்படும். மேலும் பறவை இனங்களைப் பாதுகாக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
ஞாயிறு, 22 ஜனவரி, 2012
செவ்வாய், 20 டிசம்பர், 2011
Birds of various kinds - Photos gallery : பறவைகள் பலவிதம்
பறவைகள் பலவிதம் அவை ஒவ்வொன்றும் ஒருவிதம் (ஒளிப்படத் தொகுப்பு)
தோழர் வினோ
பதிவு செய்த நாள் : 20/12/2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)