வியாழன், 8 ஆகஸ்ட், 2013

‘வாசிங்டன் அஞ்சல்’ நாளிதழை ரூ.15000கோடிக்கு வாங்கும் ‘அமேசான்’ அதிபர்

தின இதழ் Home / அபூர்வ தகவல்கள் / ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழை ரூ.1500 கோடிக்கு வாங்கும் ‘அமேசான்’ அதிபர்
‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழை ரூ.1500 கோடிக்கு வாங்கும் ‘அமேசான்’ அதிபர்

வாசிங்டன் அஞ்சல்’ நாளிதழை ரூ.15000கோடிக்கு வாங்கும் ‘அமேசான்’ அதிபர்

வாஷிங்டன், ஆக. 7
வாஷிங்டன் போஸ்ட்’ அமெரிக்க நாளிதழ் நிறுவனத்தை ‘அமேசான் டாட் காம்’ இணையதள நிறுவனத்தின் அதிபர் ஜெப் பிஜாஸ் ரூ.1,500 கோடிக்கு வாங்குகிறார்.இ&காமர்ஸ் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர், ‘அமேசான் டாட் காம்’ ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளர் ஜெப் பிஜாஸ் (49) என்ற அமெரிக்க தொழிலதிபர். ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கு சொந்தக்காரர். உலகின் 19வது கோடீஸ்வரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். அது மட்டுமின்றி, விண்வெளிக்கு மக்களை சுற்றுலா அழைத்துச் செல்லும் நோக்கில் ஸ்பேஸ் கம்பெனி ஒன்றையும் நடத்துகிறார். இந்நிலையில், உலகப் புகழ் பெற்ற ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் நிறுவனத்தை வாங்க பிஜாஸ் முடிவு செய்துள்ளார்.இதுபற்றி வாஷிங்டனில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘தி வாஷிங்டன் போஸ்ட் நிறுவனத்தை வாங்குவது தொடர்பாக வர்த்தக பரிமாற்றம் அடுத்த இரு மாதங்களில் முடிவாகும். இதை எனது அமேசான் டாட் காம் நிறுவனம் வாங்கவில்லை. தனிப்பட்ட சொத்தில் இருந்து வாங்குகிறேன். பத்திரிகையின் பாரம்பரியம், புகழ், கவுரவத்துக்கு எந்த பங்கமும் வராதபடி நிர்வகிப்பேன்.
தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு தொடர்ந்து உண்மையான, நடுநிலையான நாளிதழாகவே வாஷிங்டன் போஸ்ட் இருக்கும். போட்டிகளை சமாளிக்க ஏற்ற மாற்றங்கள் செய்யப்படும்’’ என்றார்.அமெரிக்காவின் 7வது மிகப்பெரிய நாளிதழான ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ கடந்த 1877ம் ஆண்டு வாஷிங்டன் நகரில் தொடங்கப்பட்டது. 135 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட இந்த நாளிதழ் 1974ம் ஆண்டு நடந்த வாட்டர் கேட் ஊழலை வெளிப்படுத்தி, அதிபர் ரிச்சர்ட் நிக்சனை பதவியில் இருந்து இறக்கிய பெருமை கொண்டது. 47 முறை புலிட்சர் விருதுகளை பெற்றுள்ளது. தினமும் 4.75 லட்சம் பிரதிகளும், ஞாயிறன்று 8.25 லட்சம் பிரதிகளும் விற்பனையாகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக