காரைக்கால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காரைக்கால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 12 மே, 2013

தனித்தேர்வராக எழுதிய காரைக்கால் மாற்றுத்திறன் மாணவி + 2 தேர்வில் 1159 மதிப்பெண்

தனித்தேர்வராக எழுதிய காரைக்கால் மாற்றுத்திறன் மாணவி + 2 தேர்வில் 1159  மதிப்பெண்
 

காரைக்கால் : காரைக்காலில், கண் பார்வைக் குறைபாடுள்ள மாணவி, பிளஸ் 2 பொதுத் தேர்வை, தனித் தேர்வராக எழுதி, 1,159 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
காரைக்கால் பெசன்ட் நகரைச் சேர்ந்தவர் ஜோ பெரோரா. இன்ஸ்சூரன்ஸ் நிறுவன ஊழியர். இவரது மகள் டெயன்னா பெரோரா, தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வணிகவியல், கணக்குப் பதிவியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப் பிரிவு படித்து வந்தார்.

பிறவியிலேயே கண் பார்வைக் குறைபாடு (மேக்குலர் டி ஜெனரேஷன்) உள்ள இவருக்கு, பார்வைக் குறைபாடு மேலும் அதிகரித்ததால், பிளஸ் 2 வகுப்பைத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் செ#முறைத் தேர்வுகள் செ#வதில் கடினமாக இருக்கும் என்பதால், வேறு பள்ளியில் சேர்ந்து படிக்குமாறு பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியது.

மனம் தளராத மாணவி டெயன்னா பெரோரா, வீட்டிலிருந்தவாறே படிப்பைத் தொடர்ந்தார். மாணவிக்கு, அதே பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் ஊக்கமும், முழு ஒத்துழைப்பும் கொடுத்து, பாடங்களைக் கற்றுக் கொடுத்தனர். பள்ளி சார்பில், பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டதால், தனித் தேர்வராக எழுத விண்ணப்பித்தார். கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திற்குப் பதிலாக, அரசியல் அறிவியல் (பொலிட்டிக்கல் சயின்ஸ்) பாடத்தைத் தேர்வு செ#தார்.

ஆசிரியர் உதவியோடு, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவி டெயன்னா பெரோரா, பிரெஞ்சு மொழிப் பாடத்தில், 194 மதிப்பெண்கள், ஆங்கிலம் -182, பொருளாதாரம் -198, அரசியல் அறிவியல் -187, வணிகவியல் - 198, கணக்குப் பதிவியலில் - 200 என, மொத்தம், 1,159 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். மாணவி டெயன்னா பெரோரா கூறியதாவது:

கண் பார்வை குறைவாக இருந்தாலும், கடின உழைப்பின் மூலமும், பெற்றோர் ஆதரவோடும், லட்சியத்தோடும் படித்ததால், அதிக மதிப்பெண்கள் எடுக்க முடிந்தது. ஆனால், இந்த மதிப்பெண்களுக்கு அரசு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற வருத்தமுள்ளது.

பள்ளியிலிருந்து நானாக முன்வந்து வெளியேறவில்லை. எனது உடல் நிலையைக் கருதி, தனித் தேர்வராக தேர்வு எழுதுமாறு பள்ளி நிர்வாகம் கேட்டுக் கொண்டது. எனவே, எனக்கு உரிய அங்கீகாரத்தை அரசு வழங்க வேண்டும். பட்டப்படிப்பு முடித்து, கல்லூரி விரிவுரையாளராகப் பணியாற்ற விரும்புகிறேன்.


இவ்வாறு அவர் கூறினார்.

சனி, 16 பிப்ரவரி, 2013

சூரியஒளி மருந்து தெளிப்பான்: மாணவனின் செயல் விளக்கம்




சூரியஒளி மருந்து தெளிப்பான்: வியக்க வைத்தது மாணவனின் செயல் விளக்கம்

புதுச்சேரி: காரைக்கால் பள்ளி மாணவன் வடிமைத்துள்ள சூரிய ஒளி மருந்து தெளிப்பான் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
வயல்களில் மனித தி கொண்டு இயக்கும் ஸ்பிரேயர்கள் பயன்படுத்துவதால் விவசாயிகளுக்கு சோர்வு ஏற்படுகிறது.பெட்ரோல் ஸ்பிரேயர்கள் பயன்படுத்தினால் விரைவாக மருந்து தெளிக்க வேண்டும். இரைச்சல், அதிகமாக இருக்கும்.இதற்கு மாற்றாக சூரிய ஒளி பூச்சி கொல்லி மருந்து தெளிப்பானை காரைக்கால் கீழக்காசாகுடி ஆத்மாலயா பள்ளி 8ம் வகுப்பு மாணவன் முகேஷ் நாராயணன்,13; வடிமைத்துள்ளார். முதல்வர் ரங்கசாமியை நேற்று சந்தித்து செயல்விளக்கம் காண்பித்தார்.இது குறித்து பள்ளி மாணவன் முகேஷ் நாராயணன் கூறியதாவது:இந்த புதிய வகை ஸ்பிரேயரில் சோலர் பேனல், டி.சி., மோட்டார், டேங்க், நாசில், பேட்டரி, சுவிட்ச் போர்டு, மொபைல் போன் சார்ஜர், புல் வெட்டி, மின்சார பல்புகளுடன் ஒருங்கிணைந்து உருவாக்கப் பட்டுள்ளது. இவை அனைத்தும் முற்றிலும் சூரிய ஒளியில் இயங்கும்.விவசாயிகளுக்கு தலைகவசம் போல் செயல்படும் சூரிய ஒளி தகட்டில் இருந்து கிடைக்கும் மின்சாரம் உற்பத்தியாகி பேட்ரியில் சேமிக்கப்படும்.டி.சி.,மோட்டார், மருந்து சேமிப்பு கலனில் இருந்து, மருந்து மிகவும் எளிதாக பயிர்கள் மேல் தெளிக்கும். இதனை மற்ற வகை ஸ்பிரேயர்கள் போல் வேகமாக இயக்க வேண்டிய அவசியம் இல்லை. வேகத்தை மாற்றியமைத்துகொள்ளலாம். தேவையற்ற சப்தமும் வராது. இதில் உள்ள லெட் விளக்குகளை வீடுகளுக்கு மின் விளக்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். 3 கிலோ எடை கொண்ட சூரிய ஒளி மருந்து தெளிப்பான் உருவாக்க 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே தேவைப்பட்டது' என்றார்.

திங்கள், 24 டிசம்பர், 2012

காரைக்காலில் பெரியார் சிலைக்கு மரியாதை

காரைக்காலில் பெரியார் சிலைக்கு அமைச்சர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை

பெரியாரின் நினைவுநாளையொட்டி காரைக்காலில் உள்ள அவரது சிலைக்கு புதுச்சேரி அமைச்சர், எம்.எல்.ஏ. மற்றும் ஆட்சியர் உள்ளிட்ட பிரதிநிதிகள் மாலை அணிவி்த்து மரியாதை செலுத்தினர்.
பெரியாரின் நினைவு நாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. காரைக்கால் மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள அவரது சிலைக்கு புதுச்சேரி அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. வேளாண் அமைச்சர் மு.சந்திரகாசு, மாவட்ட ஆட்சியர் ஜெ.அசோக்குமார், காரைக்கால் நகரமைப்புக் குழுமத் தலைவர் கே.கோவிந்தராஜ், விற்பனைக் குழுத் தலைவர் கே.ஆர்.உதயக்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
செல்வமுத்து

வியாழன், 20 டிசம்பர், 2012

செலவுக்குத் திண்டாடும் அமில வீச்சில் பாதிக்கப்பட்ட பொறியாளர்

மருத்துவ ச் செலவுக்கு த் திண்டாடும்   அமில வீச்சில் பாதிக்கப்பட்ட மாணவி

காரைக்கால்: காதலிக்க மறுத்ததற்காக முகத்தில் ஆசிட் வீசப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வினோதினி என்ற இளம் பெண், தற்போது மருத்துவ செலவிற்கு கூட பணமின்றி கஷ்டப்பட்டு வருகிறார். சென்னையில் சாப்ட்வேட் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தவர் காரைக்காலைச் சேர்ந்த வினோதினி (23). இவர் மீது ஒருதலையாக காதல் வயப்பட்ட இவரதுநண்பர் சுரேஷ் (24) என்பவர், தனது காதலை மறுத்த ஆத்திரத்தில், கடந்த நவம்பர் 14ம் தேதி, வினோதினி முகத்தில் ஆசிட் வீசினார். இதில் முகம், கழுத்து, கைகள் மற்றும் மார்பு பகுதி முழுவதும் கருகிய நிலையில், பார்வையை முற்றிலுமாக இழந்து தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் வினோதினி. பார்வை முற்றிலும் பறிபோன நிலையிலும், கண்ணில் அவருக்கு பல கட்ட பிளாஸ்டிக் சர்ஜரி ஆபரேஷன்கள் செய்யப்பட்டுள்ளன. அவரது கால் பகுதியிலிருந்து தசை எடுக்கப்பட்டு, கண்ணில் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, காரைக்காலில் பள்ளி ஒன்றில் காவலாளியாக பணிபுரியும் அவரது தந்தை, வினோதியின் மருத்துவ செலவிற்காக மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார். டாக்டர்கள் பல மாதங்கள் வினோதினி மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என கூறியிருப்பதால், அவர் நல்ல மனம் படைத்தவர்களிடமிருந்து உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.