இலக்குவனார் நினைவேந்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலக்குவனார் நினைவேந்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 11 செப்டம்பர், 2025

மைசூர், தேசிய மொழிபெயர்ப்பு ஊழிய அலுவலகத்தில் இலக்குவனார் நினைவேந்தல்

 




தி. பி.2056, ஆவணி 18/ 03.09.2025 முற்பகல் இந்நிகழ்வு அறிவியல் நூற்கள் கூர்ந்தாய்வர்களிடையே நிகழ்ந்தது.

இலக்குவனார் திருவள்ளுவன், பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் குறித்த நினைவுரையாற்றினார்.

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேரா.முனைவர் ப.மருதநாயகம், தமிழ்ப்போராளி இலக்குவனார் குறித்த புகழுரை ஆற்றினார். தே.மொ.ஊ. மூத்த வளமையர் முனைவர் வின்சுடன் நிறைவுரை யாற்றினார்.

இலக்குவனார் நினைவேந்தலை முன்னிட்டு, இலக்குவனார் இலக்கிய இணையம் சார்பில் தேசிய மொழிபெயர்ப்பு ஊழியத்திற்கு இலக்குவனார் திருவள்ளுவன் எழுதிய பின் வரும் நூல்கள் முதுநிலை வளமையர் முனைவர் வின்சுடனிடம் அளிக்கப்பெற்றன.

1. அன்றே சொன்ன அறிவியல் – சங்கக்காலம்

2. அறிவியல் சொற்கள் ஆயிரம்

3.அறிவியல் வகைமைச் சொற்கள் மூவாயிரம்

4-8. வெருளி அறிவியல் ஐந்து தொகுதிகள்

9. அறிவியல் கருவிகள் 1600

10. கட்டுரைமணிகள்

11. சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும்

12. கணிணியியலில் தமிழ்பயன்பாடும் கலைச்சொற்களும்

இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்திற்காகத் தனித்தமிழ்க்காவலர் இலக்குவனார், தொல்காப்பியமும் பாணினியமும் ஆகிய நூல்கள் முனைவர் சுரேசு குமாரிடமும்

  அவிநாசிலிங்கம் மனையியல் – உயர்கல்விக் கழகத்திற்கான நூல்கள் பொருளியல் புல முதன்மையர் பேரா.முனைவர் மணிமேகலை இடமும்

திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்திற்கான நூல்கள் முனைவர் சவகரிடமும் வழங்கப் பெற்றன. மேலும் பேரா.முனைவர் மருதநாயகம், முனைவர் பாலகுமாரன், மூத்த வளமையர் சுரேசு ஆகியோரிடமும் நூல்கள் அளிக்கப் பெற்றன.

பேரா.முனைவர் சாருலதா, முனைவர் செயந்தி , முனைவர் மூவேந்தன், முனைவர் சரவணன் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.




வெள்ளி, 2 செப்டம்பர், 2022

இலக்குவனார் நினைவேந்தல், 04.09.2022

 அகரமுதல



தமிழ்க்காப்புக் கழகம்

கி.இ.க.(ஒய்எம்சிஏ) பட்டிமன்றம்

இலக்குவனார் இலக்கிய இணையம்

தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் நினைவேந்தல்

இணைய உரையரங்கம்

Zoom Logo, symbol, meaning, history, PNG

ஆவணி 19, 2053 / 04.09.2022 ஞாயிறு காலை 10.00 மணி

கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09

தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்

   வரவேற்புரை:       முனைவர் ப.தாமரைக்கண்ணன்,

செயலர், ஒய்எம்சிஏ பட்டிமன்றம்

செல்வி ந. காருண்யா, இளங்கலை-தமிழ் மூன்றாம் ஆண்டு, தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரி பெரம்பலூர்

திரு வ. ஏ. மணிகண்டன், முனைவர் பட்ட ஆய்வாளர், சவகர்லால் நேரு பல்கலைக்கழகம், புது தில்லி.

திரு இ.சு.அசய்சுந்தர், முனைவர் பட்ட ஆய்வாளர், சவகர்லால் நேரு பல்கலைக்கழகம், புது தில்லி.

திரு  தமிழன் கார்த்திக்கு, முனைவர் பட்ட ஆய்வாளர், அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித் துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

திரு  பா.கமல், இளங்கலை தமிழ்  மூன்றாம் ஆண்டு, செந்தமிழ்க் கல்லூரி, நான்காம் தமிழ்ச் சங்கம், மதுரை.

திரு  ஆ. அருண்குமார், நிறை கலை ஆய்வாளர், தமிழ்த் துறை, மாநிலக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை.

திரு செ. சிவகணேசபாண்டி‌‌. வணிகவியல் இரண்டாம் ஆண்டு, அரசு கலை – அறிவியல். கல்லூரி, திருமங்கலம், (இ)கப்பலூர், மதுரை.

திரு  ச.வே.மருது பகவதி இளம் இலக்கியம் மூன்றாம் ஆண்டு, நான்காம் தமிழ்ச் சங்கம், செந்தமிழ்க் கல்லூரி, மதுரை.  

நிறைவுரை: தோழர் தியாகு

நன்றியுரை: திருவாட்டி தமிழாசிரியை (உ)ரூபி