பேராசியர் பொருளதிகாரம் முழுமைக்கும் உரை
இயற்றினார் எனபதற்குப் பல சான்றுகள் உள்ளன. இன்று மெய்ப்பாட்டியல், உவம
இயல், செய்யுள் இயல், மரபியல் ஆகிய நான்கிற்கு மட்டுமே அவரது உரை
கிடைக்கின்றது.
“அவை வெட்சியுள்ளும் ஒழிந்த திணையுள்ளும் காட்டப்பட்டன” (செய்.189)
“காரணம் களவியலுள் கூறினாம்” (மெய்.18)
“அகத்திணை இயலுள் கூறினாம்” (மெய்.19)
“முன்னர் அகத்திணை இயலுள் கூறி வந்தோம்” (செய்.1)
“முன்னர் அகத்திணை இயலுள் கூறினாம்” (செய்.30)
என்று பேராசிரியரே கூறுவதால் பொருளதிகாரம்
முழுமைக்கும் உரை செய்தார் என்று அறியலாம். மேலும் நச்சினார்க்கினியர்
அகத்திணை இயலில் (46) ‘பேராசிரியரும் இப்பாட்டில் மீன்எறி தூண்டில என்றதனை
ஏனை உவமம் என்றார்’ என்று குறிப்பிடுகின்றார்.
-ஆராய்ச்சியாளர் மு.வை.அரவிந்தன்: உரையாசிரியர்கள் : பக்கம்.201-202
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக