இறையனார் களவியல் உரை சீரிய உரைநடை இலக்கியம்
நூலின் பொருளை வினாவிடைகளால் விளக்கும்
தருக்க நூல்மரபும் இயற்கைக் காட்சிகளையும் ஆடவர் மகளிராகிய இருபாலாரின்
உள்ளத்துணர்வுகளையும் சொல்லோவியமாகப் புனைந்துரைக்கும் கற்பனைத் திறமும்
பாடல்களின் பொருள்களை நயம்பெற விளக்கும் இலக்கியச் சுவைநலமும் உலக
வாழ்க்கையின் நுட்பங்களைச் சிறந்த உவமைகளாலும் பழமொழிகளாலும்
புலப்படுத்தும் நுட்பமும் தமிழ்மொழியின் இலக்கணங்களைத் தெளிய
வைக்கும்திட்பமும் ஒருங்கே பெற்றுத் திகழும் சீரிய உரைநடை இலக்கியம்
இறையனார் களவியலுரையாகும்.
-தமிழறிஞர் க.வெள்ளைவாரணனார்: இலக்கணச் சிந்தனைகள்: பக்கம்.142
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக