வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

தேவதானப்பட்டியில் இலவசக் கண் மருத்துவ முகாம்


91 eyecamp01

தேவதானப்பட்டியில்

இலவசக் கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.

தேவதானப்பட்டியில் சாவெடு அறக்கட்டளை (SAWED Trust), தேனி அரவிந்து கண்மருத்துவ மனை இணைந்து இலவசக் கண் மருத்துவ முகாம் நடத்தினார்கள். இந்தக் கண்மருத்துவ முகாமில் சாவெடு அறக்கட்டளை நிறுவனர் எம்.எசு.அபுதாகிர், களப்பணியாளர்கள் ஞானசேகர், பிச்சை முத்து, அரவிந்து கண் மருத்துவமனையைச் சேர்ந்த செயராஜ,இராதா மணவாளன் ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். இம்முகாமில் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண்புரை, கண்ணில் நீர் வடிதல் முதலான நோய்களுக்குப் பண்டுவம் அளிக்கப்பட்டது. இம்முகாமில் ஏறத்தாழ 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இம்முகாமில் சில்வார்பட்டி, மஞ்சளாறு அணை, சாத்தாகோவில்பட்டி, இராசிமலையைச்சேர்ந்த ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.
eyecamp2
vaikaianeesu-name



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக