திருநெல்வேலி மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக்கல்லூரியில் மாசி 12,13,14 தி.பி 2045 (பிப் 24,25,26.2014) ஆகிய 3 நாளும் தமிழ்ப் போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தமிழ்ப் பணிகள் குறித்த முப்பெரு விழா நடைபெற்றது.
முதல் நாள் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன.
இரண்டாம் நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் கல்விச்சங்கப் பொருளாளர் திருமிகு தளவாய் தீ.இராமசாமி தலைமையில் நடைபெற்றது.
கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் ஆ.செல்லப்பா வரவேற்புரையாற்றினார்.
கல்லூரிச் செயலர் திருமிகு மு.செல்லையா தொடக்கவுரையாற்றினார்.
முனைவர் நெல்லை ந.சொக்கலிங்கம் மையக்கருதுரையாற்றினார்.
பேரா.படிக்கராமு சிறப்புரையாற்றினார்.
பொருளாளர் திருமிகு தளவாய் தீ.இராமசாமி வெளியிட்ட கருத்தரங்க மின்னணு நூலைப் பெற்றுக் கொண்ட பொறி.இ.திருவேலன்,
கல்லூரிச் செயலர் திருமிகு மு.செல்லையா வெளியிட்ட கருத்தரங்க நூலைப் பெற்றுக் கொண்ட திரு இலக்குவனார் திருவள்ளுவன்,
ஆட்சிக்குழு உறுப்பினர் திருமிகு ப.தி.சிதம்பரம்,
முதல்வர் ப.சின்னதம்பி, முனைவர் இ.மதியழகி, முனைவர் இரா ஞானபுட்பம்
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
ஒருங்கிணைப்பாளர் முனைவர் கோ.சங்கரவீரபத்திரன் தொகுப்புரையாற்றினார்.
தொடர்ந்து கருத்தரங்க அமர்வுகள் நடை பெற்றன.
நிறைவு நாளில் முற்பகல் திரு இலக்குவனார் திருவள்ளுவன் தலைமையில் பேரா.அறிவரசன்,
முனைவர் இ.மதியழகி தலைமையில் பேரா. முனைவர் இரா.ஞானபுட்பம் ஆகியோர் உரையாற்றினர்,
பிற்பகல் திரு . இலக்குவனார் திருவள்ளுவன் உரைக்குப் பின்பு மாணவர்களின்
பகிர்வுரை சிறப்பாக நடைபெற்றது.
மாலையில் போட்டியாளர்களுக்கு 15 முதன்மைப் பரிசுகளும் 75 ஊக்கப் பரிசுகளும் இலக்குவனார் இலக்கிய இணையம் சார்பில் வழங்கப் பெற்றன.
பரிசுகளை மீநாயகர்(கேனல்) (ஓய்வு) சானகிராமன், முதல்வர் முனைவர் ப.சின்னதம்பி, அகரமுதல இணைய இதழ் ஆசிரியர் இலக்குவனார் திருவள்ளுவன் ஆகியோர் இப்பரிசுகளை வழங்கினர்.
இதன் தொடர்பில் வெ.ப.சு. தமிழியல் ஆய்வு மையத்தில் இலக்கியப் போட்டிகள், பன்னாட்டுக் கருத்தரங்கம், நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக