திங்கள், 23 ஏப்ரல், 2012

ஒளிப்படப் பயணம் தொடரும்

        சொல்கிறார்கள்                      
              என் கேமரா பயணம் தொடரும்!'



புகைப்பட நிபுணர் சுகுமார்: எனக்கு சொந்த ஊர் தஞ்சை. படித்ததெல்லாம் சென்னையில். பி.காம்., முடித்துவிட்டு வங்கித் தேர்வு எழுதி, முடிவிற்காக காத்துக் கொண்டிருந்தேன். அப்போது, எனக்குத் தெரிந்த நபர் ஒருவரிடமிருந்து, "சீகுல் கேமரா' ஒன்றை விலைக்கு வாங்கினேன். அந்தச் சமயத்தில் வங்கித் தேர்வு முடிவு வந்தது. அதில் தேர்ச்சி பெற்று வேலைக்குச் சேர்ந்தாலும், என் ஆர்வம் புகைப்படம் எடுப்பதிலேயே இருந்தது. 1978ம் ஆண்டு துவங்கிய என் கேமரா பயணம், இப்போது வரை ஓய்வில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.மற்ற துறைகள் போல், விளையாட்டுத் துறையில் புகைப்படம் எடுப்பது சுலபமான காரியம் அல்ல. ஒரு மைக்ரோ நொடியில் ஒரு முக்கிய நிகழ்வு மறைந்துவிடும். கிரிக்கெட் போட்டியில், ஒரு விளையாட்டு வீரர், "அவுட்' ஆவதை அந்த நொடி மட்டும் தான் எடுக்க முடியும். மீண்டும் அந்த ஷாட் கிடைக்காது. ஆனால், முழு கவனத்துடன், அந்தக் கணத்திற்காக காத்திருந்தால், துல்லியமாக படம் எடுக்க முடியும்.இதுவரை, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள், 20 - 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள், தென் ஆப்ரிக்காவில் நடந்த, உலகக் கோப்பை கால்பந்து போட்டி, தோஹா ஆசிய விளையாட்டுப் போட்டிகள், டில்லி காமன்வெல்த் போட்டிகள், சீனாவின் ஒலிம்பிக் போட்டிகள் என, அனைத்திலும், என் கேமரா கைவண்ணம் பதிவாகியிருக்கிறது.இளம் வயதினருக்கு, விளையாட்டின் மேல் ஊக்கம் வர வேண்டும் என்பதற்காக, நான் எடுத்த புகைப்படங்களைக் கொண்டு சென்னையிலும், புதுச்சேரியிலும் புகைப்படக் கண்காட்சி நடத்தியிருக்கிறேன்.ஒவ்வொரு முறையும், என் சொந்த செலவிலேயே, மலேசியா, தோஹா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று புகைப்படும் எடுக்கிறேன்.லண்டன் ஒலிம்பிக் போட்டிகளை புகைப் படும் எடுக்க, "ஸ்பான்சர்' கிடைத்தால் நன்றாக இருக்கும்.ஏழை மாணவர்களுக்கு, இலவசமாக புகைப்படப் பயிற்சியும் அளிக்கிறேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக