சொரணை
உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்கள் தம் கவிதைகளால் உலகத் தமிழர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவராவார். இவர் கவிதைகளில் உள்ள வேகம் சற்றும் குறையாமல் கதையும் சொல்லும் திறன் கொண்டவராவார். இவர் எழுதிய கதைகளில் ஒன்று இன்றைய சிந்தனைக்காக...
நெருஞ்சிப்புல் வருகிறவர் போகிறவர் கால்களையெல்லாம் தன் முள்ளினால் குத்திப் புண்ணாக்கிக் கொண்டிருந்தது.
“மனிதர்களின் காலைக் குத்தி அவர்களுக்குச் சினத்தை உண்டாக்குகிறாயே – பார்... பார்... அவர்கள் என்றோ ஒருநாள் வேரோடு உன்னைப் பிடுங்கி எங்காவது பயிர்களுக்கு எருவாய்ப் புதைத்து விடப் போகிறார்கள் என்றது அறுகம்புல்.
நெருஞ்சி சூடானது.
“என்னைக் காலால் மிதித்து வதைக்கிறவர்களையெல்லாம் நான் தாங்கி்க் கொள்ளவேண்டுமாக்கும்..“
நெருஞ்சிப்புல் சொன்னது..
“வதைபடுவதை விட
புதைபடுவது மேல்“
முனைவர்.இரா.குணசீலன்
தமிழ் தாயகத்திற்காக
S. முரளி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக