உலகிற்கு தமிழரின் கொடை : உலகின் முதல் இராக்கட் ஏவுகணை தொழில் நுட்பம் !
உங்களால் நம்ப முடியவில்லை, இல்லையா ? ஆம் நூற்றுக்கு நூறு உண்மையே !
தூத்துக்குடியில் ஆங்கிலேய படைத் தலைவர் கர்னல் ஆக்னு (Col.Agnew ) தனது தலைமைக்கு எழுதிய கடிதத்தில் தூத்துக்குடி தமிழராகிய ஜாதி தலைவர் டான் கேப்ரியல் என்ற மீனவகுல தலைவர், மருது சகோதரர்களின் வேண்டுகோளின் படி ராக்கட் ஏவுகணைத் தயாரித்து சோதனை செய்தார் என்றும் வெடிபொருள் , போர்க்கருவிகளை ஊமைத்துரைக்கு அளித்தார் என்றும் அவரைக் கைது செய்து தண்டிக்க வேண்டும் என்று எழுதினர் !
குமுதம் இதழில் மணிகண்டன் 'தூத்துக்குடி ஜாதித் தலைவர் டான் கேபிரியல் வாஸ் கோமெசு ' பற்றி எழுதிய கட்டுரையில் காணப்பட்ட குறிப்பு :
நன்றி : குமுதம் வார இதழ்
இன்றும் இக்கடிதம் {கர்னல் ஆக்னு (Col.Agnew )} சென்னை எழும்பூரில் உள்ள அரசு ஆவணக் காப்பகத்தில் உள்ளது !
இந்திய வரலாற்றாளர்களால் (Indian Science Congress ) புறந்தள்ளப்பட்ட வீர மங்கை வேலு நாச்சியார் அவரது தளபதிகள் மருது சகோதரர்களின் வரலாற்றைக் கூர்ந்து ஆராய்ந்து நோக்கின் இந்த வீரம் விளைந்த மண்ணின் சாதனைகள் வெளிப்படும் !
வீரமங்கை வேலுநாச்சியார்
ஜான்சி ராணிக்கு முன்னர் வெள்ளையரை எதிர்த்து நின்று வெற்றி கொண்ட மறவர்குல வீர மங்கை வேலு நாச்சியார் அவரது தளபதிகள் மருது சகோதரர்களின் விடுதலைப் போரின் வரலாறு இந்திய நடுவண் அரசால் மறைக்கப்பட்ட அவலத்தைப் எடுத்த தலைப்பிற்குள் செல்வதற்கு முன்னால் பதிவு செய்கிறேன் !
மாகடல் உள்ளிட்ட நிலத் தொன்மை ஆய்வாளர் ஒரிசா சிவ.பால சுப்பிர மணியன் இது போன்ற தகவல் களஞ்சியமாகவும் விளங்குகிறார் ! அவரிடம் அளவளாவிய போது இத்தகவலை வெளியிட்டு என்னை சென்னைப் பல்கலைக் கழக நூலகத்தில் இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத் தலைவர் முனைவர் சிவதாணு பிள்ளை அவர்களின் :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக