செவ்வாய், 20 செப்டம்பர், 2011

Save the life of three- Vaiko request to soniya: மூவரின் உயிரைக் காப்பாற்ற சோனியா நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ

மத்தியில் ஆளும் கட்சியின்தலைவர் என்ற முறையிலும் கொல்லப்பட்டவர் அவரது கணவர் என்பதால் கட்சி நடவடிக்கைகளால் அப்பாவிகள் பலியாவதாலும் அவரிடம் வைக்கோ அவர்கள் வேண்டுதல் விடுத்தது  சரியே! இதுவரை செய்த  கரிசுகளுக்கு (பாவங்களுக்கு)க் கழுவாயாக (பரிகாரமாக) மூவர் விடுதலைக்கு  வழி விட்டால் அவரது மதிப்புதான் உயரும். இல்லையேல் எப்படியும் சட்டப்படி விடுதலை  பெறுவர். ஆனால், அவரது கட்சி நாடுகடத்தப்படும் நிலைக்கு ஆளாகித் தமிழ் நாட்டில் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக்காப்போம்!இனத்தைக் காப்போம்! /




மூவரின் உயிரை காப்பாற்ற சோனியா நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ

First Published : 20 Sep 2011 04:04:58 AM IST

வேலூர், செப். 19: சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஒட்டுமொத்த தமிழகத்தின் வேண்டுகோளாக ஏற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், மத்திய அரசும் நடவடிக்கை மேற்கொண்டு மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.  வேலூர் மத்தியச் சிறையில் உள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரை திங்கள்கிழமை சந்தித்து திரும்பிய வைகோ, நிருபர்களிடம் கூறியது:  தூக்குத் தண்டனை கைதிகள் மூவரின் உயிரை காப்பாற்ற முதல்வர் வரலாறு படைக்கும் தீர்மானத்தை சட்டப் பேரவையில் நிறைவேற்றியுள்ளார். 8 வாரத்துக்கு தூக்குத் தண்டனைக்கு தடை உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ளது.  சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஒட்டுமொத்த தமிழகத்தின் வேண்டுகோளாக ஏற்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும், மத்திய அரசும் இவர்களின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்திருந்தாலும் கூட, மீண்டும் மனுவை அவர் மறுபரிசீலனை செய்வதில் சட்டத்தில் எவ்விதத் தடையும் இல்லை. என்றார் வைகோ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக