வெள்ளி, 23 செப்டம்பர், 2011

ஐ.நாவுக்கு உள்ளே பாலத்தினியர்களின் விடுதலை அறிவிப்பு – ஐ.நாவுக்கு வெளியே ஈழத்தமிழர்களின் பொங்குதமிழ் அறிவிப்பு

ஐ.நாவுக்கு உள்ளே பாலஸ்தினியர்களின் சுதந்திர பிரகடனம் – ஐ.நாவுக்கு வெளியே ஈழத்தமிழர்களின் பொங்குதமிழ் பிரகடனம்

நாதம் ஊடகசேவை
பதிவு செய்த நாள் : 23/09/2011


நியூ யோர்க்கில் நடைபெற்றுவரும் ஐ.நா.வின் வருடாந்திர கூட்டத்தில் இன்றைய நாள் (செப் 23)  முக்கிய வரலாற்று நாளாக அமையுமென நம்பப்படுகின்றது.
பாலஸ்தீன தலைவர் முகமெட் அப்பாஸ் அவர்கள் பாலஸ்தீன தனிநாட்டு பிரகடனத்தை ஐ.நா பொதுச்சபையில் உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்த இருக்கின்றார்.
பாலஸ்தீனியர்களின் நீணட சுதந்திர போராட்ட வரலாற்றில் முக்கியமான நாளாக இன்று வெள்ளிக்கிழமை அமையவிருக்கின்ற நிலையில், சுதந்திர தமிழீழத்துக்கான தங்களது விடுதலை அவாவை, பொங்குதமிழ் பிரகடனமாக ஈழத் தமிழர்களும் ஐ.நா.வுக்கு முன்னால் வெளிப்படுத்தவுள்ளனர்.
ஐ.நா.வின் வருடாந்திர கூட்டத்தில் உரை நிகழ்த்தவுள்ள சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவினை அம்பலப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ள இந்த பொங்குதமிழ் மக்கள் எழுச்சி நிகழ்வினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒழுங்கு செய்துள்ளது.
தமிழீழ தேசிய அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரன் அவர்கள்  இந்நிகழ்வில் பங்கெடுக்கின்றார்.
இதேவேளை, இந்நிகழ்வில் பங்கெடுக்க கனடிய அமெரிக்க தமிழர்கள் அணிதிரண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக