சனி, 18 செப்டம்பர், 2010

வெவ்வேறு மொழியில்உள்ள பெயர்களை ஒப்பிட்டு ஒற்றமை காண்பது தவறு. கிருட்டிணன் என்றால் கருப்பன் என்றுதான் பொருள். தமிழில் கண்ணன் என்று சொல்வதே சரி. எனவே, பெயர் ஒற்றுமை பொருந்தாது. இருவரும் தாய்மாரின் கணவன்மாருக்கப் பிறக்கவில்லை என்று சொன்னால்தான் உதைக்க வருவார்கள். இடையர் குலத்தைச் சேர்ந்த இருவரும் ஆடுமாடுகளை மேய்ப்பதுபோல் உலக மக்களை மேய்த்துப் பேணினார்கள் என்று நல்ல வகையில் சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள். கிறித்து மனிதர்க்காக வாழ்ந்து தெய்வ நிலையை எட்டியவர். கண்ணன் பல பெண்களுடன் உறவு கொண்டு கற்பு நெறி தவறிய கற்பனைப் பாத்திரம் என்று சொன்னால் பற்றாளர்கள் சினமடைவார்கள். கடவுளாகக் கற்பிக்கப்படும் கண்ணன் குறுக்கு வழிகளில்தான் தன்னை நம்பியவர்களுக்கு அவர்கள் பக்கம் நீதி இல்லை யென்றாலும் உதவி வெற்றி தேடித்தந்தான் என்று சொன்னாலும் உண்மையை ஆராயாமல் கண்ணை முடிக்கொண்டு அடிக்க வருவார்கள். நடுநிலையுடன் ஒப்பிட முடியாத பொழுது எதற்கு இந்த வீ்ண் வேலை. நான் ஒப்பீ்ட்டில் இறங்க விரும்பவில்லை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


                                     சில

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக