திங்கள், 13 செப்டம்பர், 2010

தங்கபாலுதான் நீக்கப்படுவார்': ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்


ராமேசுவரம், செப். 12: எனக்கு எதிராகச் செயல்பட நினைத்தால் தங்கபாலுதான் கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.  ராமேசுவரத்தில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது:தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு, என் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார். அவருக்கு அந்த அதிகாரம் இல்லை. எனக்கு எதிராகச் செயல்பட தங்கபாலு நினைத்தால், காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர்தான் நீக்கப்படுவார்.  தங்கபாலுவின் செயல்பாடுகள்தான் திருப்திகரமாக இல்லை. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அவர் பணியாற்றவில்லை.  வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி தொடருமானால், காங்கிரஸ் கட்சிக்கு 110 இடங்களை ஒதுக்க வேண்டும்.   1980-ல் காங்கிரஸ் கட்சித் தலைவியாக இந்திரா காந்தி இருந்தபோது, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியுடன் காங்கிரஸ் கட்சி 110 இடங்களில் போட்டியிட்டது. அதேபோல், வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு திமுக 110 இடங்களை ஒதுக்க வேண்டும். இதில் ஓரிரு இடங்களை வேண்டுமானால் திமுக குறைத்துக் கொள்ளலாம்.   ராமேசுவரம் புனித தலத்திற்கு மத்திய அரசின் சுற்றுலா மேம்பாட்டு நிதியில் இருந்து | 10.45 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை தமிழக அரசு மட்டும்தான் ஒதுக்கியது எனக் கூறுவது தவறு. ராமேசுவரத்திற்கு மேலும் | 11 கோடியை மத்திய அரசு ஒதுக்கவுள்ளது.   தென்னை விவசாயிகள் நலச் சங்கத்தின் உறுப்பினராக 30 பேரை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் ஒருவர் கூட காங்கிரஸ் கட்சியினர் இல்லை. எனவே, அதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 பேரை உறுப்பினராகச் சேர்க்க வேண்டும்.   தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தும் சம்பவம் குறித்து இந்திய வெளியுறவுத் துறை செயலர் நிருபமா ராவ் இலங்கை அரசிடம் பேச்சு நடத்தியுள்ளார். இதற்கு நிரந்தரத் தீர்வுகாண மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி விரைவில் இலங்கைக்கு செல்லவுள்ளார் என்றார் அவர்.
கருத்துக்கள்

காங்கிரசு கோவனை விட்டு ஆழம் பார்க்க எண்ணினால் தன் தலையில் தானே நெருப்பை அள்ளிக் கொட்டிக் கொள்வதாகத்தான் பொருள். கோவன் மக்கள் செல்வாக்கை இழந்து தோற்றதை மறைக்கும் வகையில் வீராவேசமாகப் பேசித் தொண்டரைத் திரட்டித் தே.தி.மு.க.வில் சேருவதற்காக இவ்வாறு பேசினால் உடனே வழியனுப்பி வைப்பது நன்று. காங்.கிற்கு முதல்வர் பதவியும் துணை முதல்வர் பதவியும் வேண்டும் என பேசியது தினமணியில் இடம் பெறவில்லை. எனினும் கோவனைக் காங்கிரசு வளர்த்தால் தமிழ்நாட்டிற்கு நல்லது. அவர் மூலமாவது காங். விரைவில் அழிவைத் தேடும் அல்லவா? 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/13/2010 10:06:00 AM
hehehehehe People of Tamilandu already rejected the congress party in Tamilnadu. It is laughable that Ilankovan said in his statement. Also , Ilankovan wants 110 seats in TN. If DMK allocate 110 seats for congrss party, DMK would lose 110 seas and other parites such as Seman, Vijekanth or jeyaaitha will win the 110 seats in Tamilandu. Ilankovan become a joker like Subramaiyaswai in Tamilnadu.
By Vadivel
9/13/2010 9:58:00 AM
This fellow is MENTAL. He needs psychotherapy. Could any one from TN take him to Chennai mental hospital? Periyaar maanaththai yeenda vaangura !
By Thangabalu
9/13/2010 8:15:00 AM
சொந்தத் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டு,வெற்றி பெற இயலாத உதவாக்கரை இந்த முன்னாள் அமைச்சர் இளங்கோ. கூட இருந்தே குழி பறிக்கும் நெட்டை நரி! 110 தொகுதிகள் கேட்க தராதரம் வேண்டாமா? காங்கிரஸும் வெற்றிபெறாது, "அ(ராஜக)(இறுமாப்பு அம்மா தி.மு.க." வுக்கு வழி வகுத்துத்தரும் சாணக்கியர். முதலில் கட்சிக்கு தொண்டாற்ற கற்றுக்கொள் இளங்கோ! உள்ள அமைப்பையும் உடைத்து எறியாதே!
By எல்.கே.மதி
9/13/2010 7:56:00 AM
Useless fool is this guy.
By T Gene
9/13/2010 6:24:00 AM
thedipaar.com
By ki
9/13/2010 4:00:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக