செவ்வாய், 7 டிசம்பர், 2010

dinamani editorial: naveena neerokkal: தலையங்கம்: நவீன "நீரோ'க்கள்!

தலைப்பு நவீனக் கொளளைக்காரர்கள் என்று இருந்தால் பொருத்தமாக இருக்கும். என்ன செய்யலாம் இதற்கு? ஆடம்பரத் திருமணங்களுக்கு வரி விதித்தால் அதையும் அடுத்தவரைக் கொண்டுகட்டச் செய்வார்கள் அரசியல்வாதிகள்.  தண்டனைச் சட்டத்தில் ஆடம்பரத் திருமணங்களுக்குத்தண்டனை வழங்கும் பிரிவைச் சேர்த்தால்தான் பயன் உண்டு. அவரவர் பையில் பணம், கடையில் உணவு என உணவு வழங்காமல்கூடக் கலைஞர் எளிமையான திருமணம் நடத்தியுள்ளார். இருப்பினும், மிகுதியான எண்ணிக்கையில் கலந்து கொள்ளச் செய்வதோ சுவையான உணவுதருவதோ தவறல்ல. அதிகாரததிமிரையோ செல்வச் செருக்கையோ   காட்டும்    வகையில் திருமணங்கள் அமையக்கூடாது. பாராட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
தலையங்கம்: நவீன "நீரோ'க்கள்!

கட்சிகள் எதுவாக இருந்தாலும், நமது அரசியல் தலைவர்களின் மனப்போக்கில் பெரிய மாற்றம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எல்லோருமே ஒன்றுபோல சராசரி இந்தியனின், சாமானிய மக்களின் நிலை அறியாதவர்களாக, தங்களது பதவியின் பகட்டை வெளிக்காட்டுவதில் மோகமுடையவர்களாக இருக்கிறார்களே தவிர, பொதுவாழ்க்கையில் தான் ஒரு முன்னுதாரணமாக இருந்து காட்டவேண்டும் என்கிற எண்ணம் கூட இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் வேதனையைத் தருகிறது.கட்சி மாநாடுகளை இவர்கள் பலகோடி ரூபாய்கள் செலவழித்து பிரம்மாண்டமாக நடத்திக்காட்டுவது,  தங்களது அரசியல் செல்வாக்கை வெளிப்படுத்த என்று சகித்துக் கொள்ளலாம். ஆனால், தங்களது வாரிசுகளின் திருமணத்தைப் பிரம்மாண்டமாக நடத்திக் காட்டி, தங்களது செல்வத்தையும் செல்வாக்கையும் வெளிச்சம்போட நமது அரசியல் தலைவர்கள் ஏன் ஆசைப்படுகிறார்கள் என்பதுதான் புதிராக இருக்கிறது.சமீபத்தில், முகம் சுளிக்கவைத்த படாடோப அரசியல் திருமணம் நாகபுரியில் நடந்த பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைவர் நிதின் கட்கரியின் மகனுடையது. விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானம் திருமண வரவேற்புக்காக அலங்கரிக்கப்பட்டிருந்ததைப் பார்த்தால், ஏதோ கோடீஸ்வரர் வீட்டுத் திருமணம் போலிருக்கிறது என்கிற பிரமிப்பை ஏற்படுத்தியது. வண்ண விளக்குகளால் அந்தப் பகுதி முழுவதும் சினிமாவில் வரும் கனவுக் காட்சிபோல ஜோடிக்கப்பட்டிருந்ததே, இதெல்லாம் எங்கே தெரியுமா? மகாராஷ்டிர மாநிலத்தில் மிகவும் பின்தங்கிய பகுதி என்று அறியப்படும் விதர்பாவில். அந்த மாநிலத்திலேயே மிக மோசமான மின்வெட்டு நிலவுவது இந்தப் பகுதியில்தான். அங்கேதான் இத்தனை ஆர்ப்பாட்டமாக இப்படியொரு திருமண வரவேற்பு நடந்து முடிந்திருக்கிறது.ஒரு மாதம் முன்பு, மதுரையில் நடந்த மத்திய ரசாயனம், உரத்துறை அமைச்சரும் தமிழக முதல்வரின் மூத்த மகனுமான மு.க.அழகிரி வீட்டுத் திருமணம் எந்த விதத்தில் குறைந்தது? மதுரையில் முதல்வர் குடும்பத்துத் திருமணத்தைப் பலரும் 1995-ல் நடந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணத்துடன் ஒப்பிட்டுப் பெருமூச்சு விட்டதில் தவறில்லை. அந்தத் திருமணத்தில் ஜெயலலிதாவும் தோழி சசிகலாவும் சர்வாலங்காரபூஷிதைகளாக வைரத்தால் அலங்கரித்துக்கொண்டு வலம்வந்தனர். முதல்வர் குடும்பத்துத் திருமணத்தில், குடும்பம் ரொம்பப் பெரிது என்பதால், பலர் வைரமும், வைடூரியமும் பளபளக்க வலம் வந்தனர். அதுவும் முகம் சுளிக்க வைத்தது. இதுவும் முகம் சுளிக்க வைத்தது.சில மாதங்களுக்கு முன்னர் மும்பையில் மத்திய விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் பிரபுல் படேல் வீட்டுத் திருமணமும் இதேபோலத்தான், திரைப்படத் திருமணங்களும் கோடீஸ்வரர், தொழிலதிபர்கள் வீட்டுத் திருமணமும் தோற்றுவிடும்படியாக, பிரம்மாண்டமாக நடந்தேறியது. அதற்காக சேலத்தில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வீட்டுத் திருமணம்போல எல்லாப் பத்திரிகைகளும் பக்கம் பக்கமாக சிறப்பு மலர்களை வெளியிட்டு அந்தப் படாடோபத்தை வாழ்த்தி வரவேற்று, அதில் தாங்களும் வருமானம் ஈட்டின.கடந்த 20 ஆண்டுகளில் நடந்த அரசியல் திருமணங்களையும், அதற்கு முன்னால் நடந்த அரசியல் திருமணங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் வேறுபாடு தெரிகிறதே. பண்டித நேருவின் குடும்பத்தையே எடுத்துக் கொள்வோம். பணத்துக்குப் பஞ்சமா, பதவி அதிகாரத்துக்குப் பஞ்சமா, தொண்டர் கூட்டத்துக்குப் பஞ்சமா? மார்ச் 26, 1942-ல் அலாகாபாத் ஆனந்தபவனில் நடந்த பெரோஸ்காந்தி - இந்திராவின் திருமணம் ஆனாலும், பிப்ரவரி 25, 1968-ல் புதுதில்லி சப்தர்ஜங் சாலையில் உள்ள வீட்டில் நடந்த ராஜீவ்காந்தி-சோனியா திருமணம் ஆனாலும் எளிமையாக மிகவும் நெருங்கிய நண்பர்களை அழைத்துத்தான் நடத்தப்பட்டன. 1974-ம் ஆண்டு செப்டம்பர் 23 அன்று சஞ்சய்காந்தி-மேனகாவை மணந்தது மட்டுமென்ன? பண்டித ஜவாஹர்லால் நேரு சிறையில் இருக்கும்போது ராட்டையில் நூற்ற நூலிலிருந்து நெய்யப்பட்ட கதர் சேலையைத்தான் மேனகாவுக்கு அணிவித்து மணப்பெண்ணாகச் சிங்காரித்தார் அன்றைய பிரதமராக இருந்த இந்திராகாந்தி.சர்வ வல்லமை படைத்த பிரதமராக இந்திராகாந்தி இருந்த நேரம் அது. அவர் ஒரு திருமண வரவேற்பு நடத்தியிருந்தால், உலகத் தலைவர்கள் அனைவரும் முண்டியடித்துக்கொண்டு வந்திருப்பார்கள். ஆனால், எளிமையாகத் திருமணம் நடத்தியது மட்டுமல்ல, இப்படிச் செய்வதன் மூலம் திருமணங்களில் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்க வேண்டும் என்கிற செய்தியையும் தேசத்துக்கு மறைமுகமாக விடுத்தார் இந்திரா காந்தி அம்மையார்.அதெல்லாம் ஏன்? தமிழக முதல்வராக இருந்த அறிஞர் அண்ணா நினைத்திருந்தால், தனது வளர்ப்பு மகனுக்குத் தான் முதல்வராக இருக்கும்போது திருமணம் செய்து பார்த்திருக்க முடியாதா? தமக்கு உடல்நலம் சரியில்லை என்றபோதும் கூட, பதவியைப் பயன்படுத்தி பிரம்மாண்டமாகத் திருமணம் நடத்துவதை அவர் விரும்பவில்லையே...ஒருவேளை கஞ்சிக்கு வழியில்லாதவர்கள் எத்தனை கோடிப்பேர் நமது இந்தியாவில்? பெண்களைப் பெற்றுவிட்டு அவர்களைக் கரையேற்ற வழியில்லாமல் தவிக்கும் பெற்றோர் எத்தனை எத்தனை பேர்? திருமணங்களை ஆடம்பரமாக நடத்தி, வீண் விரயம் செய்யக்கூடாது என்று வழிகாட்ட வேண்டியவர்கள், எளிமையாக வாழ்ந்துகாட்ட வேண்டியவர்கள் தங்களது செல்வத்தையும் செல்வாக்கையும் பதவியையும் பகட்டையும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் போட்டி போடுகிறார்களே இந்த முட்டாள் தனத்தை நாம் என்னவென்று சொல்வது?இன்றைய இந்தியாவில், இவர்களெல்லாம்தான் சாமானியர்கள். இவர்களெல்லாம்தான் மக்கள் பிரதிநிதிகள்... இவர்களெல்லாம்தான் பொது வாழ்க்கைக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்...காந்தி மகான் பிறந்த தேசமா இது? ஹே....ராம்...!
கருத்துகள்

கட்டுரை நன்று நன்று மிக நன்று திருமணங்கள் ஒர் உறைகல் நன்றி தினமணி
By UBAIDULLAH
12/7/2010 3:15:00 PM
excellant
By ramamurthi
12/7/2010 2:53:00 PM
காந்தியின் கொள்கைகள் காங்கிரஸ் பாதி கொன்றது மீதியை மற்ற அரசியல்வாதிகள் முடிந்த உதவி செய்து சமாதிகட்டிவிட்டனர். பேசி,படித்து, கேட்டு விரக்தியுடன் எத்தனை நாள் வாழ்வது. இந்திய மக்கள், எத்தனை அரசியல் அவலங்களை மறப்பது? இதற்கு ஒரே தீர்வு, மரணதண்டனை மற்றும் கட்டுபாடான ஜனநாயகம். காந்தியின் அகிம்சை கொள்கை இகிம்சையாக தற்போது உள்ளது. மாற்றம் வேண்டும், இல்லையெனில் மக்கள் ஆயிதம் ஏந்தும் நிலை வரும், எச்சரிக்கை.
By ravi
12/7/2010 2:45:00 PM
People should live a simple life.Politicians are setting a very bad example including valarpu magan and valartha mahan .India is great and indians are poor.
By R.Krishnamurthy
12/7/2010 2:39:00 PM
நல்ல தலையங்கம். ஆனால் '...மார்ச் 26, 1942-ல் அலாகாபாத் ஆனந்தபவனில் நடந்த பெரோஸ் காந்தி - இந்திராவின் திருமணம் ஆனாலும்...' என்று குறிப்பிட்டு எழுதி, நீங்களும் 'கந்தி' அல்லது 'கந்தே' என்ற பார்சி பெயரைத் தவறாகக் காந்தி என்றே எழுதிவிட்டீரே ! அன்புள்ள, மா.கோ.
By M.Gobal
12/7/2010 2:30:00 PM
என்று திருந்தும் இந்தியா.
By ராஜ்
12/7/2010 2:21:00 PM
ரியலி வொந்டெர்புல் அர்டிச்லே இன் தி கரண்ட் சினரியோ.வி ஷௌல்து ஷோ ஒஉர் பெஒப்லே பவர் இன் தி போர்த்கமிங் எலேச்டின்.ரியலி தேங்க்ஸ் .கீப் இட் உப.
By ராமசந்திரன்.s
12/7/2010 12:43:00 PM
நம்ம நாடு ஆங்கிலேயர்களிடம் விடுதலை பெற்று விட்டது. அதனை அரசியல்வாதிகளிடம் அடகு வைத்து விட்டோம். நம் குடும்பங்கள் வறுமையில் வாட, அவர்களின் குடும்பம் செழிக்க பாடுபடுகின்றோம். வாழ்க இந்திய ஜனநாயக நாடு.
By இளவரசி
12/7/2010 12:38:00 PM
விளம்பரம் தேடுகிறார்கள்
By dhakshna
12/7/2010 12:35:00 PM
YES, IT IS A SHAME .......
By SHAN
12/7/2010 12:30:00 PM
கருணாநிதி குடும்பத்தில் நடந்த ஒரு சீர்திருத்த திருமணத்தை தினமணி இவ்வாறு கொச்சைபடுத்துவது முறையா ?
By கே. ராமசந்திரன்
12/7/2010 12:16:00 PM
மிக அரூமை.
By ச. சங்கர்
12/7/2010 11:56:00 AM
மு.க வீட்டு திருமண போட்டோ யாராவது பார்த்தல் மொத்த கொள்ளை அடிச்ச பணம் தான் தெரியும். வீடியோ கடை வச்சி எருத அழகிரி பையன் கல்யாணமே இப்படினா...?
By சுதாகரன்
12/7/2010 11:50:00 AM
அன்புள்ள தினமணி ஆசிரியர் அவர்களுக்கு, எளிமையாக திருமணம் நடத்துவதால் உண்டாகும் பேரின்பத்தை புரிந்துகொண்டேன். தினமணி ஆசிரயர் அவரகளுக்கு மிக்க நன்றி. உங்கள் சேவை இந்த நாட்டுக்கு தேவை. அன்புடன், மணி
By Thamizhmani
12/7/2010 11:44:00 AM
Good article.This type of marriages reveals that politicians are more take care of their personal life than public life.This type of politicians are more danger to our democracy.
By kamal
12/7/2010 11:42:00 AM
It is very sad and makes us feel that the country could have been under the British rule for another 200 years and the country probably been better and disciplined.
By Ramkrishnan
12/7/2010 11:06:00 AM
எளிமையே வடிவாக வாழ்ந்து நமது நாட்டிற்கு சுதந்திரம் பெற பாடுபட்ட உத்தமர் வாழ்ந்த நாட்டில்தான் இதுபோன்ற அரசியல் வியாதிகளும் அரசியல் வியாபாரிகளும் வாழ்கிறார்கள். மகாத்மாவின் செருப்பை எடு்த்து இவர்களை அடித்தாலும் இவர்கள் திருந்த மாட்டார்கள். மக்கள் நடுநிலை கொள்ளும் வரை இவர்கள் காட்டில் மழைதான். மக்கள் விழிப்புணர்வு பெற்றுவிட்டால் இவர்கள் கதி அதோகதிதான்
By பாமரஜீவன்
12/7/2010 10:52:00 AM
அண்ணல் நபி அவர்கள் நவின்றார்கள்: “பெருமையடிப்பவன் சுவனத்தில் நுழையமாட்டான். பொய்ப் பெருமை பேசித் திரிபவனும் சுவனத்தில் நுழையமாட்டான்.
By Abdullah
12/7/2010 10:47:00 AM
வெரி எச்செல்லேன்ட் editorial
By த.வ..ramamoorthy
12/7/2010 10:45:00 AM
இந்தமக்கள் பிரதிநிதிகள் வீட்டு திருமண கட்டுரை.. ஏழை,நடுத்தர மற்றும் வளர்தொழிலதிபர்களின் என்ன குமுரளா அமைந்தஊள்ளது... திருமணத்தை ஆடம்பரம் இல்லாமலும்..அதே நேரத்தில் பலருக்கு உதவிடும் வகையில் அனாதை,முதியோர், மனவளர்ச்சி குன்றியோர் இல்லங்களுக்கு உணவு அளித்தால்,ஏழைகளுக்கு உதவி புரிதல் என்று செய்தால் ... அந்த நல் உள்ளங்களின் ஆசி கண்டிப்பாக அந்த மண மக்களை பல்லாண்டு வாழ வாழ்த்தும்....
By கு.ரகுநாதன்
12/7/2010 10:31:00 AM
If they earned the money through honest means then they would not spend it like that. Everything was looted from the public so they do not feel the pain while throwing it out! Shameless creatures..
By Srinivasan
12/7/2010 10:24:00 AM
It is true people in public life should be an example to others, nice editoral, pl. keep it up.
By R.M.MURALI
12/7/2010 9:59:00 AM
கிரேட் கிரேட் கிரேட்
By Arun
12/7/2010 9:46:00 AM
அண்ணல் நபி அவர்கள் நவின்றார்கள்: “பெருமையடிப்பவன் சுவனத்தில் நுழையமாட்டான். பொய்ப் பெருமை பேசித் திரிபவனும் சுவனத்தில் நுழையமாட்டான்.
By Abdullah
12/7/2010 9:35:00 AM
என்ன பண்ண முடியும் ஆசிரியரே .... நாம் பேசிகொண்டே தான் இறுக வேண்டும் ... இதற்கு தீர்வு ஆயுத போராட்டம் .... நாம் இன்னும் காந்தி பிறந்த மண் என்று அகிம்சை பேசிக்கொண்டு இறுக்ககுடாது.... அப்படியென்றால் ராணுவம் ...போலீஸ் எதற்கு ..... அடக்குமுறையை முரியடிகதான் .. .அதுபோல...இவர்கள் அடங்கவில்லை என்றல் .. ஆயுத போராட்டம் வருவதை தவிர்கமுடியது...
By தேச பக்தன்
12/7/2010 9:31:00 AM
அருமையான தலையங்கம். இவர்கள் செய்யும் ஆடம்பரத்தை எண்ணி வேதனைத்தான் படமுடியும். இவர்களாக திருந்தினாலொழிய ஒன்றும் செய்ய முடியாது. இந்தியாவில் திருமணத்தில் ஆடம்பர செலவு மட்டுமல்ல இது போன்ற கேலிக் கூத்துகள் நிறையவே உண்டு; ஜாதகம், பொருத்தம், வரதட்சினை, சீர், புரியாத பஷையில் மந்திரங்கள், இத்தியாதி... போன்று நிறைய. பெரியார் போன்றவர்கள் எவ்வளவு சொல்லியும் மக்கள் திருந்துவது போல் தெரியவில்லையே. பெரியார் தொண்டன் என்று சொல்லிக்கொள்ளும் கலைஞரால் கூட இந்த கூத்தை அவர் குடும்பத்திலேயே நிறுத்த முடியவில்லையே! The change has to come from Inside. Neither your editorial nor your readers comment is going to make any difference. Too pathetic...
By மரமண்டை
12/7/2010 9:06:00 AM
இந்த அரசியல் வியாதிகள் ,தாம் கொள்ளை அடித்த பணத்தையும் ,அதிகாரத்தையும் வைத்துக்கொண்டு இது மாதிரி வாரிசுகளின் திருமணங்களை படாடோபமாயும், ஆடம்பரமாகவும் நடத் துகிரார்கள்..இதனால் தம் மக்கள் செல்வாக்கு ஒன்றும் குறையப் போவதில்லை என்ற எண்ணம்! the people who criticized Jaya for adopted son's marriage, did the same in Madurai causing inconvenience to public. It is not that they are not learning, but they do not bother about public opinion. EVEN DINAMANI KEPT QUIET ABOUT MADURAI MARRIAGE POMP AND SHOW.
By S Raj
12/7/2010 8:46:00 AM
மக்கள் மாவ்வைஸ்ட் ஆவதற்கு எவர்கள் தன காரணக்.
By santhilal
12/7/2010 8:31:00 AM
வாழதெரியாத மக்கள் வாழும் நாட்டில் ஆள தெரியாதார் ஆட்சி புரிவர் ..... இலவசத்தை வாங்கி கொண்டு தனது பெண்டு பிள்ளைகளை கூட கூட்டி கொடுக்க சீக்கிரம் நம் தமிழ் மக்கள் தயார் ஆகிவிடுவர் .....அதையும் இந்த கழகங்கள் தங்கள் சாதனையாக சொல்லி ப்ளெக்ஸ் போடுவார்கள்....
By திரு.நெஞ்சு பொறுக்குதில்லையே
12/7/2010 7:50:00 AM
ரொம்ப நல்ல கட்டுரை.கட்சி பாகுபாடில்லாமல் எல்லோரையும் ஒரு காட்டு காட்டும் தினமணிக்கு வாழ்த்துக்கள். தான் சொந்தமா உழைச்சி சம்பாரிச்ச பணமா இருந்தா யோசிப்பான், இவனுங்க கொள்ள கூட்டத்து பயலுவ இல்ல, அதனால நல்லா பண்ணுவானுங்க.
By ராஜேஷ்
12/7/2010 7:39:00 AM
பாரபட்சம் இல்லாமல் எழுதப்பட்ட தலையங்கம்.எளிமை நேர்மை வாய்மை என வாய் கிழிய பேசும் அத்தனை அரசியல் வாதிகளுமே தங்கள் சொந்த வாழ்க்கையில் கடைப்பிடிக்க மறந்துவிடுகிறார்கள்.
By புதுகை selva
12/7/2010 7:32:00 AM
//ஏதோ கோடீஸ்வரர் வீட்டுத் திருமணம் போலிருக்கிறது என்கிற பிரமிப்பை ஏற்படுத்தியது// பின்ன அவர்களெல்லாம் கோடீஸ்வரர்கள் கிடையாதா என்ன???
By பலூன்காரன்
12/7/2010 7:19:00 AM
தலையங்கம் சூப் பர்.பகட்டையே அரசி யிலாக கொண்ட இந்த ஜென்மங்கள் திருந்தவா போகிறது .திருந்த ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்
By vijayan
12/7/2010 7:16:00 AM
அல்பத்துக்கு அரை காசு கிடச்சுதுன்னா அர்த்த ராத்திரியில குடை பிடிப்பானாம்... இவனுங்க எல்லாம் திருந்தாத ஜென்மங்க சார்.. மக்கள் தான் இதுக்கு தகுந்த நேரத்தில் பதில் சொல்லணும்...
By ராஜ்
12/7/2010 5:56:00 AM
தினமணி, தலைஅங்கம் பாராட்டத்தக்க விதமாக எழுதி உள்ளீர்கள். நன்றி. இதேபோல், மக்களை சிந்திக்கும் படியாக எழுத உங்களுக்கு எம்பெருமான் ஈஸ்வரன் அருள் புரிய வேண்டுகிறேன்.
By அடியாருக்கும் அடியேன்
12/7/2010 5:55:00 AM
How dare you can compare Alagiri's son marriage with Sudhakaran marriage?. Every one in the world was wondered about Sudhakarn's marriage. Tell me what was the analogy to compare this? What about media gaint marriages - did Indian Express or other media person marriages was not grant? it was as grant as others or politicians?
By Sundar
12/7/2010 5:42:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக