திங்கள், 6 டிசம்பர், 2010

இலங்கை நிலவரத்தை ஆராய இந்திய அதிகாரி பயணம்


இந்திய அதிகாரி பயணம்
சென்னை : "இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு பணிகள் குறித்து ஆராய, வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஒருவர், இலங்கைக்கு செல்ல உள்ளார்' என, முதல்வர் கருணாநிதிக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதம்:இலங்கைத் தமிழர் மறுவாழ்வு பணிகள் குறித்து கடந்த 17ம் தேதி நீங்கள் எழுதிய கடிதத்திற்கு நன்றி. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இந்தியா ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அப்பகுதிகளில் நடக்கும் மறுவாழ்வு பணிகள் குறித்து நேரடியாக ஆராயவும், இப்பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து பார்வையிடவும் வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஒருவர் இலங்கைக்கு செல்ல உள்ளார்.அங்கு அவர், இந்திய தூதரக உயரதிகாரி மற்றும் இலங்கை அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க உள்ளார். இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.


பாலா - nellai,இந்தியா
2010-07-27 21:29:49 IST
இந்த இரண்டு பெருசுகளுக்கும் தமிழன்னா இழக்காரமாய் போச்சி. உங்க ரெண்டுபேருக்கும் எங்களை குனியவச்சி கும்மி அடிக்கணும். நடத்துங்க உங்க கடித போக்குவரத்துகளை....
உண்மை விளம்பி - chennai,இந்தியா
2010-07-27 19:57:21 IST
காமெடி பீஸ்.......
மு.சதாசிவன். - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-07-27 17:03:59 IST
ஐயா ஷாகுல் ஹமீது நம் நாட்டு மக்களையே நக்சல் மற்றும் மாவோயிஸ்ட் பிடியிலிருந்து காக்க துப்பில்லை உம் மன்மோஹனுக்கும், காங்கிரசுக்கும், இலங்கை தமிழர்களை காப்பாற்ற போகிறாராக்கும், தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும், சலுகை தருவதால் காங்கிரசுக்கு ஆதரவாக எதையும் எழுதி விடாதீர்கள். பாவம் மக்கள், பாவம் நம் பாதுகாப்பு படை வீரர்கள். உங்கள் வீட்டிலும் ஒரு பாதுகாப்பு படை வீரன் இருப்பதாக நினைத்து பார்த்து விட்டு எழுதுங்கள்....
தமிழ் - madurai,இந்தியா
2010-07-27 15:31:13 IST
ஐயா நீங்க அணைத்து அமைச்சர் களையும் கூட்டிட்டு இலங்கைக்கு போயிருங்க இந்தியாவாது தப்பிசுரும் !!...
பாவபட்டஜனம் - chennai,இந்தியா
2010-07-27 14:41:53 IST
முதல்வர் கடிதம் போட்டால் சும்மாதான்னு அர்த்தம்.முக்கியம் என்றால் அவர் டெல்லி சென்று விடுவார். பிரதமரும் சில காமெடி அறிக்கை விடுவார் அதுவும் சும்மா படம்தான். முட்டாள் ஜனங்க எல்லாம் முடிஞ்சா பிறகு அங்கே யாரை காபாதிறீங்க. ஜெய் ஹிந்த்...
Udayakumar - Abudhabi,இந்தியா
2010-07-27 14:16:12 IST
எலக்சன் வரும்போது மட்டும் இவனுக இப்படி எதாவது கத கட்டுவது மக்களுக்கு தெரியும்..இந்தியாவ சுடுகாடாக்குர வரைக்கும் இவனுக ஓய மாட்டாணுக.....
பாவபட்டஜனம் - chennai,இந்தியா
2010-07-27 13:54:41 IST
கலைஞர் சினிமா கதை அனுப்பினாலும் பிரதமர் ஆவன செய்வோம் என்று பதில் அனுப்புவார்.அவர் என்ன செய்வார். மேல கயறு ஆடும் வேகத்தில் ஆடுகிறார். எவ்வளவு காலமோ சுதந்திரம் எப்போது ஜெய் ஹிந்த்....
கோ.சக்திவேலு - RiyadhSaudiArabia,இந்தியா
2010-07-27 13:49:40 IST
நன்றி இலக்குவனார் திருவள்ளுவன், தொடரட்டும் உங்கள் இன உணர்வு பணி. இது போன்ற பல நாடகங்களை நாம் பார்த்து விட்டோம். இந்திய, இலங்கை கூட்டு சதிக்கு பல இலட்சம் ஈழ தமிழ் மறவர்களை பலிகொடுத்து விட்டோம். இன்னும் இந்திய அரசின் போக்கு மாறவில்லை என்பதையே இது காட்டுகிறது. இதில் எந்த ஒரு உருப்படியான பலனும் ஏற்பட போவதில்லை....
ஜெய் - RasAlKhaimah,ஐக்கிய அரபு நாடுகள்
2010-07-27 13:43:12 IST
இதை படித்ததும் எனக்கு ஒரு பழமொழி ஞாபகத்துக்கு வருது......" காதருக்கிரத வேடிக்கை பார்த்துட்டு தண்டட்டி வாங்க சந்தைக்கு போனானாம் தாய்மாமன்".....சபாஷ் மன்மோகன் ஜி..!!...
Rakesh - Chennai,இந்தியா
2010-07-27 12:39:20 IST
வேண்டாம். நீங்கள் அசின், நாராயணன் போன்ற மலையாளியை உடனே அனுப்புங்கள். அவர் உடனே செய்தி அனுப்புவார்....
கார்தீசன் - jeddah,சா டோம்
2010-07-27 12:04:16 IST
போய் நல்லா தின்னுட்டு தூங்கிட்டு வா??? சென்று வா மகனே!!!! தின்று வா மகனே!!!!...
சாகுல் ஹமீது - SALEM,இந்தியா
2010-07-27 11:29:46 IST
நண்பர் இலக்குவனார்,உங்களுக்கு நாட்டு இறையாண்மையில் நம்பிக்கை இல்லையா? இலங்கை ஒரு இறையாண்மை நாடு..இந்தியா தன்னுடைய முழு பலத்தையும் பிரயோகிக்க முடியாது..அன்பாக பேசி காரியம் முடிக்கலாம்.. தவிர ஆணையிடமுடியாது. ஒரு உள்நாட்டு பிரச்சினையில்..வெளிநாடு என்ன பண்ண முடியும்?.இலங்கை தமிழர் வாழ்வுக்காக போராடிய எத்தனை தமிழர் அமைப்புகளின் தலைவர்களை பிரபகாரன் கொன்றார்!!அமிர்தலிங்கம்,மாத்தையா,ஸ்ரீ சபாரத்தினம்,பத்மநாபன் இப்படி சொல்லி கொண்டே போகலாம்.கடைசியில் என் நாடு தலைவர் ராஜீவ் காந்தியை கொன்றார்கள். பிரபாகரனை ஆதரித்த மக்கள் அழிந்தார்கள்..எல்லோரும் அல்ல..மீதமுள்ள மக்களை மிஸ்டர் மன்மோகன் காப்பாற்றுவார்....
ராமதாஸ் சிதம்பரம் - singapore,இந்தியா
2010-07-27 10:19:50 IST
இந்த செய்தி ஒரு வாரத்திற்கு முன்னால் இதையே சொன்னார்கள். இப்பவும் இதேதான் சொல்லுராங்க ஒரு வாரமா அந்த மக்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறது என்று உங்களுக்கு தெரியவில்லையா நம்மளால் ஒரு நாள் இருக்கமுடியுமா...
karuththapandi - ramanathapuram,இந்தியா
2010-07-27 08:42:08 IST
வேறொன்றும் இல்லை கருணாநிதி மன்மோகனுக்கு அடுத்த வருடம் எலக்சன் வருது. எனது மேல ரெம்ப பேரு கோபமாக இருக்கானுக. அதனால இலங்கைக்கு இந்தியாவிருந்து இலங்கையில் உள்ள தமிழ் பகுதிகளுக்கு ஒரு அதிகாரியை சும்மா கண்துடைப்புக்காக போக சொல்லுங்கள். அதை வச்சி இங்கு ஒரு நாடகம் அரங்கேற்றுவாறு அந்த அதிகாரி லங்காவுக்கு போயி தேயிலை டீ குடித்து விட்டு ராஜபட்சேவிடம் நன்றாக இருக்கு என்று சொல்லி விட்டு வருவார். அந்த அதிகாரியின் பெயர் சிவசங்கர மேனன்....
2010-07-27 06:00:02 IST
செல்வது யாரோ?காண்பது ஏதோ? சொல்வது எதுவோ? சொல்லிப் பயன் வருமோ? கொல்வது அரசாயிருக்க,வெல்வது நீதியாமோ? செல்பவர் காண, காண்பதைச் சொல்ல, சொல்வதை அறிந்து நன்மையைச் செய்ய, செய்வாய் இறைவா, வெல்வாய் தமிழா!...
ram - indian,இந்தியா
2010-07-27 05:23:01 IST
இதற்கு முன்பு சென்றார்கள். போரை நிறுத்துவது என நாம எண்ணிக் கொ்ண்டிருந்தோம். இப்பொழுது செல்பவர் எவ்வளவு விரைவில் தமிழ்ப் பகுதிகளைச் சிங்களப் பகுதிகளாக மாற்றுவது, என வழிகாட்டச் செல்பவர்,...
2010-07-27 04:32:29 IST
எனக்கே கடிதமா(வாய்தாவா) ? - கருணாநிதி,...
ilakkuvanar thiruvalluvan - mylapore,இந்தியா
2010-07-27 03:39:54 IST
இதற்கு முன்பு சென்றவர்கள் போரை எவ்வாறு விரைவில் முடிவிற்குக் கொண்டு வருவது என வழி காட்டவும் உதவவும் சென்றார்கள். முடிவிற்குக் கொண்டு வருவது என்றால் போரை நிறுத்துவது என நாம எண்ணிக் கொ்ண்டிருந்தோம். மக்களைக் கொனறொழித்து நாட்டை எரிகாடாக்கவும் சுடுகாட்டாக்கவும் புதைகாடாக்கவும் உள்ள வழிமுறைகளைச் சொல்லி வன்படைகளும் எரிகுண்டுகளும் கொத்துக் குண்டுகளும் வழங்கி மக்கள் இல்லா நாட்டை உருவாக்குவது. அதில் வெற்றியும் கண்டாரகள். இப்பொழுது செல்பவர் எவ்வளவு விரைவில் தமிழ்ப் பகுதிகளைச் சிங்களப் பகுதிகளாக மாற்றுவது, கண்துடைப்பு ஏமாற்று வேலைகளை எவ்வாறு திறமையாகச் செய்வது, கொத்தடிமைகளாகவே எவ்வாறு நடத்துவது என வழிகாட்டச் சென்றார் எனில், யானை தன் தலையில் மண்ணை வாரிப்போட்டுக் கொள்ளும் நிலைதான் இந்தியத்திற்கு ஏற்படும். குழு அனுப்புவதாகச் சொல்லிததனி மனிதரை அனுப்புவதில் இருந்தே இந்தியத்தின் சறுக்கல் புரிகிறது. தமிழ் நலனுக்கு எதிராதமிழரல்லாத அதிகாரியை அனுப்பி என்ன பயன்? சாதனையாகச் சொல்லி மக்களை ஏமாற்ற உதவுமே!அதிகாரமில்லாத தூதரக, உள்ளூர் அதிகாரிகளைச் சந்தித்து என்ன பயன்? பக்சேவின் விருந்தும் பரிசும் கிடைக்குமே! இந்திய உதவி / கண்காணிப்பு குறித்துச் சிங்களத் தலைவர்கள் பேசுவதே இதன் பயனின்மையைக் காட்டும். ஏமாற்றம் இன்றி மாற்றத்தை விரும்பும் இலக்குவனார் திருவள்ளுவன்...
மு.சதாசிவன். - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-07-27 01:58:47 IST
கொல்லபடாமல் எத்தனை தமிழர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள் என்று கணக்கெடுத்து சோனியாவுக்கு கொடுக்கவா? தமிழச்சிகளின் தாலி அறுத்த உங்களுக்கு தண்டனை நிச்சயம் உண்டு....
நாஞ்சிலான் - dammam,சவுதி அரேபியா
2010-07-27 01:14:43 IST
எதில்,எப்போது,எப்படி அரசியல் பண்ணனும் என்ற விவஸ்தையே கிடையாதா இவர்களுக்கு?அதிகாரி போய் எல்லாவற்றையும் சண்டாக்கி விட்டு தான் மறுஜோலி பார்ப்பார்!போய் ஆகிற காரியத்தை பாருங்க சார்!!...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக