வியாழன், 9 டிசம்பர், 2010

duclas devanandaha,

தேடப்படும் குற்றவாளி தேவானந்தாவையும்  இவருக்கு விருந்தளிக்கும் அமைச்சரையும் அதிகாரிகளையு ம் கைது செய்து விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் ஆணை யிட வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

டக்ளஸ் தேவானந்தா அறிவிக்கப்பட்ட குற்றவாளி என்பதை ரத்து செய்ய அவசியமில்லை: உயர் நீதிமன்றம்

சென்னை, டிச. 8:இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவிக்கப்பட்ட குற்றவாளி என்பதை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும், அவர் தன் மீதான கைது வாரண்டை திரும்பப் பெற, விசாரணை நீதிமன்றத்தையே அணுக வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.இலங்கையைச் சேர்ந்த செல்வநாதன், டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டவர்கள் சென்னை திருவள்ளுவர்புரத்தில் தங்கியிருந்தனர். அப்போது 1.11.86-ம் தேதி செல்வநாதன் உள்ளிட்டவர்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களிடம் தகராறு செய்துள்ளனர். அதை திருநாவுக்கரசு உள்ளிட்டவர்கள் தட்டிக்கேட்டுள்ளனர். அதனால், இலங்கையைச் சேர்ந்தவர்கள் அவர்களைத் தாக்கியதோடு மட்டுமல்லாமல், பொது மக்கள் மீது ஏ.கே. 47 ரக துப்பாக்கி உள்ளிட்டவற்றால் சுட்டுள்ளனர். இதில் திருநாவுக்கரசு இறந்துவிட்டார். இந்த வழக்கு தொடர்பாக, செல்வநாதன், டக்ளஸ் தேவானந்தா என 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு,நீதிமன்றத்தில் கடந்த 30-1-87-ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அந்த வழக்கு 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். எனினும், அவர்கள் வழக்கு விசாரணைக்கு வரவில்லை. இதனால் அவர்கள் தலைமறைவானவர்களாக கருதப்பட்டு, அவர்கள் அறிவிக்கப்பட்ட குற்றவாளிகள் என நீதிமன்றம் கடந்த 30-6-94-ல் அறிவித்தது. இந்த நிலையில், டக்ளஸ் தேவானந்தா இலங்கை அமைச்சராக ஆனார். அவர், "தன் மீதான வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர தயார். அதனால் தன்னை அறிவிக்கப்பட்ட குற்றவாளி என்று கூறுவதை ரத்து செய்ய வேண்டும்' என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை தொடக்கத்தில் நீதிபதி சி.டி. செல்வம் விசாரித்தார். பின்னர், நீதிபதி ஜி.எம். அக்பர் அலி விசாரித்தார்.அந்த மனு மீது நீதிபதி அக்பர்அலி புதன்கிழமை பிறப்பித்த உத்தரவு:டக்ளஸ் தேவானந்தா மீது விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் பார்வையிடப்பட்டன. அதன்படி, அவர் விசாரணை நீதிமன்றத்தில் 2.3.90 வரை ஆஜராகியுள்ளார். அவரது ஜாமீன் கடந்த 6.4.90-ல் ரத்து செய்யப்பட்டு, 25.4.90-ல் அவர் மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 30.6.94 வரை கைது வாரண்ட் நிலுவையில் உள்ளது என்று கூறி, அவர் மீதான வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் நீதிமன்றத்தில் அரசு தரப்பு மெமோ தாக்கல் செய்துள்ளது. அதில், இந்த வழக்கு தொடர்பான அனைத்து குற்றவாளிகளும் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதால், கைது வாரண்டை நிறைவேற்ற முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சூழலில் விசாரணை நீதிமன்றம், அவர்களை அறிவிக்கப்பட்ட குற்றவாளி என்று அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பு பத்திரிகைகளில் வெளியீடாக அல்லாமல் செய்தியாக வெளிவந்துள்ளது. நீதிமன்றம் எழுத்தில் எழுதியது போதுமானது.அவர் தலைமறைவு குற்றவாளி என்று சட்டப்படியே அறிவிக்கப்பட்டுள்ளார்.டக்ளஸ் தேவானந்தா தன் மீதான குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதைத் தெரிந்துக் கொண்டே வெளிநாட்டில் (இலங்கை)தொடர்ந்து தங்கியுள்ளார். அதனால் அவர் தலைமறைவானவர் ஆகிறார். அதனால், அவர் கடந்த 30.4.94-ல் தலைமறைவு குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டிய அவசியமில்லை.எனினும், அவர் தலைமறைவு குற்றவாளி என்று அறிவிக்கப்படும் சமயத்தில் இந்தியாவில் இல்லை. அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததற்கு போதிய காரணம் இருந்துள்ளது. அதனால், அவர் வேண்டுமானால் இந்த நீதிமன்றத்தை அணுகி முன் ஜாமீன் பெற விண்ணப்பிக்கலாம்.  மேலும், அவர் தன் மீதான கைது வாரண்டை விசாரணை நீதிமன்றம் திரும்பப் பெற, அந்த நீதிமன்றத்தையே அணுக வேண்டும் என்று நீதிபதி அக்பர்அலி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக