செவ்வாய், 9 நவம்பர், 2010


விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிக்க வேண்டும்: சுவாமி கோரிக்கை

புதுதில்லி, நவ. 8: விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீடிக்க வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீடிப்பது குறித்து விசாரணை நடத்தி வரும் மத்திய தீர்ப்பாயத்தில் திங்கள்கிழமை ஆஜராகி சுவாமி வாக்குமூலம் அளித்தார். அப்போது தடையை நீடிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.÷விடுதலைப் புலிகளின் இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஓர் இந்திய எதிர்ப்பு இயக்கம். ராஜீவ் காந்தியை படுகொலை செய்ததோடு அவர்களது பயங்கரவாத செயல்களை எதிர்க்கும் இந்திய தலைவர்களுக்கு அவர்கள் அச்சுறுத்தலாகவே இருந்து வந்துள்ளனர்.விடுதலைப் புலிகளின் பயங்கரவாதச் செயல்களை எதிர்ப்பவர்களை அந்த அமைப்பின் ஆதரவுக் கட்சியான மதிமுக வெளிப்படையாக மிரட்டி வருகிறது. எனவே விடுதலைப் புலிகளின் இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றார் சுவாமி. இந்த தீர்ப்பாயத்தில் தனது கருத்துக்களைத் தெரிவிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மனு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.ராஜீவ் காந்தி படுகொலையை அடுத்து விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு 1992-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டு தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகிறது.
கருத்துகள்

அப்பொழுதுதான் சு.சா அரசியல் நடத்த முடியும். இல்லையேல் உண்மைகள் வெளியே வந்து தூக்கிலேற வேண்டிய நிலை ஏற்படும். பரிதாபச்சாமி! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/9/2010 4:20:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக