திங்கள், 8 நவம்பர், 2010

சிவப்புக் கம்பள வரவேற்பும் வழியனுப்பும்

காற்றில் பறந்த சிவப்பு கம்பளம்


மும்பை, நவ. 7: ஒபாமாவை தில்லிக்கு வழியனுப்ப மும்பை விமான நிலையத்தில் விரிக்கப்பட்டிருந்த சிவப்பு கம்பளம் காற்றில் பறந்தது. இதனால் சிவப்பு கம்பள வரவேற்பு இல்லாமல் அவர் விமானத்தில் ஏறினார்.மும்பையில் ஞாயிற்றுக்கிழமை பலத்த காற்று வீசியதால் சிவப்பு கம்பளம் காற்றில் பறந்து பாதையிலிருந்து அடிக்கடி விலகியது. ஒபாமா விமான நிலையத்துக்கு வந்திறங்கிய ஹெலிகாப்டரின் விசிறியாலும் சிவப்பு கம்பளம் மேலும் விலகிச் சென்றது.பலமுறை சீர் செய்தும் மீண்டும் மீண்டும் விலகியதால் சிவப்பு கம்பளம் முழுவதுமாக நீக்கப்பட்டது. எனவே, சிவப்பு கம்பள வரவேற்பு இல்லாமல் ஒபாமா தம்பதியினர் விமானத்தில் ஏறினர். அதிபர் நடந்து செல்லும்போது இடையூறாக இருக்கும் என்பதால் சிவப்பு கம்பளம் எடுக்கப்பட்டு விட்டதாக இந்திய, அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள்

வல்லமை என்பது நல்லன ஆற்றுவதற்கு என்றில்லாமல், வேண்டாத நாடுகளுக்கு அல்லன செய்வது என்பதைக் கொள்கையாகக் கொண்ட நாட்டின் தலைவருக்குச் சிவப்புக் கம்பள வழியனுப்பு அளிப்பதை இயற்கையே விரும்பவில்லை போலும்! சிவப்புக் கம்பள வரவேற்பு வழியனுப்பு முதலியப் போலிச் சடங்குகளை அடியோடு நிறுத்திவிட்டால் நன்று. நம் நாட்டிற்கு வரும் விருநதினர் யாராக இருந்தாலும் சம நிலையில் கருதி வரவேற்போம்! வழியனுப்புவோம்! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/8/2010 3:52:00 AM
பெரும்பான்மை இந்தியரின் மனதை புரிந்து கொண்ட மும்பை காற்று!
By Dhanasekaran
11/8/2010 3:31:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக