வியாழன், 25 நவம்பர், 2010

அனைத்து ப் புகழும் நிதீசுகுமாருக்கே: காங்கிரசு கருத்து


பீகார் போல் தமிழ்நாட்டிலும் காங். தனித்து நிற்கும் என ஆர்ப்பரித்தவர்கள் இப்பொழுது  பாடம கற்று அடங்கிப் போய் இருப்பார்களா? அல்லது அடங்காப்பிடாரியாய் ஆர்த்து எழுந்து மீண்டும் மண்ணைக் கவ்வுவார்களா?
காங்கிரசைக் கல்லறைக்கு அனுப்பிய பீகார் வாக்காளர்களுக்குப் பாராட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அனைத்து புகழும் நிதீஷ்குமாருக்கே: காங்கிரஸ் கருத்து

First Published : 24 Nov 2010 11:19:11 AM IST

Last Updated : 24 Nov 2010 11:50:11 AM IST

புதுதில்லி, நவ.24: பிகார் பேரவைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி இணைந்து பெற்றுள்ள வெற்றியின் புகழ் அனைத்தும் நிதீஷ்குமாரையே சாரும் என்றும், அவரது ஆட்சியில் சட்டம், ஒழுங்கு நிலைமை முன்னேற்றம் அடைந்ததாகவும் காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் இதைத் தெரிவித்தார்.தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்து அவரிடம் கேட்டபோது, காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டு தனக்குரிய இடத்தை கண்டறிய வேண்டும் என தொண்டர்கள் விரும்பினர் என்றார் அவர்.இந்த புதிய வழியை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும், பொதுச்செயலர் ராகுல் காந்தியும் தொடங்கி வைத்தனர். அதையே எதிர்காலத்திலும் பின்பற்றி இலக்கை அடைய முயற்சிப்போம் என ஜெயந்தி நடராஜன் தெரிவித்தார்.உத்தரப் பிரதேசத்துக்கும், பிகாருக்கும் வேறுபாடு உள்ளதை ஒப்புக்கொண்ட அவர், அடுத்த முறை எண்ணிக்கையை முன்னுக்கு கொண்டுசெல்வோம் என நம்பிக்கை தெரிவித்தார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக