வெள்ளி, 26 நவம்பர், 2010

திமுகவிலிருந்து இராசாவை விலக்கி வைக்க வேண்டும்: யுவராசா


பாவம் கலைஞர்! அவரதுஅகவையில் பாதிகூட இல்லாத தத்துப்பித்து யுவராசா அவருக்கு அறிவுரை கூறுகிறார் ஊழலின் உறைவிடமான காங்., குடும்ப ஆட்சிக்கு வழி வகுத்த காங்., ஒழிந்தால்தான் நாடு வளரும் என்பதை அறிந்தே   நாளை தன் பதவி நிலைக்காது என அறியாமல்  உளறுகிறார்.  பாவம் ! பிழைத்துப்  போகட்டும் ! மன்னித்து விடுங்கள் கலைஞரே! இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன் 


திமுகவிலிருந்து ராசாவை விலக்கி வைக்க வேண்டும்: யுவராஜா

First Published : 25 Nov 2010 04:40:32 AM IST

Last Updated : 25 Nov 2010 05:31:31 AM IST

இளைஞர் காங்கிரஸ் பாத யாத்திரை நிறைவை முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மூப்பனார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் மத்திய இணை அமைச்சர் அருண் யாதவ்
சென்னை, நவ. 24: ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஆ, ராசாவை திமுகவிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதிக்கு இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் எம். யுவராஜா கோரிக்கை விடுத்தார்.கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் அக்டோபர் 2-ம் தேதி தொடங்கிய இளைஞர் காங்கிரஸ் பாத யாத்திரையின் நிறைவு விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.விழாவில் யுவராஜா பேசியது:ஊழலுக்கு எதிரான கட்சி காங்கிரஸ். ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். முதல்வர் கருணாநிதிக்கு ஒரு கோரிக்கை விடுக்க விரும்புகிறேன். ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டவரை திமுகவில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் விரும்பும் கூட்டணி வெற்றிபெற வேண்டுமானால் இதுபோன்ற நடவடிக்கைகளை அவர் எடுக்க வேண்டும்.கோஷ்டிப் பூசல்கள் நிறைந்த காங்கிரஸ் கட்சியால் பாத யாத்திரை நடத்த முடியமா என்று சிலர் கேள்வி எழுப்பினார்கள். காங்கிரஸ் கட்சியைத் தவிர வேறு யாராலும் பாத யாத்திரை நடத்த முடியாது. திராவிடக் கட்சிகளில் தலைவர்கள் வந்தால் மட்டும் கூட்டம் கூடும். பாத யாத்திரை நடத்த முடியும். ஆனால் காங்கிரஸ் கட்சியில் மட்டுமே என்னைப் போன்ற சாதாரணத் தொண்டர்கள் கூட பாத யாத்திரை நடத்த முடியும். கூட்டமும் கூடும். இதனை கடந்த 54 நாள்களில் கண்கூடாகப் பார்த்தோம்.கடந்த 43 ஆண்டுகளாக காங்கிரஸ் தமிழ்நாட்டில் ஆட்சியில் இல்லை. அதற்குக் காரணம் காமராஜர் ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் பிரசாரம் செய்ய நாம் தவறி விட்டோம். அணைகள், கால்வாய்கள், பள்ளிக் கூடங்கள் கட்டியது.,மிகப்பெரிய தொழிற்சாலைகள் கொண்டு வந்தது போன்ற அவரின் சாதனைகள் மக்களுக்குத் தெரியவில்லை. கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம், ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டம் போன்ற மத்திய அரசின் சாதனைகளும் மக்களைச் சென்று சேரவில்லை.எனவே, காமராஜர் ஆட்சியின் சாதனைகளையும், மத்திய அரசின் சாதனைகளையும், சோனியா காந்தி, மூப்பனார் போன்ற தலைவர்களின் தியாகங்களையும் தமிழகத்தின் கிராமங்களில் மூலை முடுக்கெல்லாம் பிரசாரம் செய்ய வேண்டும். அந்தப் பணியில் இளைஞர் காங்கிரஸ் ஈடுபடும்.திமுக அரசை நான் குறைகூற விரும்பவில்லை. திமுகவினர் இலவச கலர் டி.வி. கொடுப்பதற்காக மட்டுமே கிராமங்களுக்குச் செல்கின்றனர். வளர்ச்சிப் பணிகளுக்காக செல்வதில்லை. இந்த நிலை மாற வேண்டுமானால் தமிழக மக்கள் காங்கிரஸýக்கு ஆதரவளிக்க வேண்டும். வரும் காலங்களில் தமிழகத்தின் ஆட்சி பீடத்தில் காங்கிரஸ் கட்சி அமரும். அதுவே நமது லட்சியம் என்றார் யுவராஜா. மத்திய கனரக தொழில்துறை இணை அமைச்சர் அருண் யாதவ்: பாத யாத்திரையோடு கடமை முடிந்து விட்டதாக இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் இருந்து விடக்கூடாது. பல சவால்களைச் சந்திக்க வேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கிறோம். சவால்களை வென்று நாம் சாதனை படைக்க வேண்டும். இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கையில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரும் தலைவர்களுக்கான பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
கருத்துகள்

// வரும் தேர்தலில் காங்கிரஸுக்கு தமிழகத்தில் 10 இடங்கள் கிடைப்பதே கடினம் (எந்தக் கூட்டணியில் போட்டியிட்டாலும்!) // நாடோடி அவர்களே, காங்கிரசுக்கு அவ்வளவு (10) இடங்கள் கிடிக்குமா? சொல்லவேயில்லை. ஆமாம், நீங்கள் சொன்னது பஞ்சாயத்து தேர்தலில்தானே?
By மரமண்டை
11/25/2010 8:53:00 PM
// காமராஜரின் ஆயுளில் இறுதிஐந்தாண்டுகள் கடும் மனஉளைச்சலில் இருந்ததற்குக் காரணமான கட்சியில் இருந்துகொண்டு காமராஜர்ஆட்சியை நீங்கள் எப்படித் தரமுடியும்! // சரியாக சொல்லி இருக்கிறீர் பொன்மலை ராஜா. காமராஜர் பெயரை உச்சரிக்கும் தகுதி கூட கிடையாது இ(ந்த) காங்கிரஸ் காரர்களுக்கு. நாட்டுக்காக, மக்களுக்காக தன்னையும், தன் வாழ்க்கையயும் தியாகம் செய்தவர், இந்திரா காந்தி அவர்களை பிரதமராக்கியவர், சுதந்திர போராட்ட தியாகி, கல்விக்கண் கொடுத்த தெய்வம். இப்படிப்பட்ட ஒரு சிறந்த தலைவரை, அந்த நூற்றாண்டில் நாடு கண்ட ஒரு நல்ல மனிதரை, எமர்ஜென்சியில் கைது செய்து, மன உளைச்சலால் நோகடித்த (இ) காங்கிரஸ் காரர்களுக்கு அவர் பெயரை உச்சரிக்கும் அருகதை கூட கிடையாது.
By மரமண்டை
11/25/2010 8:44:00 PM

39 வயது இந்திரா காங்கிரஸ் 43 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சியில் இல்லையா! உங்கள் வயது என்ன யுவராஜா? நீங்கள் இளைஞர் காங்கிரஸ் தானே? இளங்கோவன் காங்கிரஸ் வாசன் காங்கிரஸ், சிதம்பரம் காங்கிரஸ், தங்கபாலு காங்கிரஸ், ஆகிய கோஷ்டிகள் வரிசையில் ஐந்தாவது கோஷ்டி தலைவரா நீங்கள்? காமராஜரின் ஆயுளில் இறுதிஐந்தாண்டுகள் கடும் மனஉளைச்சலில் இருந்ததற்குக் காரணமான கட்சியில் இருந்துகொண்டு காமராஜர்ஆட்சியை நீங்கள் எப்படித் தரமுடியும்! கருணாவிடம் ராசாவை நீக்கசொல்லி கேட்கும் நீங்கள் மத்தியில் சோனியாவகித்த ஆளும்கூட்டணித்தலைவர் பதவியை எப்போது பெற்றீர்கள்! தற்சமயம் ஆளும்கூட்டணித்தலைவர் சோனியா இல்லையா? மன்மோகன் தலைமையிலான கூட்டுப் பொறுப்புள்ள அமைச்சரவையில் ஒரு துறையான தொலை தொடர்புத் துறையில் ஊழல் நடந்ததாக ஒப்புக் கொள்ளும் உங்கள்நேர்மையை பாராட்டுகிறேன்! ஆனால் பிரதமரைக்கலந்து முடிவுகள் எடுத்ததாக மூன்றாண்டுகளாக ராசா கூறி வந்தாலும் அந்த ஊழல் முறைகேட்டில் தனது பங்கேற்பு என்னஎன்பதை இரகசியமாகவைத்திருக்கும் பிரதமரை மூன்றாண்டுகளாக நீங்கள் ஏன் கண்டிக்கவில்லை!
By பொன்மலை ராஜா
11/25/2010 7:14:00 PM
வரும் தேர்தலில் காங்கிரஸுக்கு தமிழகத்தில் 10 இடங்கள் கிடைப்பதே கடினம் (எந்தக் கூட்டணியில் போட்டியிட்டாலும்!)
By நாடோடி
11/25/2010 6:20:00 PM
A fine comedy in this decade
By Annamalai
11/25/2010 4:40:00 PM
யாரோ எழுதி கொடுத்ததை படிக்கிறார் போல் தெரிகிறது. கங்கிரஸ் தி மு க கூட்டணி வெற்றி பெற ஊழல் புரிந்தவர்களை விலக்கி வைக்கவேண்டும் என்றால், சோனியாவைதான் முதலில் விலக்க வேண்டும். ராஹுலுக்கு அனாவசியமாக முக்கியத்துவம் கொடுத்து கெடுக்காதீர்கள்
By ebenezer
11/25/2010 3:31:00 PM
குவாத்ரோசியை (பேபர்ஸ் ஊழலுக்கு கமிசன் ஏஜன்டாக இருந்து இந்தியாவிற்கு துரோகம் செய்தவனை)தப்பவிட்ட சோனியாவை,அசோக்சவானை,சுரேஸ்கல்மாடியை,ஷீலா தீட்சித்தை,இந்த அரசின் விளங்காத பிரதமராக இருக்கும் மன்மோகன் இவர்களையெல்லாம் காங்கிரசிலிருந்து நீக்கிவிட்டு ராசாவைப் பற்றிப் பேசுங்கள்,முந்தாநாள் பெய்த மழையில் நேற்று முளைத்த காளான்கள் அறிவுறைக்கூறுகிறது.
By தோப்புத்துறை இனியவன்
11/25/2010 2:53:00 PM
நரிக்கு நாட்டாண்மை கொடுத்த பிடிக்கு எத்தனை கிடா என்று கேட்குமாம்? நீ யாருடா...ராசாவை திமுகவிலிருந்து விலக்கி வைக்க சொல்லுறதுக்கு? உன் கட்சியின் யோக்கியதை பீகாரில் பார்த்துமா இன்னும் இந்த வீராப்பு? மடையா...சின்னபிள்ளை விட்ட வெள்ளாமை வீடு வந்து சேராது என்பது போல உன்னை போல கோமாளிகளால் கூட்டணி உடைந்து அரக்கி ஆட்சிக்கு வருந்து தமிழ்நாடு குட்டிச்சுவராக போக வைச்சிடாதேடா யுவராஜா!
By சிவமணி தேவர் உசிலம்பட்டி
11/25/2010 1:41:00 PM
The suggestion is just like removing a dirt particle from a sewer!!
By N BABU
11/25/2010 1:22:00 PM
The suggestion is just like removing a dirt particle from a sewer!!
By N BABU
11/25/2010 1:20:00 PM
thambi yuvaraja, first see the dust in your parties back then point out other back.
By pugazhendhi s
11/25/2010 11:35:00 AM
போபர்ஸ் ஊழலில் ஈடுபட்ட ராஜிவ்கானை அப்போது ஏன் காங்கிரஸில் இருந்து விலக்க படவில்லை.?
By புரவி
11/25/2010 11:02:00 AM
முதல்ல இந்த குல்லாவ விடுங்கடா. நேரு, தன்னோட சொட்டை தலையை மறைக்க குல்லா போட்டா, நீங்களும் ஏண்டா குல்லா போடுறீங்க? மதுரைக்காரன்
By மதுரைக்காரன்
11/25/2010 10:37:00 AM
சிங் க்கும் உங்கல் அன்னைக்கும், பங்கு இல்லை என்ட்ரு சொல் பின் பார்ப்போம்
By nallavan
11/25/2010 10:30:00 AM
This is highly absurd to interfere in other party's affair. This shows the immaturity and indecency of the present congress youth leader. Let Congress high command teach him how to behave publically while delivering a speech. This is not a cinema fight. This is politics. Let this young congress leader learn congress history and tamilnadu congress history, then he will know it is not Kamaraj who lost the power in tamilnadu, it is Bakthavatchalam who lost the power in tamilnadu. Why don't congress and the present youth leader ask for Bakthavatchalam period of congress back to power in tamilnadu. In tamil, there is saying, perukkathu vendum panivu. Let congress in tamilnadu learn teach this budding inexperienced respectless leader.
By Thamaraichelvan
11/25/2010 9:23:00 AM
அய்யா யுவராசு, முதலில் உங்க முதுகில் இருக்கும் அலுக்கை எடுத்து விட்டு அடுத்தவர் முதுகை பார்க்கவும்..
By vaigai Selvan
11/25/2010 9:22:00 AM
Hello Yuvaraja, What are you trying to proove here? you mean congress didn't involve in the corruption? Go... go... go... get the hell out of here... people clearly knows that how congress play the game now... that's what reflected in the Bihar election! So, go and tie-up with ADMK mummy... then after the TN election... She can give you all very nice Halwa... you know halwa? she is a specialist in that... good luck to get good halwa! Btw... how about the Bihar halwa?
By R.Parthiban
11/25/2010 8:01:00 AM
யோ யுவராசு, ஸ்பெக்ட்ரம் ஊழலில் முழுசும் பணம் பார்த்தது கருணாவும், கனியும் தான். இது எதுவுமே தெரியாத மாதிரி டிராமா போட்டுக்கிட்டு இருக்க. ஒங்க கட்சி உண்மையாவே ஊழலுக்கு எதிரான கட்சியா இருந்தா, முதல்ல, இப்ப இருக்கிற மத்திய கண்காணிப்பு ஆணையர், இந்தப் பதவிக்கே வந்திருக்ககூடாது. ராசாவ ரெண்டு வருசத்துக்கு முந்தியே தூக்கியிருக்கணும், எல்லா 2G லைசென்சையும் ரத்து பண்ணியிருக்கணும். மாட்டினதுக்கபுறம் இப்ப வந்துகிட்டு யோக்கியன் வேஷம் போட்டுக்கிட்டு இருக்கீங்களா? மதுரைக்காரன்
By மதுரைக்காரன்
11/25/2010 7:49:00 AM
// கடந்த 43 ஆண்டுகளாக காங்கிரஸ் தமிழ்நாட்டில் ஆட்சியில் இல்லை. // யுவராஜா, அது என்ன 43 ஆண்டு கணக்கு? (இ) காங்கிரஸ் பிறந்ததிலிருந்தே தமிழ் மக்கள் உங்களிடம் ஏமாறவில்லை என்கிற உண்மைகூடவா தெரியவில்லை உங்களுக்கு? இப்படியே உளறிக்கிட்டே இருங்க. அப்பதான் தமிழ் மக்களுக்கு உங்களைப் பற்றி மேலும் நன்றாக புரியும்.
By மரமண்டை
11/25/2010 6:08:00 AM
// திமுகவிலிருந்து ராசாவை விலக்கி வைக்க வேண்டும்: யுவராஜா // யுவராஜா, பேப்பரையே படிக்கிறதில்லையா நீங்க? பிரதமர் சொன்னதுபடிதான் நான் செய்தேன் என்று சொல்லி இருக்கிறாரே ராசா. அப்படிப் பார்த்தால் முதலில் பிரதமரையல்லாவா காங்கிரசிலிருந்து நீக்கிவைக்க வேண்டும் முதலில். அதைச் செய்யச் சொல்லி உங்கள் அன்னையிடம் கேட்க நீங்கள் தயாரா? // ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டவரை திமுகவில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். // ஆமாம், காங்கிரஸ் காரர்களை எப்படி திமுகவிலிருந்து விலக்கிவைக்க முடியும்?
By மரமண்டை
11/25/2010 5:59:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக