திங்கள், 22 நவம்பர், 2010

இந்துக் கோயில்கள் சமூக ச் சேவையாற்ற சிங்கப்பூர் அமைச்சர் வேண்டுகோள்

சிங்கப்பூரில் உள்ள இந்துக்கோயில் ஒன்றில் இந்தியும் சமசுகிருதமும் இருந்தன. தமிழைக் காணவில்லை. ஏனென்று கேட்டால் இந்துக்கோயிலுக்குத் தமிழ் ஏன் தேவை என்றனர். தமிழர்கள் இந்துக்கள் அல்லர் எனில் தமிழர் பகுதிகளில் ஏன் கோயில் கட்டியுள்ளீர்கள் என்றால், இனித் தமிழையும் எழுதி வைக்கின்றனர் என்றனர். அவ்வாறு செய்தார்களா என்று தெரியவில்லை.இத்தகையோருக்குப் பொதுவான சமூக நலன் எவ்வாறு இருக்கும்? அமைச்சரின் அறிவுரை சரிதான். இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்
ஹிந்து கோயில்கள் சமூக சேவையாற்ற சிங்கப்பூர் அமைச்சர் வேண்டுகோள்
First Published : 22 Nov 2010 12:27:09 AM IST


சிங்கப்பூர்,நவ.21: சிங்கப்பூரில் உள்ள ஹிந்து கோயில்கள் சமூக சேவையில் தீவிரம் காட்ட வேண்டும், குறிப்பாக சிறைக் கைதிகளாக இருந்து விடுதலையானவர்களின் மறுவாழ்வில் அக்கறை செலுத்த வேண்டும் என்று சட்டம், உள்துறை அமைச்சர் கே. சண்முகம் வேண்டுகோள் விடுத்தார்.சிங்கப்பூரில் ஹிந்து மதம் தொடர்பான 2 நாள் கருத்தரங்கில் கலந்துகொண்டபோது இந்தக் கருத்தை அவர் வலியுறுத்தினார்.சிங்கப்பூரில் மொத்தம் 22 ஹிந்துக் கோயில்கள் உள்ளன, அவற்றில் 12 கோயில்கள்தான் சமூகச் சேவையில் ஈடுபடுகின்றன என்று மாநாட்டுக் குழுத் தலைவர் பேராசிரியர் வி.ஆர். செüத்ரி முதலில் பேசும்போது குறிப்பிட்டார்.அதை மனத்தில் கொண்டே அமைச்சர் இந்த யோசனையைத் தெரிவித்தார். அத்துடன் சிங்கப்பூரில் சிறைத் தண்டனை பெற்றவர்களில் ஹிந்துக்கள் மட்டும்தான் மீண்டும் அதே குற்றங்களைச் செய்வது அதிகமாக இருக்கிறது என்றும் பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் சிறைத்தண்டனைக்குப் பிறகு திருந்தி நல்லவர்களாக வாழ அவர்களுடைய வழிபாட்டுத் தலங்களே ஏற்பாடுகளைச் செய்து தருகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.ஹிந்து ஆலயங்கள் செய்யக்கூடிய சமூக சேவைகளும் அப்போது பட்டியலிடப்பட்டன.ஹிந்து சமூகத்தில் சமூக சேவை செய்யும் மனம் உள்ளவர்களை அடையாளம் காணவும் அணி சேர்க்கவும் கோயில்கள்தான் உகந்த இடம் என்றார் அவர்.

சிங்கப்பூரில் உள்ள இந்துக்கோயில் ஒன்றில் இந்தியும் சமசுகிருதமும் இருந்தன. தமிழைக் காணவில்லை. ஏனென்று கேட்டால் இந்துக்கோயிலுக்குத் தமிழ் ஏன் தேவை என்றனர். தமிழர்கள் இந்துக்கள் அல்லர் எனில் தமிழர் பகுதிகளில் ஏன் கோயில் கட்டியுள்ளீர்கள் என்றால், இனித் தமிழையும் எழுதி வைக்கின்றனர் என்றனர். அவ்வாறு செய்தார்களா என்று தெரியவில்லை.இத்தகையோருக்குப் பொதுவான சமூக நலன் எவ்வாறு இருக்கும்? அமைச்சரின் அறிவுரை சரிதான். இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன். (இந்து சமய வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் ஓர் உண்மையைக் குறிப்பிட்டு்ள்ளேன். இக் கருத்தை ஏன் தடை செயய வேண்டும்?)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக