பீகார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பீகார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 13 நவம்பர், 2012

பீகாரில் திறந்தவெளி ச் சிறையில் குடும்பத்துடன் தீபாவளி

பீகாரில் திறந்தவெளி ச் சிறையில் 
குடும்பத்துடன் தீபாவளி 

பக்சார்: பீகார் சிறையிலுள்ள,70 கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன், சிறை வளாகத்தில், இன்று தீபாவளி கொண்டாடுகின்றனர்.பீகார் மாநிலத்தில், பல்வேறு சிறைகளில் கைதிகளாக உள்ளவர்களில் நன்னடத்தை அடிப்படையில், கைதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில், மூவர் மரண தண்டனை கைதிகள்; மற்றவர்கள் ஆயுள் தண்டனை கைதிகள்.இவர்கள், தங்கள் குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடுவதற்காக, பக்சார் நகரில் உள்ள திறந்தவெளி சிறைச் சாலையில் அடைக்கப் பட்டுள்ளனர். இங்கு, தங்கள் குடும்பத்தினருடன், இன்று தீபாவளியை கொண்டாடுகின்றனர். இதற்காக, 70 கைதிகளின் குடும்பத்தாரும், பக்சார் சிறைக்கு வரும்படி அழைக்கப்பட்டுள்ளனர்.பத்து வயதான பிங்கி, நாளந்தாவில் இருந்து, பக்சார் வந்துள்ளார். இவரது, தாய் மாமன் மனோஜ் பஸ்வான், கடந்த, 12 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். இது குறித்து பஸ்வான் கூறுகையில், ""சில சமயங்களில் நான் சிறையில் இருப்பது பற்றி கவலைப்பட்டது கிடையாது. இப்போது, என் மருமகளுடன் தீபாவளி கொண்டாடப் போவதை எதிர்பார்த்து, மகிழ்ச்சியுடன் உள்ளேன்,'' என்றார்.இதேபோல், மரண தண்டனை கைதியான, சபிர் அன்சாரியுடன், தீபாவளி கொண்டாடுவதற்காக, கோபால்கஞ்ச் நகரிலிருந்து, அவரது பேரன் கோலு வந்துள்ளான்.பக்சார் திறந்தவெளி சிறைச் சாலை வளாகத்திற்குள், கைதிகள் தங்கள் குடும்பத்தாருடன் வசிப்பதற்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், இப்புதிய திட்டத்தை, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்தார். இதற்கு, பல தரப்பில் இருந்தும் பாராட்டு கிடைத்தது.பொதுவாக சிறைகளின் காம்பவுன்ட் சுவர்கள், 14 அடி முதல், 18 அடி வரை இருக்கும். ஆனால், இந்த திறந்தவெளி சிறைகளின் காம்பவுன்ட் சுவர், நான்கு அடி தான் இருக்கும்.தீபாவளி பண்டிகையை கைதிகள் தங்கள் குடும்பத்தாருடன் இணைந்து கொண்டாடுவதற்காக, திறந்தவெளி சிறையில் தனித்தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.இதற்காக அமைக்கப்பட்ட கமிட்டி, கைதிகளின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணித்து தேர்வு செய்கிறது.

வியாழன், 25 நவம்பர், 2010

அனைத்து ப் புகழும் நிதீசுகுமாருக்கே: காங்கிரசு கருத்து


பீகார் போல் தமிழ்நாட்டிலும் காங். தனித்து நிற்கும் என ஆர்ப்பரித்தவர்கள் இப்பொழுது  பாடம கற்று அடங்கிப் போய் இருப்பார்களா? அல்லது அடங்காப்பிடாரியாய் ஆர்த்து எழுந்து மீண்டும் மண்ணைக் கவ்வுவார்களா?
காங்கிரசைக் கல்லறைக்கு அனுப்பிய பீகார் வாக்காளர்களுக்குப் பாராட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அனைத்து புகழும் நிதீஷ்குமாருக்கே: காங்கிரஸ் கருத்து

First Published : 24 Nov 2010 11:19:11 AM IST

Last Updated : 24 Nov 2010 11:50:11 AM IST

புதுதில்லி, நவ.24: பிகார் பேரவைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி இணைந்து பெற்றுள்ள வெற்றியின் புகழ் அனைத்தும் நிதீஷ்குமாரையே சாரும் என்றும், அவரது ஆட்சியில் சட்டம், ஒழுங்கு நிலைமை முன்னேற்றம் அடைந்ததாகவும் காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் இதைத் தெரிவித்தார்.தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்து அவரிடம் கேட்டபோது, காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டு தனக்குரிய இடத்தை கண்டறிய வேண்டும் என தொண்டர்கள் விரும்பினர் என்றார் அவர்.இந்த புதிய வழியை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும், பொதுச்செயலர் ராகுல் காந்தியும் தொடங்கி வைத்தனர். அதையே எதிர்காலத்திலும் பின்பற்றி இலக்கை அடைய முயற்சிப்போம் என ஜெயந்தி நடராஜன் தெரிவித்தார்.உத்தரப் பிரதேசத்துக்கும், பிகாருக்கும் வேறுபாடு உள்ளதை ஒப்புக்கொண்ட அவர், அடுத்த முறை எண்ணிக்கையை முன்னுக்கு கொண்டுசெல்வோம் என நம்பிக்கை தெரிவித்தார்.