திங்கள், 23 நவம்பர், 2009

ஓபரா வின்பிரே தொலைக்காட்சி நிகழ்ச்சி 2011-ல் நிறைவு

First Published : 22 Nov 2009 12:46:41 AM IST

Last Updated :
​​​

சிகாகோ, ​ நவ.21: அமெ​ரிக்​கா​வில் ஒளி​ப​ரப்​பப்​ப​டும் மிக​வும் பிர​ப​ல​மான தொலைக்​காட்சி நிகழ்ச்சி "ஓபரா வின்​ஃ​பிரே' செப்​டம்​பர்,​ 2011ல் நிறை​வு​பெ​று​கி​றது என்று அந்​நி​கழ்ச்​சி​யின் தொகுப்​பா​ள​ரான ஓபாரா வின்​ஃ​பிரே சனிக்​கி​ழமை தெரி​வித்​தார்.

ஓபரா வின்​ஃ​பிரே நிகழ்ச்சி காலை வேளை​யில் ஒளி​ப​ரப்​பப்​ப​டும் தொலைக்​காட்சி நிகழ்ச்​சி​யா​கும். இந்​நி​கழ்ச்சி ஒளி​ப​ரப்பு செப்​டம்​பர் 8, 1986-ம் ஆண்டு ​ தொடங்​கி​யது.

உல​கில் உள்ள 145 நாடு​க​ளில் இந் நிகழ்ச்சி ஒளி​ப​ரப்​பா​கி​றது. இந்​நி​கழ்ச்​சிக்கு முத​லில் சிகாகோ என பெய​ரிட்​டப்​பட்​டது. பின்​னர் அந்​நி​கழ்ச்​சி​யின் தொகுப்​பா​ளினி பெய​ரி​லேயே ஓபார வின்​ஃ​பிரே என்​றா​னது.

ஓபரா வின்​ஃ​பிரே ​(55), அமெ​ரிக்​கா​வின் பிர​பல பத்​தி​ரிகை ஃபோர்ப்ஸ் வெளி​யி​டும் சக்தி வாய்ந்த பெண்​ம​ணி​கள் வரி​சை​யில் தொடர்ந்து 45-வது இடத்தை பிடித்​துள்​ளார்.

தொகுப்​பா​ளினி வின்​ஃ​பிரே,​ உல​கம் முழு​வ​தி​லும் இருந்து இந்​நி​கழ்ச்​சியை பார்ப்​ப​வர்​கள் அனை​வ​ரை​யும் ஈர்த்​துள்​ளார். இந்​நி​லை​யில் மிக​வும் பிர​ப​ல​மான இந்த நிகழ்ச்​சி​யா​னது 25-வது ஆண்​டில் நிறை​வு​பெற உள்​ள​தாக தொகுப்​பா​ளினி ஓபரா வின்​ஃ​பிரே தெரி​வித்​தார்.இது​கு​றித்து அவர் மேலும் ​ கூறி​ய​தா​வது:​

நான் மிக​வும் விரும்பி நடத்​திய நிகழ்ச்சி ஓபரா வின்​ஃ​பி​ரே​வா​கும். இந்​நி​கழ்ச்சி நிறை​வு​பெ​று​வதை நினைத்து வருத்​த​மாக உள்​ளது. இருப்​பி​னும் உல​கம் முழு​வ​தும் இந்​நி​கழ்ச்​சி​யின் மூலம் பெரும்​பா​லான மக்​க​ளின் மன​தில் இடம்​பெற்​றுள்​ளேன். இது என் வாழ்​வில் கிடைத்த பெரும் பேறா​கும் என்று கண்​ணீர்​மல்க கூறி​னார்.

ஓபரா வின்​ஃ​பிரே நிகழ்ச்​சி​யில் பெண்​கள் முன்​னேற்​றம்,​ கல்வி,​ சுகா​தா​ரம் மற்​றும் வாழ்க்​கை​மு​றை​கள் ​ உள்​ளிட்ட மிக​வும் முக்​கி​ய​மான பிரச்​னை​கள் குறித்து ஒளி​ப​ரப்​பப்​பட்​டுள்​ளது. இவற்றை தொகுப்​பா​ளினி ஓபரா வின்​ஃ​பிரே மக்​க​ளைச் சென்​ற​ûடை​யும் வகை​யில் ரச​னை​யாக தொகுத்​த​ளித்​தார் என்​பது குறிப்​பி​டத்​தக்​கது.

ஓபரா வின்​ஃ​பிரே ஓய்​வு​பெ​று​வது குறித்து பத்​தி​ரி​கை​யா​ளர் லிசா லிங் கூறு​கை​யில்,​ ஓப​ரா​வின் இடத்தை வேறு யாரா​லும் நிரப்​ப​மு​டி​யாது. அந்த அள​வுக்கு ஓபரா வின்​ஃ​பிரே சிறந்த தொகுப்​பா​ளினி என்​றார். காலை​வே​ளை​யில் ஒளி​ப​ரப்​பா​கும் தொலைக்​காட்சி நிகழ்ச்​சியை தொகுத்து வழங்​கும் எலன் டிஜெ​னி​ரஸ் கூறு​கை​யில்,​ ​ காலை​வே​ளை​யில் ஒளி​ப​ரப்​பா​கும் தொலைக்​காட்சி நிகழ்ச்​சி​யின் ராணி ஓபரா வின்​ஃ​பிரே தான் என்​றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக