சனி, 20 ஜூன், 2020

கோடைத் தமிழ் முகாம்

அகரமுதல

ஆனி 17, 2051 – 01.07.2020
ஆவணி 15, 2051 – 31.08.2020

வலைத்தமிழ் இணையத் தமிழ்க் கல்விக்கழகம்

அமெரிக்கச்சிறாருக்கான இணையவழிப்பட்டறை

குவிகம் இணையவழிப் பட்டிமன்றம்


 ஆனி 07, 2051 – 21.06.2020

ஞாயிறு மாலை 6.30

நாளைய தொலைக்காட்சி நிகழ்வுகள் தரப்போவது
நல்லதொரு மாற்றமா? ஏமாற்றமா?
நடுவர் : தமிழ்த்தேனீ

மந்திரமூர்த்தி அழகு                                                 ஈசுவர்
இலதா இரகுநாதன்                                                   கிரி பாசுகர்
கலாவதி பாசுகர்                                                       சுவாமி நாதன்

கடவுச்சொல்: குவிகம் 216 / KUVIKAM 216
கூட்ட எண்:  828 6771 9080


சனி, 13 ஜூன், 2020

கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு

அகரமுதல

கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு

மலேசிய உத்தமம், ஓம்தமிழ் ஏற்பாட்டில், கணியம் அறக்கட்டளை, தித்தியான் எண்மம், மொசில்லா தமிழ்க் குழுமம், உபுண்டு தமிழ்க் குழுமம், தமிழ் அலுவல்தற்சார்பு(libreoffice)  இணை ஏற்பாட்டில் எதிர்வரும் ஆனி 20-21, 2051 / 4 – 5 சூலை 2020 அன்று, தமிழில் உலகின் முதலாவது “கட்டற்ற தொழில்நுட்ப மாநாடு” இணையம்வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மனிதப்போன்மை(ஆன்டிராய்டு),வெண்ணாந்தை நிரல்(பைதான்), மொசில்லா, இணையப் பாதுகாப்பு, கணிணி மொழியியல், கணிணி அறிவியல், செயற்கை நுண்ணறிவு, பொருட்களின் கணிணி போன்ற தலைப்புகளில் கணிஞர்கள் படைப்பினை வழங்குவர். சில படைப்புகள் பட்டறைகளாக நடத்தப்படும்.
இல்லிருப்பாணையில் இருப்பினும் இயங்கலையில் இணைவோம்.! இணையத்தில் இணைந்து தமிழ்நுட்பம் வளர்ப்போம்.!
மாநாட்டுப் பேராளர் கட்டணம் இலவசம்.
மின் சான்றிதழுக்கு முன் பதியவும் :
மேலதிக விவரங்கள் விரைவில்.

குவிகம் இணைய அளவளாவல் – 14.06.2020

அகரமுதல

வைகாசி 32, 2051 / 14.06.2020 / மாலை 6.30

குவிகம் இணைய அளவளாவல்

கதை உருவான கதை

திருமதி பத்மினி பட்டாபிராம்

கூட்ட எண் 89969238763 கடவுச்சொல்  kuvikam 146


Meeting ID: 899 6923 8763     கடவுச்சொல்  /     Password: kuvikam146


நிகழ்வில் பங்குகொள்ள இணைப்பு :- 
https://us02web.zoom.us/j/89969238763?pwd=TXdQZUJmbHJIWUtpMkd6NVY2dHhNQT09

உள் நுழையும்போது
·   தங்கள் பெயரினைத் தெளிவாகக் குறிப்பிடவும்
·  இணைய அளவளாவலில் நீங்கள் பேசும் தருணம் தவிர மற்ற நேரங்களில் உங்கள் ஒலிவாங்கியை (MIC)  அமைதிப்படுத்திவிடவும்.
கேள்வி நேரத்தின்போது    
·  கேள்வி  விரும்புபவர்கள்  கையை உயர்த்தவும் (RAISE HAND OPTION)
·  கேள்வியினைச் சுருக்கமாகக் கேட்கவும்                                                     
·  ஒரு கேள்வி மட்டும் கேட்கவும். மற்றவர்கள் கேட்டபிறகு  மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும்
 நிகழ்ச்சி சிறக்க உங்கள் ஒத்துழைப்பை நாடுகிறோம்
 

சனி, 6 ஜூன், 2020

குவிகம் இணையவழி அளவளாவல் – 07.06.2020

அகரமுதல


வைகாசி 25, 2051 / 07.06.2020 மாலை 6.30

நான் களித்த திரைப்படம்
பேசுவோர்


கிரிசா பாசுகர்
ஆர்.கே.இராமநாதன்
அழகிய சிங்கர்
சாய் கோவிந்தன்
இலட்சுமணன்
சுரேசு இராசகோபால்
பாசுகரன் செயராமன்
நேரம் இருந்தால் . … நீங்களும்

யாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே!


யாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே!

யாழ்ப்பாண நூலகத்தை எரித்தமை இனஅழிப்புக்கானஉள்நோக்கம் கொண்டது!
யாழ்ப்பாண நூலகம் 31 மே 1981இல் எரிக்கப்பட்டு 39ஆவதுஆண்டை எட்டியுள்ளது. இலங்கை அரசின் மூத்தஅமைச்சர்களால் தென்பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட சிங்களக் கும்பலொன்றினைக் கொண்டு இத் தீவைப்பு நடாத்தப்பட்டது.
நூலகப் புத்தகங்களுக்கு வேண்டுமென்றே தீயிட்டழித்த இக்கொடுமையான நிகழ்வானது, இலங்கை அரசின் தமிழர்களுக்கெதிரான இன இழிப்பு வரலாற்றில் ஒரு முதன்மை நிகழ்வாகும். தெற்காசியா எங்கும் தேடக் கிடைக்காத தொன்மைவாய்ந்த, போற்றிப் பேணப்பட வேண்டிய ஏராளமான நூல்கள், ஆவணச் சுவடிகள் திட்டமிட்டு தீயிட்டழிக்கப்பட்டமையால் தமிழர்களின் விலைமதிப்பற்ற கலை பண்பாட்டுப் பரம்பரைக் கரூவூலம் ஒன்று இலங்கை அரசினால் அழிக்கப்பட்டது.
நூல் நிலையத்தை அண்டிய பகுதிகளில் அன்று எவ்வித ஆத்திரமூட்டும் நிகழ்வும் நடைபெற்றிருக்கவில்லை. யாழ்மாவட்டக் காவல் தலைமைச் செயலகம் நூலகத்திலிருந்து கண்ணுக்கெட்டிய தூரத்திலேயே உள்ளது. முன்னாள் அமைச்சர்களான காமினி திசநாயக்காவும் சிறில் மத்தியூவும் தீவைப்பு நிகழ்ச்சியை முன்னின்று நடாத்தியுள்ளார்கள். இவை யாவும் தீயிடல் கொடுமை  நன்கு திட்டமிட்டு (intent of genocide) தமிழர் வரலாற்றின் ஆவணப்படுத்தலை  அழிப்பதற்கென்று நிகழ்த்தப்பட்ட பண்பாட்டு இனப்படுகொலை என்பதற்குச் சான்று பகர்கின்றன.
கடந்த 70 வருடங்களாக தமிழர்களுக்கெதிராக நடந்து வரும்இனப் படுகொலையை ஒரு பன்னாட்டு நீதிப்பொறிமுறையின் மூலம் வெளிக் கொண்டு வந்து நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதனையும் இலங்கையில் வடக்கு  கிழக்கு வாழ் தமிழர்களுக்குப் பன்னாட்டு ஏற்புடனான ஒரு பாதுகாப்புப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்பதனையும் பிரித்தானியத் தமிழர் பேரவை வலியுறுத்துகின்றது.
 “புத்தகங்களை எரிக்கத் துணிந்தவர்கள், மனிதர்களையே எரித்துவிடுவார்கள்” எயின்றிச்சு எயின் (சேர்மானியக் கவிஞர், எழுத்தாளர், இலக்கியத் திறனாய்வர்)
  • பிரித்தானியத்தமிழர் பேரவை

வியாழன், 4 ஜூன், 2020

உலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் 3

அகரமுதல

வைகாசி 23, 2051 வெள்ளி 05.06.2020 மாலை 5.00

உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை

கூடலுரை : தமிழும் தகவல் தொழில்நுட்பமும் –  முனைவர் சி.சிதம்பரம்


தமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்?- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா



தமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன் எனக் கொழும்பு தன்னைத்தானே கேள்விக் கேட்டுக்கொள்ள வேண்டும் – நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா

கிழக்குத் திமோரின் முன்னாள் குடியரசுத் தலைவரும் நோபள் விருதாளருமான ஒசே இரமோசு ஓர்தா
 நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நிகழ்வில் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை ஆற்றியுள்ளார். அப்பொழுது அவர்,
தமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன் எனத் தன்னைத்தானே இலங்கை அரசு கேட்டுக் கொள்வதும், தமிழர்களிடம் அதனைக் கேட்டுப் பார்ப்பதும் இலங்கை அரசின் பொறுப்பு எனத் தெரிவித்தார்.  
கிழக்கு திமோர் தலைநகரம் திலீயிலிருந்து இணையவழியே அவர் வழங்கிய முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையில் பின்வருமாறு தெரிவித்தார்:
கத்தலோனியா மக்கள் நூற்றாண்டுக் கணக்கில் சேர்ந்து வாழ்ந்த பின் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்? என்ற கேள்வியை மாட்ரிட்டு தனக்குத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும் என்பது போலவே, இசுகாட்டுகள் பிரித்தானியாவிடம் இருந்து பிரிந்து செல்ல விரும்புவது ஏன்? என்று இலண்டன் தன்னைத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும் என்பது போலவே, கொழும்பில் இடம்பெற்றுள்ள அரசாங்கமும் தமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன் என்று கேட்டுக் கொள்ள வேண்டும்.
தமிழர்களைப் போன்று மீப்பெரும் இன அடையாள உணர்வும் வரலாற்று உணர்வும் கொண்ட ஒரு தேசிய இன மக்கள் தனித்திருக்க விரும்புவது ஏன்? தம்மைத்தாமே கேட்டுக் கொள்ளும் பொறுப்பு ஆளும் அரசுகளுக்கு இருப்பதாக அவர் வலியுறுத்தினார். ஏதோ தவறு நடந்திருக்க வேண்டும் என்பதையும் அரசுகள் ஒப்புக் கொள்ளத்தான்  வேண்டும்;இசுபெயினில் கத்தலோனியர்களும், துருக்கியில் குர்துகளும், ஐக்கிய பிரித்தானிய முடியரசில் இசுகாட்டுகளும் நடத்தி வரும் நிகழ்காலப் போராட்டங்களைச் சிறப்பு எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிட்டவர் தமிழ்மக்களின் போராட்டத்தையும் அதே வரிசையில் வைத்துக் கருத்துரைத்தார்.
இலங்கையில் தமிழர் இனவழிப்பு என்பதைக் குறிப்பிட்ட அவர், சென்ற நூற்றாண்டில் செருமனியில் (இ)யூதர்கள் இனவழிப்பு, சிரியாவிலும் சூடானிலும் இப்போதும் தொடரும் இனவழிப்பு ஆகியவற்றின் விரிவான சூழலில் பொருத்திக் காட்டினார். தேசிய இனக் குழுக்கள் ஒன்றையொன்று அரக்கராக்கிக் காட்டுவதற்கு மேல் உயர்ந்து, தேசிய இனச் சிக்கல்களைத் தீர்க்க ஆக்கவழியில் உரையாட வேண்டிய தேவையை வலியுறுத்தினார்.
தன்னாட்சிக்கும் தேசியத்துக்குமான போராட்டம் ஒரு வரலாற்று உண்மையாகும். ஒவ்வொரு தேசமும் விடுதலையாக  இருக்க வேண்டும் என விரும்புகின்றன. ஆனால் அந்த விடுதலையின் பொருள் பிரிவினையாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை என்றார். இந்தோனேசியாவில் தன்னுடைய  கிழக்கு திமோரிய மக்களின் போராட்டம் கடந்து சென்ற பாதையை எடுத்துரைத்தவர் எப்படிப் பின்னொரு கட்டத்தில் தங்களின் எதிர்ப்பியக்கம் ஐநாவின் நடுவாண்மையில் இந்தோனேசிய அரசாங்கத்துடன் உரையாடல் என்ற முயற்சியில் ஈடுபட்டது என்பதையும், எப்படி முடிவில் பொதுவாக்கெடுப்பு நடைபெற்று அது தங்கள் விடுதலைக்கு வழிகோலிற்று என்பதையும் குறிப்பிட்டார்.
இந்தோனேசிய அரசு ஒடுக்குமுறை வழிகளைக் கடைப்பிடித்த காலத்தில் எந்தக் கட்டத்திலும் கிழக்கு திமோரியர்கள் தங்கள் ஒடுக்குமுறையாளரை அரக்கராக்கிக் காட்டியதில்லை என்றார்.
இலங்கை அரசாங்கம் கூடுதல் வலுவாற்றலாக இருப்பதால் பௌத்தத்தின் கருணையைக் காட்டி, தமிழ் மக்களைத் தேடிச்சென்று உதவலாம் என்பது முனைவர் இரமோசு-ஓர்தாவின் கருத்து. ஒருபோதும் நம்பிக்கை இழக்காதீர்கள், ஒருபோதும் கனவு காண்பதை நிறுத்திக் கொள்ளாதீர்கள் என்று அவர் தமிழ் மக்களைக் கேட்டுக் கொண்டார். எது வரினும் வெற்றி உங்களுக்கே என்று கூறித் தன் உரையை நிறைவு செய்தார்.
மே18-முள்ளிவாய்க்கால் துயரத்தை நினைவிற்கொள்ளும் பொருட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆண்டுதோறும் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை நிகழ்வை ஒழுங்கு செய்து வருகிறது. பலவாறான பின்னணிகள் கொண்டோரும் அமெரிக்கா, கொசோவோ, தெற்கு சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தோருமான புகழார்ந்த பேச்சாளர்கள் முன்சென்ற ஆண்டுகளில் இந்தப் பேருரை ஆற்றியுள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

திங்கள், 1 ஜூன், 2020

சனி, 30 மே, 2020

குவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020

அகரமுதல

வைகாசி 18, 2051 ஞாயிறு 31.05.2020

மாலை 6.30 மணி

மொழிபெயர்ப்பு என்னும் இலக்கியப் பயணம் – திருமதி கெளரி கிருபானந்தன்


 கூட்ட எண் 735 1284 9450              கடவுச்சொல்  kuvikam315