வலைத்தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வலைத்தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 21 ஆகஸ்ட், 2021

வட அமெரிக்காவில் “தமிழைத் தமிழாய்ப் பேசுவோம்” – தொடக்க விழா

 அகரமுதல


வலைத்தமிழ் 

ஆணி 05, 2052 / 21.08.2021 கிழக்கு நேரம் பிற்பகல் 3.00

தமிழைத் தமிழாய்ப் பேசுவோம்

இன்றைய இளம் பெற்றோர்கள், பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் சூழலில் வசிப்பவர்கள், வெளிநாட்டில் வசிப்பவர்கள் என்று பலரும் தங்கள் பேச்சில் எத்தனை விழுக்காடு தமிழ், ஆங்கிலம் கலந்துள்ளது என்று சிந்தித்தால் நம் பேச்சுத்தமிழ் எவ்வளவு மாற்றமடைந்துள்ளது என்று தெரியும். 

இதற்கு என்ன தீர்வு?  எங்கே சென்று இதற்குப் பயிற்சி எடுப்பது?  ஒழுங்கு செய்யப்பட்ட வழிமுறை உள்ளதா?  

வட அமெரிக்காவில் தொடங்கப்படும் “தமிழைத் தமிழாய்ப் பேசுவோம்” என்பது குழந்தைகளுக்கானதல்ல, பெறோர்களுக்கானது. வரும் 21/08 அன்று  கிழக்கு நேரம் பிற்பகல் 3 மணிக்கு,  நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உங்கள் நாட்டில், உங்கள் ஊரில், உங்கள் பகுதியில், நாம் பேசும் தமிழை தமிழாய் பேசுவோம் வாருங்கள். 

இளையதலைமுறை பெற்றோர்கள் தமிழைத் தமிழாகவும், ஆங்கிலத்தை ஆங்கிலமாகவும் பேசுவது மட்டுமே நம் அடுத்த தலைமுறை பிள்ளைகளைச் சரியான தமிழ் பேச ஊக்கப்படுத்தும்.  

இதற்கு வழிகாட்டுதல் குழு, தமிழறிஞர் குழு, வார்த்தைகளைத் தொகுத்த கையேடு, இணையதளம், ஒரு மணி நேர நெறியாளர்ப்  பயிற்சி  ஆகியவை ஏற்படுத்தப்பட்டு ஆர்வமுள்ள தன்னார்வ ஒருங்கிணைப்பாளருக்கு இலவசப் பயிற்சிகள், வழிகாட்டுதல் வழங்கப்படும்..  

உங்கள் ஊரில் இலவச பயிற்சி நடத்த/பயிற்சிபெற பதிவுசெய்யவும்: www.ValaiTamil.org

 



நினைவுக் குறிப்பு :- 1990 களில், 

தமிழ் பேசுக!

தமிழில் பேசுகையில் தமிழிலேயே பேசுக!

தமிழ் எழுதுக!

தமிழில் எழுதுகையில் தமிழிலேயே எழுதுக! 

என முழக்க ஒட்டிகள் அச்சடித்துப் பரப்பியது நினைவிற்கு வருகிறது.

முயற்சி வெல்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

சனி, 20 ஜூன், 2020

கோடைத் தமிழ் முகாம்

அகரமுதல

ஆனி 17, 2051 – 01.07.2020
ஆவணி 15, 2051 – 31.08.2020

வலைத்தமிழ் இணையத் தமிழ்க் கல்விக்கழகம்

அமெரிக்கச்சிறாருக்கான இணையவழிப்பட்டறை

வெள்ளி, 3 மே, 2019

வலைத்தமிழ் பல்சுவை மாத இதழ் வெளியீடு, வாசிங்டன்

அகரமுதல

வலைத்தமிழ் பல்சுவை மாத இதழ் வெளியீடு, வாசிங்டன்

தமிழ் வளர்ச்சி சார்ந்த ஆக்கப்பூர்வமான அனைத்துச் செயற்பாடுகளையும் இருகரம் கொண்டு வரவேற்று அறிமுகப்படுத்தி வருவது வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்.  இச்சங்கம் மிகப்பெரிய அரங்கம் நிறைந்த நிகழ்ச்சியில் நடத்திய சித்திரை விழாவில் வலைத்தமிழ் பல்சுவை மாத இதழை வெளியிட்டு உலகிற்கு அறிமுகப்படுத்தியது.
தமிழ்ச்சங்கத் தலைவர், செயற்குழு , வாசிங்டன் பகுதியிலுள்ள ஆசிரியர் குழு உறுப்பினர்கள், ஆர்வலர்கள், நிகழ்ச்சியை நெறிப்படுத்திய பேரவையின் மேனாள் தலைவர் திரு.நாஞ்சில் பீற்றர் என அனைவருக்கும் வலைத்தமிழ் ஆசிரியர் குழு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டது ..
பன்னாட்டுப் பல்சுவை மாத இதழை வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் தலைவர் திரு.சுந்தர் குப்புசாமி அவர்கள் வெளியிட்டார்.
 வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.நித்திலச்செல்வன், மேரிலாண்ட்டு மாகாணத் திட்ட மற்றும் வெளியுறவுத் துறை மேனாள் துணைச் செயலாளர் முனைவர் இராசன் நடராசன், முனைவர்.பிரபாகரன், முனைவர் முத்துவேல் செல்லையா, திருமதி புட்பராணி , திரு.இராசாராம் சீனுவாசன்ஆகியார் பெற்றுக்கொண்டனர்.
ச.பார்த்தசாரதி, நிறுவனர், வலைத்தமிழ்.காம்