வெள்ளி, 9 ஏப்ரல், 2010

தலையங்கம்: இனி பொறுப்பதில்லை



'வீட்டுக்கு அடங்காதது ஊருக்கு அடங்கும்' என்று சொல்வார்கள்.​ பெற்ற பிள்ளைகளைப் பார்த்து தாய் தந்தையர் சொல்லும் பழமொழி இப்போது டாக்டர்களைப் பார்த்துச் சொல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.வேலூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 8 டாக்டர்கள்,​​ சென்னையிலிருந்து தினமும் காலையில் ரயிலில் வேலூருக்கு வந்து,​​ மருத்துவமனையில் கையெழுத்துப் போட்டுவிட்டு,​​ பகல் 11.30 மணிக்கு சென்னை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி வீடு சென்றுவிடுவது வழக்கமாக இருந்து வந்ததைக் கண்டு பொறுக்க முடியாத பொதுமக்கள் சிலர்,​​ இந்த டாக்டர்களை ரயில்நிலையத்தில் முற்றுகையிட்டனர்.​ இவர்களில் 5 பேர் தப்பிவிட,​​ மூன்று பேர் மட்டும் சிக்கினார்கள்.​ இவர்களிடம் ​ தற்போது 'விளக்கம்' கேட்கப்பட்டுள்ளது.அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்குச் சங்கம் இருப்பதால்,​​ இவர்கள் மீது எடுத்த எடுப்பில் நடவடிக்கை மேற்கொள்ள அரசு தயங்குகிறது.​ ஏனென்றால்,​​ உடனடியாகப் போராட்டம்,​​ வேலைநிறுத்தம் என்று இறங்கிவிடுவார்கள்.​ அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால்,​​ இந்த நடவடிக்கையை கடிதோச்சி மெல்ல எறியும் உத்தியில்தான் அரசு நடத்தும் என்பது தெரிந்ததுதான்.ஆனால்,​​ இப்போது சிக்கியுள்ள 3 பேர் மட்டும்தான் இத்தகைய பணிநேரத்தில் வீடு திரும்பும் டாக்டர்கள் என்பதாக நிலைமை இல்லை என்பதும்,​​ அரசு மருத்துவமனைகளில் இருக்கும் 75 சதவீத டாக்டர்கள் இதைத்தான்-​ அதாவது வேலை நேரத்தில் வீடுபோய்ச் சேருவதை-​ ஒரு நிரந்தர வேலையாகச் செய்து வருகிறார்கள் என்பதும் சத்தியமான உண்மை என்பதால்,​​ சங்கங்களுக்குப் பயந்துகொண்டு அரசு நடவடிக்கை எடுப்பதைக் காலதாமதம் செய்தால்,​​ அரசு மருத்துவமனைகளின் நிலைமை மேலும் மோசமாகிவிடும்.இத்தகைய சூழல் ஊரகப் பகுதியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் நடைபெறுகிறது என்றும்,​​ இதைத் தங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும்,​​ அரசியல் நெருக்குதல் காரணமாக இவற்றைச் சகித்துக்கொள்ள நேர்கிறது என்றும் ​ அந்தந்த மருத்துவமனைத் தலைவர்களே வருத்தத்துடன் ஒப்புக்கொள்ளும் நிலைமை,​​ மருத்துவத் துறைக்கு ஆரோக்கியமானது அல்ல.தற்போது சிறைபிடிக்கப்பட்ட டாக்டர்கள் குறித்து ஏற்கெனவே புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.​ இது தொடர்பாக ஓர் ஆங்கில நாளேடு,​​ அப்போது வேலூர் அரசு மருத்துவமனைத் தலைவியாக இருந்தவரிடம் விளக்கம் கேட்டபோது,​​ மருத்துவமனையில் பணிபுரியும் அனைவருக்கும் கைரேகை பதிவேடு அமைத்து,​​ டாக்டர்கள் வரும்போதும்,​​ போகும்போதும் நேரத்தை உறுதிப்படுத்தப் போவதாகக் கூறினார்.​ அதற்கு மருத்துவர்கள் காட்டிய எதிர்ப்பு கொஞ்சமானதல்ல.​ கொதித்தெழுந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.​ அத்தகைய கைரேகை பதிவேட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.​ அது ஏதோ சுயகெüரவம் தொடர்பான சிக்கல் என்பதாக அப்போது தோன்றினாலும்,​​ ஏமாற்றுகிற டாக்டர்களுக்கு தோள் கொடுக்கும் போராட்டமாகவே அமைந்திருந்தது என்பதை இப்போது உணர முடிகிறது.தவறுக்குத் துணை போவதும்,​​ தவறு செய்தவர்களைக் காப்பாற்றுவதும் சங்கங்களின் கடமை என்கிற நிலைமை ஏற்பட்டதால்தான் வர்க்கப்போராட்டம் வலுவிழந்து மக்களின் ஆதரவையும் இழந்தது என்பதற்கு இது ஓர் உதாரணம்.பதவி உயர்வு பெறும்போது,​​ இடமாறுதல் பெற்றே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் உள்ளதால்,​​ மிக அருகில் இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இடமாற்றம் பெற்றுக்கொண்டு,​​ ஆனால் உறைவிடத்தை மாற்றாமல் பொய் முகவரி கொடுத்து ஏமாற்றுகிறார்கள் என்பது இப்போது தெளிவாகியிருக்கிறது.​ சென்னைக்கு அருகில் உள்ள வேலூர் மற்றும் செங்கல்பட்டு,​​ சேலம் அருகில் உள்ள தருமபுரி,​​ மதுரை என்றால் நெல்லை மற்றும் தேனி ஆகிய மருத்துவமனைகளுக்குத் தினமும் வந்து போய்க் கொண்டிருக்கும் டாக்டர்களின் ​ எண்ணிக்கை 75 சதவீதத்துக்கும் அதிகம்.​ சிலர் தங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள வீடுகளைப் பெற்றுக் கொண்டாலும்,​​ அதில் தாங்கள் குடியிருக்காமல்,​​ தங்களின் ​ கீழ் பணியாற்றும் செவிலியர் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்களை ​ ​ உள்வாடகைக்கு அமர்த்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.இந்த மருத்துவர்கள் அதே ஊரில் தங்கியிருக்க வேண்டும் என்பதற்கு அடிப்படையான நோக்கமே,​​ சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு எந்த நேரத்திலும் பாதிப்பு தீவிரம் அடையலாம்.​ அப்போது உடனடியாக இந்த டாக்டர்கள் வந்து,​​ அந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.​ அதற்காகத்தான்,​​ அதே ஊரில் தங்கியிருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.​ வீடுகள் ஒதுக்கப்படுகிறது.​ ஆனால் இந்த மருத்துவர்கள்,​​ வெறும் கையெழுத்துப்போட மட்டுமே மருத்துவமனைக்கு வருவார்கள் என்றால்,​​ இவர்கள் பணியில் இருந்தால் என்ன,​​ இல்லாவிட்டால்தான் என்ன?​ மத்திய மருத்துவக் குழுமத்தின் ஆய்வுக் குழு வரும்போது,​​ மருத்துவக் கல்லூரி அங்கீகாரத்துக்காக வேண்டி,​​ வெறும் எண்ணிக்கை கணக்குக்காக மட்டுமே இந்தப் பேராசிரியர்கள் சகித்துக்கொள்ளப்படுகிறார்கள் என்றால் அதைவிட அவமானம் தமிழக அரசுக்கு வேறில்லை.அனைத்து மருத்துவமனைகளிலும் கைரேகைப் பதிவு வருகைப் பதிவேடு முறையை உடனடியாக அமலுக்குக் கொண்டு வருவதையும்,​​ பொய்முகவரி கொடுத்து தங்கள் சொந்த கிளீனிக்குக்கு தினமும் போய் வந்து கொண்டிருக்கும் பேராசிரியர்கள்,​​ டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுப்பதையும் எந்தச் சங்கத்தின் அச்சுறுத்தலையும் பொருள்படுத்தாமல் அரசு மேற்கொண்டால்,​​ மக்கள் மத்தியில் ஆரோக்கியமான நன்மதிப்பைத் தமிழக அரசு பெறும்.உள்ளூரிலேயே தங்கும் அரசு மருத்துவமனை டாக்டர்களும் கண்காணிக்கப்பட வேண்டியவர்களே.​ அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை,​​ கிளீனிக் வந்து பார்க்கும்படி செய்து,​​ அங்கே ஒரு நோயாளிக்கு ரூ.50,​ ரூ.100 என்று வசூலிப்பதும்,​​ மருத்துவமனையில் தனக்கு அளிக்கப்பட்ட அதே கடை நிலை ஊழியரைத் தனது கிளீனிக்கிலும் நிறுத்திக்கொண்டு,​​ தினமும் ஊதியம் கொடுப்பதுமான நிலைமை எல்லா ஊர்களிலும் நீக்கமற நிறைந்துள்ளது.ஊழலை ஒழிக்க வேண்டும்,​​ அரசு நிர்வாகத்தில் காணப்படும் திறமையின்மை அகற்றப்பட வேண்டும் என்று கோபப்படும் படித்த நடுத்தர வர்க்கத்தினர் உணர வேண்டியது என்ன தெரியுமா?​ லஞ்சம்,​​ ஊழல்,​​ நிர்வாக மெத்தனம் இவையெல்லாம் படிக்காத,​​ கிராமப்புற மக்களாலோ வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள ஏழை பாட்டாளி மக்களாலோ நடத்தப்படவில்லை.​ படித்தவர்கள்மட்டுமேதான் இதில் ஈடுபடுகிறார்கள்.​ படித்தவன் தவறு செய்தால் என்ன நேரும் என்பதை மகாகவி பாரதியிடம் கேளுங்கள்,​​ பதில் கிடைக்கும்!
கருத்துக்கள்

ஏதோ இன்று நேற்று மட்டும் வேலூரில் மட்டும் நடைபெற்ற நிகழ்வன்று. காலங்காலமாக எல்லா நகர்களிலும் ஊர்களிலும் நடைபெறும் முறைகேடே! கூட்டுக் களவாணிகள் ஒருவரை ஒருவர் காட்டிக கொடுப்பதில்லை.எனவே, அடிப்படைக் குறைகளைக் களையும் வகையில் மாற்றம் தேவை.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/9/2010 4:15:00 AM
இலங்கை தேர்தல்:​ 40 சதவீத வாக்குப்பதிவு



கொழும்பு நகரிலிருந்து தெற்கே 225 கிமீ தொலைவில் உள்ள தனது சொந்த ஊரான மதமுலானா கிராமத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தனது வாக்கை வியாழக்கிழமை பதிவு செய்கிறார் இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவின் மனைவி ஷிராந்தி.​ உடன் இலங்கை அதிபர் ​ மகிந்த ராஜபட்ச.​
கொழும்பு,​​ ஏப்.8:​ இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் 40 சதவீத வாக்குகள் பதிவாயின.இலங்கை அதிபர் தேர்தல் கடந்த ஜனவரி 26-ம் தேதி நடைபெற்றது.​ இதில் வெற்றி பெற்று அதிபராக மீண்டும் மகிந்த ராஜபட்ச தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வியாழக்கிழமை நடைபெற்றது.​ காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.196 நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரடியாக தேர்வு செய்வதற்காக வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது.​ மொத்தம் 7,620 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.​ மொத்தம் 1.40 கோடி வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க இருந்தனர்.இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி,​​ முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஜனநாயக தேசிய கூட்டணி ஆகியவற்றுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.தேர்தல் பணியில் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.​ அதிபர் தேர்தலின்போது பணியாற்றிய ஊழியர்களைக் காட்டிலும் நாடாளுமன்றத் தேர்தலில் 50 ஆயிரம் பேர் கூடுதலாக பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.வேட்பாளர்களுக்காக சிறப்பு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.​ வாக்குப்பதிவுக்காக அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 11,155 ஆகும்.​ வாக்குகளை எண்ணுவதற்காக 1,387 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.தேர்தலையொட்டி வாக்குச் சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.அதிபர் ஓட்டுப் போட்டார்:​​ அதிபர் மகிந்த ராஜபட்ச தனது வாக்கைப் பதிவு செய்வதற்காக தெற்கு அம்பன்தோட்டம் மாவட்டத்திலுள்ள வாக்குச்சாவடிக்கு வியாழக்கிழமை காலை சென்றார்.​ அங்கு அவர் தனது வாக்கைப் பதிவு செய்தார்.ரணில் விக்ரமசிங்கே:​​ முன்னாள் பிரதமரும்,​​ எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கே கொழும்பில் தனது வாக்கைச் செலுத்தினார்.ஜெயசூர்யா:​​ கிரிக்கெட் வீரரும்,​​ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளருமான சனத் ஜெயசூர்யா,​​ தபால் மூலம் தனது வாக்கைச் செலுத்தினார்.​ இவர் மடாரா மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்துக்கு போட்டியிடுகிறார்.காலை 7 மணிக்கு மந்த கதியில் துவங்கியது வாக்குப்பதிவு.​ காலை 11 மணி வரை 20 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன.மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தபோது 40 சதவீத அளவில் வாக்குகள் பதிவாகியிருந்ததாகத் தெரியவந்துள்ளது.​ எனினும் அதிகாரப்பூர்வமாக பதிவான வாக்குகள் விவரம் தெரிவிக்கப்படவில்லை.மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பெட்டிகள் சீலிடப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன.வெள்ளிக்கிழமை காலை,​​ தேர்தலின் முழு முடிவுகள் தெரியவந்துவிடும்.பொன்சேகா ஓட்டுப் போடவில்லை:​​ அதிபர் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டுப் போடவில்லை.இதுகுறித்து சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணியின் தலைவர் ஒருவர் கூறியதாவது:​ வாக்காளர் பட்டியலில் பொன்சேகாவின் பெயர் இடம்பெறவில்லை.​ இதனால் அவர் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது என்றார் அவர்.தேர்தல் குறித்து விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர் ஒருவர் கூறியதாவது:​ வடக்கு இலங்கைப் பகுதியில் வாக்குப்பதிவு மந்தகதியிலேயே இருந்தது.​ பிற்பகல் வேளையில் வாக்குப்பதிவு களை கட்டியது என்றார் அவர்.
கருத்துக்கள்

தறபோதைய சிங்கள அரசின் கொடுங்கோன்மையைத் தமிழர்கள் மட்டுமல்லாமல் சிங்களர்களும் விரும்பவில்லை என்பதையே வாக்களிப்பு மந்தநிலை காட்டுகிறது. எனவே, யார் வெற்றி பெற்றாலும் உண்மையில் மக்கள் சார்பாளர்களாக மாட்டார்கள். இனப்படுகொலைக்காரர்களிடம் தமிழர்கள் அடி பணிந்தார்களா என்பதை வெள்ளி முடிவு காட்டி விடும். இருப்பினும் 60%பதிவின்மை இனப்படுகொலைகளுக்கு எதிரான ஒற்றுமைப் போக்கைக் காட்டுவதாகவே கருதப்பட வேண்டும். சிங்களர்களும் திருந்தி இந்தியா போன்ற பிற நாடுகளின் வலையில் வீழாமல்தனித்தனி உரிமையுடைய தமிழ் ஈழ- சிங்கள நாடுகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தும் காலம் விரைவில் வரவேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/9/2010 4:01:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
பருப்பு விலையை கட்டுப்படுத்த ஸ்டாலின் யோசனை



சென்னை, ​​ ஏப்.​ 8:​ பருப்பு விலையைக் கட்டுப்படுத்த இறக்குமதியை நம்பியிருக்காமல்,​​ உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்க வழிகாண வேண்டும் என்று தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்,​​ மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்தார்.விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்க 10 முதல்வர்கள் அடங்கிய உயர்நிலைக்குழுவை 2010 பிப்ரவரியில்,​​ பிரதமர் மன்மோகன்சிங் அமைத்தார்.இந்த உயர்நிலைக் குழுவின் முதல் கூட்டம் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது.இக்கூட்டத்தில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி,​​ வேளாண்துறை அமைச்சர் சரத்பவார்,​​ திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.தமிழக முதல்வர் கருணாநிதி சார்பில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியது:அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய}மாநில அரசுகள் பல்வேறு ​ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.​ பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலை குறைந்து வந்தாலும்,​​ அது சீரான நிலையில் இல்லை.​ மீண்டும் விலை உயரும் நிலையே நீடிக்கிறது.உணவுப் பொருள்களின் உற்பத்தியைப் பெருக்க நீண்ட கால திட்டத்தை வகுக்க உயர்நிலைக் குழு கவனம் செலுத்த வேண்டும்.​ பொது விநியோகத் திட்டத்தைப் பலப்படுத்துவது குறுகிய காலத் திட்டமாக இருக்க வேண்டும்.உள்நாட்டு உற்பத்தி குறைவாக இருப்பதாலும்,​​ இறக்குமதியை நம்பியிருப்பதாலும் விலை உயர்வு சீரற்ற நிலையில் உள்ளது.​ எனவே,​​ உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குவது தற்போதைய அவசியமான தேவையாகிறது.பருப்பு பொருள்களை ஊடு பயிராக இல்லாமல்,​​ பிரதான பயிராக பயிர் செய்வதை ஊக்குவிக்க வேண்டும்.​ தமிழகத்தில் தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி தலைமையிலான சிறப்புக் குழுவினர் இந்த முறையில் உற்பத்தியைப் பெருக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.விவசாயிகள் பெறும் குறைந்தபட்ச கொள்முதல் விலைக்கும்,​​ விற்பனை விலைக்கும் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது.​ எனவே உரிய நியாயமான விலையை நிர்ணயிக்கும் பட்சத்தில்,​​ விவசாயிகளை பருப்பு பொருள்களை பயிரிட ஊக்கப்படுத்த முடியும்.மழை பெய்யும் இடங்களில் பருப்பு வகைப் பொருள்களை விளைவிக்க சிறப்பு திட்டத்தை ஏற்படுத்த வேண்டும்.பொது விநியோகத் திட்டத்தைப் பலப்படுத்த யோசனை:​ பொது விநியோகத் திட்டத்தின்படி வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர்களுக்கு வழங்கப்படும் அரிசியின் அளவை கூடுதலாக தேவையான மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்.​ இதன்மூலம் தேவையான உணவுப் பொருள்கள் கையிருப்பு சாத்தியமாகும்.மத்திய அரசின் மானியத் திட்டத்தின்படி பருப்பு பொருள் இறக்குமதி செய்யப்பட்டு மாநில அரசுகளுக்கு விநியோகம் செய்யப்படுவது சீரற்ற நிலையில் உள்ளது.​ மாதந்தோறும் மாநிலங்களுக்கு வழங்கப்படும் பருப்புப் பொருள்களின் அளவை உறுதி செய்ய வேண்டும்.எனவே,​​ இறக்குமதி செய்யப்படும் பருப்பு பொருள்களை மத்திய அரசு சேமித்து வைக்க வேண்டும்.​ வெளிச்சந்தையில் பருப்பு அதிக விலைக்கு விற்பனை செய்யும் நேரத்தில்,​​ மத்திய அரசு தன் கையிருப்பில் உள்ள பருப்பு பொருள்களை சந்தையில் வெளியிட வேண்டும்.போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்க பயோ மெட்ரிக் அடையாள முறையைக் கொண்டுவர வேண்டும்.​ போலி ரசீது முறையை முற்றிலும் ஒழிக்க ஸ்மார்ட் கார்டுடன் கூடிய பில் இயந்திரங்களைக் கொண்டுவர வேண்டும்.பொது விநியோகத் திட்ட நிர்வாகத்தில் மின் ஆளுமையை முழுமையாக அமல்படுத்த வேண்டும்.​ இவற்றின் மூலம் பொது விநியோகத் திட்டத்தை சிறப்பானதாக உருவாக்க முடியும்.மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை,​​ பயோ மெட்ரிக் விவரங்களாக பதிவு செய்ய ​ இயக்குநர் ஜெனரல் திட்டமிட்டுள்ள நிலையில் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவது அவசியமாகிறது.பயோ மெட்ரிக் முறையில் தேசிய அடையாள எண் வழங்கும் பணியில் மாநில அரசுகள் மற்றும் கணக்கெடுப்பு துறையும் இணைந்து செயல்படுவதன் மூலம் தவறான தகவல் இடம்பெறுவதை தடுக்க முடியும் என்ற அறிவுறுத்தலை மத்திய அரசு வெளியிட வேண்டும்.​ இதற்கான நிதியை மாநில அரசு பகிர்ந்து கொள்ளும்.​ இந்த முறை மூலம் பொது விநியோகத் திட்ட நிர்வாகத்தை மேம்படுத்திட முடியும்.மாநிலங்கள் உணவுப் பொருள் கிடங்கு ஏற்படுத்த மத்திய அரசு 50 சதவீதம் மானியத்தை மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும் என்பது உள்பட பல யோசனைகளை தெரிவித்தார்.
கருத்துக்கள்

முதல்வரகள் மாநாட்டில் அவர் சார்பில் யார கலந்து கொண்டாலும் முதல்வர் கருத்து அல்லது முதல்வர் அறிக்கை என்றுதான் குறிப்பிட வேண்டும். ஊழிய உணர்வைக் காட்டுவதற்காகத் தினமணி மரபு மீறிய தலைப்பு வெளியிடுவது தவறு. ... பல யோசனைகளைத் தெரிவித்தார் எனக்குறிப்பிட்டுள்ளதும் காலடி கழுவும் வேலையே! தினமணி செய்ய வேண்டா இச் சேவையே!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/9/2010 3:49:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்க
நான் பெரிய ஐயா;​ ஸ்டாலின் சின்ன ஐயா: கருணாநிதி ருசிகரம்

First Published : 09 Apr 2010 12:00:00 AM IST

Last Updated : 09 Apr 2010 01:40:22 AM IST

சென்னை,​​ ஏப்.8:​ "நான் பெரிய ஐயா;​ ஸ்டாலின் சின்ன ஐயா' என்று முதல்வர் கருணாநிதி சட்டப் பேரவையில் கூறினார்.பென்னாகரம் இடைத் தேர்தலின்போது,​​ தங்களது வாகனங்கள் கூட சோதனை செய்யப்பட்டதை முதல்வர் கருணாநிதி இவ்வாறு குறிப்பிட்டார்.பென்னாகரம் இடைத் தேர்தலின்போது அரசியல் கட்சித் தலைவர்களின் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டதில் தங்களுக்குள்ள கருத்தை திமுக}பாமக ஆகியவை பேரவையில் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டன.இது தொடர்பாக பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற விவாதம்:​​வேல்முருகன் ​(பாமக):​​ பென்னாகரத்தில் தேர்தல் பிரசாரம் செய்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டன.​ முதல்வர்,​​ துணை முதல்வர்,​​ முன்னாள் முதல்வரின் வாகனங்களைக் கூட சோதனையிட்டனர்.அரசியல் கட்சி தலைவர்களின் வாகனங்களை சோதனை செய்திருக்க வேண்டாம் என்பதே எங்களின் நிலைப்பாடு.​ காவல்துறை நினைத்திருந்தால் அதனைத் தடுத்திருக்கலாம்.முதல்வர் கருணாநிதி:​​ தேர்தல் நேரத்தில் காவல் துறையினர் நடந்து கொண்ட முறைகள்,​​ உருவாக்கிய கட்டுப்பாடுகள்,​​ நடத்திய சோதனைகளுக்கு தமிழக அரசு பொறுப்பல்ல.​ தேர்தல் ஆணையம்தான் பொறுப்பு.வேல்முருகன் ​(பாமக):​​ பல்வேறு தலைவர்களின் வாகனங்களை சோதனை செய்தாலும் எங்களின் அய்யா ​(ராமதாஸ்),​​ சின்ன அய்யா ​(அன்புமணி ராமதாஸ்)​ வாகனங்களை மட்டும் வெடிகுண்டு சோதனை செய்யும் கருவிகளைக் கொண்டு சோதனை செய்தார்கள்.​ ஆனால்,​​ மற்றவர்களின் வண்டிகள் தொடர்ந்து சோதனை செய்யப்படவில்லை.​ சோதனை என்ற பெயரில் அவமானப்படுத்தியுள்ளனர்.முதல்வர் கருணாநிதி:​​ தொடர்ந்து ஏன் சோதனை செய்யப்படவில்லை என்று வேல்முருகன் கேட்கிறார்?​ மார்ச் 24}ம் தேதி நான் பென்னாகரத்தில் தேர்தல் பிரசாரம் செய்த போது எங்கள் கட்சியின் பெரிய அய்யாவாகிய என்னுடைய வண்டியையும்,​​ சின்ன அய்யாவாகிய ஸ்டாலின் வண்டியையும் சோதனை செய்தார்கள்.வேல்முருகன் ​(பாமக):​​ அதனை நான் அறிவேன்.​ தீவிரவாதிகளைப் போல சோதனை நடத்தியதைத் தான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.அமைச்சர் எ.வ.​ வேலு:​​ பென்னாகரத்தில் எனது வண்டியைத்தான் முதன் முதலாக சோதனை செய்தார்கள்.​ ஒரே நாளில் மூன்று இடங்களில் அமைச்சரான எனது வண்டியை நிறுத்தி சோதனை செய்தார்கள்.ஜி.கே.​ மணி ​(பாமக):​​ தேர்தல் ஆணையம் எவ்வளவு பெரிய அதிகாரம் படைத்த அமைப்பாக இருந்தாலும் முதல்வரின் வாகனத்தைச் சோதனையிட வேண்டிய அவசியம் இல்லை.​ எங்கள் அய்யா ​(ராமதாஸ்),​​ மற்றும் சின்ன அய்யாவை ​(அன்புமணி ராமதாஸ்)​ சோதனை என்ற பெயரில் பலமுறை அவமானப்படுத்தியுள்ளனர் என்றார்.
கருத்துக்கள்

எதிரக் கட்சித்தலைவர்களின் வண்டிகளை ஆய்வு என்ற போர்வையில் நிறுத்திக் கெடுபிடி செய்தார்கள் என்றும் ஆளும் கட்சித்தலைவர்களின் வண்டிகளை ஓரிரு முறை மட்டும் ஆய்வு செய்வது போல் பாவனை செய்தார்கள் என்பதும்தான் உண்மை. பா.ம.க. சரியான முறையி்ல் விவரங்களைத் தெரிவிக்கவில்லை. பாவம்! கலைஞருக்கு எத்தனைநாள் ஆசையோ! பெரியவர், சின்னவர் காலத்திலிருந்து உட்கிடக்கையோ!(அப்பொழுது சின்னவருக்கு வாய்ப்பு இல்லாத பொழுதும்) பெரிய்ய்ய்ய ஐயா, சின்ன்ன்ன்ன ஐயா என்று அழைத்துக் கொண்டார். கழகக்கண்மணிகளுக்கு இது கூடப் புரியாமல் போய்விட்டதே! இனிமேல் பெரிய சின்னய்யா, சின்ன சின்னய்யா, சின்னம்மா, என்றெல்லாம் சண்டை வராமல் இருந்தால் சரிதான்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/9/2010 3:24:00 AM

karunaanidhikku: podaangoyaa

By hindu
4/9/2010 1:33:00 AM

maanam eenam illatha pasangalukku enna mariyathai vendikidakkuthu jaathi veripudichchi alayum porampokkugalai thamilnaattai vittey virattavendum

By jagan
4/9/2010 12:10:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

வியாழன், 8 ஏப்ரல், 2010

பி.இ.​ படிக்கும் முதல் தொட்டில் குழந்தை: பேரவையில் அரசு தகவல்



சென்னை, ​​ ஏப்.7:​ ""தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் முதன்முதலாக சேர்க்கப்பட்ட குழந்தை இப்போது பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறது'' என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற தமிழக பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் வி.பி.​ கலைராஜன்,​​ ""1992-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தொட்டில் குழந்தை திட்டம் தொடங்கப்பட்டது.​ அதனை உலகமே வரவேற்றது.​ இத்திட்டத்தின் கீழ் 1992-96-ம் ஆண்டு வரை 136 குழந்தைகளும்,​​ 2001-06-ஆம் ஆண்டு வரை 2,659 குழந்தைகளும் பெறப்பட்டன.​ ஆனால் இந்த திட்டம் இப்போது சரிவர செயல்படுத்தப்படவில்லை'' என்று குற்றம்சாட்டினார்.அதற்கு பதிலளித்து சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேசியது:தொட்டில் குழந்தைகள் திட்டம் திமுக ஆட்சியில் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது.​ இதன் மூலம் கிடைக்கும் குழந்தைகள் தொண்டு நிறுவனங்கள் மூலம் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு தத்து கொடுக்கப்படுகின்றன.​ மீதமுள்ள குழந்தைகள் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு காப்பகங்களில் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்.இந்தத் திட்டம் தொடங்கப்பட்டபோது ​(1992) முதன் முதலாக தொட்டிலில் பெறப்பட்ட குழந்தை இப்போது பொறியியல் கல்லூரியில் பி.இ. ​(எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன்)​ படித்து வருகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
கருத்துக்கள்

பாராட்டுகள்! திட்டத்தை அறிமுகப்படுத்திய ஆட்சியினருக்கும் தொடர்ந்து நிறைவேற்றும்ஆட்சியினருக்கும் பாராட்டுகள்! இனிமேல் தொட்டில் குழந்தை என்னும் நிலை வராத நன்னிலை உருவாட்டும்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/8/2010 3:08:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
'தினமணி' தலையங்கமும் முதல்வரின் அறிவிப்பும்



சென்னை, ​​ ஏப்.7:​ சட்ட மேலவையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று 'தினமணி' தலையங்கமும் விடுத்த வேண்டுகோளை ஏற்று,​​ அதற்கான அறிவிப்பை ​முதல்வர் கருணாநிதி பேரவையில் செய்துள்ளார்.​ ​ தினமணியில் கடந்த மார்ச் 15-ம் தேதியன்று 'முதல்வர் முயன்றால்...' என்ற தலைப்பில் வெளியான தலையங்கத்தில் 'கலைக்கப்பட்ட சட்ட மேலவையை மீண்டும் முதல்வர் கருணாநிதி கொண்டு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.​ ​ இவ்வாறு தினமணியின் ஆக்கபூர்வமான யோசனைகளை உடனுக்குடன் ஏற்று அறிவிப்புகளை வெளியிடும் முதல்வர் கருணாநிதிக்கு வாசகர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
கருத்துக்கள்

கலைஞர் தான் அறிவிக்க இருக்கும் திட்டம் பற்றித் தினமணியில் எழுதச் சொல்வதாகும் பின் அதைத் தான் ஏற்பதாக நாடகம் ஆடுவதாகவும் பொது மக்கள்பேசிக் கொள்கிறார்களே! உண்மையா? இல்லையெனில் தினமணி உடனடியாக முன்னரே பன்முறை வலியுறுத்தியதை நினைவு படுத்தும் வகையில் 1) வரும் கல்வியாண்டு முதலே எல்லா வகுப்புகளிலும் தமிழ் மொழி கட்டாயமாகக் கற்றுத் தரப்படும். 2) உயர்கல்வி வரை தமிழ்வழிக் கல்வி நடைமுறைப்படுத்தப்படும்.3) தமிழ் வழி பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படும். 4) தமிழர் சமயத்திற்கு எதிரான ஆரிய வழிபாடு நிறுத்தப்பட்டுத் தமிழ் வழிபாடே கோயில்களில் நடத்தப்பெறும். 5)தமிழ் நாட்டில்தமிழே ஆட்சி மொழியாகவும் எல்லா நிலை மொழியாகவும் உடனே நடைமுறைப்படுத்தப்படும். 6) தமிழ்நாட்டில் தமிழுக்கே தலைமை தமிழர்க்கே முதன்மை எனத் தமிழ் நலச்சசூழலை உருவாக்கும் என முதல்வர் அறிவிக்கும் வகையில் ஒரு தலையங்கத்தை எழுதட்டும்! முதல்வர் ஏற்றுக் கொணடார் என்றால் காலம் உள்ளளவும் பாராட்டுவோம்! இல்லையேல் அற்பமகிழ்ச்சி இனி வேண்டா. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/8/2010 3:03:00 AM

Well. If you look at the way the TN assembly is functioning, you'll see it is a waste. Nothing but one man/woman worship or altercation or fist fight. Do you need another such floor ? Tanil Nadu politics has gone down so much that the legislative council is going to be such another drain on tax payer money.

By gkh
4/8/2010 12:57:00 AM

Kalaigar realy honest C M in tamil nadu if you requst enything with good reason he was approve immidiatly. Not only this matter all things, thanks kalaiigar.

By Vedai Tamilan
4/8/2010 12:30:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
மீண்டும் சட்ட மேலவை: முதல்வர்



சென்னை, ​​ ஏப்.7:​ ''தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவையை கொண்டு வருவதற்கான தீர்மானம் பேரவையில் விரைவில் நிறைவேற்றப்படும்'' என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.​ ​ சட்டப் பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் ​பேசிய திமுக எம்.எல்.ஏ.​ அனிதா ராதாகிருஷ்ணன்,​​ ''தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவையைக் கொண்டு வர வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார்.​ அதற்குப் பதிலளிக்கும் வகையில் முதல்வர் கருணாநிதி பேசியது:தமிழகத்தில் மீண்டும் மேலவை அமைக்கப்பட வேண்டும் என்று அனிதா ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார்.​ இங்கே ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தில் அவர் என்ன கோரிக்கையை வலியுறுத்தினார் என்பது பத்திரிகையாளர்கள் உள்பட யாருக்கும் தெளிவாகத் தெரியாது.​ எனவே,​​ மீண்டும் 'மேலவை கொண்டுவரப்பட வேண்டும்' என்ற கோரிக்கையை ​நினைவூட்ட விரும்புகிறேன்.​ மேலவை எப்போது கலைக்கப்பட்டது,​​ எதற்கு தேவைப்பட்டது என்பதையெல்லாம் இந்த அவையில் உள்ளவர்கள் நன்கு அறிவார்கள்.​ மேலவையில் 'மூளைகள்' இருந்தன.​ சட்டப் பேரவையில் 'இருதயங்கள்',​ 'அவையங்கள்' இருந்தன.​ ​ நானும்,​​ அன்பழகனும் மேலவை உறுப்பினர்களாக இருந்திருக்கிறோம்.​ 1-11-1986-ல் மேலவை கலைக்கப்பட்டது.​ சிலம்புச் செல்வர் ம.பொ.​ சிவஞானம் தலைவராக இருந்தார்.​ 'மேலவை இனி இருக்காது' என்பதை வருத்தத்தோடு அவர் எடுத்துச் சொன்னார்.1989-ல் திமுக ஆட்சிக்கு வந்ததும் 'மீண்டும் மேலவை வேண்டும்' என்று பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முறைப்படி தில்லிக்கு அனுப்பப்பட்டது.​ அதன்பிறகு அதிமுக ஆட்சிக்கு வந்தது.​ 4-10-1991-ல் அந்தத் தீர்மானம் நீக்கப்பட்டது.மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததும் 26-7-1996-ல் 'மேலவை வேண்டும்' என்ற தீர்மானம் மீண்டும் நிறைவேற்றப்பட்டது.​ காலச்சக்கரம்,​​ தேர்தல் சக்கரம் சுழன்று சுழன்று 2001-ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் 12-9-2001-ல் அந்தத் தீர்மானம் நீக்கப்பட்டது.இப்போது தேர்தல் முடிந்து தொடர்ச்சியாக இரண்டு,​​ மூன்று தேர்தல்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில் அனிதா ராதாகிருஷ்ணன் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.​ அந்தக் கருத்து எனக்கும் உண்டு.​ அவை முன்னவருக்கும் உண்டு.​ அமைச்சர்கள்,​​ திமுகவினருக்கும் உண்டு.மேலவை இருந்தால்,​​ இத்தகைய கூச்சல்,​​ குழப்பம் இல்லாத ஒரு அவையை நாம் காண முடியும்.​ இங்கே ஏற்படுகின்ற அமளிகளுக்கு ஆறுதல் அளிக்கின்ற இடமாக அது இருக்கும்.​ லட்சுமணசாமி முதலியார்,​​ ம.பொ.​ சிவஞானம்,​​ மாணிக்க வேலர்,​​ ராஜாராம் நாயுடு போன்ற அறிஞர்களை மேலவையில் சந்தித்திருக்கிறோம்.​ பேரவையில் ஏற்படுகின்ற சூட்டை தணிக்கின்ற வகையில் மேலவை பயன்பட்டது.''மேலவையும்,​​ பேரவையும் 'கப் அண்ட் சாசர்' போன்றது.​ கப்பில் காபி சூடாக இருந்தால் அதை சாசரில் ஆற்றி சூட்டைக் குறைத்துக் கொள்வதைப் போல மேலவை பயன்படுகிறது'' என்று அண்ணா குறிப்பிட்டார்.​ எனவே 'கப் அன்ட் சாசர்' வேண்டும்.​ அதற்கான அனுமதியை விரைவில் பெறுவோம்.மேலவையை வலியுறுத்தி பேரவையில் விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.​ அதன் பிறகு நிச்சயம் மேலவை உருவாகும் என்றார் முதல்வர் கருணாநிதி.
கருத்துக்கள்

வெண்ணிறஆடையால் மறைக்கப்பட்ட மேலவையை மீண்டும் கொண்டு வருவது நல்லதே! இதற்கு எதிரான கருத்துகள் இருந்தாலும் இதனை அறிவித்த முதல்வருக்குப் பாராட்டுகள். எல்லாக் கட்சிகளிலும் ஒரு பகுதியினருக்கு ஆறுதல். மேலவையை உருவாக்கும் பொழுது அரசு ஊழியர்களுக்கு என ஒரு தொகுதியையும் தமிழ் அமைப்பினருக்கு என ஒரு தொகுதியையும்தமிழ் மருத்துவர்களுக்கு என ஒரு தொகுதியையும்தமிழூ வழிப் பள்ளியினருக்கு என ஒரு தொகுதியையும் உருவாக்க வேண்டும்.என்றாலும் இது தொடர்பான தீர்மானத்தைத் திமுக கொண்டு வந்தாலும் உரிய காலத்தில நிறைவேற்றப் படாது; ஆட்சி மாறும் என்பதுபோல் நல்வாக்கு கூறியுள்ளாரே! ஏன்? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/8/2010 2:50:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வெண்ணிறஆடையால் மறைக்கப்பட்ட மேலவையை மீண்டும் கொண்டு வருவது நல்லதே! இதற்கு எதிரான கருத்துகள் இருந்தாலும் இதனை அறிவித்த முதல்வருக்குப் பாராட்டுகள். எல்லாக் கட்சிகளிலும் ஒரு பகுதியினருக்கு ஆறுதல். மேலவையை உருவாக்கும் பொழுது அரசு ஊழியர்களுக்கு என ஒரு தொகுதியையும் தமிழ் அமைப்பினருக்கு என ஒரு தொகுதியையும்தமிழ் மருத்துவர்களுக்கு என ஒரு தொகுதியையும்தமிழ் வழிப் பள்ளியினருக்கு என ஒரு தொகுதியையும்ஊடகத்தினருக்கு என ஒரு தொகுதியையும் திரு நங்கையினருக்கு என ஒரு தொகுதியையும் உருவாக்க வேண்டும்.என்றாலும் இது தொடர்பான தீர்மானத்தைத் திமுக கொண்டு வந்தாலும் உரிய காலத்தில நிறைவேற்றப் படாது; ஆட்சி மாறும் என்பதுபோல் நல்வாக்கு கூறியுள்ளாரே! ஏன்? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
ஆயிஷாவை விவாகரத்து செய்தார் ஷோயிப்



ஹைதராபாத், ஏப்.7- பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயிப் மாலிக் தனது முதல் மனைவி ஆயிஷாவை விவாகரத்து செய்வதற்கான ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

இத்தகவலை ஆயிஷாவின் குடும்ப நண்பரான ஷாம்ஸ் பாபர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா - கிரிக்கெட் வீரர் ஷோயிப் மாலிக் இடையே திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆயிஷா என்பவர் தனக்கும் ஷோயிப்புக்கும் இடையே ஜூன் 2002ல் திருமணம் நடைபெற்றதாக தெரிவித்தார். இதையடுத்து ஷோயிப்பின் பாஸ்போர்ட் முடக்கி வைக்கப்பட்டது.

ஆனால், இத்திருமணத்தை ஷோயிப் மறுத்து வந்த நிலையில், ஆயிஷாவை விவாகரத்து செய்வதற்கான ஆவணத்தில் அவர் இன்று கையெழுத்திட்டுள்ளார். மேலும், விவாகரத்து செய்ய சம்மதித்து ஆயிஷாவும் கையெழுத்திட்டுள்ளார்.

ஏப்ரல் 15ம் தேதி சானியா-ஷோயிப் திருமணம் நடைபெறுகிறது.

கருத்துக்கள்

விளையாட்டு வீரர்-வீராங்கனை வாழ்க்கை நல்லதாக அமைய வாழ்த்துவதை விட்டு விட்டு எதற்கு ஏதோ ஏதோ தொடர்பற்ற மோதல்கள்? வாழ்க மணமக்கள்! விலகியவரும் நல்ல வாழ்க்கைத் துணை அமைந்து நலமாய் வாழட்டும்! தவறான சொற்களைக் கையாளுபவர்கள் திருந்தியபின் நலமாய் வாழட்டும்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/8/2010 2:33:00 AM

புதன், 7 ஏப்ரல், 2010

உ.வே.சா.வின் சரித்திர நூல்கள் வழி அறியப்படும் தமிழ்க் கல்விமுறைகள்

மின்னஞ்சல் அச்சிடுக PDF

எந்தவொரு சமூகமும் தனக்கெனத் தனித்த கல்வி கலாச்சாரத்தையும் கல்வி வரலாற்றையும் கொண்டதாகவே இருக்கும். சமூகப் பண்பாட்டு - பயன்பாட்டுத் தளத்தில் கல்வியின் வினை புரிதல் - அசைவியக்கம் எவ்வாறு உருப்பெற்றுச் செயல்படு கின்றது என்பதைச் சிந்திப்பது அவசியமாகும். ஆரம்ப காலத்தில் கல்வியானது தொழில், வாழ்வியல் முறைமைகளை அடுத்த தலைமுறைக்குக் கடத்துதல் என்ற நிலையையே குறித்தது. அரசு உருவாக்கத்தின் பின்புலத்தில் உருப்பெற்ற மாற்றுச் சமூகத்தில் அறிவுப் பாரம்பரியத்தின் உருப்பேறாகக் கல்வி அடையாளப் படுத்தப்பட்டது. இவற்றில் போர்த்தொழில் சார்ந்த உடலுழைப்பு நிலைகளும் உண்டு. சாதிய வர்க்க சமூகத்தில் கல்வி அனைவருக்குமான பொதுமைக்குள் செயல்படவில்லை.

இப்பின்னணியில் தமிழ்க்கல்வி வரலாற்றை நோக்கும்போது அது மொழிநிலைப் பண்பாடு சார்ந்து கட்டமைக்கப்பட்டி ருப்பதைக் காணமுடியும். தமிழ்ச் சூழலில் பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முந்தைய கல்வி வரலாறு சார்ந்த தரவுகள் இலக்கணங்கள், இலக்கியங்கள், போன்ற அகவயப்பட்ட நிலையினவாகவே உள்ளன. அகத்தியரிடம் தொல்காப்பியர் முதல் பன்னிருவர் பாடங்கேட்டனர் என்ற செய்தி (தொல். பாயிரம்.நச்சர்.) தொடங்கி மாணவர் இலக்கணம், ஆசிரியர் இலக்கணம், பாடங்கேட்டலின் வரலாறு, ஆசிரியர் - மாணவர் உறவுநிலை போன்ற இலக்கணத் தரவுகளும் கற்றார், கல்லாதார் நிலை, கல்வியின் பயன், கற்றோருக்குரிய சமூக மதிப்பீடு போன்ற இலக்கியத் தரவுகளும் தமிழ்ச் சமூகத்தில் பல்வேறு கற்கை நெறிகள் வழக்கில் இருந்தமையைக் காட்டுகின்றன.

பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை தமிழ்ச்சமூகத்தில் திண்ணைப் பள்ளியில் படித்தல், புலவர்களிடம் தனிநிலையில் கற்றல், மடங்களில் கற்றல் முதலிய கல்வி முறைகள் வழக்கி லிருந்தன. காலனிய விளைவுகளான அச்சு உருவாக்கம்-- சுவடிகள் அச்சுருவம் பெறல், கல்விப் பரவலாக்கம் போன்றவை மேற்சுட்டிய மரபான தமிழ்ப் பயிற்றுமுறைகளை மாற்றுத்திசை யில் கொண்டுசென்றன. இந்தப் பின்புலத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரையிலான பாரம்பரிய தமிழ்ப் பயிற்றல் முறைமைகள் எவ்வாறு நிகழ்ந்தன என்பதற்கு உ.வே.சா. எழுதிய சரித்திரங்கள் முக்கிய ஆவணங்களாகத் திகழ்கின்றன.

உ.வே.சா. எழுதிய என் சரித்திரம், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரம், தியாகராஜ செட்டியார் சரித்திரம் ஆகிய நூல்கள் சுட்டும் கல்வி முறைமைகள் முதன்மைத் தரவுகளாகக் கொள்ளப்படுகின்றன. இச்சரித்திர நூல்களை வாசிக்கும்போது உ.வே.சா.வுக்கு முந்தைய கல்விமுறை, உ.வே.சா. பயின்ற கல்விமுறை, உ.வே.சா. பயிற்றுவித்த கல்விமுறை என மூன்று தலைமுறைகளில் கற்றல், கற்பித்தல் சார்ந்த செயல் பாடுகள் எவ்வாறு மாற்றம் பெற்று வந்துள்ளன என்பதைப் பார்க்கமுடியும். இச்சரித்திர நூல்கள் குறிப்பிடும் கல்வி தொடர்பான தரவுகளை ஒருவாறு,

- மரபான கல்விமுறைகள்

அ. குருகுலக் கல்விமுறை

ஆ. திண்ணைப்பள்ளிக் கல்விமுறை

இ. தனிநிலையில் புலவர்களிடத்துக் கற்கும்

உயர்நிலைக் கல்விமுறை

- நிறுவன மயமாக்கப்பட்ட கல்விமுறை

என்ற வகைமைக்குள் அடக்கலாம்.

1. மரபான கல்விமுறைகள்

அ. குருகுலக் கல்விமுறை

பள்ளி எனும் சொல் சமண, பௌத்த சமயங்களின் கொடை ஆகும். இந்தியக் கல்வி மரபில் வேதக்கல்வி முதலாக இதிகாச -புராணங்களில் குறிப்பிடப்பெறும் குருகுலக் கல்வியானது மாணவன் குருவின் வீட்டில் 12 ஆண்டுகள் தங்கிப் படித்தல், அவருக்குத் தேவையான வேலைகளைச் செய்தல் தொடங்கிப் பல கட்டுப்பாடுகள் உடையதாக விளங்கியது. இதன் எச்சங்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் காணப்பட்டன. உ.வே.சா. வின் தந்தை வேங்கடசுப்பையர் (வேங்கட சுப்ரமணிய ஐயர்) தன் உறவுக்காரர் கிருஷ்ணையரிடம் குருகுல முறையில் அவர் வீட்டில் தங்கி 12 ஆண்டுகள் சங்கீதம் பயின்றார். என் சரித்திரத் தில் ‘என் தந்தையாருடைய குருகுல வாசம் ஆரம்பமாயிற்று... அவருக்குப் பல வேலைகளை ஏவுவார். தினந்தோறும் தம்முடைய ஆசிரியருக்கு என் தந்தையார் வஸ்திரம் துவைத்துப் போடுவார். வெந்நீர் வைத்துக் கொடுப்பார்... தம்முடைய ஆசிரியர் குதிரையில் ஏறிச் செல்லும்போது சில சமயங்களில் என் தந்தையார் அக்குதிரையின் லகானைப் பிடித்துச் செல்வதுண்டாம்Õ (2004:29,30) என்று தன் தந்தை சங்கீதம் பயின்றதை விளக்குகின்றார். குருகுலக் கல்விமுறையில் பயின்றவர்கள் பொறுமையும் பணிவும் உண்டாகப் பி¬க்ஷ யெடுத்து அதைத் தம் ஆசிரியர்பாற் கொடுத்து எஞ்சியதைத் தாம் உண்டு வந்தார்கள் (2005:-2:188). இப்படியான கல்விமூலம் கற்பவரின் வாழ்வியல் முறைகள், கற்பிக்கப்படுபவரின் தற்சார்பு- அறநிலைப்பட்ட ஒழுக்க நெறிகளின் வழித் தோற்றம் கொள்கின்றன. போதனா முறையைத் தாண்டி வாழ்வியலைக் கட்டமைப்பதிலும் ஆசிரியர் செயல்பாடு ஊடாடுகின்றது.

ஆ. திண்ணைப்பள்ளி கல்விமுறை

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் கிராமங்கள்தோறும் இருந்திருக்கின்றன. இவற்றைத் தெற்றிப் பாடசாலைகளென்றும் சொல்வதுண்டு. ஒரே ஊரில் ஒன்றுக்குமேற்பட்ட பள்ளிக்கூடங்களும் இருந்திருக் கின்றன. ‘சென்ற நூற்றாண்டுவரையில் நம் நாட்டில் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் இருந்துவந்தன. நான் இளமையில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தவனேÕ(2005:-2:189) என்று கூறும் உ.வே.சா. இப்பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் பயிலும் முறைமைகள் குறித்தும், பயிற்றுவிக்கப்படும் பாடங்கள் குறித்தும் மிக விரிவாகப் பதிவுசெய்துள்ளார். வித்தியாப்பியாசம் (பள்ளியில் சேர்த்தல்) செய்தல் தொடங்கி விடியற் காலையில் எழுந்து பள்ளிக்கு வருதல், மணலில் எழுதுதல், சுவடியில் எழுதுதல், மாணவர்கள் சுவடிகளைப் பாதுகாத்தல், ஏடெழுதும் வழக்கம், தூக்குப் பலகை, ஆசிரியர் வழிபாடு, அவருக்குரிய காணிக்கை, விடுமுறை நாட்கள், மாணவர்களுக்குரிய தண்டனைகள், மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுத்த பாடங்கள் போன்றவை அப்பதிவுகள்.

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தன் தந்தை நடத்திய பள்ளியில் பயின்றார். அங்கு அவர் தமிழ் நெடுங்கணக்கு, ஆத்திசூடி முதலிய நீதி நூல்கள், எளிய நடையிலுள்ள அருணகிரியந்தாதி முதலிய அந்தாதிகள், கலம்பகங்கள், மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் முதலிய பிள்ளைத் தமிழ்கள், நிகண்டு, கணிதம் முதலியவற்றைக் கற்றார் (1986:9). உ.வே.சா. உத்தமதானபுரத்தில் நாராயண ஐயரென்பவர் நடத்திய பள்ளியிலும் சாமிநாதையர் நடத்திய பள்ளியிலும் படித்தார். நாராயண ஐயரிடத்தில் அரிச்சுவடி, எண்சுவடி முதலியவை களையும் சாமிநாதையரிடத்தில் சம்«க்ஷப ராமாயணம், விஷ்ணு ஸஹஸ்ரநாமம், நீதி சாரம், அமரம் மூன்று காண்டங்கள், கணக்குகள் முதலியவைகளையும் கற்றார். பின்பு கிருஷ்ண வாத்தியார் பள்ளிக்கூடத்திலும் பண்டாரம் என்பவருடைய பள்ளிக்கூடத்திலும் படித்தார். பண்டாரம் தெலுங்கும் சொல்லிக்கொடுத்தார். பொதுமை நிலையில் இப்பள்ளிகளில் நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதிநூல்கள் முதலியனவும் கணிதத்தில் கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று முதலிய பலவகை வாய்பாடுகளும் மருத்துவத்தில் வீட்டிற்குத் தேவையான வைத்திய முறைகளும் வடமொழியில் அமரம் முதலியனவும் பாடமாக இருந்தன. இப்பள்ளியில் நெட்டுருபண்ணுதல் முக்கியமானதாக இருந்தது.

இப்பள்ளிக்கூடங்களில் தண்டனைகள் கடுமையாக இருந்தன. பிரம்படி, மாணவன் கயிற்றைப் பிடித்துத் தொங்கும்போது ஆசிரியர் அவன் காலில் அடிக்கும் கோதண்டம் என்ற தண்டனை, படிக்காத மாணவன் முதுகில் பிறர் ஏறிச் சவாரி செய்யக்கூடிய குதிரை ஏற்ற தண்டனை முதலியவை அவற்றுள் சில. இப்பள்ளிக் கூட ஆசிரியர் கணக்காயர் எனப்பட்டார். அவருக்கு மாதம் கால் ரூபாய் சம்பளமாக ஒவ்வொரு மாணவரும் கொடுத்தனர். இப்பள்ளிகளுக்குப் பௌர்ணமி, அமாவாசை, பிரதமை, அஷ்டமி ஆகிய நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டது. பலசாலியாக இருப்பவன் சட்டாம் பிள்ளையாக இருப்பான்.

இ. தனிநிலையில் புலவர்களிடத்துக் கற்கும் உயர்நிலைக் கல்விமுறை

திண்ணைப் பள்ளிக்கூட - பாடசாலைப் படிப்பு முடிந்த பிறகு வித்துவான்களிடம் -- புலவர்களிடம் சென்று தனிநிலையில் இலக்கண, இலக்கியங்களைப் பாடங்கேட்டனர். சுப்பிரமணிய தேசிகர், மீனாட்சி சுந்தரம் பிள்ளை, தியாகராஜ செட்டியார், உ.வே.சா. ஆகியோர் யார்யாரிடம் என்னென்ன பாடங்கேட்ட னர், இவர்கள் யார்யாருக்குப் பாடஞ்சொன்னார்கள் என்பது பற்றிய தகவல்கள் விரிவான நிலையில் பதிவுசெய்யப் பெற்றுள் ளன. அந்தக் காலத்தில் மாணாக்கர்களுக்குப் பாடஞ்சொல்லிக் கொடுக்கும் தமிழ்ப்புலவர்கள் பலர் இருந்தனர். ஒருவரிடத்தே அனைத்து நூல்களும் இல்லாத காரணத்தால் படிப்போரும் பலரிடம் சென்று கல்வி கற்றனர். வேலாயுத முனிவர், உறையூர் முத்துவீர வாத்தியார், திரிசிரபுரம் சோமசுந்தர முதலியார், விமநாயக்கன் பாளையம் இருளாண்டி வாத்தியார், பாலக்கரை வீரராகவ செட்டியார், கொட்டடி ஆறுமுகம் பிள்ளை முதலியோர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை காலத்தில் பாடஞ் சொல்லிக்கொடுத்த வித்துவான்கள். எழுத்து, சொல், பொருள், யாப்பிலக்கண நூல்களைத் தக்கவர்களிடத்துப் பாடங்கேட்டுக் கற்றுக்கொண்ட சுந்தரம் பிள்ளை வடமொழி சார்ந்து உருப்பெற்ற அணியிலக்கண நூலான தண்டியலங்காரத்தைப் பல நிலையில் அலைந்து திரிந்து திரிசிரபுரப் பரதேசி ஒருவரிடம் பிரதியைப்பெற்றுப் படித்தார் என்ற செய்தியும் அக்காலக் கல்விமுறையோடு குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.

தியாகராஜ செட்டியார், உ.வே.சா. போன்றோரும் வித்துவான்கள் பலரிடம் தனிநிலையில் பாடங்கேட்டுள்ளனர். உ.வே.சா. சடகோபையங்கார், குன்னம் சிதம்பரம் பிள்ளை முதலியோரிடம் பாடங்கேட்டுள்ளார். திருவாவடுதுறை மடத்தின் வித்துவானாகச் செயல்பட்ட மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் பாடங்கேட்ட முறையை நிறுவனமயமாக்கப் பட்ட பின்னணியில் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. கோபாலகிருஷ்ண பாரதியிடம் சங்கீதம் படிப்பதைத் தம் ஆசிரியர் விரும்பாததால் அதைத் தாம் கைவிட்டதாகக் கூறுவதும் மடத்தில் இருவேளைகளில் பாடங்கள் நடக்கும் என்று சொல்லுவதும் இப்பின்புலத்திலேயே பார்க்க முடியும். உயர்நிலைக் கல்விமுறையில் சிற்றிலக்கியங்கள், சமயக் காப்பியங்கள், இலக்கண நூல்கள் போன்றவை பாடஞ்சொல்லிக் கொடுக்கப்பட்டன.

இம்மரபான கல்விமுறைகள், அடிப்படையில் எல்லோருக்கு மானதாக அமையவில்லை. தன்னளவில் சில விலக்குதல்களைக் கடைபிடித்துள்ளதை அறியமுடிகின்றது. பாடம் கற்பிப்பவர் பாடம் கற்றவர் ஆகிய இருவருமே சமூகத்தின் மேல்மட்ட அடுக்குகளில் இருப்பதை மேற்சொன்ன தரவுகள் உறுதிப்படுத் தும். அக்காலங்களில் ஐயர், ஐயங்கார், பிள்ளை, செட்டியார், முதலியார் ஆகிய பிரிவினர்களே கல்வியாளர்களாக இருந்தி ருக்கின்றார்கள். மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் படித்தவர்கள் பற்றி உ.வே.சா. ‘‘இவரிடம் படித்தவர்களிற் பல சாதியினரும் பல சமயத்தினரும் உண்டு. பார்ப்பன‌ர்களில் ஸ்மார்த்தர்கள், வைஷ்ணவர்கள், மாத்வர்கள் என்னும் வகுப்பினரும் வேளா ளரிற் பல வகுப்பினரும், பிறசாதியினரும், கிறிஸ்தவர்களும், மகம்மதியர்களும் இவர்பாற் பாடங்கேட்டதுண்டு. நாகூரிற் புகழ்பெற்று விளங்கிய குலாம்காதர் நாவலரென்னும் மகம்ம தியர் ஒருவர் இவர்பால் வந்து சீறாப்புராணம் முதலியவற்றைப் பாடங்கேட்டனர்’’(1986:145) என்று குறிப்பிடுவது ஒருவகை உயர்நிலைப் பிரிவினரையே என்பதும் குறிப்பிடத்தக்கது.

இக்கல்வி முறைகளில் கற்பிக்கப்பட்ட விடயங்கள் அனைத்தும் தமிழ்மொழியை அறிதல் - பயிலல், சமயம் சார்ந்த கருத்தாக்கங் களைப் பயிலல் என்ற அளவிலேயே இருந்திருக்கின்றன. குறிப்பாகக் கல்வியானது இக்காலகட்டத்தில் சமய நீக்கம் செய்யப்பட்டதாக இருந்திருக்கவில்லை.

2. நிறுவனமயமாக்கப்பட்ட கல்விமுறை

ஐரோப்பியர்களின் வருகைக்குமுன்பு சமய நிறுவனங்கள் சார்ந்து இருந்த கல்விச் செயல்பாடுகள், அவர்களின் வருகைக்குப் பின்பு அரசு சார்ந்த செயல்பாடாக மாறியது. தமிழகத்தில் வழக்கி லிருந்த குருகுல, திண்ணை முதலிய பல மரபான கல்விமுறைகளை அரசாங்கம் கையகப்படுத்தியது. திண்ணைக் கல்விமுறையில் பயின்ற தியாகராஜ செட்டியார், உ.வே.சா. போன்றோர் அரசுசார் நிறுவனங்களில் பாடஞ்சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தனர். தான் வாழ்கின்ற சமகாலத்திலேயே வெவ்வேறு வகையான கல்வி முறைகளை இவர்கள் சந்தித்திருக்கின்றனர். இவ்விரண்டிற்கு மான முரண்பாடுகளையும் இவர்கள் எதிர்கொண்டுள்ளனர். தியாகராஜ செட்டியார் ஸ்ரீரங்கம் பள்ளியில் வேலைசெய்யும் போது மாணவர்களுக்கு வைத்திருக்கும் பாடம் குறைவாக உள்ளதாகக் கூறி வேறுசில நூல்களையும் கற்பித்தார். அதற்காக மேலதிகாரியின் கோபத்திற்கும் ஆளானார் (2005:-3:415). உ.வே.சா. கும்பகோணம் கல்லூரியில் வேலை பார்க்கும்போது மற்ற பாடங்களை நடத்தும் ஆசிரியர்களைவிட தமிழ் ஆசிரியர்களுக்கு ஊதியம் குறைவு என்பதையும் அவர்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் தமிழாசிரியர்களுக்கு மதிப்பு குறைவு என்பதையும் பதிவுசெய்துள்ளார். ஆசிரியர்களுக்குத் தேவையான பணிகளைச் செய்து பாடங்கற்ற தமிழ்க்கல்வி மரபு பின் ஐரோப்பியக் கல்விமுறையால் வேறொரு நிலைப்பாட்டை அடைந்தது. தியாகராஜ செட்டியார் பட்டாளத்துப் பள்ளி, ஸ்ரீரங்கம் பள்ளி, மாகாணப் பள்ளியாக இருந்து கல்லூரியாக விரிவடைந்த கும்ப கோணம் கல்லூரி ஆகிய இடங்களிலும் உ.வே.சா. கும்பகோணம் கல்லூரி, சென்னை ப்ரிசிடென்சி கல்லூரி ஆகிய இடங்களிலும் பணிபுரிந்த காலங்களில் இருந்த தமிழ்க் கல்விமுறைபற்றி இப்பிரதிகள் மிக விரிவான தரவுகளைத் தருகின்றன.

இக்காலங்களில் திருவாவடுதுறை போன்ற மடங்களில் மரபான முறையிலேயே தமிழ்க் கல்வி நடைபெற்று வந்துள்ளது. உ.வே.சா. கற்ற காலங்களில் சின்னவகை வகுப்பு, பெரியவகை வகுப்புகள் நடைபெற்றன. மொழி-இலக்கண, இலக்கியம் சார்ந்த ஆழ்நிலைத் தமிழ்கற்றல் முதன்மைபெற்றது. மடங்களில் இருப்பவர்கள் தமிழ் கற்றல் ஒன்றையே முதன்மையாகக் கொண்டமையால் அவர் களுக்குப் பாடஞ்சொல்லல் கடினம் என்றும் கல்லூரியில் பாடஞ் சொல்லல் எளிமையானது என்றும் குறிப்பிடுகின்றார் உ.வே.சா.

மீனாட்சிசுந்தரம் பிள்ளை, உ.வே.சா. போன்றோர் கற்ற காலகட்டங்களில் இருந்த பள்ளிக் (பாலர்) கல்விபற்றியும், தனி முறையில் பாடங்கேட்ட உயர்நிலைக் கல்விபற்றியும் விரிவான நிலையில் அறியமுடிகின்றது. ஆனால் உ.வே.சா. பாடம் நடத்திய காலத்தில் கிடைக்கக்கூடிய தரவுகள் முழுமையும் உயர்கல்வி பற்றியதாகவே உள்ளது. சில பள்ளிகளின் பெயர்கள் குறிப்பிடப் பெற்றிருப்பினும் அக்காலப் பள்ளிக் கல்விமுறைபற்றியும் நடத்திய பாடங்கள்பற்றியும் குறிப்புகள் காணப்படவில்லை.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வேற்றுமொழியாளர்களுக்குத் தமிழ்மொழி கற்பித்தல் - - மொழிக்கல்வி சார்ந்து பல நூல்கள் எளிமை வடிவில் -- உரைநடை வடிவில் தோன்றின. அக்காலச் சமூக அரசிய லோடு தொடர்புடைய இப்புத்தகங்களின் கற்றல் -- கற்பித்தல் முறைமைகள் பற்றிய குறிப்புகளும் இந்நூல்களில் இல்லை. அயலவர்களுக்கான தமிழ்மொழிக் கற்பித்தல் நிலையில் இயங்கிய சென்னைத் தமிழ்ச் சங்கத்தில் (ஜார்ஜ் போர்ட் காலேஜ்) தமிழ் வித்துவான்களாக இருந்த சிலரைப் பற்றிக் குறிப் பிடும் உ.வே.சா. அதில் நடைபெற்ற கல்விமுறைபற்றிக் குறிப்பிட வில்லை.

தாங்கள் வேலைபார்த்த நிறுவனங்களில் இருந்த தமிழ் தவிர்ந்த பிற பாடமுறைகள், அப்பாடங்களைக் கற்றார் -- கற்பித் தார் பற்றிய விவரணங்கள், அப்பாட முறைகளின் பின்னணியில் உருவான சமூக மாற்றங்கள் போன்றனவும் இப்பிரதிகளில் பதிவுபெறவில்லை.

மரபான கல்விமுறைகளில் காணக்கிடைக்கும் சில தன்மைகள் நிறுவனம்சார் கல்வி முறைகளிலும் காணப்படுகின்றன. மொழிப்பயிற்சி, இலக்கண இலக்கியங்களை மனனம் செய்தல், சமயக் கல்வி போன்றவை கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களிலும் தொடர்ந்து கற்பிக்கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.

ஆயினும் அக்காலகட்டத்தில் சமூக அடுக்கின் பல்வேறு பிரிவுகளிலிருந்து உருவான ஆளுமைகள், அவர்களின் கருத் தாக்கங்கள் நிரம்ப அறியக் கிடைக்கின்றன. தமிழ் இலக்கியங்களைச் சைவ, வைணவம் தவிர்ந்த வேறுசில சமயம்சார்ந்த உரையாடல்களுக்கு உட்படுத்தியமை, ஒடுக்கப்பட்ட தன்னிலைகள் சார்ந்து தமிழ் இலக்கியங்களை அவைதிகப் பின்புலத்தில் விவாதத்திற்கு உட்படுத்தியமை போன்றவற்றை அக்காலகட்டத் தின் அறிவுச் செயல்பாடுகளாக அடையாளப்படுத்தலாம். இவ்வகையான கல்விச் செயல்பாடுகளையோ, ஐரோப்பியரின் அறிவியல்- தொழில்நுட்பம் சார்ந்த கல்விச் செயல்பாடுகளையோ உ.வே.சா.வின் இப்பிரதிகள் புலப்படுத்தவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.

உதவிய நூல்கள்

1. 1986--ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

2. 2004 -- என் சரித்திரம், டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம், சென்னை.

3. 2005 -- டாக்டர் உ.வே.சா. அவர்களின் உரைநடை நூல்கள், நான்கு தொகுதிகள், டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம், சென்னை.

Bookmark and Share
சரியான, முறையான, செவ்வையான, தேவையான கருத்துகள். ஆனால் ஆட்சிமொழிச் சட்டத்தை மாற்றிப் புதிய சட்டம் பிற்ப்பிக்காமல் எந்தத் துறையாலும் ஒன்றும் செய்ய இயலாது. அதிகாரமற்ற தமிழ் வளர்ச்சித்துறையும் கைகட்டிக்கொண்டுதான் இருக்க வேண்டும். எனினும் சிறப்புச் செய்தியாளருக்குப் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

Front page news and headlines today

செம்மொழித் தமிழ் மாநாட்டுப் பணிகள் தமிழக அரசால், அனல் பறக்கும் வேகத்தில் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த நேரத்தில், தமிழக அரசு, தமிழ் மொழியை தனது ஆட்சிப் பணிகளில் முழுமையாக நடைமுறைப்படுத்தி, சரியாக கையாள்கிறதா என்றால், இல்லை என்பதே பதில்.


கடந்த 1956ம் ஆண்டு தமிழ்நாடு ஆட்சி மொழிச் சட்டம் தயாரிக்கப்பட்டு, 1957 ஜனவரி 19ல் கவர்னரின் ஒப்புதலைப் பெற்று, அதே மாதம் 23ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. இச்சட்டத்தின் படி, தமிழகத்தின் ஆட்சி மொழியாக தமிழ், மாநிலம் முழுவதும் அமலில் இருக்கும். இதைத் தொடர்ந்து, 1978 ஜூன் 21ல் தமிழக அரசாணை எண் 1134ன் படி, 'தமிழக அரசு நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் அரசு ஊழியர்கள், தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும்!' இன்னொரு உத்தரவு, 'அரசு ஊழியர்கள், தங்கள் இனிஷியலையும் தமிழிலேயே குறிப்பிட வேண்டும்' என்கிறது. இந்த உத்தரவுகள் நடைமுறையிலேயே இல்லை என்பது, அரசு அலுவலகம் பக்கமே எட்டிப் பார்க்காத குழந்தைக்குக் கூட தெரியும். அப்படியானால், தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தைச் செயல்படுத்தாத, அரசுப் பணியாளர்களை கட்டுப்படுத்த எந்த அரசாணையும் இல்லையா? இருக்கிறது.


அதுபற்றி சென்னையைச் சேர்ந்த வக்கீல் ராஜாசெந்தூர் பாண்டியன் கூறியதாவது: கடந்த 1982 ஜனவரி 6ல் அரசாணை எண் 24ன்படி, தமிழ் ஆட்சி மொழித் திட்டம், சார்நிலை அலுவலகங்களில் செம்மையாக அமல்படுத்தப்படாவிட்டால், அதை, துறைத் தலைவர்களின் கவனத்துக்கு இயக்குனர் கொண்டு வரலாம். நிலைமையைப் பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு, துறைத் தலைவர்களைச் சார்ந்தது. துறைத் தலைவர் அலுவலகங்களில் இத்திட்டத்தின் நிலைமை திருப்திகரமாக இல்லாவிட்டால், அதை இயக்குனர், தலைமைச் செயலகத்தில் உள்ள, துறைச் செயலர்களின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு, செயலர்களைச் சேரும். இந்த அரசாணை, தற்போது வரை நடைமுறையில் இருப்பதாக, தமிழ் வளர்ச்சித் துறை தெரிவிக்கிறது. அப்படியானால், அரசு அலுவலகங்களில் முழுமையாக தமிழைக் கையாளாத ஊழியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு, 'எந்த நடவடிக்கையும் இல்லை' என்று தான் பதில் கிடைக்கிறது.


இது தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அளித்த பதில்: தமிழை முழுமையாகக் கையாளாத அரசு அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. துறைத் தலைமை அலுவலகங்களில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனரால் ஆறு மாதத்துக்கு ஒரு முறை ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. மாவட்ட சார்நிலை அலுவலகங்களில் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர்களாலும், ஆறு மாதத்துக்கு ஒரு முறை ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. ஆய்வின் அடிப்படையில், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்குத் தமிழின் பயன்பாடு குறித்து அந்தந்த துறைத் தலைவர்கள் முன்னிலையில் கலந்துரையாடல் கூட்டம் நடத்தி, குறைகள் சரிசெய்யப்பட அறிவுரைகளும், பயிற்சியும் அளிக்கப்படுகின்றன. இவ்வாறு இயக்குனர் பதிலளித்துள்ளார்.


அதாவது, தமிழ் மொழி தொடர்பான அரசாணைகள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், தமிழில் மட்டும் தான் அனைத்து அரசாணைகளும் வெளியிடப்பட வேண்டும் என்ற உத்தரவும் காற்றில் பறக்கவிடப்பட்ட நிலையில், இவ்வளவு ஆர்ப்பாட்டத்துடன் செம்மொழி மாநாடு தேவையா; தமிழ் வளர்ச்சிக்கு என ஒரு துறை தேவை தானா எனும் கேள்வி தான் எழுகிறது. தமிழகத்தில் தமிழ்ச் செம்மொழி வளர்ச்சிக்கு கட்டமைப்பு சரியான முறையில் அமைக்கப்படவும் இல்லை; செயல்படவும் இல்லை என்பது, இதன் மூலம் தெளிவாகிறது. இவ்வாறு வக்கீல் ராஜாசெந்தூர் பாண்டியன் கூறினார்.


'டாஸ்மாக்' தமிழா? ஆங்கிலமா? 'வர்த்தக நிறுவனங்கள், வணிக வளாகங்கள், தங்கள் பெயரை தமிழ் எழுத்துக்கள் பிரதானமாகத் தெரியும் படி எழுத வேண்டும்' என, ஏற்கனவே உத்தரவு உள்ளது. சமீபத்திய பட்ஜெட் கூட்டத்தில், சென்னை மாநகராட்சியும் இந்த உத்தரவை மறு உறுதிப்படுத்தி, 'அப்படி செய்யாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என அறிவித்துள்ளது. ஆனால், மாநிலம் முழுவதும் வியாபித்துள்ள அரசு நிறுவனமான, 'டாஸ்மாக்' மதுபானக் கடைகளின் பெயர்ப் பலகைகளில், ஆங்கிலம் தான் பிரதானமாக இருக்கிறது என்பது, தமிழ்க் குடிமகன்கள் அனைவரும் அறிந்த விஷயம். ஒருவேளை, இந்த உத்தரவுகள் எல்லாம் தனியார் நிறுவனங்களுக்குத் தான் பொருந்துமோ; அரசு நிறுவனங்களுக்கு பொருந்தாதோ, என்னவோ!


திருவள்ளுவர் ஆண்டு எங்கே? கோவையில் நடக்க உள்ள செம்மொழித் தமிழ் மாநாடு பற்றிய விளம்பரங்கள், மாநிலம் முழுவதும் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில், 'உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - கோவை 2010' எனக் குறிப்பிடப்படுகிறது. இதில், 2010 என்பது ஆங்கில ஆண்டு கணக்கு தானே. தமிழக அரசு நடத்தும், உலகத் தமிழ் மாநாட்டில் கூட ஆங்கில ஆண்டைத் தான் குறிப்பிட வேண்டுமா? திருவள்ளுவர் ஆண்டு என்ன ஆயிற்று? திருவள்ளுவர் ஆண்டு கணக்குப்படி இது, 2041. நியாயப்படி, 'உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - கோவை 2041' என்று தானே விளம்பரப்படுத்தியிருக்க வேண்டும். போதாத குறைக்கு, பஸ்களிலும், பொது இடங்களிலும், செம்மொழி மாநாட்டின் இலச்சினையுடன் கூடிய விளம்பரத்தில், 'சூன் 23 - 27' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறிது நேரம் யோசித்த பிறகே, அது, ஜூன் 23 - 27 எனப் புரிகிறது. இந்த காமெடி எப்போது தான் ஓயுமென்றே தெரியவில்லை. ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்துவதானால், அதை அதன் உச்சரிப்பிலேயே பயன்படுத்துவது தான் நியாயம். அவ்வாறில்லாமல், அதை அப்படியே தமிழ்ப்படுத்தி, தமிழையும் படுத்தி, ஆங்கிலத்தையும் படுத்துவது அநியாயம். தமிழக அரசே, 'ஆனி 9 - 13' என தமிழ்த் தேதியைக் குறிப்பிடாவிட்டால், வேறு யார் தான் அதைப் பயன்படுத்துவது?


- நமது சிறப்பு நிருபர் -