வெள்ளி, 9 அக்டோபர், 2009

மனிதப் புதைகுழிகள் காரணமாக வெளிநாட்டு உதவியை தவிர்க்கும் இலங்கை

08 October, 2009 by admin

வன்னிப் பரப்பில் மனிதப் புதைகுழிகள் காணப்படுவதால் வெளிநாடுகள் கண்ணிவெடிகளை அகற்ற முன்வருவதை இலங்கை விரும்பவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தின் போதும் மற்றும் கடந்த 3 வருட யுத்தத்தின்போதும் கொல்லப்பட்ட மக்களின் புதைகுழிகள் காணப்படுவதால், வெளிநாடுகள் அங்கு வருவதை இலங்கை அரசு விரும்பவில்லை, எனவும் இதனால் உள்ளூர் உதவிகளுடன் மிகவும் மந்தகதியாக கண்ணிவெடி அகற்றும் வேலை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

கண்ணிவெடிகளை அகற்றிய பின்னரே மக்களை மீள் குடியமர்த்த முடியும் என அறிவித்து வரும் இலங்கை அரசு, இதில் வெளிநாடுகளின் உதவிகளையும் புறக்கணித்து வருகிறது.


Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 885
ஜனாதிபதி நிலத்தில் மண்டியிட்டு முத்தம் கொடுத்ததின் மாயம் என்ன?

08 October, 2009 by admin

கடந்த மே மாதம் 17ம் திகதி காலை கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்த ஜனாதிபதி, விமானத்தில் இருந்து இறங்கியதும் மண்ணைத் தொட்டு முத்தமிட்ட விடையம் யாவரும் அறிந்ததே. யுத்தம் முடிவடைந்ததாகக் குறிப்பிட்டு ஜனாதிபதி மண்ணை முத்தமிட்டிருந்தார். இருப்பினும் மே 18ம் திகதியே யுத்தம் முழுமையாக நிறைவடைந்தது என்பது பலரும் அறிந்த உண்மை. இதனிடையே என்ன நடந்தது?

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானம் வந்திறங்கிய சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி, யுத்தகளத்திலிருந்த பிரிகேடியர் சசிந்திர சில்வாவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு போர் களத்தின் பிந்திய கள நிலவரங்களை அறிந்துள்ளார். இச்சந்தர்ப்பத்தில், பிரபாகரன் கொல்லப்பட்டு, யுத்தம் முழுமையாக வெற்றி கொள்ளப்பட்டுள்ளதாக சசிந்திர சில்வா ஜனாதிபதிக்குக் கூறியுள்ளார். இதனைக் கேட்டு பூரிப்படைந்த ஜனாதிபதி தம்முடன் இருந்த ஒரு முஸ்லிம் மதத் தலைவரின் ஆலோசனைகளுக்கமைய விமானத்திலிருந்து இறங்கிய மறுகணம், மண்டியிட்டு வணங்கியுள்ளார்.

இதன்பின்னர், விமான நிலையத்திற்குள் வந்தபோதுதான், யுத்தம் முழுமையாக முடிவடையவில்லை என்பதை அறிந்த ஜனாதிபதி, அவசர அவசரமாக சமய நிகழ்வுகளை முடித்துக்கொண்ட பின்னர் இராணுவ உயர் அதிகாரிகளைத் திட்டித்தீர்த்த வண்ணம் விமான நிலையத்திலிருந்து வெளியேறியுள்ளார். அத்துடன், இந்த நாட்களில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்ததுடன், சரத் பொன்சேகா நாடு திரும்புவதற்கு முன்னர் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு இராணுவ உயர் அதிகாரிகளுக்கு பாதுகாப்புச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.

இந்த உத்தரவையடுத்து, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் மீது தாக்குதலை மேலும் உக்கிரப்படுத்தி உள்நுழைய முற்பட்ட விசேட அதிரடிப்படையின் 22 பேர் கொல்லப்பட்டும் 80ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் படையினருக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக இராணுவத் தளபதி நாடு திரும்பும்வரை அல்லது அவரின் கட்டளைகளுக்கு ஏற்ப போரை முன்னெடுப்பது என்ற நிலைப்பாட்டை படையினர் முன்னெடுத்தனர். இதனை அறிந்த கோத்தபாய , தனது கட்டளைகளுக்கு இராணுவம் மதிப்பளிக்காமல் போனது தொடர்பாகவே, சரத் பொன்சேகாவுடன் முரண்பட்டுக்கொண்டார் எனத் தெரியவந்துள்ளது.

இத் தகவல்களை பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ அதிரகாரி ஒருவர் இணையத்தள செய்தி ஒன்றிற்குத் தெரிவித்துள்ளார்.


Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 4598
ஜெகத் காஸ்பர் அவர்களே சற்று நிறுத்த முடியுமா உங்கள் அறிக்கை மழையை

08 October, 2009 by admin

"சஞ்சனா அனுபம்" என்ற தலைப்பில் நக்கீரனில் மீண்டும் உங்கள் அறிக்கை மழை எம்மையெல்லாம் நனைத்து நிற்கிறது. தடிமன் காச்சல் வராத குறைதான். சூறாவழி, புயல்காற்று எல்லாம் ஓய்ந்த பின்னரும் உங்கள் அறிக்கை மழை மட்டும் இன்னமும் ஓயவில்லை. சிலர் பரபரப்புச் செய்தியை வெளியிட்டு பணம் சம்பாதிப்பார்கள், ஆனால் பணம் சம்பாதிக்க பரபரப்புச் செய்திகளை உங்களை வைத்து உருவாக்குகிறார்கள் நக்கீரன் பதிப்பகத்தினர்.

உங்கள் கட்டுரைகளை கடந்த 5 மாதங்களாகப் படித்துவருகிறேன். மே மாதம் 18ம் திகதிக்குப் பின்னர் உக்கிரமடைந்துள்ள நீங்கள், பிரபல்யமாவதற்கும், பணம் சம்பாதிக்கவும் எமது உன்னத விடுதலைப் போராட்டமா கிடைத்தது ?. நீங்கள் ஈழத்திற்குச் சென்றிருந்தபோது வெரிடாஸ் வானொலியின் அறிவிப்பாளர் என்ற வகையில் ஒரு மரியாதையின் நிமிர்த்தமாக தேசிய தலைவர் உங்களுடன் 6 நிமிடம் பேசினார். அப்போது அங்கு நின்றிருந்தவன் நான். ஆம் அதே நீல நிற ஆடையில்.

நலம் விசாரித்த தலைவரிடம், உங்களை அறிமுகப்படுத்தி அங்கிருந்து அகன்றீர்கள். பின்னர் கிடைத்த ஈழத்து நட்புகள் அவர்கள் ஒவ்வொருவரும் சொல்லும் செய்திகளை சேகரித்து, உங்கள் அனுபவமாக அல்லவா வெளிவிடுகிறீர்கள். இதில் கொடுமையான விடையம் என்னவென்றால் நான் உங்களுக்குச் சொன்ன செய்தியையும் நீங்கள் சமீபத்தில் நக்கீரனில் உங்கள் அனுபவம்போல வெளியிட்டுள்ளீர்கள். இது ஒன்று மட்டும் போதுமே.

அத்துடன் இன்றைய தினம் நக்கீரனில் சஞ்சனா அனுபவம் என்ற தலைப்பில் ஒரு யாழ்ப்பாணப் பெண்மணியை பேட்டி காண்பதுபோலவும், அவர் கருத்துக்கள் போல உங்கள் கருத்துக்களைக் கூறியிருப்பதும் வியப்பாக உள்ளது. இது நாள் வரை தமிழீழம் மற்றும், தேசிய தலைவர் மற்றும் போராட்டம் என நீங்கள் பேசிவந்ததால் எல்லாரும் மொளனமாக இருந்தார்கள். ஆனால் தற்போது யாழ்ப்பாணப் பெண்மணியூடாக இந்திய குடிவரவு அதிகாரிகள் மென்மையாக நடந்துகொண்டார்கள் என்றும் ப.சிதம்பரம் சமாதானத்திற்காக பாடுபட்டார் எனவும் நீங்கள் கூற முனைவதை எந்தத் தமிழனும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

தமிழ் நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு இலங்கைத் தமிழர்களும் கியூ பிரிவால் அவதானிக்கப்படுவதும், ஆங்காங்கே கைதுசெய்யப்படுவதும், வேலைகளில் அமர்த்தப்படுவதில் வேற்றுமை பார்க்கப்படுவதும் யாவரும் அறிந்த உண்மை. மண்டபம் முகாம் தொடக்கம் செங்கல்பட்டு சிறப்பு முகாம்வரை ஈழத்தமிழர்கள் அடைத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் நீங்கள் மத்திய அரசிற்கு வக்காளத்து வாங்க ஆரம்பித்திருப்பது பெரும் சந்தேகங்களைக் கிளப்புகிறது.

இந்திய உளவுப் பிரிவினருடன் நீங்கள் சேர்ந்து இயங்குவது போலான தோற்றப்பாட்டை உருவாக்குகிறது. தொடர்ந்தும் அந்தக் கட்டுரையில் ப.சிதம்பரம் சமாதானத்திற்காய் உழைத்தவர் என்று நீங்கள் பகிரங்கமாக குறிப்பிடுவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஏன் எனில் இறுதிப்போர் நடைபெறும் கால கட்டத்தில் விடுதலைப் புலிகளை சரணடையச் சொன்ன நபர்களில் ப.சிதம்பரமும் அடங்குகிறார்.

கலைஞர் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கும்போது, பறந்துவந்து அதனை முடிவுக்குக் கொன்டுவந்த சிதம்பரம் அவர்கள், இலங்கையில் உடனடிப் போர் நிறுத்தம் வந்துவிட்டதைப்போல பேசியதும் நாம் அறிவோம். உங்களுக்கும் கலைஞர் மகள் கனிமொழிக்கும் இடையே உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் நாம் நன்கு அறிவோம் ! இந்தச் சூழலில் வெறும் அறிக்கைகளை வெளியிட்டு, புகழைச் சம்பாத்திக்க நினைக்காமல் ஈழத் தமிழர்களுக்கு உங்களால் உதவமுடியுமா எனப் பாருங்கள். எமது இனத்தின் விடுதலைக்கு உரம் சேர்க்கமுடியுமா எனச் சிந்தியுங்கள்.

வார்த்தைகளோடு விளையாடும் நீங்கள்.. ஈழத் தமிழர்களின் வாழ்கையோடு விளையாடாதீர்கள்.

உங்கள் மனதை நான் ஏதேனும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்

இங்கணம்

தமிழரசு


Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 3768
இலங்கைக்கான இந்தியத் தூதர் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமனம்

First Published : 08 Oct 2009 04:31:22 PM IST


புதுதில்லி, அக்.8: இந்திய அயலகப் பணியின் உயர் அதிகாரியும், இலங்கைக்கான இந்தியத் தூதருமாகிய அலோக் பிரசாத் இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.அமைச்சரவையின் நியமனங்கள் குழு எடுத்த முடிவின்படி அலோக் பிரசாத் இரண்டு ஆண்டுகள் வரையோ அல்லது அடுத்த மாற்றம் நடைபெறும் வரையோ இப்பதவியில் இருப்பார்.1974 பிரிவு அதிகாரியான பிரசாத் கொழும்பில் பணிபுரிவதற்கு முன்னதாக, சிங்கப்பூரில் இந்தியத் தூதராகவும், வாஷிங்டனிலுள்ள இந்தியத் தூதரகத்திலும் பணியாற்றியுள்ளார்.

கருத்துக்கள்

இந்தியப் படுகொலைகளுக்கு உதவியமைக்காக நன்றி மறவாமல் காங்.ஆட்சி தரும் பரிசு. சீனாவிடம் இருந்து இந்திய மண்ணை மீட்க அறிவுரைஞர்கள் தேவையிலலை. எஞ்சிய தமிழ் மக்களையும் உலக வரலாற்றில் இருந்து அப்புறப்படுத்தவே கொலையுரைஞர்கள் தேவை. எங்கே போகிறது இந்தியா?

வினா வெழுப்பும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/9/2009 2:41:00 AM

**ராஜபக்சவின் சதித்திட்டம்! பாகம் - 2 **யார் தவறு? - பாகம் 16: வீரத் தலைவன் எல்லாளனின் தந்தை! **இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் - 2 (இன்று நடந்து முடிந்த போரினால் வன்னி மக்கள் தங்களது பிள்ளைகள், உறவுகள், மற்றும் சொத்துக்களை இழந்து...)! **அருச்சுனன் பக்கம் 13: சீமானின் "நாம் தமிழர்" இயக்கத்தின் பயங்கரமான பின்னணி! ** யார் தவறு? - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! **யார் தவறு? - பாகம் 14: ஈழம் உருவாகிய வரலாறு! **குஞ்சரின் அதிரடி! U N A R V U K A L . C O M

By ELLALAN
10/9/2009 2:18:00 AM

இவர்களுக்கு தேசிய பாதுகாப்பு பற்றி அக்கறை இல்லை. சீனாவின் ஆக்ரமிப்பு குறித்தோ, பாகிஸ்தானின் பாதகம் குறித்தோ கவலை இல்லை! ...... நம் இனத்தை கொல்வது தான் இந்த பாதுகாப்பு ஆலோசனைன் நோக்கம்!

By karthi
10/8/2009 11:58:00 PM

LTTE WAS CANCER IN ILANKAI THAMILS : NOW COME VERY SOON IN THAMILNAADU SEEMAN CANCER THATS WEY VERY CARE IN THAMILNAADU PEOPLE IT IS LIKE BAKTERIEN

By ram yogasun
10/8/2009 10:30:00 PM

ராஜபக்சவின் சதித்திட்டம்! பாகம் - 2 > இராவணன் தமிழன் இல்லை > சீமானின் "நாம் தமிழர்" இயக்கத்தின் பயங்கரமான பின்னணி! U N A R V U K A L . C O M

By நவீனன் சென்னை
10/8/2009 9:10:00 PM

Well done Alok! You have earned promotion and money for helping Sri Lankan government for the killing of thousands of Tamils!

By Vani
10/8/2009 8:37:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
வெளிநாடுகளில் செயல்படும் எல்டிடிஇ ஏஜெண்டுகளுக்கு எதிராக வேட்டை: இலங்கை தகவல்

First Published : 08 Oct 2009 05:54:21 PM IST


கொழும்பு, அக். 8: வெளிநாடுகளில் செயல்படும் விடுதலைப்புலிகள் அமைப்பின் ஏஜெண்டுகளுக்கு எதிரான வேட்டையை பல்வேறு நாடுகளின் உளவு அமைப்புகள் மேற்கொண்டுள்ளன என இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடும் சண்டை நடத்தி விடுதலைப்புலிகள் அமைப்பை ஒழித்த இலங்கை, தற்போது எஞ்சியுள்ளவர்களையும் அந்த அமைப்புக்கு ஆதரவானவர்களையும் ஒழித்துக் கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. வெளிநாடுகளில் செயல்பட்டுவரும் விடுதலைப்புலிகள் அமைப்பின் ஏஜெண்டுகள் போதை மருந்து கடத்தல், பெண்கள் கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவதாகவும் அவர்களுக்கு பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும் தனது இணையதளத்தில் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கருத்துக்கள்

அடிமைப்படுத்தும் எல்லா ஆட்சியாளரும் இவ்வாறு வஞ்சகம் புரிந்த பின்னும் பெற்றவைதாம் விடுதலைகள். எனவே தமிழ் ஈழமும் ஒருநாள் விடுதலையாகும்.அந்நாள் விரைவில் அமைய மனித நேயர்கள் உதவ வேண்டும்.

வெல்க தமிழ் ஈழம்!

வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/9/2009 2:22:00 AM

**ராஜபக்சவின் சதித்திட்டம்! பாகம் - 2 **யார் தவறு? - பாகம் 16: வீரத் தலைவன் எல்லாளனின் தந்தை! **இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் - 2 (இன்று நடந்து முடிந்த போரினால் வன்னி மக்கள் தங்களது பிள்ளைகள், உறவுகள், மற்றும் சொத்துக்களை இழந்து...)! **அருச்சுனன் பக்கம் 13: சீமானின் "நாம் தமிழர்" இயக்கத்தின் பயங்கரமான பின்னணி! ** யார் தவறு? - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! **யார் தவறு? - பாகம் 14: ஈழம் உருவாகிய வரலாறு! **குஞ்சரின் அதிரடி! U N A R V U K A L . C O M

By ELLALAN
10/9/2009 2:20:00 AM

..INDIAN TAMIL SLAVE KUMAR HOW MUCH YOU HAVE GOT FOR THIS COMMNET FROM SRI LANKA DEPUTY HIGH COMMISSION IN TAMIL NADU(..WHAT LANGUAGE THEY TALK HERE TAMINGLISH..OR THAMINGILAM....)

By KOOPU
10/9/2009 12:19:00 AM

the seed LTTE has sown... free tamil eelam is in the hearts/minds/soul/blood and sacrifice of tamils... free tamil eelam will be acheived whatever the ''under table bone pickers of genicide killer rajabakse and his goons'' shout or want to do.. the thirst for freedom of tamils for a free soveriegn nation can never be stuffed out and free tamil eelam will be victorious by the continued struggle of millions of tamils whose unity will be realised and ettappans identified and enemies annihilated.

By vasan
10/8/2009 11:37:00 PM

LTTE: DO GRIMES AND UN OFFICEIL BUISSNESS THER FOR MAKE MONEY : AND SUM THAMILNAADU POLITICIEN HELF THERM LIKE A PARTNER BUT NERVER DO ANYTHING ON THAMIL PEOPELE THAT MEAN PUNAIKKU KONDDADAM SUNDELIKKU JEVANA PORAADDAM WHO SAY MORE TIME THAMIL THAMIL THERE NEVER DO ANYTHING

By RAMYOGASUN
10/8/2009 10:21:00 PM

why not if they are doing the same ,srilanka government will not leave them ,even if they hide ,srilana army forces know how to bring them out,see what happened to padma.will happen to everyone.you to take care.

By deen
10/8/2009 9:38:00 PM

well said by HUMAN. BY SEMMALAI

By SEMMALAI
10/8/2009 8:32:00 PM

அப்படி என்றால் உலகத்தில் இருக்கும் பெரும்பான்மையான தமிழர்களையும் ஒழிக்க வேண்டும்! முள் வேலிக்குள் இருக்கும் 3 லட்சம் மக்களையும் சேர்த்து...

By HUMAN
10/8/2009 6:44:00 PM

No. Kumar will be arrested soon. Hey kumar run..run..

By Kumari
10/8/2009 6:37:00 PM

So Vaiko and Nedumaran will soon be arrested as they are in the payroll of LTTE for long time. They are propoganda secretaries of LTTE in Tamilnadu.

By Kumar
10/8/2009 6:29:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வியாழன், 8 அக்டோபர், 2009

விழ விழ எழுவோம் என்னும் ஆவணத் திரைப்படம்(30 நிமிடம்) மறுமலர்ச்சிப் பாசறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மிகச் சுருக்கமாக தமிழன் வரலாற்றைக் கூறி, முள்ளிவாய்க்கல் அவலங்களைச் சித்தரித்து, பின்னர் இனி என்ன செய்யப்போகிறோம் என்றதை தெளிவுபடுத்தியுள்ள இந்த காணொளி பார்ப்பவர்களை கண் கலங்கவைக்கிறது, "விழ விழ எழுவோம் நாம் விழ விழ எழுவோம் ஒன்று விழ நாம் ஒன்பதாய் எழுவோம்" என்ற பாடல் வரிகள் உணர்ச்சிமிக்கதாக அமைந்துள்ளது.

இந்த 30 நிமிட ஆவணப்படம் விரைவில் பிரித்தானியாவில் வெளியிட இருப்பதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏனைய ஜரோப்பிய நாடுகளிலும் தமது சொந்த நகரங்களிலும் இதனை வெளியிட விரும்புவோர் கீழ் காணும் இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும். கருதரங்குடன் கூடிய ஒரு விவரண படமாக இதை நீங்கள் உங்கள் நகரங்களில் வெளியிட்டு, தமிழீழ மக்களின் கருத்துக்களை வெளிக்கொண்டுவரலாம். உங்கள் நகரங்களில் இப்படத்தை வெளியிட

தொடர்புகளுக்கு:00445601567481

இந்த ஆவணப் படத்திலிருந்து ஒரு பாடல்...

இந்த CD ஜ பெற்றுக்கொள்ள athirvu@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் முகவரியை அனுப்பிவையுங்கள்



250,000 Tamils in dire humanitarian need, says British Minister

[TamilNet, Wednesday, 07 October 2009, 04:56 GMT]
Mike Foster, a British international development minister, said after visiting Menik farm, the internment camp where Sri Lanka holds more than a quarter of million displaced Tamils, that the internees "are in dire humanitarian need of being allowed out of internment camps which face flash floods in Sri Lanka's monsoons," the British paper Guardian reported. "Although conditions have improved the tents are basically disintegrating. With the monsoons we will have sewage floating around – water-borne diseases will be rife," the paper said quoting Foster.

Michael
Michael Foster, British international development minister
Foster, British international development minister
BBC which was allowed access to the camp with Mr Foster, noted that the Sri Lanka Government allowing BBC inside the camp is also a "notable progress," added, "[a]nd yet, just five minutes of conversation with the camp-dwellers was deeply distressing. Starting by talking to us through our car-window, women, one after the other, piled on tales of hopelessness in the Tamil language."

Foster said the monsoon, which is due to start this month, was almost certain to destroy tents already fraying after six months’ use, and to overload the camps’ rudimentary sewage systems, causing a flood of raw human waste, the Times reported.

“Disease, if it takes hold, is going to spread rapidly. Without doubt there will a loss of life,” he said. “Given that there are 250,000 people living so close together, I’d hazard a guess that it’s going to be more than dozens,” the Times said, quoting Foster.

“Once the monsoons are gone, we’ll stop funding support inside the camps,” he said. “That’s increasingly going to be the attitude not just of us, but of other donors as well,” Foster told the paper.

External Links:
UKGov: Freedom of movement is our top priority for the displaced people of Sri Lanka-Foster (06/10/2009)
BBC: Sri Lanka refugees plead for freedom
Guardian: Monsoon floods threaten displaced Tamils, says British minister
TimesOnline: Britain tells Sri Lanka to free Tamil prisoners before disease kills them

Colombo has plans to colonize North with Buddhist Sinhalese – Suresh Premachandran

[TamilNet, Wednesday, 07 October 2009, 17:06 GMT]
The government of Sri Lanka is actively engaged in colonizing Ki’linochchi, Mullaiththeevu and Jaffna district with Sinhalese Buddhists in order to crush the demand for Eelam in the traditional homelands of the Tamils in the North, Suresh Premachandran, Tamil National Alliance (TNA) Jaffna parliamentarian, said in a press meet held Monday in his Jaffna office. He further accused the government for not accepting help from International Community in de-mining Vanni as it does not want the persons from foreign countries to see the mass graves of civilians killed by its armed forces in the Vanni during the war. The MP also said that though the government says that it had resettled 40,000 IDPs from Vavuniyaa internment camps, 95% of them have been again detained in new internment camps in their respective home districts under the direct control of Sri Lankan forces.

He said that he has the vital information to substantiate his claims.

The following is the gist of the information he gave at the press meet:

Suresh Premachandran, TNA MP
Suresh Premachandran, TNA MP
“In Ki’linochchi a large Sri Lanka Army (SLA) camp has been constructed in 150 acre area and the villages around it are to be colonized with Buddhist Sinhalese. A big Buddhist Vihara is being built based on claims that it is as ancient as the ones in the South in an attempt to steal the traditional homelands of the Tamils in the Vanni. This is part of a major plan to colonize sizable areas in the North with the motive of altering the ethnic demography.”

“Many small Buddhist Viharas are being erected along A9 road in Vanni for the religious activities of the Buddhist Sinhalese people brought from the South.”

“Similar plans are afoot to occupy around 30% of land in the districts of Mullaiththeevu and Ki’linochchi.”

“The government has not so far identified the mine infested places in Mullaiththeevu and Ki’linochchi from which the residents had fled wholesale though it has its military soldiers to do this job. The main reason for the government for not allowing de-mining personnel from other countries is that it fears the mass graves of civilians in Vanni would be disclosed to the world.”

“But the government makes much publicity that it has resettled 40,000 IDPs from Vavuniyaa camps in their own districts. But the truth is that 95% of these IDPs have again been detained in new internment camps in their respective home districts.”

“Meanwhile, the government is actively engaged in de-mining in 31 villages in Vavuniyaa and Mannaar districts so that it could relocate some of the IDPs in Vavuniyaa camps. On one side the government is trying to show that it is resettling IDPs with the view of getting the tax relief from the EU and on the other hand it intends keeping the people of Vanni from resettling in their own villages. Their ancestral places would thus be made vacant to colonize Buddhist Sinhalese.”

07 October, 2009 by admin

யாராவது தமிழை தெளிவான உச்சரிப்புடன் அழகியலோடு கையாண்டாலே அவரை தமிழின உணர்வாளர் என்று நம்மனது ஏற்றுகொள்ளும். அப்படி வெகுநாட்களாக தமிழ்கூறும் நல்லுலகில் தமிழின உணர்வாளராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர் பேராசிரியர் சுபவீ. தமிழின உணர்வாளர் என்பதாலே புலம்பெயர் தமிழர்கள் இவரை தோளில்வைத்து கொண்டாடியது முந்தைய வரலாறு. உலகெங்கும் ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலைகள் பத்திவகுப்பெடுத்து வந்த சுபவீ இப்பொழுது அறிவாலயம் பக்கமாக ‘பக்காவாக’ வகுப்பெடுத்து கொண்டிருக்கிறார்.

நாளுக்குநாள் ஈழத்தில் படுகொலைகள் அதிகரிக்க அதிகரிக்க சுபவீயின் கால்கள் ஈழ ஆதரவு போராட்டத்திற்கு எதிர்திசையில் நடைபோட ஆரம்பித்தது. செத்துவிழுந்த தொப்புள்கொடி உறவுகள்பத்தி கவலைப்படவேண்டிய சுபவீ எங்கே கருணாநிதியின் நாற்காலி கவிழ்ந்து விடுமோ? என்று கவலைகொள்ள ஆரம்பித்துவிட்டார். திசைமறந்த பறவைபோலே ஈழம் என்ற வார்த்தையை உச்சரிப்பதை நிறுத்தி விட்ட சுபவீ மீண்டும் மக்கள் மன்றங்களில் பேசத்துவங்கி இருக்கிறார்.

வருடந்தோறும் கருணாநிதியை வாழ்த்தி ‘வஞ்சப்புகழ்ச்சி தூக்கலாக’ நடைபெறும் கவியரங்கில் மேடையேறிய சுபவீ முழுக்கமுழுக்க கருணாநிதிதாசனாக மாறிப்போனார். வழமையாக எதையாவது அள்ளிவிடும் செகத்ரட்சகனே வெட்கப்படும்படியாக நம்மாளு வெளுத்து வாங்கி இருக்கிறார். அதெல்லாம் அவர்கள் உட்கட்சி விவகாரம் அதைபத்தி நாம் கவலைபடவேண்டியதில்லை. நமக்கு கவலை எல்லாம் சுபவீயின் “பிரபாகரனின் இருப்பு பற்றிய கசப்பான உண்மை” என்ற தலைப்பில் குமுதம் இணையதளத்தில் கொடுத்தநேர்காணல் பற்றியதுதான்.

இந்த நேர்காணலில் கருணாநிதி விசுவாசத்தை மிகத்தெளிவாக வெளியிட்டு இருக்கிறீர்கள்.பிரபாகரன் இல்லை என்ற தகவலை இந்த நேர்காணலின் மூலமாக உலகத்தமிழ் மக்களுக்குகூற விரும்புவதாக கூறி இருக்கிறீர்கள். உங்களிடமிருந்து எந்தவொரு தகவலையும் உலகத்தமிழ்மக்கள் எதிர்பார்க்கவில்லை என்ற நிதர்சன உண்மையை நீங்கள் அறியாமல் இருக்கமாட்டீர்கள். உலகத்தமிழர்களின் இதயங்களில் இருந்து நீங்கள் தூக்கி எறியப்பட்டு வெகுநாட்கள் ஆகின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை.

ஈழத்தமிழன் கொன்றழிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் உலகத்தமிழ்மாநாடு தேவையா? என்று நியாயமான கேள்விக்கு உங்களது பதில் ஏற்றுகொள்ளும்படி இல்லையே! ஈழத்தமிழர்கள் செத்துவிட்டால் எல்லாம் முடிந்துவிட்டது என்று அர்த்தமா? தமிழை வளர்க வேண்டாமா? என்று அறிவுப்பூர்வமாக கேள்விகேட்கும் நீங்கள் அதற்கும் ஒருபடி மேலேசென்று இந்த மாநாடுகூட ஒருவழியில் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு தீர்வுகாணும் என்று அளந்து விடுகிறீர்கள். கேப்பையில் நெய்வழிகிறது என்று இன்னும் எத்தனை காலத்திற்கு கதையளக்கபோகிறீர்கள்?.

ஈழத்திற்காக போராடியர்கள் அப்படியே முடக்கி போனார்களா? அவர்கள் இயங்கவில்லையா என்று கேள்வி கேட்கும் நீங்கள், கலைஞரை குற்றம் சுமத்துபவர்கள் என்ன தீக்குளிப்பு போராட்டமா நடத்தினார்கள்? என்று கேட்டு இருக்கிறீர்கள். முத்துகுமார் நியாபகம் இருக்கிறதா சுபவீ அவர்களே? முத்துகுமாரின் தியாகத்தை மறைத்து அதே வேளையில் அழகிரியின் பிறந்தநாளை கோலாகாலமாக கொண்டாடிய கருணாநிதியின் துரோகத்தை மறைக்கமுடியுமா?அல்லது கருணாநிதியின் ஊடகங்கள் செய்த இருட்டடிப்பை மறக்கமுடியுமா? முத்துகுமார் கருணாநிதிபத்தி எழுதியதை மறுவாசிப்பு செய்துபார்க்க சம்மதமா?

அப்படியே உங்கள் முன்னாள் தோழர் சீமானையும் காட்டி கொடுக்கிறீர்கள் “சீமான் இத்தருணத்தில் உலகத்தமிழ் மாநாடு கூடாது என்கிறார்! அதே நேரத்தில் ‘உத்தரவு’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்” என்கிறீர்கள். கலைஞர் அன்று முதல் இன்றுவரை ஈழத்தமிழனுக்காக உழைக்கிறார் என்கிறீர்கள். அவரின் அந்த உழைப்பினால் இதுவரை ஈழத்தமிழன் துயரம் எந்தளவிற்கு துடைக்கப்பட்டது என்று சொல்லமுடியுமா? அகதி முகாம்கள் அருமையாக இருக்கின்றன என்ற பார்ப்பன இந்து ராமிற்கும் இலங்கையில் சுமூகநிலை நிலவுகிறது என்று சொன்ன கருணாநிதிக்கும் பெரிதாக என்ன வித்தியாசம் இருக்க முடியும் சுபவீ அவர்களே? போர் வந்தால் மக்கள் சாவது இயல்புதான் என்ற செயலலிதாவும் மழைவிட்டும் துவானம் தூவுவது இயல்புதான் என்று கருணாநிதியும் ஒரே குரலில் ஒலித்தது உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லையா?..

ஆகமொத்தம் இங்கே ஈழத்திற்காக நடந்தபோராட்டங்கள் எல்லாமே கருணாநிதியின் ஆட்சியை கவிழ்க நடந்த சதிமுயற்சி என்கிறார் சுபவீ. ஈழத்திற்காக உண்மையாக போராடியர் கருணாநிதி மட்டுமே என்று பெரியார்மீது அடித்து சத்தியம் செய்கிறார். இவர் கனிமொழியோடு சேர்ந்து ஈழத்தமிழர் விடுதலைக்கு ‘லாபி வொர்க்’ பார்த்துகொண்டு இருக்கிறாராம். கருணாநிதி காங்கிரசோடு கைகோர்த்து கூடசரி என்கிறார் ஈழத்தில் தமிழர்களை கொன்ற ராசபக்சே போன்று இந்தியாவில் முகமதியர்களை கொலை செய்த பா.ச.க ஆட்சிக்கு வந்திடும் அபாயத்தில் இருந்து காப்பதற்கே காங்கிரசு கூட்டணியாம்.

இதற்கு முன்னாள் கருணாநிதி பா.ச.கவோடு கைகோர்த்து பற்றிகேட்டால் அது பேனமாசம் இது இந்தமாசம் என்று சொன்னாலும் சொல்லுவார். சுபவீயை கொண்டாடியதற்காக புலம்பெயர் தமிழர்கள் கண்டிப்பாக வருந்துவார்கள் அப்படி வருந்துபவர்களில் நானும் ஒருவன்.

‘பெரியார்விருது’ வீரமணிக்கும், ‘அண்ணாவிருது’ கருணாநிதிக்கும் ‘கலைஞர்விருது’ ஸ்டாலினுக்கும் கொடுக்கப்பட்டு விட்டது ‘கனிமொழிவிருது’ நமது சுபவீக்கு அடுத்த ஆண்டு அளிக்கப்படும் என்று நம்புவோமாக!


Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 7620