வெள்ளி, 22 ஜூலை, 2022

தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 10,11 & 12 : இணைய அரங்கம் – சூலை 24,2022

 அகரமுதல



தமிழ்க்காப்புக்கழகம்

ஆளுமையர் உரை 10,11 & 12: இணைய அரங்கம்

ஆடி 08, 2053 ஞாயிறு , சூலை 24, 2022, காலை 10.00

“தமிழும் நானும்”

உரையாளர்கள்:

கவிஞர் முனைவர் மு.பொன்னவைக்கோ

முன்னை மும்மைத் துணைவேந்தர்

முனைவர் ச.சு.இராமர் இளங்கோ

மேனாள் தலைவர், பாரதிதாசன் உயராய்வு மையம்

முனைவர் (இ)லிங்க.இராமமூர்த்தி

ஆய்வுத் தகைமையாளர் .

இந்தியக் குமுகாய அறிவியல் ஆராய்ச்சிக் கூட்டமைப்பு.

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?

pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)                              

வரவேற்புரை: திரு.ப.சிவக்குமார்                         

தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்

தொகுப்புரை: தோழர் தியாகு

நன்றியுரை:  தமிழாசிரியை உரூபி



வியாழன், 21 ஜூலை, 2022

கோவை ஞானி – எசு.என்.நாகராசன் நினைவு இணையக் கருத்தரங்கு

 அகரமுதல




கோவை ஞானி – எசு.என்.நாகராசன்

நினைவு இணையக் கருத்தரங்கு

ஆடி 07, 2053 சனி 23.07.2022

மாலை 6.00-7.30  – இரவு 7.30-9.00

ஈரமர்வுகள்

கூட்ட எண்: 864 136 8094

   புகு எண்: 12345

கோவை ஞானி வாழ்வும் பணியும்

மாலை 6.00 – இரவு 7.30

தொடக்க உரை: முத்துக்குமார்

கருத்துரை:

சுப்பிரபாரதி மணியன்

பஞ்சாங்கம்

சோதி மீனா

சவகர்

எசு.என்.நாகராசன் வாழ்வும் பணியும்

இரவு 7.30-9.00

தொடக்க உரை: கண.குறிஞ்சி

கருத்துரை:

தோழர் தியாகு

யமுனா இராசேந்திரன்

பொதிய வெற்பன்

“படிகள்” சிவராமன்


வெள்ளி, 15 ஜூலை, 2022

தனித்தமிழியக்க வேர்களும் விழுதுகளும்நூல் வெளியீடும் வழித்தோன்றல்கள் சிறப்பிக்கப்படலும்

அகரமுதல



தனித்தமிழியக்க வேர்களும் விழுதுகளும்
நூல் வெளியீடு

ஆடி 01, 2053 / 17.07.2022
ஞாயிறு மாலை 5.00 – இரவு 7.30


பீமாசு உணவுவிடுதி
நூறடிச் சாலை, வடபழனி, சென்னை


நூல் வெளியிட்டுச் சிறப்புரை:
மாண்பமை கல்விக்கோ விசுவநாதன்,

வேந்தர், வே.தொ.ப.; நிறுவுநர், தமிழியக்கம்
ஏற்பாடு: மறை.தாயுமானவன்
தமிழியக்கமும் மறைலை அடிகள் கல்வி அறக்கட்டளையும்


முழு விவரங்கட்கு அழைப்பிதழ் காண்க.


வியாழன், 14 ஜூலை, 2022

தவத்திரு ஊரன் அடிகளார்க்குப் புகழ் வணக்கம்! -பெ.மணியரசன்


ஊரன் அடிகளார்க்குப் புகழ் வணக்கம்!

வள்ளலார் வழி ஆன்மிகச் சான்றோராக விளங்கிய தவத்திரு ஊரன் அடிகளார் இன்று

(14.7.2022) அடக்கம் ஆனார்கள் என்ற செய்தி மிகவும் துயரமளிக்கிறது. வள்ளலார் வழியில் துறவு வாழ்க்கையை மேற்கொண்டு, வடலூர் சன்மார்க்க நிலைய வளாகத்தையே தமது வாழ்விடமாக்கிக் கொண்டவர் ஊரன் அடிகளார்.

நான் திருச்சி தேசியக் கல்லூரியில் புகுமுக வகுப்பு (பி.யூ.சி) படிக்கும் போது, தங்கிப்

படித்த திருச்சி சிந்தாமணி பாப்பம்பாள் சத்திர அறக்கட்டளை விடுதியில் ஒரு சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்றுச் சிறப்பாகச் சைவநெறி, வள்ளலார்நெறி ஆகியவை பற்றி உரையாற்றினார். இவ்வுரை 1966-இல் நடந்தது. ஆற்றோட்டமான தெளிவான பேச்சு!

பிற்காலத்தில் வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் சன்மார்க்க நெறியை மிக

நுட்பமாகவும், துல்லியமாகவும் விளங்கிக் கொண்டு, மக்களுக்கு விளக்கினார்.

தமிழ்ச் சைவை சித்தாந்தத்திற்கும் வள்ளலாரின் அருட் பெருஞ்சோதி கோட்பாட்டிற்கும்

இடையே உள்ள நுட்பமான வேற்பாடுகளையும் விளக்குவார். அதே போல் வள்ளலாரின்

சன்மார்க்கத்திற்கும் சைவ சித்தாந்தத்திற்கும் இடையே உள்ள ஒருமைப்பாட்டையும் சிறப்பாக விளக்குவார்.

சிறந்த எழுத்தாளர். பல நூல்கள் எழுதியுள்ளார். சிக்கலான மெய்யியல் கருத்துகளை எளிதல் புரிந்து கொள்ளும் படி விளக்கும் ஆற்றல் பெற்றவர். வள்ளலாரின் மனித சமநிலைக் கோட்பாட்டிற்கும் முதன்மை கொடுப்பார் ஊரன் அடிகள்.

ஊரன் அடிகள் காட்டிய வழியில் வள்ளலாரின் தமிழர் மெய்யியலை மக்களிடம் மேலும்

மேலும் கொண்டு செல்வதே, ஐயா அவர்கட்கு நாம் செலுத்தும் நன்றிக் கடன் ஆகும்!

தவத்திரு ஊரன் அடிகளாரின் நினைவைப் போற்றுவோம். தெய்வத் தமிழ்ப் பேரவை

சார்பில் ஐயா அவர்களுக்குப் புகழ் வணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன்.

( பெ. மணியரசன்)

ஒருங்கிணைப்பளார், தெய்வத் தமிழ்ப்பேரவை.

புதன், 6 ஜூலை, 2022

முனைவர் பூமா பொன்னவைக்கோ மறைந்தார்

 அகரமுதல




திருவாட்டி முனைவர் பூமா பொன்னவைக்கோ விடை பெற்றார்

கணவர் பேராசிரியர் முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்களுருக்கேற்ற தமிழார்வம் மிக்க மனை மாண்பினராகத் திகழ்ந்த,

அனைவரிடமும் கனிவாகவும் எளிமையாகவும் பழகும்

முனைவர் பூமா பொன்னவைக்கோ அவர்கள்

ஆனி 17, 2053 வெள்ளி இரவு 11.45 மணியளவில் பிரியா விடை பெற்றார்.

அவரது குடும்பத்தினருக்கு  ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.

அன்னாரின் நினைவேந்தல் படையல் ஆனி 25, 2053 / 09.07.2022 சனி இரவு 7.00

காரியம் மறுநாள் ஞாயிறு காலை 9.00 மணி

நிகழ்விடம்:

கோ இல்லம்,

எண் 2/255, மூன்றாவது தெரு,

அண்ணா வீதி,குறிஞ்சி நகர்,

வண்டலூர், சென்னை 600 048

தொடர்பிற்கு : 98400 90652

பிரிவில் வாடும்

முனைவர் பொன்னைக்கோ

முனைவர் பொறியாளர் பொ.பூங்கோவன்

முனைவர் பொறி.பொ.கோவேந்தன்

பொறி. பரணி பூங்கோவன்

மருத்துவர் சரசுவதி கோவேந்தன்

ஆகியோருக்கும் பிற குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக் கொள்கிறோம்.

அகரமுதல – மின்னிதழ்

தமிழ்க்காப்புக் கழகம்

இலக்குவனார் இலக்கிய இணையம்

தமிழன்னைக்குப் பெருமை சேர்க்க வருகிறாள் தமிழணங்கு

 அகரமுதல


  உலகத் தமிழர்களை இந்துக்கள் என்று அடையாளப்படுத்தும் முயற்சி நடைபெறுவதால் ‘தமிழராய் இணைவோம்‘ என்ற இலக்குடன் தமிழணங்கு மாத இதழ் தொடங்கப்பட்டுள்ளது.

இணையத்திலும் அச்சிலும் வெளிவருகிறது. தமிழ் மரபு, பண்பாடு, சமயம், வரலாறு, மொழி இலக்கியம் சார்ந்த கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

rajetamiljuly1@gmail.com  க்கு கட்டுரைகளை அனுப்புங்கள்.

முதல் இதழ் 134 பக்கங்களுடன் வெளிவந்துள்ளது. விலை உரூ120/-

ஆசிரியர்: முனைவர் செ. இராசேசுவரி

amazon.in    amazon.com

தளங்களில் வாங்கலாம்.







செவ்வாய், 5 ஜூலை, 2022

முனைவர் வை.பழனிச்சாமி இ.ஆ.ப. வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீடு

அகரமுதல


அகதாபட்டியிலிருந்து

ஓர் ஐ.ஏ.எசு.

நூல் வெளியீட்டு விழா

ஆனி 25, 2053 சனி 09.07.2022 மாலை 5.00

உருசியக் கலாச்சார மையம்

74, கத்தூரிரங்கன் சாலை, தேனாம்பேட்டை

சென்னை

மாலை 5.00 தேநீர் விருந்து

நூல் வெளியீடு: திரு வைகோ, நா.உ.

தலைமை: தாமரைத்திரு நல்லி குப்புசாமி

வாழ்த்துரை:

திரு பார்த்தசாரதி, நிறுவனர், வலைத்தமிழ்

முனைவர் வி.பொன்ராசு,

நூலாசிரியர் உரை: எழுத்தாளர் இராணிமைந்தன்

வரவேற்புரை :செல்வி ப.இரா.நிகரிகா

நன்றியுரை: மரு.ப.இராசுகுமார்

இன்னிசை ஏந்தல் ஆத்மநாதன் இன்னிசையுடன்

நிகழ்ச்சி தொடங்குகிறது.