third front லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
third front லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 18 மார்ச், 2011

No attempt for third front-tha.pandiyan: மூன்றாவது அணிக்கு முயற்சி செய்யவில்லை: தா.பாண்டியன்


எங்கள் அப்பன் குதிருக்குள்  இல்லை என்று எடுத்துக் கொள்வதா? நாங்கள் கொத்தடிமைகளாகத்தான் இருப்போம். அதிலிருந்து மீளமாட்டோம் என்று எடுத்துக் கொள்வதா? அம்மையார் அரற்றுகிறாரா? மிரட்டுகிறாரா? என்பதைப் பொறுத்து நிலை மாறும்.எனினும் இதுவே மாற்று அணிக்கான நல்வாய்ப்பான நேரம். வைகோ தலைமையில் ஒன்று கூடலாம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/தமிழே விழி! தமிழா விழி! /

மூன்றாவது அணிக்கு முயற்சி செய்யவில்லை: தா.பாண்டியன்

சென்னை, மார்ச் 17: அதிமுக வேட்பாளர் பட்டியலால் அதிர்ச்சி அடைந்த கம்யூனிஸ்ட்கள் மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இன்று காலை தேமுதிக கட்சி அலுவலகத்தில் கூடிப் பேசினர். தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் என்ன முடிவு எடுப்பது என்று ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதிருப்தி அடைந்த கம்யூனிஸ்ட்கள் மூன்றாவது அணி அமைக்கக்கூடும் என்று செய்திகள் உலவின. இந்நிலையில், இந்தக் கூட்டத்துக்குப் பின் வெளியில் வந்து செய்தியாளர்களிடம் பேசிய கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன், தாங்கள் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் இறங்கவில்லை என்றும், குடும்ப ஆட்சிக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவதற்கான முயற்சியில் இறங்கியிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், தங்களுக்கிடையே எழுந்துள்ள கருத்துவேறுபாடுகளைக் களைவதற்காக மீண்டும் ஜெயலலிதாவைச் சந்திக்க இருப்பதாகவும், விரைவில் தங்கள் கூட்டணிக்குள் உள்ள பிரச்னைகள் தீர்க்கப்படும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.
கருத்துகள்

நல்லவிதமாக இந்த பிரச்சனை முடிவுக்கு வர வாழ்த்துக்கள்.. தமிழ்நாட்டு மக்கள் நலன் கருதி இந்த அணியிலுள்ள கட்சிகள் எல்லாம் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.. நான் ஜெயலலிதா அனுதாபி இல்லை.. இருந்தாலும் ஒரு குடும்பத்தின் ஏகதிபத்திய சொத்தாக்க தமிழ்நாடு ஆகிவிவிடாமல் தடுப்பது ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமை..கருணாநிதியை ஒரு சீனியர் லீடர் என்று ஏத்துகொள்ளலாம்..ஆனால் வர குடும்பத்தார் ஆள்வதற்கு பதில் ஜெயலலிதா ஆள்வதில் எந்த தவறும் இல்லை.
By ராஜ்
3/17/2011 11:15:00 PM
இங்கு தினமணி உண்மையை மறைக்கிறது.தா.பாண்டியன் அவ்வாறு சொல்லவில்லை.ஏன் தினமணி ஜெயலலிதாவை இவ்வளவு தூரத்திற்கு இன்னும் ஆதரிக்கிறதோ தெரியவில்லை.இத்தனை வருடம் தன கட்சிக்காகவும் சேர்த்து பாடுபட்ட வைகோவை கழற்றி விட்டார்,கம்யூனிஸ்ட்கலை,தே.மு.தி.க,யாரையுமே மதிபதில்லை .
By mubaarak
3/17/2011 10:49:00 PM
helo, we were watching news when T.Pandian came to Vijayakanth Office and given the message to press(reporter asked ,that do have any idea to compromise with AIADMK? He said if u want you can do that not me) but dinamani news is says opposite of his interviews .how your reporter collected the fake news from the spot? or particularly u are supporting to AIDMK?
By Rajasekar.D
3/17/2011 10:43:00 PM
good. accept what madam gives. throw out vaiko. All the others in the front are good. vijaykanth also is a liability. If panrutti joins admk, the 'captain' will become zero. .
By mathew
3/17/2011 10:37:00 PM
தா.பா வின் பேச்சை டிவியில் பார்த்தோம்,மிகுந்த கோபத்துடன் பேசினார்,தற்போது மாற்றி பேசுகிறார்,பாடம் புகட்டபடவேண்டும் இவர்களுக்கு...தைரியம் இல்லாததைதான் காட்டுகிறது .....இந்த பேச்சு ..
By வெங்கடேசன்.t
3/17/2011 9:53:00 PM
இவர்கள் எவ்வளவு அவமானப்பட்டாலும் இந்த அடிமைகளால் எதுவும் செய்யமுடியாது இவர்கள் தங்கள் கட்சிகளை அடகுவைத்து பிழைப்பு நடத்துபவர்கள் வெறும் வாய்ச்சொல் வீரர்கள் இவர்களை இன்னமும் உழைக்கும் வர்க்கம் நம்புவதுதான் கொடுமை
By mohan
3/17/2011 9:45:00 PM
அய்யா நிச்சயம் நல்லதே நடக்கும் உங்களுடைய கருத்துக்கு நன்றி
By ஆனந்தன்
3/17/2011 7:46:00 PM
குடும்ப ஆட்சிகு முடிவு கட்ட தங்கள் முயற்சி சரியான முடிவாக அமையும்.......... S .பிரபாகரன்.ராமேஸ்வரம்
By S .PRABHAKARAN
3/17/2011 7:11:00 PM
குடும்ப ஆட்சிகு முடிவு கட்ட தங்கள் முயற்சி சரியான முடிவாக அமையும்.......... S .பிரபாகரன்.ராமேஸ்வரம்
By S .PRABHAKARAN
3/17/2011 7:11:00 PM
என்ன ஆச்சு இந்த கம்யூனிஸ்ட்களுக்கு இவர்களின் நிலைப்பாட்டால் உயர்ந்த கம்யூனிசத்தின் நிலைமை தான் மிகவும் கீழ் நோக்கி சென்று கொண்டு இருக்கிறது, தமிழக கம்யூனிஸ்டுகளால் ஒட்டு மொத்த கம்யூனிஸமும் தலை கவிழ்ந்து நிற்க்கிறது.ஜார்ஜ் மன்னர்களை மன்ணை கவ்வ செய்த இவர்களுக்கு இந்த நிலமை வந்திருக்க கூடாது
By ரவிக்குமார்
3/17/2011 6:12:00 PM
பாண்டியன் அவர்களே, அம்மாவைப் பார்க்கப் போகும் போது மறக்காமல் நீதி மன்ற முத்திரை தாள்கள், ராமகிருஷ்ணனுக்கும் சேர்த்து, வாங்கிச் செல்லுங்கள், தாமதிக்காமல் அடிமை சாசனம் எழுதிக் கொடுக்க வசதியாக இருக்கும் ... ... அடிமைச் சிறுமதியை உச்சத்தில் கொண்டுள்ள கம்யூனிஸ்ட்கள்... ... ...
By udayavanan
3/17/2011 5:35:00 PM
ADMK supremo J.Jayalalitha should come forward to compromise with the alliance parties like CPI, CPM etc, in allotment of seats. Then only she will be able to come to power and the ruling DMK can be removed from the power. Unless she does not convince the alliance parties, she can not come to the power, and it will be useful to the ruling DMK to come to the power once again. Aru.Arumugham
By arumugham
3/17/2011 5:25:00 PM
THARPOTHAIYA SOOLNILAYIL (KUDUMBA AATCHIKKU ETHIRANA MAKKALIN ENNATHTHINAI) ETHIR KATCHIKAL ONDRUINAINTHU PAYAN PADUTHTHIKKOLLA VENDIYA AVASIAYAM, ADMK ANIYIL ULLA ANAITHTHUKKATCHIKAULUKKUM ERUKKA VENDUM. MAKKALIN MANANILAI ONDRAGAVE IRUPPATHAL ENGU POTTIYILLALUM VETRI KITTUM.
By Mahesh
3/17/2011 5:00:00 PM

வியாழன், 10 மார்ச், 2011

M.D.M.K. for third front? -மூன்றாவது அணி முயற்சியில் மதிமுக?

தமிழ்த்தேசிய உணர்வாளர்களையும் மனித நேயர்களையும் ஊழலை ஒழிக்க எண்ணுபவர்களையும் முனைப்புடன்ஒன்று படுத்தி, காங். -ஐத் தோற்கடிக்கும் முயற்சியிலும் தங்கள் அணிக்கு வெற்றி தரக்கூடிய தொகுதிகளிலும் கருத்து செலுத்தினால் மாபெரும வெற்றி பெறலாம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன். 
/தமிழே விழி! தமிழா விழி! /

மூன்றாவது அணி முயற்சியில் மதிமுக?

சென்னை, மார்ச் 9: அதிமுக அணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. கேட்ட தொகுதிகள் கிடைக்காத நிலையில், மூன்றாவது அணி அமைத்துப் போட்டியிடுவது பற்றி மதிமுக தலைமை தீவிரமாக யோசித்து வருவதாகத் தெரிகிறது.தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படாத நிலையில் இடதுசாரிக் கட்சித் தலைவர்களும் அதிமுக தலைமை மீது கடும் கோபத்தில் உள்ளனர். தேவைப்பட்டால் அவர்களும் மதிமுகவின் முயற்சிக்கு தோள் கொடுப்பார்கள் எனத் தெரிகிறது. சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக அணி - அதிமுக அணி என இரு முனைப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக அணியில் காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், கொங்குநாடு முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்குத் தொகுதிகள் பங்கிடப்பட்டுள்ளன.ஆனால், பேச்சுவார்த்தையை முதலில் நடத்தி சிறிய கட்சிகளான புதிய தமிழகம், இந்திய குடியரசுக் கட்சி போன்றவற்றுக்கு தொகுதிகளை ஒதுக்கிய அதிமுக அணியில் இன்னும் தொகுதிப்பங்கீடு முழுமையாக முடிவடையவில்லை.மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் அதிமுக தலைமையின் அழைப்புக்காக வழி மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கின்றன.முன்னதாகவே இடதுசாரிக் கட்சிகள், மதிமுக ஆகியவற்றுடன் அதிமுக பேச்சு நடத்தியது. ஆனால், எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதற்கிடையில் அதிமுக தலைமை, விஜயகாந்தின் தேமுதிக கட்சியுடன் கடந்த வாரம் தொகுதி உடன்பாடு செய்து கொண்டது. காங்கிரஸýடன் தேமுதிக இணைந்து மூன்றாவது அணி அமைத்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் தேமுதிகவுடன் அதிமுக தொகுதி உடன்பாட்டை உடனடியாகச் செய்து கொண்டது என்றும், இதையடுத்து தங்களுக்கும் திருப்தியான முறையில் தொகுதிகள் ஒதுக்கப்படும் எனவும் இடதுசாரிகளும், மதிமுகவும் நினைத்தன.மூன்று கட்சிகளும் கடந்த ஞாயிற்றுக்கிழமையே பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டு தொகுதிகளின் எண்ணிக்கை அறிவிக்கப்படக்கூடும் என அரசியல் வட்டாரத்தில் கருத்து நிலவியது. ஆனால், எந்தக் கட்சியையும் அதிமுக தலைமை அழைக்கவில்லை. இதனால், இடதுசாரிக் கட்சிகளும் மதிமுக தலைவர்களும் எரிச்சலுக்கு உள்ளாயினர். இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மட்டும் அதிமுக தொகுதி பங்கீட்டுக் குழு திங்கள்கிழமை அழைத்துப் பேசியது. இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. ஓரிரு நாள்களில் சுமுக முடிவு எட்டப்படும் என மார்க்சிஸ்ட் தலைவர்கள் தெரிவித்தனர்.அதேசமயம், பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வரும் என்று காத்திருந்த இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.அதிமுக அணியில் மதிமுக, இடதுசாரிக் கட்சிகள் கேட்கும் தொகுதிகள் ஒதுக்கப்படாததே இழுபறிக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. அதிமுக தலைமையின் நீண்ட கால நண்பராக இருக்கும் வைகோ, கூட்டணியில் தனது கட்சிக்கு "கௌரவமான அளவில்' இடங்களை ஒதுக்க வேண்டும் எனக் கருதுகிறார்.முதலில் 25 தொகுதிகளை வலியுறுத்திய அவர், இப்போது அதிலிருந்து இறங்கி வந்து 21 தொகுதிகள் கட்டாயம் வேண்டும் எனக் கூறி வருகிறார். ஆனால், "அதிமுக தலைமையோ 10 தொகுதிகளுக்கு மேல் மதிமுகவுக்கு ஒதுக்குவதாக இல்லை' என்று கூறப்படுகிறது.கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுகவுக்கு, அதிமுக அணியில் 35 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், அந்தக் கட்சி 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதேபோல கடந்த 2009 மக்களவைத் தேர்தலிலும் மதிமுக 4 தொகுதிகளைக் கேட்டுப்பெற்று ஒரே ஒரு தொகுதியில் மட்டும் தான் வெற்றி பெறமுடிந்தது.""வீம்புக்கு அதிகத் தொகுதிகளைக் கேட்டு வாங்கிவிட்டு பெருவாரியான தொகுதிகளில் தோல்வியைத் தழுவுவது மதிமுகவின் வாடிக்கையாகிவிட்டது. வைகோ-வைத் தவிர அந்தக் கட்சியில் பெயர் சொல்லக்கூட ஒரு முக்கியமான தலைவர் கிடையாது. கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 6 எம்.எல்.ஏ.க்களில் 3 பேர் மதிமுகவிலிருந்து விலகிவிட்டனர். தொகுதிகளைக் கேட்டுப் பெற்றால் மட்டும் போதுமா? அதில் போட்டியிடத் தகுதியான வேட்பாளர்கள் மதிமுகவில் இருக்கிறார்களா'' என்று கேள்வி எழுப்பும் அதிமுக தலைமை, வைகோவுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்ததாகக் கூறப்படுகிறது.உறுதியாக வெற்றி பெறக்கூடிய 20 தொகுதிகளின் பட்டியலை வைகோ தந்தால் அதில் 10 தொகுதிகளை ஒதுக்குவதாகவும் அந்த 10 தொகுதிகளிலும் மதிமுக முழுக்கவனத்தையும் செலுத்தி வெற்றியடையலாம் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவே நேரடியாக வைகோவிடம் தெரிவித்ததாகவும் கூறுகிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இதைப்பற்றிக் கேட்டால் மதிமுக தரப்பு கொதித்து விடுகிறது.""184 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக மட்டும் அத்தனை தொகுதிகளிலுமா வெற்றி பெற்றுவிட்டது? வெறும் 61 தொகுதிகளில்தானே ஜெயிக்க முடிந்தது. அப்படியிருக்கும்போது எங்களை மட்டும் குறைகூறுவது என்ன நியாயம்?'' என்பது மதிமுக தரப்புவாதம்.இடதுசாரிக் கட்சிகளிடையேயும் தொகுதிகளின் எண்ணிக்கையில் பிரச்னை இருந்து வருகிறது. மார்க்சிஸ்ட் கட்சி 15 தொகுதிகளைக் கேட்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோ தங்களுக்குக் குறைந்தது 11 தொகுதிகளாவது வேண்டும் என வலியுறுத்துகிறது. ஆனால், மார்க்சிஸ்ட்டுக்கு 11, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 9 என்ற அளவில் மட்டுமே தொகுதிகளைத் தர முடியும் என அதிமுக தெரிவித்துள்ளது. தொகுதிகளை அளிப்பதில் தேமுதிகவுக்கு அடுத்தபடியாக தங்களுக்கு முன்னுரிமை கிடைக்கும் என நினைத்திருந்த மதிமுகவுக்கு இப்போது அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது அதிமுக. இந்த அதிர்ச்சியால் மதிமுக தலைமை உறைந்து போயுள்ளது. கட்சியின் மூத்த நிர்வாகிகளும், முன்னணித் தலைவர்களும் அதிமுக அணியை விட்டு வெளியேறித் தனியாக களத்தைச் சந்திக்கலாம் என்று கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.இடதுசாரிக் கட்சிகளுக்கு காவிரி டெல்டா மாவட்டங்களிலும், மதிமுகவுக்கு தென் மாவட்டங்களிலும் சில குறிப்பிட்ட தொகுதிகளில் செல்வாக்கு உள்ளது. அதிமுகவின் அழைப்புக்காகக் காத்திருப்பதைவிட, செல்வாக்குள்ள தொகுதிகளில் தனியாக களமிறங்கினால் ஓரளவுக்கு வெற்றிபெற முடியாவிட்டாலும் ஆட்சியைப் பிடிக்கும் அதிமுகவின் கனவைத் தகர்த்துவிட முடியும் என்று மதிமுக கருதுகிறது. மதிமுக, இடதுசாரிக் கட்சிகளைக் காத்திருக்க வைப்பது அவர்களது தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது. "கடைசி வரை காத்திருக்க வைத்து, இருக்கின்ற தொகுதிகளை கொடுத்தாலே போதுமானது' என்ற நிலைக்கு தங்களைக் கொண்டு வர அதிமுக தலைமை திட்டமிடுகிறதோ என்று மதிமுக, இடதுசாரிக் கட்சித் தொண்டர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.என்ன "விலை' கொடுத்தாவது மதிமுகவையும் இடதுசாரிகளையும் அதிமுக அணியிலிருந்து பிரித்து மூன்றாவது அணி அமைக்க வைப்பதில் திமுக தலைமையும், காங்கிரஸ் மேலிடமும் சுறுசுறுப்பாகி இருப்பதாகத் தெரிகிறது. எதிர்க்கட்சி வாக்குகளில் ஏற்படும் பிளவு, ஆளும் திமுக கூட்டணிக்குச் சாதகமாக அமையும் என்று வியூகம் வகுக்க முற்பட்டிருக்கிறது திமுக தலைமை.அதிமுக அணியில் தேமுதிகவுக்கு 41 இடங்களும் ஏனைய உதிரிக் கட்சிகளுக்கு 8 இடங்களையும் ஒதுக்கி இருக்கும் நிலையில், மீதமிருப்பது 185 இடங்கள் மட்டுமே. அதில் மதிமுக மற்றும் இடதுசாரிக் கட்சிகளுக்கு 30 இடங்களை ஒதுக்கிவிட்டு மீதியுள்ள 155 இடங்களில் போட்டியிட அதிமுக திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.கடைசியில், மதிமுகவுக்கு 15 தொகுதிகளும் மார்க்சிஸ்ட்டுக்கு 13 தொகுதிகளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12 தொகுதிகளும் தந்து அவர்களைத் தங்களது அணியில் அதிமுக தக்கவைத்துக் கொள்ளக்கூடும். கடைசிநேரத்தில் அணி மாறுவது அல்லது தனித்துப் போட்டியிடுவது என்கிற வழக்கத்தை மதிமுக 1996, 2001, 2006 தேர்தல்களைப் போலவே, இந்தத் தேர்தலிலும் கடைப்பிடிப்பது அதிமுகவின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்குமா என்பதுதான் அரசியல் வட்டாரத்தில் இப்போது பரபரப்பாக எழுப்பப்படும் கேள்வி!